Archive for November 24, 2008
24-11-2008
வெள்ளிகிழமை ஏறிய சந்தை இன்று ஏறாது என்றே நினைக்கிறேன். F & O முடியும் வாரம் இது. ஆனால் அதன் பாதிப்பு செவ்வாய், புதன் அன்று தான் தெரியும் என்று நினைக்கிறேன். ஆசிய சந்தைகள் இறக்கமாக காணப்படுவதால், நமது சந்தையும் ஆரம்பத்தில் Selling Pressure சந்திக்கக் கூடும்.
அதை சமாளித்து முன்னேறும் பட்சத்தில் 75 புள்ளிகள் வரை செல்லலாம். ஆரம்பத்திலேயே சமாளிக்க இயலாவிட்டால், சந்தை 100 புள்ளிகள் வரை இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியான சிட்டிபேங்க் தற்சமயம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. நாட்டின் வலுவான பொருளாதார நிலைக்கு வங்கித் துறை முதுகெலும்பு போன்றது. வெள்ளிக்கிழமை ஏற்றத்தில் நமது சந்தையில் வங்கித் துறை போதுமான அளவு ஏறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
சற்று எச்சரிக்கையாக இன்று சந்தையை தொடரவும். மாலை விரிவாக எழுதுகிறேன். நிப்டியானந்தர் புதிய பரிந்துரையை கொடுத்துள்ளார்.
Good Morning to you all!
Post Market:
இன்றைய நம் சந்தை 14 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. ப்ளாட் என்று தான் சொல்ல வேண்டும். எந்த பக்கம் செல்வது என்று தெரியாத குழந்தையின் நிலைமைதான் நம் சந்தைக்கும்.
அமெரிக்க நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. சீன, ஜப்பான் நிறுவனங்கள் அடிவாங்கியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களை வாங்க பார்க்கின்றன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வளைக்க இந்திய நிறுவனங்கள் முயல்கின்றன. கிட்டதட்ட வல்லரசு பதவி பறிபோகும் நிலைமையில் இருக்கிறது அமெரிக்கா. புஷ்ஷின் இந்த கடைசி மாதம் மிக போராட்டமான மாதமாக அமெரிக்க சந்தைக்கு இருக்க போகிறது. அமெரிக்க டோ 6000 புள்ளிகளை தொட வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன்.
அப்போது இந்திய சந்தை? மற்றவர்களை பார்த்து செல்லாமல் தனக்கென ஒரு பாதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என தெரிகிறது. இது தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2200 என்ற நிலையிலிருந்து நீண்ட கால முதலீட்டினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்.
Recent Comments