வேதாள நகரம் 4. கடற்கொள்ளையர்

November 22, 2008 at 3:53 pm 20 comments

‘வேதாள நகரமா?

‘சின்ன வயசில கேட்ட கதை.  அந்த மாதிரி எதுவுமே கிடையாது.’

‘நீங்க பள்ளிக்கு போய் படிச்சிருக்கீங்களா?’

‘நான் ஒரு தபா வாத்தியார் நாற்காலிக்கு கீழே டைனமட் வைச்சேங்கிற ஒரு அற்ப காரணத்தை காட்டி என்ன பள்ளிக்கூடத்தை விட்டு துரத்திட்டாங்க. அதல்லாம் உனக்கு எதுக்கு பெரிசு? மேட்டருக்கு வா’

‘நான் சொல்லப் போற விஷயம் ரொம்ப இரகசியமானது.  இதைக் கேக்குறதால உங்க உயிருக்கே ஆபத்து வரலாம்.  நானும் ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டேங்கறதால, என் மனசுக்குள்ள பூட்டி வைத்திருக்கிற இரகசியத்தை யாருக்கிட்டயாவது பகிர்ந்துக் கொள்ள வேண்டுமென்னு தான் உங்களையெல்லாம் கூப்டேன்.

‘பெரியவரே, எதா இருந்தாலும் சட்டுன்னு சொல்லுங்க.  ஏகப்பட்ட ஜோலி கிடக்குது எங்களுக்கு’

‘வீரர்களே, இது ஒரு பொக்கிஷம் சம்பந்தப்பட்டது.’

‘இந்தா, தண்ணி குடி, பெரிசு.   பொறுமையா சொல்லு.  நைட் முச்சுடம் வேணா இங்க நாங்க உக்காந்து இருக்கோம். மனுசாள் தானே முக்கியம்.’

‘என் மனசுல இருக்கறது சொல்றேன். குறுக்கே பேசாம கேட்டுகோங்க.  குறுக்கே பேசுனா எனக்கு கோவையா வராது அதான்.  இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு கடல் வழி கண்டு பிடிச்சவரு வாஸ்கோடகாமான்னு வரலாறு பேசுது. உங்க முகத்துல படிச்ச களைன்னு எதுவும் தெரியல. இருந்தாலும் உங்க யாருக்காவது வரலாறு பற்றி ஆர்வம் இருந்து அது சரியில்ல இது சரியில்லன்னு நடுவில சொன்னா செவிட்டுலயே அறைவேன்.  அந்த பட்டு வழிய (Silk Route)  அதுக்கு முன்னாடியே ஒரு ஸ்பெயின் நாட்டு பிரபு தனக்கு சொந்தமான கப்பலை அனுப்பி அந்த வழியை கண்டுபிடிச்சுட்டார்.  அதில் நல்ல இலாபம் வரும் என அவர் கருதியதால், இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. வரலாற்றிலும் இந்த நிகழ்ச்சி பதியப்பட வில்லை.  டாய், இன்னுமோ கேள்வி கேக்கனும்னு நினைக்கிற, பேசுனா அறைவேன், மூடிக்கிட்டு முழுக்கதையும் கேளு. முதல் பயணத்தில் தென்னிந்தியாவை அடைந்த அவரது கப்பல், அங்கிருந்து மிக ஜாக்கிரதையாக ஒரு பெட்டியை ஏற்றிக் கொண்டு ஸ்பெயின் திரும்ப துவங்கியது.  நம்ப தகுந்த சில வட்டாரங்களின்படி, தென்னிந்தியாவில் கப்பல் கிளம்புகின்ற இரவில் கப்பலின் கேப்டன் தன்னுடைய பாதுகாப்பில் ஒரு பெட்டியை பலத்த பாதுகாப்புடன் தன்னுடைய அறையில் வைத்ததாக சொல்லக் கேள்வி.

‘அதுல என்ன இருந்துச்சி, பெருசு’

‘என்ன இருந்துச்சின்னு தெரியல.  ஆனா விலை மதிப்பு இல்லாத ஒன்று தான் இருந்திருக்க வேண்டும்.  உயிரைவிட முக்கியமாக அப்பொருள் காப்பாற்றப்பட வேண்டும் என கப்பல் கேப்டனின் ஆணை.

‘நீங்க சொல்றத வைச்சு பார்த்தா கப்பல் ஒழுங்கா ஊர் போய் சேருல போல இருக்கே.

‘ஆமா, சுத்து வழியில போனதுனாலே அள்ளக்கை கடற்கொள்ளையரின் தாக்குதலுக்கு அந்தக் கப்பல் ஆளானது. அதிலிருந்து மீண்டாலும், நிறைய பேர் அதில டிக்கெட் வாங்கிட்டாங்க.  இன்னொரு தாக்குதலை அந்த கப்பல் தாங்காதுன்னு அந்த கேப்டன் கடலில் கலக்கும் ஒரு நதியின் வழியே கப்பலை திருப்பிட்டான்.  அந்த நதி வழியே நுழைந்த கப்பல் திரும்பவும் கடலுக்கு போகவேயில்லை.

‘எந்த நதி, எந்த இடம்ன்னு ஏதாவது தகவல் உண்டா?

‘மிஸ்ஸிப்பி ஆற்றின் உப ஆறானா வைதேகி ஆற்றின் வழியே சென்றது. தற்போது அந்த ஆறு வற்றிபோய் அது இருந்த தடமே இல்லாம போயிடுச்சி.  அந்த ஆற்றின் வழியே சென்ற கப்பல் அங்கு பாழடைந்து, மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு நகரத்தில் நின்றது என கேள்வி.

‘ஆரம்பத்தில வேதாள நகரம்ன்னு சொன்னீங்களே? அந்த நகரத்திற்கு வேதாள நகரம்ன்னு எப்படி பேரு வந்துச்சி?

‘அந்த ஸ்பானிய கப்பலின் பெயர் வேதாளம் (The Phantom)’ எனச் சொல்லி அந்த கிழவர் பெருமூச்சு விடுகிறார்.  இந்த கதாசிரியரும் ஒரு வழியாக வேதாளத்தை கதையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டதையொட்டி அவரும் பெருமூச்சு விடுகிறார்.  இது எங்கே போய் முடிய போகிறதோ, இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த துயரத்தை தாங்க வேண்டுமென்று வாசகர்களும் பெருமூச்சு விடுகின்றார்கள். மூன்று இலட்சிய வீரர்களும் இன்னும் இந்த கதாசிரியன் எப்படியெல்லாம் நாம்ப இமேஜ டேமேஜ் பண்ணப் போறான்னு தெரியலையேன்னு பெருமூச்சு விடுகின்றார்கள்.

‘இதெல்லாம் உனக்கு எப்டி தெரிஞ்சுது பெரிசு?

‘அந்த கப்பல் பாழடைந்த நகரத்திற்கு வரும்போதே கப்பலில் இருந்த பெரும்பாலன பேரு போய் சேந்துட்டாங்க.  இவர் மட்டுந்தான் பாக்கி.  இவரு கப்பல பத்திரமா யார் கண்ணுலயும் படமா ஒளிச்சு வைச்சு, பக்கத்து நகரத்திற்கு போய் சேர்ந்தார்.  அந்த நகரத்துல இருந்த லோக்கல் பொண்ணுக்கிட்ட கசமுசா பண்ணி, அங்கேயே செட்டில் ஆயிட்டாரு.

‘இதெல்லாம் உனக்கு எப்டி தெரியும் பெரிசு?

‘அவரு தான் எங்க அப்பா.

‘கப்பல் எங்க இருக்குதுன்னு உனக்கு தெரியுமா?

‘எங்க அப்பா செத்ததுக்கு அப்றம் அவரு அறையை குடஞ்சதுல எனக்கு இந்த விவரங்களெல்லாம் கிடச்சுடு

‘ஏன் பெரிசு, அவரு சாவச்சொல்ல ஏதாச்சும் முக்கியமான விஷயம் ஏதாச்சும் உன்கிட்ட சொன்னாரா?

‘ஆமா, சொன்னாரு, அப்ப அது எனக்கு சரியா புரியல.

‘என்ன சொன்னாரு, பெரிசு?

‘மவனே, நான் உன்னோட அப்பான்னு நீ ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருக்கே, நான் அவனில்லை அப்டின்னு சொன்னாருப்பா.’

‘பெரிசு, அந்த கப்பல் இன்னும் வேதாள நகரத்துலய இருக்கு?

‘ஆமாப்பா’

‘அங்கே எப்டி போறது?

‘எங்கிட்ட வரைபடம் இருக்கு. ஆனா, இதுல ஒரு பிரச்சினை இருக்கு.  அந்த ஸ்பெயின் பிரபுவோட சந்ததியில வந்த பிரபுவும் இதை தேடிக்கிட்டு இருக்காரு. ’

‘அட, நாங்க பார்க்காத வில்லனா? 

———————————————————————-

       ஒரு பெரிய மாளிகை அது.  ஒரு குதிரை வீரன் மிக பணிவாக அந்த அறைக்குள் நுழைகிறான்.  மெல்லிய இருள் அந்த அறையை சூழ்ந்து இருக்கிறது.

மிக மெல்லிய குரலில் ‘எஸ்கோபாரை கடைசியாக டூமில்குப்பத்தில பார்த்ததாக நம் ஆட்கள் சொல்லுகின்றார்கள், பிரபு’

        அந்த அறையில் கணப்புக்கிடையில் உட்கார்ந்திருக்கும் உருவத்திடமிருந்து ஒரு வித சீற்றத்துடன் ’வேதாளம் என் தாத்தாவின் கப்பல்.  அதிலுள்ள பொருட்களும் அவரை சார்ந்தவை.  அவனை கண்டுபிடித்து அந்த வரைபடத்தை அவனிடமிருந்து பறித்துக் கொண்டு வா’

‘சரி, மகா பிரபு’

     அவ்வீரன் வெளியே வந்து தன் நண்பர்களிடம் ‘அலெக்ஸாண்டர் மகாப்பிரபு எஸ்கோபாரிடமிருந்து அந்த வரைபடத்தை எப்படியாவது பறித்துக் கொண்டு வரவேண்டுமென ஆணையிட்டுள்ளார், வாருங்கள் போகலாம்’

      இருளை கிழித்துக் கொண்டு அந்த குதிரை வீரர்கள் கிளம்பினர்.

                                                                                                                                 தொடரும்

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

வேதாள நகரம் 3. மர்ம கிழவன் 24-11-2008

20 Comments Add your own

 • 1. விக்னேஷ் குமார்  |  November 22, 2008 at 5:02 pm

  ‘அலெக்ஸாண்டர் மகாப்பிரபு எஸ்கோபாரிடமிருந்து அந்த வரைபடத்தை எப்படியாவது பறித்துக் கொண்டு வரவேண்டுமென ஆணையிட்டுள்ளார்

  – Aiyo thaanga mudiyala.But story is very nice,please write everyday sir.

 • 2. vadivelsamy  |  November 22, 2008 at 5:25 pm

  இது எங்கே போய் முடிய போகிறதோ, இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த துயரத்தை தாங்க வேண்டுமென்று வாசகர்களும் பெருமூச்சு விடுகின்றார்கள். ஏங்கலை இன்னும் இந்த கதாசிரியன் எப்படியெல்லாம் நாம்ப இமேஜ டேமேஜ் பண்ணப் போறான்னு தெரியலையேன்னு பெருமூச்சு விடுகின்றார்கள்.

 • 3. Rebel Ravi  |  November 22, 2008 at 7:24 pm

  From the Table of Rebel Ravi:

  Hi,

  This is the 1st time am writing in tamil: நல்ல பதிவு கதை. ஆனால் நான்காம் பாகம் கொஞ்சம் இழுவையாக இருக்கிறது.

  Rebel Ravi.
  Change is the Only Constant Thing in the World.

 • 4. AARTI020406  |  November 22, 2008 at 7:42 pm

  Nice story. why don’t you start an individual site for comics alone?

  it is very tough for others as well to look for your comments and articles on comics.

 • 5. sharehunter  |  November 22, 2008 at 8:19 pm

  நன்றி, நண்பர்களே.

  புரட்சியாளர் இரவி

  நகைச்சுவையாக எல்லாப் பகுதியிலும் எழுதினாலும் கதை என்று ஒன்று வேண்டுமல்லவா? அதை இந்த பகுதியில் சொல்ல முயற்சி செய்தேன்.

  ஆர்த்தி

  காமிக்ஸ் சிங்கங்களுக்கு இப்போது தான் விழிப்பு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் நீங்கள் சொன்னது நிறைவேறும்.

 • 6. King Viswa  |  November 22, 2008 at 8:33 pm

  திரு கவிஞ்சர் அவர்களே,

  //‘அந்த ஸ்பானிய கப்பலின் பெயர் வேதாளம் (The Phantom)’ எனச் சொல்லி அந்த கிழவர் பெருமூச்சு விடுகிறார். இந்த கதாசிரியரும் ஒரு வழியாக வேதாளத்தை கதையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டதையொட்டி அவரும் பெருமூச்சு விடுகிறார். இது எங்கே போய் முடிய போகிறதோ, இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த துயரத்தை தாங்க வேண்டுமென்று வாசகர்களும் பெருமூச்சு விடுகின்றார்கள். மூன்று இலட்சிய வீரர்களும் இன்னும் இந்த கதாசிரியன் எப்படியெல்லாம் நாம்ப இமேஜ டேமேஜ் பண்ணப் போறான்னு தெரியலையேன்னு பெருமூச்சு விடுகின்றார்கள்//

  சத்தியமா இது உண்மைங்கோ. எங்க ஆபீஸ்’ல எல்லாரும் என்மேல வச்சு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இந்த கதயினால சுத்தமா போச்சு. அய்யா, சாமி, நீங்க உங்க கதையில நாந்தான் ஹீரோன்ன்னு சொல்லும்போது எதுக்கு ஒதுக்கிட்டோமனு இப்போ ரொம்ப மனவருத்தம் ஏற்படும் அளவுக்கு வைக்காதீங்கோ சாமியோவ். உங்களுக்கு கோடி புண்ணியம்.

 • 7. King Viswa  |  November 22, 2008 at 8:36 pm

  King Viswa
  Your comment is awaiting moderation.//

  ஒரு ஹீரோவோட வார்த்தைகளுக்கே கமெண்ட் மாடரேஷனா?

  என்ன கொடுமை சார் இது?

 • 8. sharehunter  |  November 22, 2008 at 8:46 pm

  விஷ்வா,

  கமெண்ட் மாடரேஷனை நான் எப்பயோ எடுத்துட்டேன். சமயத்தில் வெர்ட்பிரஸ் எடக்குமுடக்கா ஏதாவது பண்ணிடுது.

  இந்த கதைக்கு முன் உங்களுக்கு ஆபிஸில் கொஞ்சம் மரியாதை இருந்தது என்று சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஒட்டும் வேலை எல்லாம் இங்கே வேணாம்.

  நான் வேற ஆள கதாநாயகனா போடறேன்னு சொன்னதற்கு என்ன தான் போடுணும்னு சொல்லி ஒத்த கால்ல நிண்ணிங்க, எங்கிட்ட போட்டோ கூட இருக்கு.

  நடுவில மத்த கதாநாயகர்களை பற்றி நீங்க கொடுத்த ஆலோசனைகளை நான் பாதிக்கூட எழுதலை. குறிப்பாக, சதீஷ் பற்றி.

  கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கதாநாயகியெல்லாம் உண்டுங்க.

 • 9. King Viswa  |  November 22, 2008 at 8:53 pm

  //நடுவில மத்த கதாநாயகர்களை பற்றி நீங்க கொடுத்த ஆலோசனைகளை நான் பாதிக்கூட எழுதலை. குறிப்பாக, சதீஷ் பற்றி//

  ஏற்கனவே எனக்கும் அவருக்கும் வாய்க்கா தகராறு. இதுல கைய புடிச்சு இழுத்தியா?

  //கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு கதாநாயகியெல்லாம் உண்டுங்க//

  ஹையா, ஜாலி. தல, என்ன பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதுங்கோ.

 • 10. sharehunter  |  November 22, 2008 at 8:56 pm

  ஆனா, கடைசியில அவங்க ஒரு ஸ்பானிஷ் பிரபுவை கல்யாணம் பண்ணிப்பாங்க.

 • 11. King Viswa  |  November 22, 2008 at 9:05 pm

  அய்யா சாமி,

  ஆள வுடுங்க. அந்த பிரபுவின் பேர பாக்கும்போதே நெனச்சேன். இப்படி ஏதாவது ஒரு வில்லங்கம் இருக்கும்னு.

  சரியா வச்சீங்க சார் ஆப்பு.

 • 12. Cheziyan.K  |  November 22, 2008 at 9:06 pm

  இது போங்கு ஆட்டம். நான் என் இந்த பாகத்தில் சுத்தமாக வரவில்லை?

 • 13. ரஃபிக் ராஜா  |  November 23, 2008 at 11:08 am

  ஐயோ கஷ்ட காலமே, சிந்துபாத் கதை மாறி இழுக்காமல் சீகுரம் மட்டேருக்கு வாங்கபா….”:)

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்

 • 14. nizar  |  November 23, 2008 at 12:36 pm

  sir rembanala kathi ezutha porennu sonninga yappo azuthaporigna…. !!!!????

 • 15. King Viswa  |  November 23, 2008 at 8:06 pm

  அய்யா நிஜார்,

  அந்த ரொம்ப நாளா எழுதறேன்னு சொன்ன கதை இது தான் அய்யா, இது தான்.

 • 16. sharehunter  |  November 23, 2008 at 8:34 pm

  நிஜார்,

  தப்பு பண்ணிட்டிங்க. இதுக்கு கூடிய சீக்கிரம் தண்டனையை எதிர்பாருங்க.

 • 17. அம்மா ஆசை இரவுகள்  |  November 23, 2008 at 11:03 pm

  நானும் உள்ளேன் அய்யா.

  என்னையும் ஆட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

  பெங்களுருவில் மேட்ச் இப்போது தான் முடிந்தது.

 • 18. Rebel Ravi  |  November 24, 2008 at 9:21 pm

  From The Desk Of Rebel Ravi:

  Sharehunter,

  where is the next part update? why are you delaying it?

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

 • 19. sharehunter  |  November 24, 2008 at 9:46 pm

  From the floor of Josh, the Poor:

  Rebel Ravi,

  Only on Weekends. I don’t want to upset other’s working days.

  Josh,

  Odd Number is always odd even in the other world.

 • 20. Rebel Ravi  |  November 25, 2008 at 5:39 pm

  From The Desk Of Rebel Ravi:

  Sharehunter,

  thanks for the info.

  Rebel Ravi,
  Change is the Only constant thing in this world.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: