Archive for December 1, 2008
01-12-2008
எலக்ட்ரிசிட்டி என்று ஆங்கிலித்திலும், கரண்ட் என தமிழிலும் அழைக்கப்படும் வஸ்து கடந்த மூன்று நாட்களாக எங்களூரில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. எப்போது வரும், போகும் என்பது யாருக்குமே தெரியவில்லை. எல்லா இடங்களிலும் அப்படிதான் என்று நினைக்கிறேன். மின் தொடர்பு பற்றி ஒரு நீண்ட கால திட்டம் ஏதும் அரசிடம் இருக்கின்றதா என தெரியவில்லை. மழை,புயல் போன்ற எல்லா நிகழ்வுகளில் முதலில் அரசு செய்வது இதைத்தான். பாதுகாப்பாப்பிற்காக என காரணம் காட்டினால், இவ்வளவு ஏன் அதில் அலட்சியம் என்ற கேள்வி யார் மனதிலும் எழுவதேயில்லை.
புதிய மாதம். ஆசிய சந்தைகள் சிகப்பாக இருக்கின்றன. இலாபத்தை உறுதி செய்வதால் அவ்வாறு இருப்பதாக ஊடககங்களில் செய்தி வெளியாகின்றன. அவ்வாறென்றால், இன்னும் ஒரு மணி நேரத்தில் சரியாகிவிடும். அமெரிக்காவில் ஆட்டோ செக்டர் பிரச்சினை இப்போது ஆரம்பித்திருக்கிறது. அது எவ்வாறு பெரிய பிரச்சினையாக போகிறது என்பது தற்சமயம் தெரியவில்லை.
நமது சந்தை இன்று ஏற்றத்துடன் ஆரம்பித்தாலும், ஏதேனும் செய்திகளை நம்பியே தடுமாறிக் கொண்டு நிற்கும். சரியான வழிக்காட்டுதல் இல்லாமல் 20-35 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன். செய்திகளை பொறுத்து Selling Pressure உருவாகக் கூடும்.
மும்பையில் நடந்த பயங்கர வாத செயல்களால் நம் சந்தை இன்னும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்தியா என்ற நாட்டின் நம்பகத் தன்மை குலைக்கும் பொருட்டு அந்த தகவல் நடந்ததாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் எல்லா இராணுவ முடிவுகளும் சந்தையை பாதிக்க வாய்ப்பிருக்கின்றன. பாகிஸ்தான் அரசாங்கம் மீது நமது அரசு எவ்வாறு நடந்து கொள்ள போகிறது என தெரியவில்லை. வழக்கம்போல, என்ன இப்படி செஞ்சிட்டிங்க என்று கேட்காமல், ஒரு உறுதியான நிலை எடுப்பார்கள் என நம்புவோம்.
இது போன்று நிகழ்வுகள் நடக்க நேரிடும் என நம்புவர்களால், குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் சந்தையில் உள்ள தங்கள் பங்குகளை இன்றே விற்க ஆரம்பிக்கக்கூடும். சந்தை காலையிலிருந்து தடுமாறிக் கொண்டிருந்தால், நண்பகலில் ஒரு கடுமையான Selling Pressure எதிர்பார்க்கலாம்.
சந்தை 85 முதல் -115 வரை ஆடலாம் என நினைக்கிறேன்.
Good Morning to You All!
Recent Comments