Archive for December 5, 2008
வேதாள நகரம் – 07 மரண போராட்டம்
‘பாஸ், காலைல அவசர அவசரமா டிபன பண்ணிட்டு எங்கே வேகமாக போய்க்கிட்டு இருக்கோம்?
‘செழிக்கண்ணு, நாம ஒரு இலட்சியத்தை நோக்கி போய்க்கிட்டு இருக்கோம். அத முடிச்சுட்டு தான் ஊருக்கே திரும்புறோம்.’
‘இத முன்னாலயே சொல்லியிருந்தா நான் என்னோட டெட்டி பியரை கையோட எடுத்துட்டு வந்துருப்பேன்ல.’
‘கோச்சுக்காத, கண்ணு, உன் பாஸ் எப்பேர்பட்ட புத்திசாலின்னு சொல்ல வேண்டிய கட்டம் வந்துருச்சி. அந்த கிழப்போல்டு டூமில்குப்பத்திற்க்கு வரும்போதே எனக்கு அவன் மேல ஒரு கண்ணு.’
‘என்ன பாஸ் இது, உங்களுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காதுன்னு தெரியும், அதுக்காக ஒரு கிழவன் மேல போய் கண்ணை வைச்சிருக்கிங்கிளே, ஷேம் ஷேம், பாஸ்.’
‘அடப்பாவி, நான் விஷயத்தோட சொன்னத இப்படி விஷமமாய் திரிச்சியிட்டியேடா. சொல்றத கேளு, இந்த மூணு பண்டாரங்களும் அவனோட பேசிக்கிட்டு இருக்கும்போதே நினைச்சேன். ஏதோ ஒரு வரைபடம் கைமாறும்போது கண்டிப்பா தெரிஞ்சி போச்சி. இது புதையல் விஷயம்தான்.’
‘வரைபடம்னு சொன்னாலே புதையல்தானா?’
‘உலகம் புரியாமல் இருக்கியேடா, கண்ணா. அது அப்படிதான். இப்ப நாம நேரா நோவடிக்கு போய்க்கிட்டு இருக்கோம், அந்த பண்டாரங்க அங்க தான் போயிருக்கணும். அத விட்ட கங்குவா இன செவ்விந்திய கிராமந்தான். அங்க போணா உயிரோட வர முடியாது. அவங்கள நோக்கி தான் நாம போயிட்டு இருக்கோம், இதுல்ல உனக்கு ஏதாச்சும் சந்தேகம் இருக்கா, செல்லம்?’
‘நோவடியில புரோட்டா கிடைக்குமா, பாஸ்?’
—————————————————————————————————————————-
செவ்விந்திய கிழவர் விஷ்வா அருகில் வந்து, ‘வீரரே, சண்டை திடலுக்கு வர முடியுமா?’ என கேட்டார். அது காதில் விழாதது போல் விஷ்வா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அக்கிழவர் தன் ஜேபியில் இருந்த பிச்சுவா கத்தியை எடுக்க முயல, விஷ்வா அவரை நோக்கி பார்த்து கரகரத்த குரலில் ‘சரி வாங்க, போலாம்.’
சண்டை திடலுக்கு இருவரும் வந்தனர்.
‘வீரரே, எங்கள் இனம் ஒரு வீரமிக்க சமுதாயம். இந்த சண்டையானது காட்டுமிராண்டி தனமாக நடத்தப்படுவது இல்லை. விதிகளின்படி, விதிகளுக்குட்பட்டே நடத்தப்படுவது.’
உடன் உற்சாகம் பெற்ற விஷ்வா, ‘அப்ப இடுப்புக்கு கீழே அடிக்கக் கூடாது, அப்படிதானே?’
‘அப்படியெல்லாம் இல்லை. பொதுவாக முதல் அடி அங்கே தான் வூழும்.’
‘எதிராளி பக்கம் நியாயம் இருக்குன்னு சண்டைத் திடலை விட்டு வெளியே வந்துட்டா?’
‘அப்படி சண்டைய முடிக்காம வெளியே வரவனை உயிரோட கொளுத்தி விடுவோம்.’
‘அப்பறம் வேற என்ன புடலங்காய் விதி வைச்சுருக்கீங்க?
‘சொல்றேன் கவனமா கேட்டுக்கோ. சண்டையில ரெண்டு கண்ணையுமே குத்திட கூடாது. ஏதாவது ஒரு கண்ணை மட்டுந்தான் தோண்ட விதியில் இடம் உண்டு. எதிராளியை கடிக்கும்போது 350 கிராம் சதைக்கு மேல ஒரு கிராம் கூட அதிகமாக கடிச்சி எடுக்கக் கூடாது. காதுக்கும் மட்டும் விதிவிலக்கு உண்டு. ரெண்டு காதையும் கடிச்சு துப்பலாம். மூக்க கடிக்கலாம். ஆனா பிச்சு எடுக்கக் கூடாது. வாயிலே ……. ம்ஹும்….. யோசிக்கவே கூடாது. என்னா புரிஞ்சுதா? போய் கடைசியா உன் நண்பர்கள் கிட்ட பேசிட்டு வா.’
நொந்து போய் விஷ்வா தன் நண்பர்களை நோக்கி நடந்தார். அவரை பார்த்ததும் கலீல் சட்டென்று எதையோ அவர் பின்னால் மறைத்தார்.
‘கலீல், எதை மறைக்கிறே?
கலீல் வெட்கத்துடன் தான் மறைத்தவற்றை காண்பித்தார். பாப்கார்ன் நிரம்பிய கிண்ணம் மற்றும் ஒரு பீர்.
‘அடப்பாவி, நான் உயிருக்கு போராட போறேன். நீங்க என்னமோ ஒரு கலை நிகழ்ச்சிய பார்க்கற மாதிரி இரசிக்க போறீங்களா? சதீஷ், இதை நீ கேட்க மாட்டியா?
‘விஷ்வா, நான் கேக்கலைன்னு நினைக்கிறியா? கலீல் ஒரு ஆள் சாப்றதுக்கு தான் இருக்குன்னு சொல்லிடப்போல. அதுவும் இல்லாமா சின்ன அணில் ஒரு நிமிஷத்துக்கு யாரையும் உயிரோட வைக்கறது இல்லைன்னு இங்க பேசிக்கிறாங்கப்பா.’
செவ்விந்திய கிழவர் தொலைவிலிருந்து ‘வீரனே, உன்னுடைய நேரம் முடிந்தது. சண்டை திடலுக்கு வா.’
இப்படியொரு நண்பர்கள் கிடைப்பதற்கு முற்பிறவியில் எத்தனை நாடுகளை கொளுத்தியிருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு சுத்த வீரன் விஷ்வா சண்டைத் திடலை நோக்கி நடுங்கும் கால்களுடன் செல்ல ஆரம்பித்தார்.
————————————————————————————————————-
அந்த செவ்விந்திய கிராமத்திற்கு 200 மீட்டர் தொலைவில் பதுங்கியிருந்த குதிரை வீரர்களில் ஒருவன் இன்னொருவனிடம், ‘சண்டைத் திடலுக்கு வந்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நினைவிலிருக்கின்றது அல்லவா?’
‘மிகத் தெளிவாக. கச்சிதமாக நிறைவேற்றி விடுகிறேன்.’
(……………தொடரும்……………………………………)
05-12-2008
நேற்று கூறியபடியே அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் சரிந்திருக்கிறது. ஆசிய சந்தைகள் இதன் தாக்கத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. டோ ஜோன்ஸ் 9000 புள்ளிகளை இந்த வாரத்தில் தாண்டும் என நிறைய பேர் எண்ணியிருந்தார்கள். அது மிகவும் வலுவான நிலை என்றும், 8500-9000 என்ற நிலையிலே இருக்கும் என்ற எண்ணமும் இருந்தது.
இன்றைக்கு நமது சந்தை பலவீனமாகதான் ஆரம்பிக்கும். நேற்றைய சந்தையில் மிக குறைந்த அளவு வணிகம் நடந்தபோதிலும், ஏற்றத்தின் வேகம் அளவுக்கு அதிகமாக இருந்தது. இன்று காலையும் அந்த அளவுக்கு வணிகம் இருக்காது என்பதால், சந்தை முழுக்க முழுக்க ஆபரேட்டர்களின் கையில் இருக்கும்.
சந்தை துவக்கத்தினை அவர்களே முடிவு செய்வார்கள் என்ற போதிலும் சந்தை துவக்கம் ப்ளாட் ஆக இருக்கும் என்றும், போக போக தன் நிலைகளை விட்டு நழுவ ஆரம்பிக்கும் என்றும் நான் நினைக்கிறேன்.
இதற்கு நேர்மாறாக ரிலையன்ஸ் பங்கினை வைத்து சில புதிய துவக்க யுக்திகளை அவர்கள் ஆரம்பிக்கலாம். எப்படியும் இன்றைய நிலை பலவீனம் என்பதால் இறக்கத்திலேயே முடியும் என்றே நினைக்கிறேன். சந்தை -122 முதல் 35 வரை ஆடும்.
இன்றைய சந்தையின் நிலை தெளிவாக தெரியாதவரை, புதியவர்கள் எந்த வணிகத்திலும் ஈடுபடாமலிருப்பது நல்லது.
Post Market மாலை எழுதுகிறேன். மற்றொரு சோக செய்தி வேதாள நகரம் பகுதி 7 இன்று மாலை வழக்கம் போல் வெளிவரும்.
Stay Alert! Good Morning to You All!
Recent Comments