Archive for December 4, 2008
04-12-2008
காலையிலும், மாலையிலும் மின்தடை எங்கள் பகுதியில் ஏற்பட்டு வந்துள்ள காரணத்தினால் கடந்த நான்கு நாட்களாக இந்த வலைப்பூவில் சரியாக பதிவேற்றம் செய்யமுடியவில்லை. சரி செய்து விட்டார்கள் என நினைக்கிறேன்.
அமெரிக்க சந்தை தொடர்ந்து இரு நாட்களாக ஏற்றம் கண்டு வருகின்றன. அந்த ஏற்றமானது கடைசி ஒருமணி நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடதக்கது. நமது சந்தை 2600 என்ற தடையை இதை நம்பி கடக்கலாமா என இரு நாட்களாக தயங்கி வந்தது. இன்றைய தினம் 2700 என்ற இலக்கில் நிலைக்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்.
சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பிக்கவே வாய்ப்பு உள்ளது. Short Covering நடக்க வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். ஆரம்பத்தில் பெரிய ஒபனிங் உள்ளது எனவும் கருதுகிறேன். ஆனால் அமெரிக்க சந்தை 9500 புள்ளிகளை தாண்டும் வரை எதையுமே சரியாக கணிக்க இயலாத நிலைதான் தற்சமயம் உள்ளது. ஒரே நாளில் 700 புள்ளிகள் இறக்கம் என்பது நடந்திருக்கிறது. நடக்கலாம் என்ற நிலையும் உள்ளது.
இன்றைய அமெரிக்க சந்தை பலவீனமடையும் பட்சத்தில் நாளை நமது சந்தை இன்று பெற்ற புள்ளிகளை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நாளைய அமெரிக்க சந்தை பலவீனத்துடன் தான் தொடங்கும் என நினைக்கிறேன்.
நமது சந்தை 110 முதல் Flat வரை ஆடலாம். முடிவு ஏற்றத்துடன் தான் இருக்கும். இன்று மாலை Post Market பற்றி எழுதுகிறேன்.
Good Morning to You All!
Post Market:
ஆசிய சந்தைகளும் முன்னேற்றத்துடன் இருந்தும், நமது சந்தை மிக எச்சரிக்கையாகவே தொடங்கியது. பிற்பகல் வரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. ஐரோப்பிய சந்தைகள் ஆரம்பத்தில் சிறிதளவு சரிவுடன் தொடங்கியவுடன் நமது சந்தைகள் கிட்டதட்ட 25 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன. அவை சரியானவுடன் நமது சந்தையும் மேல்நோக்கி கிளம்பத் தொடங்கிவிட்டது.
காலையில் எழுதியது போல் அமெரிக்க சந்தையின் தொடக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. -200 புள்ளிகளுக்கு மேல் சரிந்தால், நாளை நமது சந்தையும் ஏறின வேகத்தில் இறங்க வாய்ப்புண்டு.
ஏதா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம். கவலையே படாதீங்க!
Recent Comments