Archive for December 2, 2008
02-12-2008
அமெரிக்க சந்தை 670 புள்ளிகளை இழந்திருக்கிறது. பொருளாதார மந்தம் என அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறதாம். என்ன கொடுமை சார், இது?
ஆசிய சந்தைகள் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறன. குறிப்பாக, அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியிருக்கும் நிக்கி. உலக சந்தைகளில் அடுத்து வல்லரசாக போகும் சீனச் சந்தையும் இறங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மிக மெதுவாக.
நமது சந்தையும் இன்று இறக்கத்துடன் ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. நிப்டி குறியீட்டில் உள்ள பங்குகளில் சில பங்குகளின் வருவாய் பற்றிய புகார்கள் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. அது பற்றிய செய்திகள் கசியும் போது, மிகப் பெரிய சரிவுகளை அப்பங்குகள் சந்திக்க நேரிடும். தற்சமயம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன்.
இன்றைய தினம் ரிலையன்ஸ் பங்கினை வைத்து ஆபரேட்டர்கள் சந்தையை திருப்ப முயல்வார்கள். சந்தையின் வால்யூம் குறைவாக இருப்பதனால் அது சாத்தியம் என்றாலும், Selling Pressure மிகக் கடுமையாக இருக்கும். அமெரிக்க சந்தை 600 க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்திருக்கிறது என்பதால், ஒரு வித பயம் சந்தையை ஆட்சி செய்யும். எல்லோரும் ஷார்ட் போக விரும்புவார்கள்.
சந்தை இன்று -185 புள்ளிகள் முதல் -35 புள்ளிகள் வரை ஆடும். முடிவு இறங்குமுகமாகவே இருக்கும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது நாள் காத்திருந்தால் நலம். தின வணிகர்கள் எது சொன்னாலும் கேட்க போவதில்லை. இன்றைய தினம் சிறிது எச்சரிக்கையாக இருங்கள்.
Good Morning To You All!
Recent Comments