Archive for November 6, 2008
06-11-2008
இன்றைக்கு சந்தை எவ்வாறு இருக்கும் என நீங்கள் இன்னேரம் ஊகித்திருப்பீர்கள். இந்த உயர்வில் தங்கள் பங்குகளை விற்றவர்கள் சற்று பொறுமையாக இருந்து சந்தை மேலும் கீழே இறங்கும்போது சிறிய எண்ணிக்கையில் விற்ற பங்குகளை கவர் செய்து கொள்ளலாம்.
நாளை வெள்ளிக்கிழமை என்பதால், இன்று விற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சந்தை ஆரம்பித்திலிருந்து சரிந்து கொண்டே இருக்கும். ரெகவர் ஆக சந்தர்ப்பமே கொடுக்கமாட்டார்கள்.
அடுத்த வாரத்தில் சந்தை மீண்டும் புதிய பள்ளங்களை தொடும் என எதிர்பார்க்கிறேன். சந்தை இன்று -238 முதல் -65 வரை ஆடலாம். விரிவாக இரவு பேசலாம்.
எனது அபிமான எழுத்தாளர் மைக்கேல் கிரைடன் (Michel Crichton) ஜுராசிக் பார்க், லாஸ்ட் வேல்ட், காங்கோ போன்ற வெற்றிகரமான நாவல்களை எழுதியவர் நேற்று கேன்சரின் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை பற்றி தனிப்பதிவாக ஒன்று வாரக்கடைசியில் எழுதலாம் என்றிருக்கிறேன்.
Recent Comments