Archive for November 17, 2008
17-11-2008
ஆசிய சந்தைகள் ஆரம்பித்திருக்கும் விதம் சரியில்லை. எல்லா சந்தைகளிலும் உள்ளூர ஒரு பயம் இருக்கின்றதை உணர முடிகிறது. இந்த வாரம் ஏதாவது ஒரு பாஸிட்டிவ் செய்திகள் வந்தாலொழிய நம் சந்தை இறங்குவதை கட்டுப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்.
எல்லா தரகு நிறுவனங்களும் ஷார்ட் போக சொல்லுகின்றன. 2200 என்ற நிலையில் ஷார்ட் கவரிங் என்ற நிலையே தற்சமயம் டெக்னிகலில் தென்படுகிறது. இந்த இடத்தில் ஆபரேட்டர்கள் விளையாடினால், சந்தை 2000-க்கும் கீழே இறங்கக வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய சந்தையின் போக்கு நெகடிவ்வாக தான் இருக்கும். எந்த ஏற்றமும் நீடிக்காத நிலைதான். சந்தை -115 முதல் 45 வரை ஆடலாம். முடிவு -115 முதல் -45 வரை முடியலாம்.
பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. இது தற்சமயம் எதிர்மறை செய்தியதாக தான் சந்தை கருதும் என நினைக்கிறேன். நமது நிதி அமைச்சரும் உலக பொருளாதார மந்தம் நம்மையும் பாதிக்கும் என்ற வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். இது புதிய செய்தி போல் சந்தை இன்று React செய்யும்.
புதிய முதலீடு செய்பவர்கள் சிறிது நாட்கள் காத்திருப்பது நல்லது. குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் வரை சந்தை தின வணிகத்திற்கே ஏற்றவையாக இருக்கும். 2200 என்ற நிலையில் முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.
சந்தையின் ஆட்டத்தைப் பற்றி மாலையில் எழுதுகிறேன்.
Have a Good Day!
Recent Comments