Archive for November 11, 2008
11-11-2008
நேற்று எழுதியவாறு அமெரிக்க சந்தை 70 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. அதன் தாக்கம் தற்போது ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கிறது. நமது சந்தையும் இன்று தள்ளாடக் கூடும். நேற்றைய ஏற்றம் செயற்கையானதாக எனக்கு பட்டது. அதன் பலனை இன்று காணலாம்.
சந்தை ஆரம்பத்திலேயே Selling Pressure சந்திக்கக் கூடும். தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் சந்தையில் தீடீரென்று ஒரு சரிவு ஏற்பட்டால் முதலீட்டாளர்களிடையே பயம் ஏற்பட்டு, அந்த சரிவை பெரியதாக்குவார்கள் என அனுபவபூர்வமாக இதற்கு முன் கண்டிருக்கிறோம்.
அதேநிலைமை இன்று வர வாய்ப்பு இருக்கிறது. இன்றைய சந்தை -145 முதல் +58 வரை ஆடலாம். முடிவு எதிர்மறையாக முடியவே வாய்ப்பு இருக்கிறது.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Stay Sharp!
Post Market:
200 புள்ளிகளை இழந்திருக்கிறது நமது சந்தை. நண்பகல் சந்தை மெல்ல வலுவிழப்பதை பார்க்க முடிந்தது. இது இந்த வாரம் முழுதும் தொடரும் என்றே நினைக்கிறேன். தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தையும் நம்பிக்கையளிப்பதாக துவங்கவில்லை. அமெரிக்க சந்தை 300 புள்ளிகளுக்கு கீழ் முடிந்தால், நாளை ஒரு சரிவினை நம் சந்தையில் எதிர்பார்க்கலாம். ஒரு வருட குறைவான புள்ளிகளுக்கு அருகில் இருக்கிறது அமெரிக்க சந்தை என்பதையும் மறந்து விடக்கூடாது.
தற்போதைய நிலையை பார்த்தால், அமெரிக்க சந்தை -300 முதல் -250 புள்ளிகள் வரை இறங்கும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. பார்க்கலாம்.
Recent Comments