Archive for November 12, 2008
12-11-2008
அமெரிக்க சந்தை நேற்று ஊசலாடி 175 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. ஒரு வருட குறைவான புள்ளிகளுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் புள்ளிகளே உள்ளன. இன்றைய தினமும் நம் சந்தையில் இதன் தாக்கத்தை எதிர்பார்க்கலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தை வைத்து ஆபரேட்டர்கள் சிறிது நேரம் சந்தையை தாக்குபிடிக்கச் செய்யலாம்.
ஆனால் பொதுவான நிலையில் பார்த்தோமென்றால் சந்தை இன்னொரு Selling Pressure தாங்காது என்றே தோன்றுகிறது. இதை வைத்து சந்தை துவக்த்திலேயே புதிய Short Positions துவங்கக் கூடும். பெட்ரோல் விலை குறித்து உருப்படியாக ஏதாவது அறிக்கை அரசிடமிருந்து வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் டாலரின் விலை அதிகமாக இருக்கும் வரை அரசு அதில் எவ்வித அறிவிப்பையும் வெளியிடாது என்றே கருதவேண்டியுள்ளது.
அரசிடமிருந்து வேறு எதும் அறிவிப்பு வரும் வரையில் சந்தையின் பாதை கீழ்நோக்கி தான் இருக்கும். இன்றைய சந்தை -165 முதல் 60 வரை ஆடும். முடிவு Flat or Negative இருக்க வாய்ப்பு இருக்கிறது.
விரிவாக மாலை எழுதுகின்றேன்.
Good Morning to you all!
Post Market:
காலையில் சந்தை கடுமையான Selling Pressure சந்தித்தது. ஒரளவு தாக்குபிடிக்கும் என நினைத்தேன். இந்த வாரத்தில் இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் இன்றைய அமெரிக்க சந்தை இறங்கும் பட்சத்தில் அடுத்த இரு நாட்களில் சந்தை மேலும் இறங்க வாய்ப்பு உண்டு. அமெரிக்க சந்தை ஆரம்பித்து 30 நிமிடங்களே உள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைவான டோ ஜோன்ஸ் புள்ளிகளுக்கும் ஆண்டு குறைவான புள்ளிகளுக்கும் இடையே 600 புள்ளிகளே உள்ளன.
இந்த நிலையில் ஐஐபி புள்ளி விவரங்கள் வெளியாகிருக்கின்றன. சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. தகவல் தொழில் நுட்ப வட்டாரங்களில் ஒருவித அமைதியின்மை உண்டாகியிருக்கிறதை உணர முடிகிறது. இன்னும் மியுட்சுவல் நிதி நிறுவனங்களின் அறிக்கைகளை முழுதும் படித்து முடிக்க வில்லை. ஆனால் இது வரை படித்தவரை, குறுகிய கால நோக்கில் இந்திய சந்தை மேலும் இறங்க வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்கின்றன.
இன்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் இறங்கினால் நாளை நிலைமை மேலும் மோசமடையவே வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம்.
Recent Comments