வேதாள நகரம் – 07 மரண போராட்டம்

December 5, 2008 at 8:57 pm 9 comments

‘பாஸ், காலைல அவசர அவசரமா டிபன பண்ணிட்டு எங்கே வேகமாக போய்க்கிட்டு இருக்கோம்?

‘செழிக்கண்ணு, நாம ஒரு இலட்சியத்தை நோக்கி போய்க்கிட்டு இருக்கோம். அத முடிச்சுட்டு தான் ஊருக்கே திரும்புறோம்.’

‘இத முன்னாலயே சொல்லியிருந்தா நான் என்னோட டெட்டி பியரை கையோட எடுத்துட்டு வந்துருப்பேன்ல.’

‘கோச்சுக்காத, கண்ணு, உன் பாஸ் எப்பேர்பட்ட புத்திசாலின்னு சொல்ல வேண்டிய கட்டம் வந்துருச்சி.  அந்த கிழப்போல்டு டூமில்குப்பத்திற்க்கு வரும்போதே எனக்கு அவன் மேல ஒரு கண்ணு.’

‘என்ன பாஸ் இது, உங்களுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காதுன்னு தெரியும், அதுக்காக ஒரு கிழவன் மேல போய் கண்ணை வைச்சிருக்கிங்கிளே, ஷேம் ஷேம், பாஸ்.’

‘அடப்பாவி, நான் விஷயத்தோட சொன்னத இப்படி விஷமமாய் திரிச்சியிட்டியேடா.  சொல்றத கேளு, இந்த மூணு பண்டாரங்களும் அவனோட பேசிக்கிட்டு இருக்கும்போதே நினைச்சேன். ஏதோ ஒரு வரைபடம் கைமாறும்போது கண்டிப்பா தெரிஞ்சி போச்சி. இது புதையல் விஷயம்தான்.’

‘வரைபடம்னு சொன்னாலே புதையல்தானா?’

‘உலகம் புரியாமல் இருக்கியேடா, கண்ணா.  அது அப்படிதான்.  இப்ப நாம நேரா நோவடிக்கு போய்க்கிட்டு இருக்கோம்,  அந்த பண்டாரங்க அங்க தான் போயிருக்கணும்.  அத விட்ட கங்குவா இன செவ்விந்திய கிராமந்தான்.  அங்க போணா உயிரோட வர முடியாது. அவங்கள நோக்கி தான் நாம போயிட்டு இருக்கோம், இதுல்ல உனக்கு ஏதாச்சும் சந்தேகம் இருக்கா, செல்லம்?’

‘நோவடியில புரோட்டா கிடைக்குமா, பாஸ்?’

—————————————————————————————————————————-

   செவ்விந்திய கிழவர் விஷ்வா அருகில் வந்து, ‘வீரரே, சண்டை திடலுக்கு வர முடியுமா?’ என கேட்டார்.   அது காதில் விழாதது போல் விஷ்வா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.  உடனே அக்கிழவர் தன் ஜேபியில் இருந்த  பிச்சுவா கத்தியை எடுக்க முயல, விஷ்வா அவரை நோக்கி பார்த்து கரகரத்த குரலில் ‘சரி வாங்க, போலாம்.’

      சண்டை திடலுக்கு இருவரும் வந்தனர். 

     ‘வீரரே, எங்கள் இனம் ஒரு வீரமிக்க சமுதாயம். இந்த சண்டையானது காட்டுமிராண்டி தனமாக நடத்தப்படுவது இல்லை.  விதிகளின்படி, விதிகளுக்குட்பட்டே நடத்தப்படுவது.’

     உடன் உற்சாகம் பெற்ற விஷ்வா, ‘அப்ப இடுப்புக்கு கீழே அடிக்கக் கூடாது, அப்படிதானே?’

    ‘அப்படியெல்லாம் இல்லை. பொதுவாக முதல் அடி அங்கே தான் வூழும்.’

    ‘எதிராளி பக்கம் நியாயம் இருக்குன்னு சண்டைத் திடலை விட்டு வெளியே வந்துட்டா?’

    ‘அப்படி சண்டைய முடிக்காம வெளியே வரவனை உயிரோட கொளுத்தி விடுவோம்.’

    ‘அப்பறம் வேற என்ன புடலங்காய் விதி வைச்சுருக்கீங்க?

    ‘சொல்றேன் கவனமா கேட்டுக்கோ.  சண்டையில ரெண்டு கண்ணையுமே குத்திட கூடாது.  ஏதாவது ஒரு கண்ணை மட்டுந்தான் தோண்ட விதியில் இடம் உண்டு.  எதிராளியை கடிக்கும்போது 350 கிராம் சதைக்கு மேல ஒரு கிராம் கூட அதிகமாக கடிச்சி எடுக்கக் கூடாது.  காதுக்கும் மட்டும் விதிவிலக்கு உண்டு.  ரெண்டு காதையும் கடிச்சு துப்பலாம்.  மூக்க கடிக்கலாம்.  ஆனா பிச்சு எடுக்கக் கூடாது. வாயிலே ……. ம்ஹும்….. யோசிக்கவே கூடாது. என்னா புரிஞ்சுதா?  போய் கடைசியா உன் நண்பர்கள் கிட்ட பேசிட்டு வா.’

       நொந்து போய் விஷ்வா தன் நண்பர்களை நோக்கி நடந்தார்.  அவரை பார்த்ததும் கலீல் சட்டென்று எதையோ அவர் பின்னால் மறைத்தார்.

    ‘கலீல், எதை மறைக்கிறே?

    கலீல் வெட்கத்துடன் தான் மறைத்தவற்றை காண்பித்தார்.  பாப்கார்ன் நிரம்பிய கிண்ணம் மற்றும் ஒரு பீர்.

    ‘அடப்பாவி, நான் உயிருக்கு போராட போறேன்.  நீங்க என்னமோ ஒரு கலை நிகழ்ச்சிய பார்க்கற மாதிரி இரசிக்க போறீங்களா?  சதீஷ், இதை நீ கேட்க மாட்டியா?

     ‘விஷ்வா, நான் கேக்கலைன்னு நினைக்கிறியா?  கலீல் ஒரு ஆள் சாப்றதுக்கு தான் இருக்குன்னு சொல்லிடப்போல.  அதுவும் இல்லாமா சின்ன அணில் ஒரு நிமிஷத்துக்கு யாரையும் உயிரோட வைக்கறது இல்லைன்னு இங்க பேசிக்கிறாங்கப்பா.’

       செவ்விந்திய கிழவர் தொலைவிலிருந்து ‘வீரனே, உன்னுடைய நேரம் முடிந்தது.  சண்டை திடலுக்கு வா.’

      இப்படியொரு நண்பர்கள் கிடைப்பதற்கு முற்பிறவியில் எத்தனை நாடுகளை கொளுத்தியிருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு சுத்த வீரன் விஷ்வா சண்டைத் திடலை நோக்கி நடுங்கும் கால்களுடன் செல்ல ஆரம்பித்தார்.

————————————————————————————————————-

       அந்த செவ்விந்திய கிராமத்திற்கு 200 மீட்டர் தொலைவில் பதுங்கியிருந்த குதிரை வீரர்களில் ஒருவன் இன்னொருவனிடம், ‘சண்டைத் திடலுக்கு வந்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நினைவிலிருக்கின்றது அல்லவா?’

      ‘மிகத் தெளிவாக.  கச்சிதமாக நிறைவேற்றி விடுகிறேன்.’

                                                        (……………தொடரும்……………………………………)

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

05-12-2008 08-12-2008

9 Comments Add your own

 • 1. Rajkumar  |  December 6, 2008 at 7:28 am

  ஐயோ! காமெடி பிண்ணுதே !
  என்னை கொல்லுதே !!

 • 2. King Viswa  |  December 6, 2008 at 8:44 am

  //செழிக்கண்ணு, நாம ஒரு இலட்சியத்தை நோக்கி போய்க்கிட்டு இருக்கோம். அத முடிச்சுட்டு தான் ஊருக்கே திரும்புறோம்.’
  ‘இத முன்னாலயே சொல்லியிருந்தா நான் என்னோட டெட்டி பியரை கையோட எடுத்துட்டு வந்துருப்பேன்ல.’// மிகவும் ரசித்தேன் இந்த கட்டத்தை. ஆஅனால் செழியும் இதை ரசித்தாரா? என்பது எனக்கு தெரியாது.

  //உங்களுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காதுன்னு தெரியும், அதுக்காக ஒரு கிழவன் மேல போய் கண்ணை வைச்சிருக்கிங்கிளே// வேட்டையாடு விளையாடு அமுதன் இளமாரனா? கதை போற போக்க பார்த்தால் குடும்பத்தோட படிக்க முடியாது போல இருக்கே?

  //இதுல்ல உனக்கு ஏதாச்சும் சந்தேகம் இருக்கா, செல்லம்?’
  ‘நோவடியில புரோட்டா கிடைக்குமா, பாஸ்?’// சூப்பர்.

  //அப்ப இடுப்புக்கு கீழே அடிக்கக் கூடாது, அப்படிதானே?’
  ‘அப்படியெல்லாம் இல்லை. பொதுவாக முதல் அடி அங்கே தான் வூழும்.’// என்ன கொடுமை அய்யா இது? இருங்க, இருங்க. நானும் ஒரு கதை எழுதறேன். அதல நீங்க தான் கதாநாயகன். சரியா?

  //இப்படியொரு நண்பர்கள் கிடைப்பதற்கு முற்பிறவியில் எத்தனை நாடுகளை கொளுத்தியிருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு சுத்த வீரன் விஷ்வா சண்டைத் திடலை நோக்கி நடுங்கும் கால்களுடன் செல்ல ஆரம்பித்தார்.// ஒரு பத்தியிலே எப்படி எல்லாம் மொத்தமாக ஒருவரை பத்தி கேவலப் படுத்த முடியுமா என்று வியக்க வைத்து விட்டீர்கள்.

 • 3. Chezhiyan  |  December 6, 2008 at 1:18 pm

  (1) நோவடியில புரோட்டா கிடைக்குமா, பாஸ்?’ = சூப்பர். எனக்கு மிச்சம் மீதி மரியாதை ஏதாவது இருந்தா, இதோட அதுவும் காலி.

  (2) எதிராளி பக்கம் நியாயம் இருக்குன்னு சண்டைத் திடலை விட்டு வெளியே வந்துட்டா?’
  ‘அப்படி சண்டைய முடிக்காம வெளியே வரவனை உயிரோட கொளுத்தி விடுவோம்.’
  = உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகவும அதிகம் என்பதை மீண்டும் நிருபிக்கிறீர்கள்.

  (3) போய் கடைசியா உன் நண்பர்கள் கிட்ட பேசிட்டு வா = அருமையான வசனம்.

  (4) பாப்கார்ன் நிரம்பிய கிண்ணம் மற்றும் ஒரு பீர் = நல்ல வேலை, கலீல் மரியாதையும் போச்சு. அப்பட, இன்னொரு ட்ரவுசர் அவுந்தது.

  (5) இப்படியொரு நண்பர்கள் கிடைப்பதற்கு முற்பிறவியில் எத்தனை நாடுகளை கொளுத்தியிருக்க வேண்டும் = இப்படியொரு எழுத்தாளர் கிடைப்பதற்கு முற்பிறவியில் நான் எத்தனை நாடுகளை / கண்டங்களை கொளுத்தியிருக்க வேண்டும்?

  (6) சுத்த வீரன் விஷ்வா சண்டைத் திடலை நோக்கி நடுங்கும் கால்களுடன் செல்ல ஆரம்பித்தார் = சுத்த வீரன் + நடுங்கும் கால்களுடன் – அருமையான சேர்ப்பு.

 • 4. அம்மா ஆசை இரவுகள்  |  December 6, 2008 at 2:09 pm

  கதை செல்லும் போக்கை பார்த்தல், இன்னொரு தினத்தந்தி வழங்கும் கன்னித்தீவு தானோ? எனினும், கதை முழுவது இழைந்து உள்ள நகைச்சுவை உணர்வு பாராட்டப்பட வேண்டியதே.

 • 5. ramprasad.v  |  December 6, 2008 at 3:33 pm

  //கதை முழுவது இழைந்து உள்ள நகைச்சுவை உணர்வு பாராட்டப்பட வேண்டியதே.//

  part #7 is SOAKED in COMEDY. Nice Work.

  வாழ்த்துக்கள்.

 • 6. kannan  |  December 6, 2008 at 9:52 pm

  SUPER,SUPER,SUPER……………

 • 7. Blogger  |  December 7, 2008 at 8:41 am

  Hiya,

  good story that was conceived you. however, it seems that you have just gone away from the storyline. moreover, the title of 3 musketeers is also politically not correct. the 3rd person kalil is not highlighted in this story at all.

  however, the series is very much entertsaining to read. keep on going.

 • 8. nizar  |  December 7, 2008 at 7:38 pm

  கதை இன்னொரு கன்னித்தீவு வாழ்த்துக்கள்.

 • 9. க.கொ.க.கூ  |  December 7, 2008 at 8:03 pm

  நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

  மினி லயன் காமிக்ஸில் தோன்றி நமது மனதை எல்லாம் கொள்ளை அடித்த குண்டன் பில்லி பற்றிய ஒரு முழு பதிவு என்னுடைய வலைப் பூவில் இடப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

  http://kakokaku.blogspot.com/2008/12/blog-post.html

  தயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு உங்கள் மேம்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள்.

  நன்றியுடன்,

  க.கொ.க.கூ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
December 2008
M T W T F S S
« Nov   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: