Archive for November 27, 2008
27-11-2008
மும்பை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என்ற போதிலும், வரலாற்றை புரட்டி பார்த்தோமென்றால் நமது அரசாங்கம் தீவிரவாதிகளிடம் ஒரு மென்மையான அணுகுமுறையையே மேற்கொண்டுள்ளது. இதில் முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற பட்டம் வேறு அவர்களுக்கு கொடுக்கப்படும். தீவிரவாதிகளை முஸ்லீம் தீவிரவாதிகள், ஹிந்து தீவிரவாதிகள் என பிரித்து அழைப்பது அபத்தம். அவர்கள் தீவிரவாதிகள். அவ்வளவுதான்.
மக்கள் ஒட்டு என்ற கணக்கை வைத்து செயல்படாமல் உண்மையிலேயே மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்ப்போம்.
பலத்த காற்று இங்கே வீசிக் கொண்டிருக்கிறது. மழையும் விட்டபாடில்லை.
வேறு ஏதாவது பங்கு பரிந்துரை நிப்டியானந்தர் பக்கத்தில் கொடுக்கமுடியுமா என இன்று முயற்சி செய்கிறேன்.
Good Morning to you all!
Recent Comments