இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் VIII

November 7, 2008 at 2:59 pm 10 comments

      “நானும் என் மனைவியும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்கிறாம்.  இதற்கிடையில்தான் நடிகை …………..என்பாரின் நட்பு கிடைத்தது.   ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதை வைத்திருக்கின்றோம்.  ஆம். தனியாக சில தடவை சந்தித்திருக்கிறோம்.  இது தனிப்பட்ட விஷயம். இதுபற்றி இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை.”

 

      “நமது ஜனாதிபதி சொல்லின் செல்வர் திரு ஜார்ஜ் புஷ் அவர்களின் சீரிய தலைமையில் நல்லாட்சி நடந்து வரும் இந்த நேரத்தில் மின் தடைகள் பற்றி சில பத்திரிகைகள் தவறாக செய்திகள் பிரசுரித்துக் கொண்டிருக்கின்றன.  தற்போது நம் நாட்டில் ஏற்படும் இரு மணி நேர மின் தடை சிறிது நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.  ஆப்பிரிக்கா நாடுகள், இந்தியா போன்ற நாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த இரு மணி நேர மின் தடை ஒரு பெரிய விஷயமே அல்ல என்பதையும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். “

    

     ஒரு அமைச்சர் அல்லது செகரட்டரி  ஒரு நடிகையுடன் சுற்றுகிறார் என்ற செய்திக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் அல்லது செகரட்டரி முதல் பாராவில் உள்ளவாறு விளக்கம் தெரிவித்தால் அதனை அமெரிக்கர்கள் தனிப்பட்ட வாழ்க்கை என பெரியதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.   அந்த நடிகையுடன் பழகுவதற்கு அவர் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகம் செய்தால் மட்டுமே பிரச்சினை எழும்.  இவ்வாறாக அவர் தன் நிலையை கூறிய உடன் அந்த விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும்.

       அமெரிக்காவில் சில நாட்களாக ஒரிரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டு, அதற்கு தொடர்புடைய அமைச்சர் அல்லது செகரட்டரி இரண்டாவது பாராவில் உள்ளவாறு விளக்கம் கொடுத்திருந்தால், அவரின் அரசியல் வாழ்க்கை அன்றோடு அஸ்தமனம் ஆயிருக்கும்.  அவரால் திரும்ப ஒரு சிறிய கிராம கவுன்சில் மெம்பராக கூட சேர முடியாது. அவர் உள்ள கட்சியின் தலைவருக்கு தீராத ஒரு தலைவலி ஏற்பட்டிருக்கும்.  ஆட்சியே கவிழக் கூட நேரிடும்.  பத்திரிக்கைகள் தயவு தாட்சண்யம் காட்டாமல் வறுத்து எடுத்துவிடும்.

      நமது நாட்டிலோ முதல் வகை விளக்கங்கள் அபூர்வம்.  அதற்கேற்றபோல் சம்பவங்கள் நடக்கின்ற போதிலும் இது குறித்து அரசியல்வாதிகள் யாரும் விளக்கம் அளிக்க மாட்டார்கள்.  அவ்வாறு மீறி அளித்தாலோ நமது பத்திரிக்கைகளுக்கு ஒரே குஷிதான்.  கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு அவர்கள் எவ்வாறு சந்தித்தித்தார்கள், அவர்கள் குடும்பத்தில் என்ன கருத்து வேறுபாடுகள், அவரின் மனைவி ஏன் அவரை பிரிந்தார் இது போன்ற தேசிய முக்கியத்துவம் உடைய கேள்விகளுக்கு துப்பு துலக்க கடுமையான போட்டிகளில் இறங்கும்.  அவரின் தனிப்பட்ட வாழ்க்கை காற்றில் பறக்க விடப்படும்.  அவர் கட்சியில் இருந்து விலக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாவார்.  சிறிது காலம் தான்.  இந்த விவகாரங்கள் எல்லாம் ஆறி போனவுடன் மீண்டும் அவர் கட்சிப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்.  அதற்குள் பத்திரிக்கைகள் அடுத்த விவகாரத்திற்கு போயிருப்பார்கள்.

        மின்தடை சம்மந்தமான இரண்டாவது வரி அறிக்கை தினமும் நாம் கேட்பது. வாடிக்கையான ஒரு தகவல் அறிக்கைதான்.  அதைப்பற்றி பத்திரிக்கைகள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடாது.  இதற்கு என்ன காரணங்கள் என மக்களுக்கு தெளிவாக அறிவிக்க வேண்டுமா?  அதை படித்துவிட்டு அவர்கள் என்ன செய்ய போகின்றார்கள்?  இதற்கு காரணம் என ஆளும் தரப்பில் கூறப்படுவது சென்ற அரசு சரியாக மின் உற்பத்தி செய்யவில்லை என்பதே.  இன்னும் கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும்.  நம்புங்கள்.  நம்பி விடுவோம்.

      பொறுப்பற்ற அறிக்கைகளை அமைச்சர்கள் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும்போது நாம் பார்ப்பது அதில் சூடான செய்திகள் ஏதெனும் உள்ளதா? யாரையேனும் தாக்குகின்றாரா என்பதைதான்.  பொறுப்பற்ற அறிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நம்மை என்ன சொல்வது?       ஒரு பிரச்சினை ஏற்பட்டு அதை மறைக்க முடியாத நிலை வரும்போது அதனை அரசியல்வாதிகளே மக்களுக்கு உண்மைநிலையை சொல்லி இவ்வாறு நடந்து விட்டது, தவறுதான் மீண்டும் சரிசெய்ய உங்களின் ஒத்துழைப்பை கோருகின்றோம் என சொல்வது நம் மிக மிக மிக மிக அரிதான ஒரு விஷயம். 

      தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடைகள் காரணமாக ஏதேனும் ஒரு உருப்படியான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளனவா?  அல்லது அதற்கு அன்றாட மக்கள் தினந்தோறும் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு ஒரு வருத்தமேனும்?  இவர்கள் எதையேனும் சொன்னால் எதிர்கட்சிகள் உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடும் என்ற பயம்.  இங்கே உள்ள எதிர்கட்சிகள் அரசு நல்ல, கெட்ட திட்டங்கள் எதை கொண்டு வந்தாலும் எதிர்க்க ஆரம்பித்துவிடும். எதிர்கட்சிகள் என்றால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லையே. 

      நேற்று வெளியே கேட்ட ஒரு உரையாடல்

   ‘ஆமா, யாரோ ஓபாமான்னு ஒருத்தர் அமெரிக்கா எலக்சன்ல ஜெயிச்சு வந்துட்டாராமே’

  ‘எலக்சன்ல அவரு எவ்ளோ செலவு பண்ணாரு தெரியுமா, மூவாயிரம் கோடி. தெரியுமா’

  ‘மூவாயிரம் கோடியா’

  ‘ஆமாடா, மூவாயிரம் கோடி ரூபாய்’

‘அடெங்கப்பா, மூவாயிரம் கோடியா,  ம்………………..அமெரிக்கால்ல அவ்ளோ ரூபாய் ஆகுந்தான். ஆமா அதல்லாம் ஒரே வருசத்துல எடுத்துருவாருல்ல?

      We deserve our politicians.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

07-11-2008 Quantum of Solace – திரை விமர்சனம்

10 Comments Add your own

  • 1. Karthikeyan G  |  November 7, 2008 at 5:02 pm

    Josh.. தமிழக பத்திரிகைகள் பற்றிய தங்கள் விமர்சனம் கடும் கண்டனத்துக்குரியது. அவை எப்போதும் சமூகத்தில் மாற்றத்தை எற்படுதக்க கூடிய செய்திகளையே தொடர்ந்து பிரசுரம் செய்து வருகின்றன.

    A good example :: http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=294806

  • 2. King Viswa  |  November 7, 2008 at 5:26 pm

    “மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு”

    என்னும் திருக்குறளுக்கு ஏற்ப we deserver our Dirty Politicians.

    //எதிர்கட்சிகள் என்றால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லையே//

    இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

    //ஆமா அதல்லாம் ஒரே வருசத்துல எடுத்துருவாருல்ல?//

    உருப்படாத ஜென்மம்.

    King Viswa.

  • 3. charles  |  November 7, 2008 at 6:43 pm

    Karthikeyan seems to be a person who doesn’t read tamil daily suppose to be. He must be telling the page “Ithu ungal pakaam”
    Sharehunter you are 100% right go a head my wishes to you

  • 4. sharehunter  |  November 7, 2008 at 6:52 pm

    கார்த்தி,

    உங்கள் சுட்டியை பார்க்க முடியவில்லை. வேறு வகையான பான்ட். வேறு ஏதாவது வழி இருக்கின்றதா?

  • 5. ஆட்காட்டி  |  November 8, 2008 at 4:02 am

    ம்ம்ம்ம்ம்

  • 6. சுரேஷ் குமார் வீ  |  November 8, 2008 at 8:31 am

    திரு. கார்த்தி,

    தமிழக பத்திரிக்கைகளின் விமர்சனம் கண்டனத்திற்குரியதல்ல. இப்பொழுதுள்ள பத்திரிக்கைகளின் உண்மையான நிலையை உண்மையுடன் எடுத்துக்கூறி உள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. அதிகமான பத்திரிக்கைகள் ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர, மக்களின் பொது பிரச்சினைகளை எங்கு கண்டித்துக்கொண்டு இருக்கின்றன. அவர்களை பொருத்தவரையில் தனிமனிதனின் வாழ்கையின் சுவராஷ்யமான விஷயங்களை கூறி பத்திரிக்கையின் விற்பனையை அதிகரித்தால் சரி….

  • 7. dgdg12  |  November 8, 2008 at 10:19 am

    good sir

  • 8. Karthikeyan G  |  November 8, 2008 at 11:37 am

    http://www.maalaimalar.com/asp/news/Eltpan-n.ttf

  • 9. DAVID RAJA  |  November 8, 2008 at 10:15 pm

    Well said ,mr Suresh kumar sir.

  • 10. ramprasad.v  |  November 9, 2008 at 7:33 pm

    நீங்கள் சொல்லுவது உண்மைதான்.

    எதிர்கருத்து (மாற்றுக்கருத்து) உடையவரை எதிரியாக பாவிப்பது அரசியலில் மட்டும் அல்ல, நம்மை போன்ற சாதாரண மனிதர்களிடமும், சாதாரண செயல்களில் இன்று இயல்பாகிவிட்டது.

    கசக்கும் உண்மை:
    நம்மை போன்றவர்களே நம்முடைய தலைவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: