Archive for November 10, 2008
10-11-2008
ஆசிய சந்தைகள் அனைத்தும் எழுச்சியுடன் காணப்படுகின்றன. சீனா நலிந்த தன் பொருளாதாரத்தை காப்பாற்ற ஒரு 600 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. பொருளாதாரத்தை காப்பாற்ற, சந்தையை அல்ல. நாமோ தவறான நேரங்களில் இது போன்ற ரேட் கட் போன்ற திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். நீண்ட கால நோக்கில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே பலன் கிட்டும். அரசியல் ஆதாயத்திற்காக குறுகிய கால முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் திட்டங்கள் ஆரம்பத்தில் சிறிது முன்னேற்றம் தருவது போல மாயையை ஏற்படுத்தினாலும், கடைசியில் தோல்வியைத் தான் தழுவும்.
இன்றைய தினம் நமது சந்தை ஆரம்பத்தில் Selling Presssure சந்திக்கக் கூடும். அதை சமாளித்து மேலேயெழுந்தால் +85 புள்ளிகள் வரை மேலே செல்ல வாய்ப்புகள் உண்டு. இல்லாவிடில் சந்தை -100 புள்ளிகள் வரை கீழிறிங்கவே வாய்ப்பு காணப்படுகிறது.
சந்தை இன்று கீழிறிங்கவே வாய்ப்பு உள்ளதாக எனக்கு தோன்றுகிறது. அயல்நாட்டு முதலீட்டாளர்கள் சிறிதளவு வாங்க தொடங்கியுள்ளனர். அவர்கள் தொடர்ந்து வாங்குவார்களா என்பது கேள்வி.
3500 போன்ற இலக்குகள் கொடுக்கப்படுகின்றன. 3000 என்ற இலக்கு நமக்கு தற்போது மிகவும் பழக்கமாகிவிட்டது. புதிய இலக்கிற்கு உடனடியாக நாம் சென்றோமென்றால், மீண்டும் பழைய இலக்கை நோக்கி வருவதை தவிர வேறு வழியில்லை.
குறுகிய கால நோக்கத்துடன் பங்குகள் வாங்குபவர் சந்தை நிலவரத்தை நன்றாக அனுமானித்தே வாங்குவது நல்லது. தினவணிகர்களுக்கு சந்தை காலை 10.30, மதியம் 1.30 மாலை 2.30 ஆகிய மூன்று கால இடைவெளியிலும் வெவ்வேறு நிலைகளை எடுக்கிறது. மிகவும் எச்சரிக்கையாக வணிகம் செய்யவும். இன்றைய தினம் சந்தையின் அடுத்தக்கட்ட பாதை நிர்ணயிக்கப்படும் நாள்.
இன்றைய சந்தையின் போக்கினை பற்றி மாலை விரிவாக எழுதுகிறேன்.
Good Morning To You All!
Post Market:
மிக உற்சாகமாகவே முடிந்திருக்கிறது. 175 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கிறது என்றால் சும்மாவா? நம்முடைய எல்லா கஷ்டங்களும் தீர்ந்தன. இனி நிப்டி தங்கு தடையின்றி பயணம் செய்யும் என்று எழுத ஆசை தான். இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் மெல்ல மெல்ல பிங்க் ஸ்லிப் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஆரம்பம் என்று நினைக்கிறேன். இது போன்று மேலும் சில அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அவசரப்பட்டு அகல கால் வைத்து விட வேண்டாம் என இத்தருணத்தில் எச்சரிக்க வேண்டியதிருக்கிறது.
முதலீடு செய்ய விரும்புவர்கள் இது போன்ற தருணத்தில் சந்தையை விட்டு வெளியே வந்து விடுங்கள். அதையே பார்த்துக் கொண்டிருந்தால், அது ஒரு மாய கண்ணாடி மாதிரி. நம்மையும் உள்ளே இழுத்து விடும். முதலீடு செய்ய இன்னும் நேரமிருக்கிறது. அடுத்த சரிவு வெகு வேகமாகவும், புதிய பள்ளங்களையும் நோக்கியும் இருக்கும் என தோன்றுகிறது. இன்னும் சில வெளிநாட்டு நிறுவனங்களின் அறிக்கைகளை முழுக்க படிக்க வேண்டியுள்ளது. தற்போது தொடங்கியுள்ள அமெரிக்க சந்தையும் பலத்த Selling Pressure சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் கீழ்நோக்கி செல்லவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சென்றால் நாளைய ஆசிய சந்தைகள் சிகப்பாகவே ஆரம்பிக்கக் கூடும்.
பார்க்கலாம். How Uncle Dow Jones reacts to the Selling Pressure.
Good Night, Friends
Recent Comments