Archive for November, 2008

வேதாள நகரம் 4. கடற்கொள்ளையர்

‘வேதாள நகரமா?

‘சின்ன வயசில கேட்ட கதை.  அந்த மாதிரி எதுவுமே கிடையாது.’

‘நீங்க பள்ளிக்கு போய் படிச்சிருக்கீங்களா?’

‘நான் ஒரு தபா வாத்தியார் நாற்காலிக்கு கீழே டைனமட் வைச்சேங்கிற ஒரு அற்ப காரணத்தை காட்டி என்ன பள்ளிக்கூடத்தை விட்டு துரத்திட்டாங்க. அதல்லாம் உனக்கு எதுக்கு பெரிசு? மேட்டருக்கு வா’

‘நான் சொல்லப் போற விஷயம் ரொம்ப இரகசியமானது.  இதைக் கேக்குறதால உங்க உயிருக்கே ஆபத்து வரலாம்.  நானும் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேங்கறதால, என் மனசுக்குள்ள பூட்டி வைத்திருக்கிற இரகசியத்தை யாருக்கிட்டயாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென்னு தான் உங்களையெல்லாம் கூப்டேன்.

‘பெரியவரே, எதா இருந்தாலும் சட்டுன்னு சொல்லுங்க.  ஏகப்பட்ட ஜோலி கிடக்குது எங்களுக்கு’

‘வீரர்களே, இது ஒரு பொக்கிஷம் சம்பந்தப்பட்டது.’

‘இந்தா, தண்ணி குடி, பெரிசு.   பொறுமையா சொல்லு.  நைட் முச்சுடம் வேணா இங்க நாங்க உக்காந்து இருக்கோம். மனுசாள் தானே முக்கியம்.’

‘என் மனசுல இருக்கறது சொல்றேன். குறுக்கே பேசாம கேட்டுகோங்க.  குறுக்கே பேசுனா எனக்கு கோவையா வராது அதான்.  இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழி கண்டு பிடிச்சவரு வாஸ்கோடகாமான்னு வரலாறு பேசுது. உங்க முகத்துல படிச்ச களைன்னு எதுவும் தெரியல. இருந்தாலும் உங்க யாருக்காவது வரலாறு பற்றி ஆர்வம் இருந்து அது சரியில்ல இது சரியில்லன்னு நடுவில சொன்னா செவிட்டுலயே அறைவேன்.  அந்த பட்டு வழிய (Silk Route)  அதுக்கு முன்னாடியே ஒரு ஸ்பெயின் நாட்டு பிரபு தனக்கு சொந்தமான கப்பலை அனுப்பி அந்த வழியை கண்டுபிடிச்சுட்டார்.  அதில் நல்ல இலாபம் வரும் என அவர் கருதியதால், இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. வரலாற்றிலும் இந்த நிகழ்ச்சி பதியப்பட வில்லை.  டாய், இன்னுமோ கேள்வி கேக்கனும்னு நினைக்கிற, பேசுனா அறைவேன், மூடிக்கிட்டு முழுக்கதையும் கேளு. முதல் பயணத்தில் தென்னிந்தியாவை அடைந்த அவரது கப்பல், அங்கிருந்து மிக ஜாக்கிரதையாக ஒரு பெட்டியை ஏற்றிக் கொண்டு ஸ்பெயின் திரும்ப துவங்கியது.  நம்ப தகுந்த சில வட்டாரங்களின்படி, தென்னிந்தியாவில் கப்பல் கிளம்புகின்ற இரவில் கப்பலின் கேப்டன் தன்னுடைய பாதுகாப்பில் ஒரு பெட்டியை பலத்த பாதுகாப்புடன் தன்னுடைய அறையில் வைத்ததாக சொல்லக் கேள்வி.

‘அதுல என்ன இருந்துச்சி, பெருசு’

‘என்ன இருந்துச்சின்னு தெரியல.  ஆனா விலை மதிப்பு இல்லாத ஒன்று தான் இருந்திருக்க வேண்டும்.  உயிரைவிட முக்கியமாக அப்பொருள் காப்பாற்றப்பட வேண்டும் என கப்பல் கேப்டனின் ஆணை.

‘நீங்க சொல்றத வைச்சு பார்த்தா கப்பல் ஒழுங்கா ஊர் போய் சேருல போல இருக்கே.

‘ஆமா, சுத்து வழியில போனதுனாலே அள்ளக்கை கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு அந்தக் கப்பல் ஆளானது. அதிலிருந்து மீண்டாலும், நிறைய பேர் அதில டிக்கெட் வாங்கிட்டாங்க.  இன்னொரு தாக்குதலை அந்த கப்பல் தாங்காதுன்னு அந்த கேப்டன் கடலில் கலக்கும் ஒரு நதியின் வழியே கப்பலை திருப்பிட்டான்.  அந்த நதி வழியே நுழைந்த கப்பல் திரும்பவும் கடலுக்கு போகவேயில்லை.

‘எந்த நதி, எந்த இடம்ன்னு ஏதாவது தகவல் உண்டா?

‘மிஸ்ஸிப்பி ஆற்றின் உப ஆறானா வைதேகி ஆற்றின் வழியே சென்றது. தற்போது அந்த ஆறு வற்றிபோய் அது இருந்த தடமே இல்லாம போயிடுச்சி.  அந்த ஆற்றின் வழியே சென்ற கப்பல் அங்கு பாழடைந்து, மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு நகரத்தில் நின்றது என கேள்வி.

‘ஆரம்பத்தில வேதாள நகரம்ன்னு சொன்னீங்களே? அந்த நகரத்திற்கு வேதாள நகரம்ன்னு எப்படி பேரு வந்துச்சி?

‘அந்த ஸ்பானிய கப்பலின் பெயர் வேதாளம் (The Phantom)’ எனச் சொல்லி அந்த கிழவர் பெருமூச்சு விடுகிறார்.  இந்த கதாசிரியரும் ஒரு வழியாக வேதாளத்தை கதையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டதையொட்டி அவரும் பெருமூச்சு விடுகிறார்.  இது எங்கே போய் முடிய போகிறதோ, இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த துயரத்தை தாங்க வேண்டுமென்று வாசகர்களும் பெருமூச்சு விடுகின்றார்கள். மூன்று இலட்சிய வீரர்களும் இன்னும் இந்த கதாசிரியன் எப்படியெல்லாம் நாம்ப இமேஜ டேமேஜ் பண்ணப் போறான்னு தெரியலையேன்னு பெருமூச்சு விடுகின்றார்கள்.

‘இதெல்லாம் உனக்கு எப்டி தெரிஞ்சுது பெரிசு?

‘அந்த கப்பல் பாழடைந்த நகரத்திற்கு வரும்போதே கப்பலில் இருந்த பெரும்பாலன பேரு போய் சேந்துட்டாங்க.  இவர் மட்டுந்தான் பாக்கி.  இவரு கப்பல பத்திரமா யார் கண்ணுலயும் படமா ஒளிச்சு வைச்சு, பக்கத்து நகரத்திற்கு போய் சேர்ந்தார்.  அந்த நகரத்துல இருந்த லோக்கல் பொண்ணுக்கிட்ட கசமுசா பண்ணி, அங்கேயே செட்டில் ஆயிட்டாரு.

‘இதெல்லாம் உனக்கு எப்டி தெரியும் பெரிசு?

‘அவரு தான் எங்க அப்பா.

‘கப்பல் எங்க இருக்குதுன்னு உனக்கு தெரியுமா?

‘எங்க அப்பா செத்ததுக்கு அப்றம் அவரு அறையை குடஞ்சதுல எனக்கு இந்த விவரங்களெல்லாம் கிடச்சுடு

‘ஏன் பெரிசு, அவரு சாவச்சொல்ல ஏதாச்சும் முக்கியமான விஷயம் ஏதாச்சும் உன்கிட்ட சொன்னாரா?

‘ஆமா, சொன்னாரு, அப்ப அது எனக்கு சரியா புரியல.

‘என்ன சொன்னாரு, பெரிசு?

‘மவனே, நான் உன்னோட அப்பான்னு நீ ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருக்கே, நான் அவனில்லை அப்டின்னு சொன்னாருப்பா.’

‘பெரிசு, அந்த கப்பல் இன்னும் வேதாள நகரத்துலய இருக்கு?

‘ஆமாப்பா’

‘அங்கே எப்டி போறது?

‘எங்கிட்ட வரைபடம் இருக்கு. ஆனா, இதுல ஒரு பிரச்சினை இருக்கு.  அந்த ஸ்பெயின் பிரபுவோட சந்ததியில வந்த பிரபுவும் இதை தேடிக்கிட்டு இருக்காரு. ’

‘அட, நாங்க பார்க்காத வில்லனா? 

———————————————————————-

       ஒரு பெரிய மாளிகை அது.  ஒரு குதிரை வீரன் மிக பணிவாக அந்த அறைக்குள் நுழைகிறான்.  மெல்லிய இருள் அந்த அறையை சூழ்ந்து இருக்கிறது.

மிக மெல்லிய குரலில் ‘எஸ்கோபாரை கடைசியாக டூமில்குப்பத்தில பார்த்ததாக நம் ஆட்கள் சொல்லுகின்றார்கள், பிரபு’

        அந்த அறையில் கணப்புக்கிடையில் உட்கார்ந்திருக்கும் உருவத்திடமிருந்து ஒரு வித சீற்றத்துடன் ’வேதாளம் என் தாத்தாவின் கப்பல்.  அதிலுள்ள பொருட்களும் அவரை சார்ந்தவை.  அவனை கண்டுபிடித்து அந்த வரைபடத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு வா’

‘சரி, மகா பிரபு’

     அவ்வீரன் வெளியே வந்து தன் நண்பர்களிடம் ‘அலெக்ஸாண்டர் மகாப்பிரபு எஸ்கோபாரிடமிருந்து அந்த வரைபடத்தை எப்படியாவது பறித்துக் கொண்டு வரவேண்டுமென ஆணையிட்டுள்ளார், வாருங்கள் போகலாம்’

      இருளை கிழித்துக் கொண்டு அந்த குதிரை வீரர்கள் கிளம்பினர்.

                                                                                                                                 தொடரும்

Advertisements

November 22, 2008 at 3:53 pm 20 comments

வேதாள நகரம் 3. மர்ம கிழவன்

      மூன்று இலட்சிய குதிரை வீரர்களும் ஹோட்டல் ஜல்சா வாசலில் இறங்கினர்.  அங்குள்ள பாருக்கு சென்று அமர்ந்தனர்.  இந்த ஊரில் குளிக்கலாமா என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தனர். அப்போது ஜானி பீரோ அந்தப் பக்கமாக கடந்து சென்றான்.

       அவனை பார்த்ததுமே சதீஷ்க்கு ஒரு இனம் புரியாத பாசம் அந்த கயவன் மேல் ஏற்பட்டது.  உடன் விஷ்வாவிடம், ‘விஷ்வா, நம் குழுவில் அவரையும் சேர்த்துக் கொள்ளலாமா? பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியுது’ எனக் கூறினார்.

        விஷ்வாவின் பெரியப்பாவின் சகலை ஒரு பெரிய சாகச குதிரை வீரர்.  எல்லா சாகசங்களையுமே தன்னந்தனியாக தான் செய்வார்.  அது முடிந்தபின் ‘நான் ஒரு தன்னந்தனிக்காட்டு ராஜா…..’ என்ற ரீதியில் ஒரு பாட்டு ஒன்னை எடுத்து விடுவார்.  இவருக்கும் அவரை மாதிரியே ஆக வேண்டுமென்று ஆசை.  கூட இருக்கும் இவர்களை எவ்வாறு கழட்டிவிடுவது என தெரியவில்லையால் இவர் ஒரு குழுவாக சுற்ற நேர்ந்தது.  சதீஷின் பேச்சை கேட்ட விஷ்வாவுக்கு பளிச்சென்று ஒரு எண்ணம் உதயமாயிற்று.

      உடனே, விஷ்வா மிக கனிவுடன் ‘சதீஷ், எனக்கு உன்னோட எண்ணம் புரிகிறது.  நாமெல்லாம் இலட்சிய குதிரை வீரர்கள்.  நம் குழுவில் அவர் சேரமுடியாது. ஆனால் நீ விரும்பினால் அவருடன் சேர்ந்து கொள்ளலாம்.  நான் தடுக்க போவதில்லை.  என்ன சொல்றே’ என கேட்டார்.

      உடன் சதீஷ் ‘என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள், விஷ்வா.  நான் எப்படி உன்னை பிரிவது குதிரை தன் வாலை பிரியுமா, வாத்து மீனை பிரியுமா’ என பலவாறு உதாரணங்கள் சொல்லி அவர்களை சோதித்து, ‘நான் உன்னை எக்காலத்திலும் பிரியமாட்டேன், விஷ்வா’ எனக் கூறி கண்கலங்கினார்.

       அதைக் கண்ட கலீலும் கண் கலங்கினார்.  தன் திட்டம் பலிக்கவில்லை என அறிந்த விஷ்வாவும் கண் கலங்கினார்.  மூன்று இலட்சிய குதிரை வீரர்களும் கண் கலங்கினார்கள்.  இதனை படித்துக் கொண்டிருக்கிற வாசகர்களும் இதை போய் நாம் படிக்கிறேமோ என கண்கலங்கினார்கள்.  

     அப்போது புதுசா வந்திருக்கிற இந்த பசங்களா நாம காட்டுற காட்டுல அவங்க ஊர விட்டே ஒடினும்னு நினைத்துக் கொண்டு அவர்களின் மேசைக்கு வந்த ஜானி பீரோவிடம், கலீல் ‘யோவ், மூன்று சிக்கன் பிரியாணி கொண்டாய்யா’ என கூறினார்.

    ‘நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது.’

     ‘மூன்று சிக்கன் பிரியாணி கொண்டுவறத்துக்கு உன் குல கோத்திரம்ல்லாம் நாங்க தெரிஞ்சுக்கணுமா, ஜல்தியா எடுத்துட்து வா’

    ‘உங்க யாருக்குமே என் கேரக்டர் பத்தி தெரியாது’

     ‘வாஸ்தவம்தான். யாருய்யா நீ? போய் வேலைய பாப்பியா’

     உடன் சதீஷ் குறுக்கிட்டு, ‘கலீல், யாரையும் தவறாக பேசாதே.  அய்யா, நீங்கள் அப்படியே சிக்கன் 65யும் மூன்று பிளேட் எடுத்துட்டு வர முடியுமா’ என அன்புடன் கேட்டார்.  கடுப்பாகி ஜானி பீரோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.  அப்போது கலீல், ‘இவன் போற வேகத்தை பார்த்தா சீக்கிரமே சிக்கன் பிரியாணி வந்துறும்னு நினைக்கிறேன்’ என தன் நம்பிக்கையை தெரிவித்தார்.

     தன் அறைக்கு சென்ற ஜானி பீரோ ‘செழி’ என அலறினார்.

      செழி என்று அழைக்கப்படும் செழி யங் ஜில்லர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழையும்முன் அவரைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.  மிகப் பெரிய வில்லன் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன்  அவர், ஜானி பீரோவிடம் அப்ரன்டிஸ் ஆக வேலை பார்த்தார்.  ஒரு அழகான பெண்ணுடன் ஒரு அறையில் தனியாக இருக்கும்போது, அந்தப் பெண் ஏதாவது விளையாடலாமா எனக் கேட்டால் கொஞ்சம் கூட தயங்காமல் செஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அப்பாவி.  அவர் ஒரு கவிஞர் என்பது அவருக்கே தெரியாத ஒரு விஷயம்.

    அவரை அழைத்து  ‘என்ன போய் சிக்கன் பிரியாணி எடுத்து வர சொல்றான்ங்க’ எனக் கூறி ஜானி பீரோ கொதித்தார். செழியும் ‘அதானே, இன்னிக்கு மட்டன் தான் போட்டுறுகாங்கன்னு நீங்க பட்டுன்னு சொல்ல வேண்டியதானே பாஸ்’ என மறுமொழி பகர்ந்தார்.

       ‘இவர்கள் மேல் ஒரு கண் இருக்கட்டும்’ என ஜானி பீரோ கூறியதற்கு, செழி தன் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ‘சரி பாஸ்’ என கூறினார்.

     ‘எதுக்கும் ஜாக்கிரத்தையா இரு.  இவனுங்க ஒரு ரேஞ்சா பேசுறான்ங்க.  ரேஞ்சர்களாக கூட இருப்பான்ங்க’

    ‘சரிங்க பாஸ். நான் போய் சாப்புட உங்களுக்கு மட்டன் பிரியாணி கொண்டு வரவா?’

     மடார்.

    நமது இலட்சிய குதிரை வீரர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இருட்டு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதான உருவம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தது.  சிறிது நேரத்திற்கு பின், அவர்களை தன்னுடன் அமர முடியுமா என கேட்டது.  ஒசி பீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நமது கதாநாயகர்கள் அவருடன் அமர்ந்தனர்.

      ‘நான் ஒரு நாடோடி.  என் வாழ்க்கையின் பெரும் பகுதியை பயணத்திலேயே செலவழித்து விட்டேன். இப்போது என் உடம்பில் தெம்பில்லை.  இந்த ஊரில் தான் என் கடைசி காலம் கழியப்போகிறது என எனக்கு தோன்றுகிறது.  என் மனதில் ரொம்ப நாளாக அழுத்திக் கொண்டிருக்கிற ஒரு இரகசியத்தை உங்களிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  அதனால்தான் கூப்டேன்.’

    ‘பெரியவரே, வெயிட்டரை கூப்பிட்டு மூணு பீரு ஆர்டர் பண்ணட்டுமா?’

    ‘வேண்டாம்பா, நாம பேச போற விஷயங்கள யாருமே கேட்க கூடாது’

       ‘ஏன் பெரியவரே, எங்க கிட்ட சொல்லுனும்னு தோணுச்சு’

      ‘உங்களை பாத்தா பெரிய வீரர்கள் மாதிரி இருந்துச்சி’

     உடனே சதீஷ், ‘பெரியவரே, இரவில் உங்களுக்கு கண் சரியாக தெரியாதா’ என ஆதுரத்துடன் கேட்டு அவரின் இரு கால்களிலும் பலத்த மிதிகள் வாங்கினார்.

     ஓசி பீர் பார்ட்டி இது கிடையாது என தெரிந்தவுடன் கலீல் மிகுந்த சோகமானார்.  விஷ்வா அவர்களை தடுத்து பெருசு என்னதான் சொல்லுதுன்னு கேப்போம் என அவர்களை சமாதானப்படுத்தினார்.

     ‘வேதாள நகரம் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?’

                                                                                                           தொடரும்……………………….

November 21, 2008 at 6:05 pm 6 comments

21-11-2008

     அமெரிக்க சந்தை ஆரம்ப சரிவிலிருந்து மீளும் என நம்பினேன்.  அது போல் மீண்டு 440 புள்ளிகளில் சரிந்திருக்கிறது.  இன்று வெள்ளிக்கிழமை.  சூப்பர் காம்பினேஷன். 

     நீண்டகால முதலீட்டாளர்கள் இன்று தங்கள் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த துவங்கலாம்.  இந்த வாரக் கடைசியில் ஏதாவது அரசுகள் செய்யும் என நான் மட்டுமல்ல இந்த உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

       உலக சந்தைகளின் தலைமைப் பொறுப்பினை தற்போது வரை வகித்துக் கொண்டிருப்பது அமெரிக்க சந்தையே.  இது போன்ற சரிவுகளை தடுக்க முடியாத பட்சத்தில் அந்த தலைமை பதவி ஆசிய சந்தைகளுக்கு போய்விடும் என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர உண்டு.  அந்த ஆசிய சிங்கங்களில் நமக்கு தற்போது இரண்டாமிடம் என்றாலும், முதலிடத்திற்கு வர நிறைய நாள் தேவைப்படாது.

       சரி, இன்றைய கதைக்கு வருவோம்.  மிகுந்த சோகத்துடன் கூடிய ஒபனிங் சீனில் ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு.  க்ளைமாக்ஸும் அப்படியேதான் இருக்கும்.   முழுக்க முழுக்க ஒரே அழுக்காச்சியா இருக்கும்.  10 சதவீதத்தை கரடிகள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த மாதிரி துவங்கி நிறைய நாட்கள் ஆன நிலையில் இன்று முயற்சி செய்வார்கள்.

       இதனை தடுக்க ம்யூட்சுவல் நிதி நிறுவனங்கள் முயலலாம்.  முயலுமா?  காலையில் ஒரு நண்பருக்கு போன் செய்து இந்தியன் ப்யூச்சர் எல்லாம் எப்படி இருக்கு என்று கேட்டதற்கு, அவர் வெறுப்புடன் ப்யூச்சரே இல்லை, சார் என பதில் சொல்கிறார்.

       இந்த வாரத்தை பற்றி சுருக்கமாக இந்த மாலை எழுதுகிறேன்.

     Today’s the Great Hunting Day for the Investors! Never Miss It!

      By the way, Good Morning! hmmmmmmmm

Post Market:

      அழுகாச்சியா தொடங்கும் என எதிர்பார்த்த எல்லோரையும், ஆனந்த அழுகாச்சிக்கு உள்ளாக்கி விட்டது சந்தை.  காலை 8.30 மணிக்கு இறங்குமுகமாக இருந்த ஆசிய சந்தைகள் அனைத்தும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மிக வேகமாக உயர்ந்து விட்டன.  ஆனால் சீன சந்தை மட்டும் ஒரளவு எச்சரிக்கையுடன் இந்த போக்கிற்கு உட்படாமல் இருந்ததை குறிப்பிட வேண்டும்.  இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானவை.   ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்வுகளை சந்தைகள் கொடுக்கும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.  உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான், ஆனா இன்னும் நிறைய இருக்குடா தம்பி என சந்தை எனக்கு கற்றுக் கொடுப்பதாகவே நினைத்துக் கொள்வேன்.  இன்றைய தினம் தவறான கணிப்பினை வெளியிட்டுள்ளேன்.  அதற்கு நான் சொன்ன காரணங்களை சந்தை நிராகரித்து விட்டது.  வேறு என்னென்ன காரணங்கள் என பார்ப்போம்.

      இறங்குமுகமாக தொடங்கிய நம் சந்தை ஆசிய சந்தைகள் மீண்ட வேகத்தினை பார்த்து வெகு வேகமான சரிவிலிருந்து மீள தொடங்கியது.  கடந்த ஏழு நாட்களாகவே தொடர்ந்து சரிவினையே சந்தித்து வந்ததால், இன்றைய அமெரிக்க சந்தை மீண்டும் மேலேழும் என்ற நம்பிக்கை, இவைகள் நடந்தால் திங்கட்கிழமை சந்தைகள் மீண்டும் 2800 என்ற நிலைக்கு மேல் முடிய வாய்ப்பு இருக்கின்றது என்ற டெக்னிகல் விவரங்கள் போன்றவையால் சந்தையில் வெகு வேகமாக ஷார்ட் கவரிங் ஆரம்பித்தது.  பின்னர், அவை முடிந்த பிறகு மீண்டும் ஒரு சரிவு, பின்னர் ஐரோப்பிய சந்தைகள் உற்சாகமான ஆரம்பத்தால் மீண்டும் மேலேறுதல் என பலவிதமான ஆட்டங்களை ஆடியது சந்தை.  இது ஒரு அபூர்வமான நிகழ்வு.  100 புள்ளிகள் மேலேறி கீழிறிங்குதல் சற்று பெரிய இடைவெளியில் ஆடுவது அபூர்வம் என்றே நினைக்கிறேன்.

 

    இந்த வாய்ப்பினை கையில் உள்ள பங்குகளை விற்க உபயோகப்படுத்திக் கொண்டேன்.  நான் ரிலையன்ஸ் கம்யுனிகேஷ்ன்ஸ் பங்கினை 196 விலையில் வாங்க சொல்லியிருந்தேன்.  அதனை திங்களன்று விற்று லாபத்தை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,  சந்தை மேலும் இறங்க வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.  அமெரிக்க சந்தை புதிய பள்ளத்தை நேற்று தொட்டிருக்கிறது.  அதனால் இன்று ஒரு சிறிய ஏற்றம் இருக்கவும் வாய்ப்பு உண்டு.  உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் உற்சாகமாக தொடங்கிய ஐரோப்பிய சந்தைகள் இறங்குமுகமாகவே முடிந்துள்ளது என்பதை நினைவில் வையுங்கள்.

       அடுத்த வாரம் சந்தையின் மிக முக்கியமான நிலைகளை நிர்ணயிக்கும் வாரம்.  இந்த வார சந்தையை பற்றி நாளைக்கு எழுதுகிறேனே!

November 21, 2008 at 6:17 am 7 comments

20-11-2008

      நேற்று அமெரிக்க சந்தை 250 முதல் 300 வரை சரியும் என எதிர்பார்த்தேன்.  400 புள்ளிகள் இழந்திருக்கிறது.  ஆசிய சந்தைகள் செக்கச் சிகப்பாய் இருக்கிறது. நமது சந்தை இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 200 புள்ளிகள் ஏறுமுகமாகவே தொடங்கும். அட, சும்மாங்க, இப்படியெல்லாம் எழுத வில்லையென்றால் அப்புறம் இதே மாதிரி எழுதுவது மறந்து விடும்.

 

       நமது சந்தை இன்று சரிய வாய்ப்பு இருக்கிறது.  இந்த வாரம் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கையில் இது போன்ற நிகழ்வுகள் சந்தையை பலமாக தாக்கும் என்பது உண்மை. சீட் பெல்ட்டை கட்டிக்கிட்டுதான் இன்று சந்தையில் உட்கார வேண்டும்.

     நல்ல செய்திகளே இல்லாமல் இல்லை.   மோட்டார் வாகன தொழிற்சாலைக்கு அமெரிக்க அரசு ஒரு பெயில் அவுட் தயார் செய்துள்ளது.  அது தொடர்பாக ஒரு சிக்கல் எழுந்ததையொட்டி, அமெரிக்க சந்தை குபுக் ஆனது.  நாளை ஒரு நாள் இருக்கையில் அந்த பெயில் அவுட் பற்றி நல்ல செய்தி கசிய நேர்ந்தால், ஐரோப்பிய சந்தைகள் ஒரளவு ஏற்றமுடன் அல்லது பெரிய சரிவுகளுடன் இல்லாமல் ஆரம்பிக்க கூடும். நமது சந்தை ஒரளவு அதனை பின்பற்றலாம்.

     ஆனா, இன்றைய சந்தையின் முதல் பகுதியில் ஒரே இரத்தக் களரியாக இருக்கும்.  ஆனால், நண்பகலில் சந்தை மீள வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.  மிக மெல்லிய வாய்ப்பு  ஆனால் வாய்ப்பு.

      நமது சந்தை 10 சதவீதத்தை இன்று நெருங்கும் வகையில் புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.  கரடிகள் ரொம்ப நாள் இதை எதிர்பார்த்துள்ளார்கள்.

       இன்றைய வன்முறையைப் பற்றி மாலை எழுதுகிறேன்.

 Be Vigilant and as always have a great hunting day!

Good Morning!

Post Market:

     அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது.  குறைந்தபட்சம் 150 புள்ளிகளுக்கு மேல் முடிந்தால்தான் நாளைய சந்தைகள் ஒரளவு Consolidate ஆகும்.  அப்படி இல்லாத பட்சத்தில் நாளை கிட்டத்தட்ட 100 புள்ளிகளுக்கு மேல் சந்தை இறங்க வாய்ப்பு உள்ளது.  சந்தை 2300-2200 என்ற நிலைகளுக்கு வரும்போது, சிறிது சிறிதாக  முதலீடு கவனிக்கவும், முதலீடு  செய்ய ஆரம்பிக்கலாம்.

      அமெரிக்க சந்தை கிட்டதட்ட 200 புள்ளிகளை தற்சமயம் இழந்திருக்கிறது.  கடைசி நேரத்தில் ஒரளவு மீளக்கூடும் என நினைக்கிறேன்.  போகும்போது கெட்ட பெயருடன் போகாமல் இருக்க, (நம்நாட்டு அரசியல்வாதிகள் கவனிக்கவும்) ஏதாவது செய்வார்கள்.  இன்று செய்வார்களா என்பது கேள்விக்குறி. 

      இன்றைய சந்தையை பற்றி சொல்ல என்ன இருக்கிறது?  வழக்கமான Same Reaction.

November 20, 2008 at 5:41 am 5 comments

19-11-2008

     அமெரிக்க சந்தை ஊசலாடி கடைசி நேரத்தில் 150 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கிறது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் சிகப்பாகவே காணப்படுகின்றன.   பொருளாதார மந்தம் பற்றி எல்லோர் மனதிலும் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.  எவ்வாறு சந்தை ஏறினாலும், ஷார்ட் போனால் மீண்டும் எளிதாக ஒரிரு நாட்களில் கவர் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே தற்போது உலகெங்கும் நிலவுகிறது.  தின வணிகம் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் ஒதுங்கியே உள்ளனர்.

      எனவே, சந்தை இன்று சிறிது மேலேறினாலும், புதிய ஷார்ட் பொஸிஷன்ஸ் துவங்கக் கூடும்.  பெரிய அளவில் சந்தை மேலேறும் என நான் கருத வில்லை.  சில பங்குகளில் பெரிய அளவில் ஷார்ட் போகியிருக்கிறார்கள்.  அவற்றில் சில பங்குகள் மட்டுமே நிப்டி பங்குகள்.  ரிலையன்ஸை பொறுத்த மட்டில், பெட்ரோ கெமிக்கல் துறையை ஒருவித நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

    நமது அரசு கச்சா எண்ணெய் விலை பற்றி வாயே திறக்க மாட்டேன் என முடிவு செய்திருக்கிறார்கள்.  நிதி அமைச்சரின் அறிக்கைகளை Read between lines என படித்தால் நம் சந்தை மேலும் இறங்கும் என்றே தோன்றுகிறது.

    இன்றைய தினம் நமது சந்தை +75 முதல் -65 வரை ஆடலாம் என நினைக்கிறேன்.  முடிவு Negative or Flat ஆக இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்றைய ஐரோப்பிய சந்தைகள் இறங்குமுகமாகவே ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.

     ஆக்ஸிஸ் பேங்கில் இன்று ஷார்ட் கவரிங் பெருமளவில் இருக்கும் என நினைக்கிறேன். மாலையில் பார்ப்போம்.

Good Morning!

Post Market:

      எதிர்பார்த்த மாதிரிதான் ஆயிற்று.  சென்னையை தாக்கவரும் புயல் போல் நம் சந்தை நாளுக்குள் நாள் வலுவிழந்து வருகிறது.  இந்த வாரம் முடிய இன்னும் இரு நாட்களே இருக்கின்ற படியால்,  ஒரு சிறிய அதிர்வு கூட பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்.  இன்றைய அமெரிக்க சந்தை இழப்புடன் முடியும் என எதிர்பார்க்கிறேன்.   எல்லோரும் வேடிக்கை பார்க்கின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள் என நினைக்கிறேன். அதுவும் நல்லதுதான் என தற்சமயம் தோன்றுகிறது.

      செய்திதாட்களில் படித்திருப்பீர்கள்.  இந்திய மாலுமிகளை கடற்கொள்ளைக்காரர்கள் கடத்திச்சென்று பிணைத்தொகை கொடுத்தால்தான் விடுவிப்போம் என வம்பு செய்ததை படித்திருப்பீர்கள். இன்று நமது போர்க்கப்பல் ஒரு கொள்ளைக்காரர் கப்பலை தாக்கி மூழ்கடித்துள்ளது.

     I salute Indian Navy and their brave warriors!

November 19, 2008 at 5:41 am 3 comments

18-11-2008

      நேற்று ஒரு அவசர வேலை ஏற்பட்டதால் மாலை Post Market எழுத முடியவில்லை. 

 

      நேற்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்திருக்கிறது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் சிகப்பாக தொடங்கியிருக்கிறன.  பெயில் அவுட் அறிவித்துள்ள சீன சந்தை மேலும் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.  பொருளாதார மந்தம் மேலும் நீடிக்கும் என வானிலை அறிக்கை போல் அமெரிக்க நிதி அமைச்சர் கண்டுபிடித்து தெரிவித்துள்ளார்.

       நமது சந்தையும் இன்று உலக சந்தைகளை பிரதிபலிக்கும்.  நேற்றைய தினம் 100 புள்ளிகள் இறங்கினாலும், திங்கள் கிழமை என்பதால் அமெரிக்க சந்தை ஏறுமுகத்தில் முடியும் என்று நினைத்ததாலும், ஆசிய சந்தைகளும் உற்சாகமாக தொடங்கியுள்ளதால் 10 புள்ளிகளை மட்டுமே இழந்து முடிந்தது.

      இன்றைய தினம் துவக்கத்திலேயே பெரிய வித்தியாசத்துடன் துவங்க நேரலாம்.  அதிலிருந்து ஆபரேட்டர்கள் எவ்வாறு சந்தையை நடத்தி செல்ல போகின்றார்கள் என தெரியவில்லை.  சந்தையின் வால்யூம் குறைவாக இருப்பதால் சந்தை எந்த பக்கமும் விழலாம். இன்றைய தினம் 150 புள்ளிகளுக்கு மேல் இறங்க முயலலாம்.

     சந்தை -168 முதல் -55 என்ற புள்ளிகளில் ஆடும் என நினைக்கிறேன்.  முடிவு இறங்குமுகமாகவே இருக்கும்.  தொடர்ந்து தின வணிகம் செய்து வந்தால், முதலீடு பற்றிய எண்ணம் சிறிது சிறிதாக குறைய துவங்கும்.  இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது சிறிது இடைவெளி கொடுங்கள்.

      மாலை விரிவாக எழுதுகிறேன்.

Good Morning! Be Sharp and Vigilant!

Post Market:

      சந்தை ஆரம்பத்திலேயே இறங்க துவங்கி நாள் முழுவதும் தள்ளாடிக் கொண்டிருந்தது.  காலையில் எழுதியவாறே சீனச் சந்தை 128 புள்ளிகள் சரிந்துள்ளது.  ஆசியாவின் மிகப் பெரிய சந்தையில் ஒன்றான அச்சந்தை நாளை ஒருவித பதட்டத்துடனே ஆரம்பிக்கும்.  இன்றைய அமெரிக்க சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் சரிய நேர்ந்தால் நாளைய ஆசிய சந்தைகள் அனைததிலும் இந்த வாரம் முழுவதும் Short Selling காணப்படும். 

       ஐரோப்பிய சந்தைகள் தனிக்கதை.  இனி வரும் காலங்களில் அமெரிக்காவையே முழுவதும் நம்பி இருக்கக் கூடாது என பெரிய விலையில் பாடம் கற்றுக் கொண்டு அதை செயல்படும் நீண்ட கால திட்டங்களில் இறங்கிவிட்டன.  எப்படியும் இரண்டு வருடங்களாவது பல்லைக் கடித்துக் கொண்டு இருக்க வேண்டியது தான் என தோன்றுகிறது.  ஓபாமாவால் ஒரே வருடத்தில் சரிபடுத்தி முடியாத அளவுக்கு பேராசை புகுந்து விளையாடியிருக்கிறது அமெரிக்க சந்தையில்.

         இந்த வாரத்தின் முக்கிய கட்டம் இன்றைய அமெரிக்க சந்தையின் முடிவை பொறுத்தே அமையும்.

November 18, 2008 at 6:41 am 5 comments

17-11-2008

     ஆசிய சந்தைகள் ஆரம்பித்திருக்கும் விதம் சரியில்லை.  எல்லா சந்தைகளிலும் உள்ளூர ஒரு பயம் இருக்கின்றதை உணர முடிகிறது.  இந்த வாரம் ஏதாவது ஒரு பாஸிட்டிவ் செய்திகள் வந்தாலொழிய நம் சந்தை இறங்குவதை கட்டுப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்.

       எல்லா தரகு நிறுவனங்களும் ஷார்ட் போக சொல்லுகின்றன.  2200 என்ற நிலையில் ஷார்ட் கவரிங் என்ற நிலையே தற்சமயம் டெக்னிகலில் தென்படுகிறது.  இந்த இடத்தில் ஆபரேட்டர்கள் விளையாடினால், சந்தை 2000-க்கும் கீழே இறங்கக  வாய்ப்பு இருக்கிறது.

       இன்றைய சந்தையின் போக்கு நெகடிவ்வாக தான் இருக்கும்.  எந்த ஏற்றமும் நீடிக்காத நிலைதான்.  சந்தை -115 முதல் 45 வரை ஆடலாம்.  முடிவு -115 முதல் -45 வரை முடியலாம்.

      பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது.  இது தற்சமயம் எதிர்மறை செய்தியதாக தான் சந்தை கருதும் என நினைக்கிறேன்.  நமது நிதி அமைச்சரும் உலக பொருளாதார மந்தம் நம்மையும் பாதிக்கும் என்ற வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.  இது புதிய செய்தி போல் சந்தை இன்று React செய்யும்.

      புதிய முதலீடு செய்பவர்கள் சிறிது நாட்கள் காத்திருப்பது நல்லது.  குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் வரை சந்தை தின வணிகத்திற்கே ஏற்றவையாக இருக்கும்.  2200 என்ற நிலையில் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். 

     சந்தையின் ஆட்டத்தைப் பற்றி மாலையில் எழுதுகிறேன்.

Have a Good Day!

November 17, 2008 at 5:47 am 6 comments

Older Posts Newer Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 5 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 6 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 6 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 6 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930