Archive for November 20, 2008
20-11-2008
நேற்று அமெரிக்க சந்தை 250 முதல் 300 வரை சரியும் என எதிர்பார்த்தேன். 400 புள்ளிகள் இழந்திருக்கிறது. ஆசிய சந்தைகள் செக்கச் சிகப்பாய் இருக்கிறது. நமது சந்தை இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 200 புள்ளிகள் ஏறுமுகமாகவே தொடங்கும். அட, சும்மாங்க, இப்படியெல்லாம் எழுத வில்லையென்றால் அப்புறம் இதே மாதிரி எழுதுவது மறந்து விடும்.
நமது சந்தை இன்று சரிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கையில் இது போன்ற நிகழ்வுகள் சந்தையை பலமாக தாக்கும் என்பது உண்மை. சீட் பெல்ட்டை கட்டிக்கிட்டுதான் இன்று சந்தையில் உட்கார வேண்டும்.
நல்ல செய்திகளே இல்லாமல் இல்லை. மோட்டார் வாகன தொழிற்சாலைக்கு அமெரிக்க அரசு ஒரு பெயில் அவுட் தயார் செய்துள்ளது. அது தொடர்பாக ஒரு சிக்கல் எழுந்ததையொட்டி, அமெரிக்க சந்தை குபுக் ஆனது. நாளை ஒரு நாள் இருக்கையில் அந்த பெயில் அவுட் பற்றி நல்ல செய்தி கசிய நேர்ந்தால், ஐரோப்பிய சந்தைகள் ஒரளவு ஏற்றமுடன் அல்லது பெரிய சரிவுகளுடன் இல்லாமல் ஆரம்பிக்க கூடும். நமது சந்தை ஒரளவு அதனை பின்பற்றலாம்.
ஆனா, இன்றைய சந்தையின் முதல் பகுதியில் ஒரே இரத்தக் களரியாக இருக்கும். ஆனால், நண்பகலில் சந்தை மீள வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மிக மெல்லிய வாய்ப்பு ஆனால் வாய்ப்பு.
நமது சந்தை 10 சதவீதத்தை இன்று நெருங்கும் வகையில் புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது. கரடிகள் ரொம்ப நாள் இதை எதிர்பார்த்துள்ளார்கள்.
இன்றைய வன்முறையைப் பற்றி மாலை எழுதுகிறேன்.
Be Vigilant and as always have a great hunting day!
Good Morning!
Post Market:
அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் 150 புள்ளிகளுக்கு மேல் முடிந்தால்தான் நாளைய சந்தைகள் ஒரளவு Consolidate ஆகும். அப்படி இல்லாத பட்சத்தில் நாளை கிட்டத்தட்ட 100 புள்ளிகளுக்கு மேல் சந்தை இறங்க வாய்ப்பு உள்ளது. சந்தை 2300-2200 என்ற நிலைகளுக்கு வரும்போது, சிறிது சிறிதாக முதலீடு கவனிக்கவும், முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.
அமெரிக்க சந்தை கிட்டதட்ட 200 புள்ளிகளை தற்சமயம் இழந்திருக்கிறது. கடைசி நேரத்தில் ஒரளவு மீளக்கூடும் என நினைக்கிறேன். போகும்போது கெட்ட பெயருடன் போகாமல் இருக்க, (நம்நாட்டு அரசியல்வாதிகள் கவனிக்கவும்) ஏதாவது செய்வார்கள். இன்று செய்வார்களா என்பது கேள்விக்குறி.
இன்றைய சந்தையை பற்றி சொல்ல என்ன இருக்கிறது? வழக்கமான Same Reaction.
Recent Comments