Archive for November 18, 2008
18-11-2008
நேற்று ஒரு அவசர வேலை ஏற்பட்டதால் மாலை Post Market எழுத முடியவில்லை.
நேற்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் சிகப்பாக தொடங்கியிருக்கிறன. பெயில் அவுட் அறிவித்துள்ள சீன சந்தை மேலும் இறங்கும் என எதிர்பார்க்கலாம். பொருளாதார மந்தம் மேலும் நீடிக்கும் என வானிலை அறிக்கை போல் அமெரிக்க நிதி அமைச்சர் கண்டுபிடித்து தெரிவித்துள்ளார்.
நமது சந்தையும் இன்று உலக சந்தைகளை பிரதிபலிக்கும். நேற்றைய தினம் 100 புள்ளிகள் இறங்கினாலும், திங்கள் கிழமை என்பதால் அமெரிக்க சந்தை ஏறுமுகத்தில் முடியும் என்று நினைத்ததாலும், ஆசிய சந்தைகளும் உற்சாகமாக தொடங்கியுள்ளதால் 10 புள்ளிகளை மட்டுமே இழந்து முடிந்தது.
இன்றைய தினம் துவக்கத்திலேயே பெரிய வித்தியாசத்துடன் துவங்க நேரலாம். அதிலிருந்து ஆபரேட்டர்கள் எவ்வாறு சந்தையை நடத்தி செல்ல போகின்றார்கள் என தெரியவில்லை. சந்தையின் வால்யூம் குறைவாக இருப்பதால் சந்தை எந்த பக்கமும் விழலாம். இன்றைய தினம் 150 புள்ளிகளுக்கு மேல் இறங்க முயலலாம்.
சந்தை -168 முதல் -55 என்ற புள்ளிகளில் ஆடும் என நினைக்கிறேன். முடிவு இறங்குமுகமாகவே இருக்கும். தொடர்ந்து தின வணிகம் செய்து வந்தால், முதலீடு பற்றிய எண்ணம் சிறிது சிறிதாக குறைய துவங்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது சிறிது இடைவெளி கொடுங்கள்.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning! Be Sharp and Vigilant!
Post Market:
சந்தை ஆரம்பத்திலேயே இறங்க துவங்கி நாள் முழுவதும் தள்ளாடிக் கொண்டிருந்தது. காலையில் எழுதியவாறே சீனச் சந்தை 128 புள்ளிகள் சரிந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய சந்தையில் ஒன்றான அச்சந்தை நாளை ஒருவித பதட்டத்துடனே ஆரம்பிக்கும். இன்றைய அமெரிக்க சந்தை 300 புள்ளிகளுக்கு மேல் சரிய நேர்ந்தால் நாளைய ஆசிய சந்தைகள் அனைததிலும் இந்த வாரம் முழுவதும் Short Selling காணப்படும்.
ஐரோப்பிய சந்தைகள் தனிக்கதை. இனி வரும் காலங்களில் அமெரிக்காவையே முழுவதும் நம்பி இருக்கக் கூடாது என பெரிய விலையில் பாடம் கற்றுக் கொண்டு அதை செயல்படும் நீண்ட கால திட்டங்களில் இறங்கிவிட்டன. எப்படியும் இரண்டு வருடங்களாவது பல்லைக் கடித்துக் கொண்டு இருக்க வேண்டியது தான் என தோன்றுகிறது. ஓபாமாவால் ஒரே வருடத்தில் சரிபடுத்தி முடியாத அளவுக்கு பேராசை புகுந்து விளையாடியிருக்கிறது அமெரிக்க சந்தையில்.
இந்த வாரத்தின் முக்கிய கட்டம் இன்றைய அமெரிக்க சந்தையின் முடிவை பொறுத்தே அமையும்.
Recent Comments