08-12-2008

December 8, 2008 at 6:38 am 5 comments

     மத்திய அரசு ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்திருக்கிறது.  ஆம், அறிவித்திருக்கிறது.  பெட்ரோல், டீசல் விலை குறைத்திருக்கிறது.  ரூ.5 என்ற அளவில்.  இதனால் பேருந்து கட்டணமும் உடனே குறையும் என எதிர்பார்ப்பவர்கள் அமெரிக்காவில் பிறக்க வேண்டியவர்கள்.

      ஆட்டோ மொபைல்ஸ் துறைக்கு ஒரு வரியை (Cenvat)  குறைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பதை அடுத்து அந்த குழுமங்களின் நிதித் துறை தலைவர்கள் வெவ்வேறு விதமான அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள்.  அதில் ஆனந்த கண்ணீர் வடிக்கும் வகையில் உள்ள அறிக்கைகள் இதுவரை இல்லை.  அனைவருமே தயாரிப்பை குறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், பழைய சரக்குகளுக்கு (Old Inventories)  இவை பொருந்துமா என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.

       இது போன்ற மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி நெருக்கடியை தவிர்க்கும் வகையில் உள்ள பணஉதவியை (Bailout) பற்றி நிறைய எழுத வேண்டி உள்ளது.  முடிந்தால் மாலை எழுதுகிறேன்.

     ஆனால் இந்த அறிவிப்புகள் சந்தையின் மனநிலையை உற்சாகத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.  அதே நேரத்தில் மும்பை பயங்கரவாதம் வழக்கம் போல் கண்டன அறிக்கையுடன் முடிந்து விடும் என நான் நினைக்க வில்லை.  நிப்டியானந்தாவும் அதே போல் தான் நினைக்கிறார்.

      இந்திய இராணுவ நடவடிக்கை பற்றி வரும் ஒவ்வொரு செய்தியும், வதந்தியும் சந்தையின் போக்கை திசைதிருப்ப வல்லவை.  சந்தை இந்த வாரத்தில் இப்படிதான் ஆடும், முடியும் என சொல்வதற்கில்லை.   ஏனெனில் இந்திய நிதி தலைநகரான மும்பை பாகிஸ்தானின் தாக்குதல் எல்லைக்கு (Striking Distance)  வெகு அருகில் உள்ளது.  எனவே இது தொடர்பாக வதந்திகள் அனைத்துமே பங்கு சந்தையை வெகுவாக பாதிக்கும் வகையில் இருக்கும்.  இது தொடர்பான அரசு வெளியிடும் தெளிவுரைகள் சரியான நேரத்தில் எப்போதும் இருக்காது. 

     இன்றைய சந்தை கேப்அப் ஆக ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது.  எந்த வித செய்திகளும் வராத பட்சத்தில், சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்பு இருக்கிறது. 

    சந்தையின் போக்கை பற்றி மாலை எழுதுகிறேன்.

Good Morning to You all!

Post Market:

      தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.  ஆளுங்கட்சியான காங்கிரஸ் இரண்டு மாநிலங்களை கைப்பற்றியிருக்கிறது.  இது சந்தைக்கு உற்சாகம் புகுத்தி, சந்தையானது 120 புள்ளிகள் வரை மேலேறியது.  பின்னர் வழக்கம்போல் சிறிய செல்லிங் பிரஷர் நாளை சந்தை விடுமுறை என்பதால் ஏற்பட்டு, புள்ளிகளை இழந்திருக்கிறது.  ஐரோப்பிய சந்தைகளும் நீண்ட நாட்களுக்கு பிறகு உற்சாகமாக முடிந்திருக்கிறது.

         இந்த வாரத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சந்தை ஏற்றமாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.  தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தையும் ஏற்றத்துடன்தான் முடியும்.  பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னும் தீவிரமாக செயல்படுத்தும் என நினைக்கிறேன்.  ஆனால் அதைவிட மோசமான செய்தி என்னவென்றால், நாளை சந்தை விடுமுறை என்பதால் வேதாள நகரத்தின் எட்டாம் பகுதி வெளிவரும்.  🙂

   

Advertisements

Entry filed under: Market Analysis.

வேதாள நகரம் – 07 மரண போராட்டம் வேதாள நகரம் – 08 மர்ம கும்பல்

5 Comments Add your own

 • 1. Karthikeyan G  |  December 8, 2008 at 2:40 pm

  உங்கள் புதிய வெப் டிசைன் நல்ல லுக்கா இருக்கு!!

 • 2. karthikeyang  |  December 8, 2008 at 6:09 pm

  i m still in process of learning how to approve comments WordPress blog.. மன்னித்தருள்க

 • 3. King Viswa  |  December 8, 2008 at 6:32 pm

  //ஆனால் அதைவிட மோசமான செய்தி என்னவென்றால், நாளை சந்தை விடுமுறை என்பதால் வேதாள நகரத்தின் எட்டாம் பகுதி வெளிவரும்//

  அய்யகோ,

  இது மெய்யாலுமே எனக்கு ஒரு மோசமான செய்தி தான்.

  கிங் விஸ்வா.

  Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

 • 4. kannan  |  December 8, 2008 at 11:49 pm

  நாளை சந்தை விடுமுறை என்பதால் வேதாள நகரத்தின் எட்டாம் பகுதி வெளிவரும்//

  மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

 • 5. Rajkumar  |  December 9, 2008 at 7:30 am

  //வேதாள நகரத்தின் எட்டாம் பகுதி வெளிவரும். //

  ஆண்டவா எங்களை காப்பாற்று !!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: