வேதாள நகரம் – 1. துவக்கம்

November 14, 2008 at 4:28 pm 18 comments

      Imitation is the best form of flattery  என சொல்வார்கள்.  ஒரு கெட்ட காரியம் செய்வதற்குமுன் இந்த பழமொழியை சொல்லியே செய்வார்கள்.  நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா?  உண்மையில் ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே இதை செய்கிறேன்.  உங்கள் கருத்துகள் எனக்கு மிகவும் முக்கியம். 

     இது ஒரு நடந்த கதையாக கூட இருக்கலாம்.  நடக்காத கதையாகவும் இருக்கலாம்.   ஆனால் இது ஒரு கதை. வெட்டிக் கதை எதுக்கு, கதைய சொல்லு என்கிறீர்களா?

     கௌபாய் சித்திரக் கதைகள் பல படித்திருப்பீர்கள்.  அவைகள் தற்போது வழக்கொழிந்து போனதால், அவற்றை மீண்டும் நினைவூட்ட இந்த வேதாள நகரம் உதவும். இந்த காவியத்தில் குறிப்பிடப்படும் பெயர்கள் கற்பனை பெயர்களே.  தற்செயலாகவோ, வேண்டுமென்றோ யாரையும் குறிப்பிடுபவை ஆகாது.

      அட்டகாசமாக இருக்கிறது என வேதாள நகரம் என தலைப்பு வைத்துவிட்டேன்.  இப்போது எவ்வாறு வேதாளத்தை இதில் இழுப்பது என தீவிர சிந்தனையில் இருக்கிறேன்.  எது எப்படியோ கதைய ஆரம்பிக்கிறேன். எல்லோரும் என் பின்னால் வாங்க.

———————————————————————————–

        கதைக்கு செல்லும் முன் கதை நடக்கும் காலக்கட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

       1700 கால அமெரிக்கா.  பல்வேறு இனத்தைச் சார்ந்த செவ்விந்தியர்களும், தங்க வேட்டையர்களும், பத்து டாலருக்கு எமனையே சுட்டுக் கொல்லும் கயவர்களும், தங்கத்தை தேடி அங்கங்களை இழந்த பயணிகளும் நிறைந்த காலகட்டம் அது.  செவ்விந்தியர்களும், வெள்ளையர்களும் ஒருவர் கழுத்தை மற்றவர் கொலை வெறியோடு கவ்வ காத்துக் கொண்டிருந்த காலம் அது.  பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் இல்லையென்பதால் அதை பொற்காலம் என்று சொல்லிவிட முடியாதபடி சில அரசியல்வாதிகளும் நடமாடிய காலகட்டம். ஒரு மாதிரி குன்சா உங்களுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.  சரி, வாங்க, அடுத்த பாராவுக்கு போவோம்.

      வட அமெரிக்காவின் தென் பகுதியில் மெக்ஸிகோ எல்லைக்கு  தென் கிழக்கில் உள்ளது டூமில்குப்பம்.  ஆரம்பத்தில் தங்க வேட்டையர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகரமானது, பின்னர் களவாணிகள், மொள்ளமாறிகள், முடிச்சவிக்கிகள் போன்றோரால் நாறடிக்கப்பட்டது.   அந்த ஊரின் வாசலில் அந்த ஊரைப்பற்றி ஒரு ஹைகூ எழுதப்பட்டிருந்தது. 

                                                          எதிர்த்து

                                                          பேசினா

                                                          டூமில்.

 

      இப்படிப்பட்ட குப்பத்தில் நல்ல மக்களும் இல்லாமல் இல்லை.  20:40 என்ற விகிதத்தில் பொறுக்கிகள் நல்ல மக்கள் விகிதச்சாரம் இருந்து வந்தது.  ஷெரீப் மற்றும் அவர் டெபுடி ஆகிய இருவரால் அந்த நகரத்தின் சட்ட ஒழுங்கை சரியாக பராமரிக்க இயலவில்லை. 

       கயவர்கள் வைத்ததே அங்கு சட்டமாக இருந்தது.  புதியதாக யாரும் அங்கே ஷெரீப் பதவியை ஏற்றுக் கொள்ள பயந்து இருந்ததால், பழைய ஷெரீப்பே தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.  அவருக்கு வயது 79.  காது சரியாக கேட்காது.  வெகு வேகமான செயல்கள் எதையும் அவரால் செய்ய முடியாது.  குற்றம் நடந்த இடத்திற்கு அவரால் ஒரு மணி நேரம் கழித்தே வர இயலும்.  மாலை வேளைகளில் சரியாக கண்ணும் தெரியாது.  இந்த காரணங்களால் அவரை உயிரோடு அந்த நகரத்து ரவுடிகள் விட்டு வைத்திருந்தார்கள்.

      டெபுடி, ஷெரீப் அளவுக்கு வயதானவர் கிடையாது. அவருக்கு வயதோ 36. ஆனால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.  பௌர்ணமி, அமாவசை அன்று ஏதேனும் பிரச்சினைகள் நடந்தால் மக்கள் அவரிடம் வந்து சொல்ல பயந்தனர்.  அன்றைய தினங்களில் அன்னார் ஒரு மாதிரியாக இருப்பார்.

     அந்த ஊரே ஜானி பீரோ என்ற கயவனின் கட்டுப்பாட்டில் இருந்தது.  அவனின் முழு பெயர் ஜானி ‘ஸ்டீல்’ பீரோ.  தன் அள்ளக்கைகளை கொண்டு அவன் அந்த குப்பத்து ராஜாவாக இருந்தான். அந்த ஊர் மக்களெல்லாம் அவன் மீது தீராத பயத்தில் இருந்தார்கள்.  அந்த ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் அது அவன் சம்பந்தப்பட்டதாகதான் இருக்கும். 

      ஷெரீப் அன்றைய தினம் மெல்ல தன் அலுவலகத்தை விட்டு வெளியே மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.  டூமில் என்ற சத்தம் பக்கத்து தெருவில் உள்ள ஹோட்டல் ஜல்சாவிலிருந்து கேட்டது. 

      இரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபன் நடுத்தெருவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். ஷெரீப் மெல்ல அவனை நெருங்கி,

‘ஏண்டாம்பி, ஏன் நடுத்தெருவிலே இப்படி படுத்துக்கிட்டு இருக்கே?  வீட்டுக்கு போவலையா?’

’ஷெரீப்,  என்ன ஜானி பீரோ சுட்டுட்டான். நான் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கேன்.’

‘அப்டியா, உடம்பெல்லாம் ஒரே தக்காளி சாஸா இருக்கு? முதல்ல அத துடச்சுட்டு வீட்டுக்கு போப்பா.’

‘யோவ், செவிட்டு முண்டம், ஜானி பீரோ என்ன சுட்டுட்டுடான்யா.’

‘ஆமா, மிஸஸ் மனோகரோட தவிட்டு அண்டாவை காணோம்னுதான் விசாரிக்க போய்கிட்டு இருக்கேன். வரட்டுமா?’

 ஷெரீப் ‘குடிகாரபய’ என முனகிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

 ‘ஐயோ, இவனோட அநியாயத்த தட்டிக் கேட்க இங்க யாருமே இல்லையா?’ என கதறிக் கொண்டே தன் கடைசி மூச்சினை அந்த இளைஞன் விடுகின்றான்.

       அந்த ஊரிலிருந்து ஒரு நாள் பயண தொலைவில் மூன்று குதிரை வீரர்கள் அந்த குப்பத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள்.  அந்த செயல் வீரர்களின் பெயர்கள் முறையே கலீல், விஸ்வா, சதீஷ்.  அநியாயத்தை ஒழித்து நியாயத்தை நிலைநாட்டும் சாகச காரர்கள் அவர்கள் என தனியாக சொல்ல வேண்டுமா?  கண்ணில் வெறி, மனதில் உறுதி, வயிற்றில் பசியோடு அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். 

                                                                                                   தொடரும்……………………..

Advertisements

Entry filed under: வேதாள நகரம்.

14-11-2008 வன்முறை நமக்கு பழகிய ஒன்றுதானே!

18 Comments Add your own

 • 1. sharehunter  |  November 14, 2008 at 4:54 pm

  கார்த்தி, ஐயா, தெய்வமே, வேணாம்யா,

  என் மேல கோபம் இருந்தா பேசி தீத்துக்கலாம். இப்படியெல்லாம் எழுதாதீங்க. படிச்ச உடனே எனக்கு குலநடுங்கி போச்சு. இப்படி ஒரு ஆங்கிள் சத்தியமா நான் யோசிக்கவே இல்லை.
  நான் கமெண்ட் மாடரேசன் எடுத்துட்டேன். கடவுள் புண்ணியத்தில அதுவா மாடரேட் ஆயிடுச்சி.

 • 2. Chezhiyan K  |  November 14, 2008 at 6:27 pm

  சாமி,

  எங்களுக்கு எல்லாம் இந்த கதையில வாய்ப்பே இல்லையா?

  ஏதோ, கதாநாயகிய கசமுசா பண்ணிட்டு செத்து போற வில்லன் ரோல் இருந்தாலும் பரவில்லை சாரே.

  அது என்னங்க காமிக்ஸ் ப்ளாக் வச்சு இருக்குரன்வங்க எல்லாம் ஹீரோ? அப்ப நாங்க எல்லாம் எங்க போவோம்?

 • 3. sharehunter  |  November 14, 2008 at 6:32 pm

  ஏன் இந்த கொலை வெறி? எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு. கதையில். நீங்க இல்லாமலா? விஷ்வா ஒரு ஹிட் லிஸ்டே கொடுத்துருக்காரு.

 • 4. Chezhiyan K  |  November 14, 2008 at 6:39 pm

  (1) வட அமெரிக்காவின் தென் பகுதியில் மெக்ஸிகோ எல்லைக்கு தென் கிழக்கில் உள்ளது டூமில்குப்பம் = உங்க வாஸ்து நிபுணதுவத காட்றீங்க சார். (எல்லாமே தென் திசையை நோக்கி)

  (2) அந்த ஊரின் வாசலில் அந்த ஊரைப்பற்றி ஒரு ஹைகூ எழுதப்பட்டிருந்தது.

  எதிர்த்து

  பேசினா

  டூமில். = என்ன கொடுமை சார் இது? இது பற்றி எங்கள் ஆன் – டிமாண்ட் கவிஞ்சராகிய தமிழ் குட்டி’இடம் கேட்கிறோம்.

  (3) இப்படிப்பட்ட குப்பத்தில் நல்ல மக்களும் இல்லாமல் இல்லை. 20:40 என்ற விகிதத்தில் பொறுக்கிகள் நல்ல மக்கள் விகிதச்சாரம் இருந்து வந்தது = அப்ப பாக்கி (20+40=60, 100-60=40) எல்லாம் எங்க போனாங்க?

  (4) அந்த ஊரே ஜானி பீரோ என்ற கயவனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவனின் முழு பெயர் ஜானி ‘ஸ்டீல்’ பீரோ = இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எனக்கு என்ன தோனுதுன்னா, காமிக்ஸ் டாக்டர கலைக்கவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள்.

  (5) கண்ணில் வெறி, மனதில் உறுதி, வயிற்றில் பசியோடு அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள் = அது என்னங்க வயிற்றில் பசியோடு? இது கொஞ்சம் ஓவரா தெரியல?

 • 5. sharehunter  |  November 14, 2008 at 6:49 pm

  மற்ற கௌபாய் கதைகள் போல் பூசி மெழுகி எழுதப்படாது இக்காவியம். மண்ணின் மைந்தர்கள் உணர்வுகளை அப்படியே காட்ட போகின்றேன். எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க. இதய பலகீனம் உள்ளவர்கள் அடுத்த அத்தியாங்களை மேற்கொண்டு படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 • 6. dgdg12  |  November 14, 2008 at 7:46 pm

  சார் கதை நன்றாக உள்ளது தொடர்ச்சி ஐ சீக்கிரம் எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறேன்

 • 7. Karthikeyan G  |  November 14, 2008 at 7:49 pm

  மேதகு அய்யா.. நான் “sharehunter.wordpress.com” என்ற வலைத்தளத்தில் இட்ட கமெண்ட்ஸ் காணவில்லை. தயவு செய்து கண்டு பிடித்து தரவும். உங்களுக்கு புண்ணியமா போகும்

 • 8. sharehunter  |  November 14, 2008 at 8:04 pm

  எனது முதல் கமெண்ட் உங்கள் கமெண்ட பத்தி தான்யா. அய்யா, வேணாம்யா. வுட்டுடுங்க.

 • 9. shankar  |  November 14, 2008 at 9:40 pm

  ரொம்ப ஷோக்கா எழுதியிருக்கீங்க வேட்டைக்காரரே,படிக்க படிக்க செம காமெடியாயிருக்கு,இந்த டச்ச விட்டுராதீங்க , அதுவும் ஹைக்கூ சூப்பர் , ஒருத்தர் பாக்கிவிடாம டூமிலாக்கிடுங்க,தக்காளி சாஸ் நிறைய ஊத்துங்க.

 • 10. WIN  |  November 14, 2008 at 9:48 pm

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  வ்வ்வ்வ்வ்…

  சார் சார் என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்க சார்….. ப்ளீஸ்

 • 11. ramprasad.v  |  November 15, 2008 at 1:44 pm

  எனது மொத்த முதலீட்டையும் அக்டோபர் மாத ஆரம்பத்தில் 4200புட் எடுத்து நிபிட்டி2200 வந்தவுடன் விற்றது போல, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நல்லா விரட்டி பாத்துங்க… “ஜோஸ் காமிக்ஸ்-ஐ”…

  டுமீல்.

  லைன், முத்து, திகில், ராணி போன்றவற்றை மிஞ்சனும்.

  கேள்வி”

  இப்பவும் மேற்சொன்ன காமிக்ஸ் எல்லாம் விடாது படிக்குறீங்களா…?

 • 12. sharehunter  |  November 15, 2008 at 4:36 pm

  லயன் மற்றும் முத்து மட்டுமே தற்போது வருகிறது, நண்பரே. உங்கள் உவமை பயங்கரம்.

 • 13. ramprasad.v  |  November 16, 2008 at 7:58 am

  கண்டனம்:

  உங்களுக்கு ஜானி நீரோ-வை பிடிக்காது என்பதால், ஜோஸ்-காமிக்ஸ்-இன் “முதல் வெளியீடான “வேதாள நகரத்தில்”, பிரதான வில்லனின் பேர் “ஜானி பீரோ” என்று வைத்திருப்பதை நான் “வன்மையாக கண்டிக்கிறேன்”, நகைச்சுவை மிகுந்த உங்களுக்கு ஏன் இந்த “காழ்ப்புணர்ச்சி”, அரசியல் வாதிகளை போல்….????

 • 14. ramprasad.v  |  November 16, 2008 at 8:03 am

  மேலும் ஒரு விண்ணப்பம் (இல்லை மிரட்டல் என்றே வைத்துக்கொள்வோம்).

  Good-Bad-Ugly ரகத்தில் பல characters உலவுவர் ஆகையால்,

  ரயில் இருப்பு பாதை உருவாக்குவதன் பொருட்டு, நிலம் பிடுங்கும் UGLY வில்லன் கதாபாத்திரத்தை நான் பிடுங்கிக்கொள்கிறேன்…

  ஆமாம் பிடுங்கிக்கொள்கிறேன்.
  கொஞ்சம் ஓவராதான் போய்டமோ… 8->

 • 15. sharehunter  |  November 16, 2008 at 8:05 am

  அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க. யார் வில்லன், கதாநாயகன் என்று எனக்கே கொஞ்சம் குழப்பமாக இருக்கு. அ.கொ.தீ.க தலைவரிடமும் இதைத்தான் சொல்லியிருக்கிறேன்.
  உங்க பேரு ராம்பிரசாத் ஆ? உங்களுக்கு இருக்குடியோவ்.

 • 16. ramprasad.v  |  November 16, 2008 at 8:08 am

  மேலும் ஒரு விண்ணப்பம் (இல்லை மிரட்டல் என்றே வைத்துக்கொள்வோம்).

  Good-Bad-Ugly ரகத்தில் பல characters உலவுவர் ஆகையால்,

  ரயில் இருப்பு பாதை உருவாக்குவதன் பொருட்டு, நிலம் பிடுங்கும் UGLY வில்லன் கதாபாத்திரத்தை நான் பிடுங்கிக்கொள்கிறேன்…

  ஆமாம் பிடுங்கிக்கொள்கிறேன்.
  கொஞ்சம் ஓவராதான் போய்டமோ… :((

  Daniel Drew, James Fisk, Jay Gould எல்லாம் நான் தான், சொல்லிப்புட்டேன்.

  வேறு எவரேனும் முன்பதிவு செய்திருந்தால்… குறைந்த பட்சம் Jesse James கதாபாத்திரத்தையாவது குடுங்கப்பா.

 • 17. Rafiq Raja  |  November 19, 2008 at 9:57 am

  அட பாவிங்களா, பதிவேடு அன்பர்கள் கவ்பாய் ஹீரோகள் என்றால், என் பெயரை எங்கே தலைவா ? சரி, எல்லார் டவுசரையும் அவுத்து விட்டு வேடிக்கை பண்ண போகிற மாறி தெரியுது….. அந்த லிஸ்டில் நான் இல்லமால் இருபது நலமே……. 🙂

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”

 • 18. Jsc Johny  |  January 11, 2012 at 4:49 pm

  nanru nanru speelberg baniyil irukkirathu kalakkungal!
  (eppavo netla varom athanala enakku onnum avathuppa!!! Escape!!!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: