பெய்யென பெய்யும் மழை

November 26, 2008 at 5:37 pm 6 comments

     ஆறு மாதங்களுக்கு முன் ஒரு உணவகத்தில் ஒரு ஆங்கிலேயரை சந்திக்க நேர்ந்தது.  மொழிப் பிரச்சினை காரணமாக எழுவிருந்த ஒரு சங்கடமான தருணத்தை தவிர்க்க அவருக்கு உதவி செய்ய நேர்ந்தது.  பேசிக் கொண்டிருக்கையில், அவர் இங்கிலாந்தில் என்ஜீனியர் என்றும், ஆப்பிரிக்க நாடுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுற்றுலா வந்திருப்பதாக சொன்னார்.

       கால்பந்தில் ஈடுபாடு எனக்கு உண்டு என்பதால், இருவருக்குமே பேச நிறைய விஷயம் கிடைத்து விட்டதால், நிறைய பேசிக் கொண்டிருந்தோம்.  ஒரு கட்டத்தில் இங்கிலாந்தை போல் என் நாட்டிலும் மழை தவறாமல் பெய்தால், எங்கேயே போயிருப்போம் என குறிப்பிட்டேன்.

       சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு அவர் மெல்ல பேசத் தொடங்கினார் ‘உங்கள் நாட்டில் குறிப்பிட்ட சில நகரங்கள் தவிர வேறு எந்த நகரமுமே கன மழையை உத்தேசித்து கட்டமைக்கப் படவில்லை.  ஒரு நகரம் என்றும் புதிதாக இருக்க சாக்கடைகள் (Drainage) முக்கியம்.  நீங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.  அதை மிகுந்த அறுவெறுப்புடன் எதிர்கொள்கிறீர்கள் என்பது பார்க்கும்போது தெரிகிறது.    மழையை நீங்கள் எதிர்கொள்ளும் விதமும் சரியில்லை என உணர்கிறேன்.’

      அதுபற்றி அப்போது நான் பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.  பிறகு டேவிட் பெக்காமை பற்றி நான் சொன்ன கமெண்டிற்கு அவர் மிகவும் உற்சாகமாக பதில் சொல்ல தொடங்கிவிட்டார்.

       தற்போது ஐந்து நாட்களாக பெய்து வரும் மழையை பார்க்கும்போது இதைப் பற்றி தெளிவான பார்வை எதுவுமே நம்மிடம் இல்லை என்றே தோன்றுகிறது.  செய்தித்தாட்களில் மழை பற்றி அக்டோபர், நவம்பர் மாதம் வரும் செய்திகள் எல்லாமே கீழ்கண்டவாறே இருக்கும்.

     புயல் சின்னம் தோன்றி, மழை ஆரம்பிக்கும் 12 மணிநேரத்திற்கு முன் –  வங்கக் கடலில் புயல் சின்னம், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு.

     பலத்த மழை பெய்யும்போது – புயல் தற்போது 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரையை கடக்கும் வரை பலத்த மழை பெய்யும்.  

      2.  ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்புகின்றன. சென்னை புழலேரியில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது

    3.  ஆற்றோரங்களில் வெள்ளம் வர வாய்ப்பு.  மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தல்.

    4. மிதக்கிறது சென்னை. 

    5. பலத்த மழைக்கு  6 பேர் பலி.

  மழை முடிந்த பின் –  மழை சேதங்களை அமைச்சர் பார்வையிட்டார்.  வெள்ள நிவாரண நிதியாக 100 கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

      யோசித்து பாருங்கள்,  வருட வாரியாக இது போன்ற செய்திகளையே நாம் தினசரிகளில் பார்த்து வருகிறோம்.  தென் இந்தியாவில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 340 நாட்கள் நாம்  பகல் பொழுதில் வெயிலை சந்தித்து வருகிறோம்.  மீதியுள்ள 25 நாட்களிலும் கன மழை ஏதேனும் ஒரு 5 நாட்கள் மட்டுமே பெய்யும். அப்படியும் கணக்கில் கொண்டால் தொடர் மழை ஐந்து நாட்களுக்கு மேல் நீடித்து நாம் பார்த்ததில்லை.   ஒருவேளை அதற்கு மேல் நீடித்தால் என்ன செய்வது? 

     தமிழ்நாட்டில் வாழும் நாம் உள்ளூர மழையை சந்திக்க தயாராக வில்லை என்றே தோன்றுகிறது.  நகரங்களும் பலத்த மழையை தாங்கும் வண்ணம் கட்டமைக்கப்படவில்லை.  எது நேர்ந்தாலும் வருடத்தில் ஒரு ஐந்து நாட்கள்தான்.  அதற்கு போய் ஏன் இவ்வளவு கவலை என அரசாங்கமும் மறந்துவிடுகிறது.  

    ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வெள்ள சமயத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கையேடுகள் உண்டு.  யார் யாருக்கு என்னென்ன பணிகள் என பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும்.  வெள்ள வடிகால்கள் என ஒவ்வொரு முக்கிய ஆறுகளுக்கும் உண்டு.  அவை சரியாக பராமரிக்கப்படாமல் சீரடைந்து கிடக்கின்றன.  ஒரு சாதாரண மழை நீர் கூட சரியாக வடிகால் இல்லாமல் தேங்கி அதனால் பலவித உபாதைகள் எழுகின்றன.

     அதனை சரிசெய்ய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதில்லை.  அப்புறம், சாலைகள்.  தேசிய நெடுஞ்சாலையை தவிர வேறு எந்த உள்ளூர் சாலைகளும் மழையில் அடித்துச் செல்லப்படுவதை எத்தனை தடவை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.  வெள்ள நிவாரண பணிகள் செவ்வனே நடைபெற சீரான போக்குவரத்து முக்கியம்.  சாலைகளே அடித்துச் செல்லப்படும் போது, என்ன வெண்டைக்காய் நிவாரணப் பணிகள்.  சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை நமது தினசரிகள் அது சாலைகளின் தவறே ஒழிய, அரசின் தவறில்லை என்ற வகையில் செய்திகள் வெளியிடும். 

      ஆற்றின் அருகே வீடுகள் கட்ட இஷ்டப்படி நகராட்சிகள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.  வருடத்தில் பெரும்பாலான நாளில் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை.  வரவும் வராது என்ற ‘நீண்ட கால’ திட்ட அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மழைக்காலத்தில் முதலில் பாதிக்கப்படுவது அங்கு வசிக்கும் மக்கள்தான்.  பிறகு வழக்கம்போல் நிவாரணம் கொடுத்து அந்த வருட ஆட்டம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வருடத்திற்கான ஆட்டம் நீண்ட இடைவெளியில் உள்ளது என வேறு வேலைக்கு போய்விடுவார்கள்.

            ஒரு பிரச்சினைக்கு  தீர்வு என்னவென்று தெரியாமல் எழுதினால் நாமும் அந்த பிரச்சினையின் ஒரு அங்கமாகி விடுவோம் (சிவ் கெரா எளிமையாக சொன்னதை மிக கடினமாக மொழி பெயர்த்திருக்கிறேன்).  சொல்லப்படாத தீர்வுகள் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை.  இயற்கை பேரிடரை தடுப்பதற்கு திட்டங்கள் இருக்கின்றன.  அது தொடர்பான கையேடுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எப்போதுமே இருக்கும்.  செயல்முறை படுத்துவதில் ஏற்படும் நடைமுறை இடைஞ்சல்களை மட்டும் நீக்கினால் போதும்.

      தற்போது ஐந்து நாட்களாக பெய்து வரும் மழைக்கு தமிழகமே மிதக்கிறது என செய்தி வந்தவண்ணம் உள்ளன.  உண்மை நிலவரமும் அதுதான்.  ஒருவேளை இந்த மழை தொடர்ந்து இன்னும் ஐந்து நாட்கள் பெய்தால் என்னவாகும்?  அது எப்போதுமே ஆட்சியாளர்களின் தவறில்லை, மழையின் தவறுதானே!

Advertisements

Entry filed under: Hunter's Mind.

26-11-2008 27-11-2008

6 Comments Add your own

 • 1. விமல்  |  November 26, 2008 at 6:32 pm

  ஆஹா
  மிகவும் அருமையான மற்றும் தெளிவான கட்டுரை.
  நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

  மேலும் இது போல தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

 • 2. விக்னேஷ் குமார்  |  November 26, 2008 at 7:54 pm

  Dear sir if time permits please get us a list of good books(motivation,provoke thinking) to read in tamil and in english.

 • 3. V.SURESH, SALEM  |  November 26, 2008 at 8:26 pm

  good view .keep it up. we expect more like this.

 • 4. King Viswa  |  November 26, 2008 at 9:00 pm

  //ஒரு பிரச்சினைக்கு தீர்வு என்னவென்று தெரியாமல் எழுதினால் நாமும் அந்த பிரச்சினையின் ஒரு அங்கமாகி விடுவோம்//

  நண்பரே,

  ஷிவ் கேரா அந்த விஷயத்தை சொன்னதின் ஆதாரம் ரிக் வேதம் ஆகும். அதில் தான் “If You Are Not Part of The Solution, Then You Are The Problem” என்று குறிப்பிட பட்டு உள்ளது. இதனையே ஷிவ் கேரா தன்னுடைய யு கேன் வின் என்ற புத்தகத்தில் பிரதானப்படுத்தி உள்ளார்.

  மற்றபடி, அட்டகாசமான ஒரு கருத்தை முன் வைத்ததிற்கு நன்றி.

  கிங் விஸ்வா.

 • 5. இராகவன்  |  November 26, 2008 at 11:07 pm

  மிக தெளிவான நடை. மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள். ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியாது. அப்படி புரிந்து இருந்தால் இன்று 5 மழைக்கு இப்படி நடக்காது. இருக்கின்ற ஏரிகளை தூர்த்து வீடாக்கினால், அந்த தண்ணீர் எங்கு செல்லும் என்ற சிந்தனை கூட இல்லாதவர்கள்.

 • 6. King Viswa  |  November 27, 2008 at 6:46 am

  //இந்த மழை தொடர்ந்து இன்னும் ஐந்து நாட்கள் பெய்தால் என்னவாகும்? அது எப்போதுமே ஆட்சியாளர்களின் தவறில்லை, மழையின் தவறுதானே//

  அன்பரே,

  வருங்கால அரசியல் விடி வெள்ளி ஆன நீங்கள் இப்படி பேசலாமா?

  யார் எப்படி கூறினாலும் தவறு நம்முடையது தான். நாம் தானே இந்த கீழ்த்தரமான அரசியல்வாதிகளை தேர்ந்து எடுக்கும் உரிமையை வைத்து உள்ளோம்? நாம் ஒழுங்காக வோட்டளிதால் இது போன்ற நிலைமை வருமா? இதை உணர்ந்து வோட்டளிப்பது நமது கடமை. அதனை நாம் ஒழுங்காக செய்தால் படிப் படியாக நிலைமையை மாற்றலாம்.

  கிங் விஸ்வா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 6 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: