Archive for November 19, 2008
19-11-2008
அமெரிக்க சந்தை ஊசலாடி கடைசி நேரத்தில் 150 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் சிகப்பாகவே காணப்படுகின்றன. பொருளாதார மந்தம் பற்றி எல்லோர் மனதிலும் ஒருவித பயம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. எவ்வாறு சந்தை ஏறினாலும், ஷார்ட் போனால் மீண்டும் எளிதாக ஒரிரு நாட்களில் கவர் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே தற்போது உலகெங்கும் நிலவுகிறது. தின வணிகம் அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் ஒதுங்கியே உள்ளனர்.
எனவே, சந்தை இன்று சிறிது மேலேறினாலும், புதிய ஷார்ட் பொஸிஷன்ஸ் துவங்கக் கூடும். பெரிய அளவில் சந்தை மேலேறும் என நான் கருத வில்லை. சில பங்குகளில் பெரிய அளவில் ஷார்ட் போகியிருக்கிறார்கள். அவற்றில் சில பங்குகள் மட்டுமே நிப்டி பங்குகள். ரிலையன்ஸை பொறுத்த மட்டில், பெட்ரோ கெமிக்கல் துறையை ஒருவித நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
நமது அரசு கச்சா எண்ணெய் விலை பற்றி வாயே திறக்க மாட்டேன் என முடிவு செய்திருக்கிறார்கள். நிதி அமைச்சரின் அறிக்கைகளை Read between lines என படித்தால் நம் சந்தை மேலும் இறங்கும் என்றே தோன்றுகிறது.
இன்றைய தினம் நமது சந்தை +75 முதல் -65 வரை ஆடலாம் என நினைக்கிறேன். முடிவு Negative or Flat ஆக இருக்கும் என்றே நினைக்கிறேன். இன்றைய ஐரோப்பிய சந்தைகள் இறங்குமுகமாகவே ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
ஆக்ஸிஸ் பேங்கில் இன்று ஷார்ட் கவரிங் பெருமளவில் இருக்கும் என நினைக்கிறேன். மாலையில் பார்ப்போம்.
Good Morning!
Post Market:
எதிர்பார்த்த மாதிரிதான் ஆயிற்று. சென்னையை தாக்கவரும் புயல் போல் நம் சந்தை நாளுக்குள் நாள் வலுவிழந்து வருகிறது. இந்த வாரம் முடிய இன்னும் இரு நாட்களே இருக்கின்ற படியால், ஒரு சிறிய அதிர்வு கூட பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். இன்றைய அமெரிக்க சந்தை இழப்புடன் முடியும் என எதிர்பார்க்கிறேன். எல்லோரும் வேடிக்கை பார்க்கின்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள் என நினைக்கிறேன். அதுவும் நல்லதுதான் என தற்சமயம் தோன்றுகிறது.
செய்திதாட்களில் படித்திருப்பீர்கள். இந்திய மாலுமிகளை கடற்கொள்ளைக்காரர்கள் கடத்திச்சென்று பிணைத்தொகை கொடுத்தால்தான் விடுவிப்போம் என வம்பு செய்ததை படித்திருப்பீர்கள். இன்று நமது போர்க்கப்பல் ஒரு கொள்ளைக்காரர் கப்பலை தாக்கி மூழ்கடித்துள்ளது.
I salute Indian Navy and their brave warriors!
Recent Comments