வேதாள நகரம் 3. மர்ம கிழவன்

November 21, 2008 at 6:05 pm 6 comments

      மூன்று இலட்சிய குதிரை வீரர்களும் ஹோட்டல் ஜல்சா வாசலில் இறங்கினர்.  அங்குள்ள பாருக்கு சென்று அமர்ந்தனர்.  இந்த ஊரில் குளிக்கலாமா என்ற தீவிர சிந்தனையில் ஆழ்ந்தனர். அப்போது ஜானி பீரோ அந்தப் பக்கமாக கடந்து சென்றான்.

       அவனை பார்த்ததுமே சதீஷ்க்கு ஒரு இனம் புரியாத பாசம் அந்த கயவன் மேல் ஏற்பட்டது.  உடன் விஷ்வாவிடம், ‘விஷ்வா, நம் குழுவில் அவரையும் சேர்த்துக் கொள்ளலாமா? பார்த்தா ரொம்ப நல்ல மாதிரியா தெரியுது’ எனக் கூறினார்.

        விஷ்வாவின் பெரியப்பாவின் சகலை ஒரு பெரிய சாகச குதிரை வீரர்.  எல்லா சாகசங்களையுமே தன்னந்தனியாக தான் செய்வார்.  அது முடிந்தபின் ‘நான் ஒரு தன்னந்தனிக்காட்டு ராஜா…..’ என்ற ரீதியில் ஒரு பாட்டு ஒன்னை எடுத்து விடுவார்.  இவருக்கும் அவரை மாதிரியே ஆக வேண்டுமென்று ஆசை.  கூட இருக்கும் இவர்களை எவ்வாறு கழட்டிவிடுவது என தெரியவில்லையால் இவர் ஒரு குழுவாக சுற்ற நேர்ந்தது.  சதீஷின் பேச்சை கேட்ட விஷ்வாவுக்கு பளிச்சென்று ஒரு எண்ணம் உதயமாயிற்று.

      உடனே, விஷ்வா மிக கனிவுடன் ‘சதீஷ், எனக்கு உன்னோட எண்ணம் புரிகிறது.  நாமெல்லாம் இலட்சிய குதிரை வீரர்கள்.  நம் குழுவில் அவர் சேரமுடியாது. ஆனால் நீ விரும்பினால் அவருடன் சேர்ந்து கொள்ளலாம்.  நான் தடுக்க போவதில்லை.  என்ன சொல்றே’ என கேட்டார்.

      உடன் சதீஷ் ‘என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள், விஷ்வா.  நான் எப்படி உன்னை பிரிவது குதிரை தன் வாலை பிரியுமா, வாத்து மீனை பிரியுமா’ என பலவாறு உதாரணங்கள் சொல்லி அவர்களை சோதித்து, ‘நான் உன்னை எக்காலத்திலும் பிரியமாட்டேன், விஷ்வா’ எனக் கூறி கண்கலங்கினார்.

       அதைக் கண்ட கலீலும் கண் கலங்கினார்.  தன் திட்டம் பலிக்கவில்லை என அறிந்த விஷ்வாவும் கண் கலங்கினார்.  மூன்று இலட்சிய குதிரை வீரர்களும் கண் கலங்கினார்கள்.  இதனை படித்துக் கொண்டிருக்கிற வாசகர்களும் இதை போய் நாம் படிக்கிறேமோ என கண்கலங்கினார்கள்.  

     அப்போது புதுசா வந்திருக்கிற இந்த பசங்களா நாம காட்டுற காட்டுல அவங்க ஊர விட்டே ஒடினும்னு நினைத்துக் கொண்டு அவர்களின் மேசைக்கு வந்த ஜானி பீரோவிடம், கலீல் ‘யோவ், மூன்று சிக்கன் பிரியாணி கொண்டாய்யா’ என கூறினார்.

    ‘நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது.’

     ‘மூன்று சிக்கன் பிரியாணி கொண்டுவறத்துக்கு உன் குல கோத்திரம்ல்லாம் நாங்க தெரிஞ்சுக்கணுமா, ஜல்தியா எடுத்துட்து வா’

    ‘உங்க யாருக்குமே என் கேரக்டர் பத்தி தெரியாது’

     ‘வாஸ்தவம்தான். யாருய்யா நீ? போய் வேலைய பாப்பியா’

     உடன் சதீஷ் குறுக்கிட்டு, ‘கலீல், யாரையும் தவறாக பேசாதே.  அய்யா, நீங்கள் அப்படியே சிக்கன் 65யும் மூன்று பிளேட் எடுத்துட்டு வர முடியுமா’ என அன்புடன் கேட்டார்.  கடுப்பாகி ஜானி பீரோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.  அப்போது கலீல், ‘இவன் போற வேகத்தை பார்த்தா சீக்கிரமே சிக்கன் பிரியாணி வந்துறும்னு நினைக்கிறேன்’ என தன் நம்பிக்கையை தெரிவித்தார்.

     தன் அறைக்கு சென்ற ஜானி பீரோ ‘செழி’ என அலறினார்.

      செழி என்று அழைக்கப்படும் செழி யங் ஜில்லர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழையும்முன் அவரைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.  மிகப் பெரிய வில்லன் ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன்  அவர், ஜானி பீரோவிடம் அப்ரன்டிஸ் ஆக வேலை பார்த்தார்.  ஒரு அழகான பெண்ணுடன் ஒரு அறையில் தனியாக இருக்கும்போது, அந்தப் பெண் ஏதாவது விளையாடலாமா எனக் கேட்டால் கொஞ்சம் கூட தயங்காமல் செஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அப்பாவி.  அவர் ஒரு கவிஞர் என்பது அவருக்கே தெரியாத ஒரு விஷயம்.

    அவரை அழைத்து  ‘என்ன போய் சிக்கன் பிரியாணி எடுத்து வர சொல்றான்ங்க’ எனக் கூறி ஜானி பீரோ கொதித்தார். செழியும் ‘அதானே, இன்னிக்கு மட்டன் தான் போட்டுறுகாங்கன்னு நீங்க பட்டுன்னு சொல்ல வேண்டியதானே பாஸ்’ என மறுமொழி பகர்ந்தார்.

       ‘இவர்கள் மேல் ஒரு கண் இருக்கட்டும்’ என ஜானி பீரோ கூறியதற்கு, செழி தன் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு ‘சரி பாஸ்’ என கூறினார்.

     ‘எதுக்கும் ஜாக்கிரத்தையா இரு.  இவனுங்க ஒரு ரேஞ்சா பேசுறான்ங்க.  ரேஞ்சர்களாக கூட இருப்பான்ங்க’

    ‘சரிங்க பாஸ். நான் போய் சாப்புட உங்களுக்கு மட்டன் பிரியாணி கொண்டு வரவா?’

     மடார்.

    நமது இலட்சிய குதிரை வீரர்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இருட்டு மூலையில் அமர்ந்திருந்த ஒரு வயதான உருவம் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தது.  சிறிது நேரத்திற்கு பின், அவர்களை தன்னுடன் அமர முடியுமா என கேட்டது.  ஒசி பீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நமது கதாநாயகர்கள் அவருடன் அமர்ந்தனர்.

      ‘நான் ஒரு நாடோடி.  என் வாழ்க்கையின் பெரும் பகுதியை பயணத்திலேயே செலவழித்து விட்டேன். இப்போது என் உடம்பில் தெம்பில்லை.  இந்த ஊரில் தான் என் கடைசி காலம் கழியப்போகிறது என எனக்கு தோன்றுகிறது.  என் மனதில் ரொம்ப நாளாக அழுத்திக் கொண்டிருக்கிற ஒரு இரகசியத்தை உங்களிடம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  அதனால்தான் கூப்டேன்.’

    ‘பெரியவரே, வெயிட்டரை கூப்பிட்டு மூணு பீரு ஆர்டர் பண்ணட்டுமா?’

    ‘வேண்டாம்பா, நாம பேச போற விஷயங்கள யாருமே கேட்க கூடாது’

       ‘ஏன் பெரியவரே, எங்க கிட்ட சொல்லுனும்னு தோணுச்சு’

      ‘உங்களை பாத்தா பெரிய வீரர்கள் மாதிரி இருந்துச்சி’

     உடனே சதீஷ், ‘பெரியவரே, இரவில் உங்களுக்கு கண் சரியாக தெரியாதா’ என ஆதுரத்துடன் கேட்டு அவரின் இரு கால்களிலும் பலத்த மிதிகள் வாங்கினார்.

     ஓசி பீர் பார்ட்டி இது கிடையாது என தெரிந்தவுடன் கலீல் மிகுந்த சோகமானார்.  விஷ்வா அவர்களை தடுத்து பெருசு என்னதான் சொல்லுதுன்னு கேப்போம் என அவர்களை சமாதானப்படுத்தினார்.

     ‘வேதாள நகரம் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?’

                                                                                                           தொடரும்……………………….

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

21-11-2008 வேதாள நகரம் 4. கடற்கொள்ளையர்

6 Comments Add your own

  • 1. vadivelsamy  |  November 21, 2008 at 8:39 pm

    இதனை படித்துக் கொண்டிருக்கிற வாசகர்களும் இதை போய் நாம் படிக்கிறேமோ என கண்கலங்கினார்கள்,

  • 2. King Viswa  |  November 22, 2008 at 9:07 am

    enna kodumai sir idhu?

  • 3. Chezhi  |  November 22, 2008 at 11:44 am

    கவிஞ்சரே,

    அந்த மர்ம கிழவனின் பெயர் என்ன ஜோஸ்’ஆ?

    ஒரு அழகான பெண்ணுடன் ஒரு அறையில் தனியாக இருக்கும்போது, அந்தப் பெண் ஏதாவது விளையாடலாமா எனக் கேட்டால் கொஞ்சம் கூட தயங்காமல் செஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அப்பாவி = என்ன கொடுமை சார் இது? இது உங்க பழக்கம் என்பது எல்லாருக்கும் நன்றாக தெரியும். என்னுடைய ப்ளாக் ஆரம்பிச்சு உங்கள கிழி கிழின்னு கிழிக்குறேன்.

    அவர் ஒரு கவிஞர் என்பது அவருக்கே தெரியாத ஒரு விஷயம் = இந்த கொடுமை வேறயா?

    செழி தன் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு = இமேஜ் டோட்டல் டேய்மாஜ் ஆகிவிட்டது.

    வேதாள நகரம் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? = மெகா சீரியல் மாதிரி என்ன இது அடுத்த எபிசோடுக்கு பிட்’ஆ? எல்லாம் நேரம்.

  • 4. Chezhi  |  November 22, 2008 at 11:49 am

    சார்,

    இன்னும் ரபிஃ ராஜா, அய்யம்பாளையம் வெங்கடேஷ்வரன், சித்திரக்கதை சிவ, க.கோ.க.கூ என்று பல கதாபாத்திரங்கள் வரவே இல்லையே? என் இன்னும் தாமதம்? அடுத்த பாகத்தில் இவர்கள் அனைவரும் வர வேண்டும் என்பது எனது ஆணை இல்லை; கட்டளை.

  • 5. sharehunter  |  November 22, 2008 at 12:20 pm

    செழி,

    நீங்கள் தானே எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டீர்கள். நீங்கள் சொன்ன எல்லோரையும் இதில் இழுத்து விடலாம்.

    விஷ்வா, வெங்கடேஷ்வரனை நல்லவர்ன்னு சொன்னாரு.

    ககொககூ யாருன்னே தெரியலை. ஒரே மர்மமா இருக்கு. நம்ம கழகத் தலைவரும் ஒன்னும் கண்டுபிடிக்க மாட்டேங்குறாரு.

    செழி, உங்களுக்கு இதுல மிஷன் இம்பாஸிபிள் மாதிரி முக்கிய கதாபாத்திரம்.

  • 6. ரஃபிக் ராஜா  |  November 23, 2008 at 11:03 am

    என் பெயருக்கு Creative Common License 2.0 முறையில் காப்புரிமை பெற்று இருப்பதால், செழி போன்ற ஆட்களின் பேச்சை கேட்டு என்னை பற்றி எந்த விதத்திலேயும் விமரிசிப்பதில் இருந்து தவிர்க்கவும் என்று பணிவாக மிரட்டி கேட்டு கொள்கிறேன்.

    (அப்பா நம்ம வக்கீல் மூலம் ஓசியில் மேல உள்ளதை அடிக்க வைத்தாயிற்று 🙂 )

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: