05-11-2008

November 5, 2008 at 6:54 am 8 comments

      சந்தை இன்று உற்சாகமாக தொடங்க வாய்ப்பு உள்ளது.  இந்த ஏற்றத்தை விற்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  புதிய அதிபர் பதவியேற்றவுடன் பொருளாதார மந்தம் முடிந்து போவதில்லை.  இந்த உற்சாகத்தில் முழ்கி புதிய Positions எடுக்கும்போது கவனமாக இருங்கள்.

       Short Covering செய்து சந்தை 3280 வரை செல்லும் வாய்ப்பு இருக்கிறது.  உலக சந்தைகள் அனைத்தும் இன்னும் பலவீனமாகவே உள்ளன. வேறு ஒன்றும் இன்று சொல்வதற்கில்லை. இரவு எழுதுகிறேன். அமெரிக்க அதிபர் முடிவு ஒருவழியாக அதற்குள் வந்திருக்கும்.

Have a Good Day!

Post Market:

      மிக உற்சாகமாக ஆரம்பித்த சந்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் சரிய ஆரம்பித்தது. ஓபாமா வெற்றி நிரந்தரமானவுடன் சந்தை மீள எழுந்திருக்கவே இல்லை.  மிக வலுவான ஒட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  அவருக்கு இன்னும் நான்கு ஆண்டு காலம் பதவி உண்டு.  அதனால் மின்னல்வேக பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளுவார் என எதிர்பார்ப்பதில் பயனில்லை.  தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் சரியாக இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட பிடிக்கலாம்.  தின வணிகத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு (ஏறக்குறைய எல்லோருந்தான் அதில் இருக்கிறோம், இல்லையா?) இது மிகப் பெரிய காலமாக தெரியலாம்.   உண்மையான முதலீட்டாளர்களுக்கு இது ஒரு குறுகிய காலமே. 

        ஆனால் இன்னும் ஆறு வருடங்கள் கழித்து இந்த காலத்தை நினைத்து பார்க்கையில் சில வாய்ப்புகளை தவற விட்டுவிட்டோமே என வருந்தக் கூடும்.  இது தற்சமயம் முதலீட்டாளர்களின் பொற்காலத்திற்கு முற்காலம் என கருதலாம். 

    நமக்கும் இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வந்து முடிவுகள் தெரிந்து விடும்.  ஒரு கட்சி ஆட்சி என்றால் நம் நாட்டு பொருளாதாரமும் வெகு விரைவாக முன்னேறும் வாய்ப்பு உள்ளது.  2014-2018 வரை Economic Boom  எதிர்பார்க்கலாம்.

La bienvenida, el Amigo,

       சின்ட்டிகேட் வங்கி மற்றும் சம்பல் பெர்ட்டிலைசர் மட்டுந்தான் வாங்குவீர்களா?  நிப்டி மீண்டும் 2200/2300/2400 என்ற புள்ளிகளில் இருக்கும்போது சிறிய எண்ணிக்கையில் வாங்க ஆரம்பியுங்கள். 

       நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கும் நேரம் அதுவே. எது வாங்கினாலும் சிறிய எண்ணிக்கையில் வாங்குங்கள்.  நீண்ட காலத்திற்கு என வாங்கிவிட்டு, ஒரு பத்து ரூபாய் ஏறிவிட்டால் விற்றுவிட்டு மீண்டும் வாங்கலாம் என்ற எண்ணமே வேண்டாம்.  நீண்ட கால முதலீட்டிற்கென வாங்கியதை குறைந்தபட்சம் ஒரு வருடமெனும் கைவசம் வைத்திருக்கக்கூடிய மனத்திடம் தற்போது தேவை.

     ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் இன்று சுரத்து இழந்துள்ளன.  ஆசிய சந்தைகள் உற்சாகமாக முடிந்துள்ளன.  நாளை அவர்களிடம் இந்த அளவு உற்சாகத்தை எதிர்பார்க்க முடியாது.  நமக்கோ ரிலையன்ஸ் பங்கு பெருத்த அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.  இதை சரிசெய்ய நாளைய சந்தையில் அவர்கள் ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

Advertisements

Entry filed under: Market Analysis.

04-11-2008 06-11-2008

8 Comments Add your own

  • 1. dgdg12  |  November 5, 2008 at 7:06 am

    படிப்பவர்கள் தயவு செய்து பின்னுட்டம் இடவும் சார் உங்கள் சேவை எங்கள் தேவை

  • 2. kannan  |  November 5, 2008 at 7:26 am

    மிக்க நன்றி.சார்.இரவு எதிர்பார்கிறோம் உங்கள் பதிவை .

  • 3. V.SURESH, SALEM  |  November 5, 2008 at 7:31 am

    Thank you very much for your views sir.

  • 4. ariaravind  |  November 5, 2008 at 8:00 am

    thank u.may be i think ur views are good. ok . meet to day night..

  • 5. nagu  |  November 5, 2008 at 11:20 am

    thank you

  • 6. Karthikeyan G  |  November 5, 2008 at 3:12 pm

    Josh.. தங்கள் சேவைக்கு நன்றி!!!

  • 7. Arun  |  November 5, 2008 at 3:17 pm

    Hi

    thru viswa i came to know about you . Just doing a great job in all fields . I want to know it is right time to buy some shares in chambal fertilizers and Syndicate bank .Awaiting for your rejoinder

    adios amico

  • 8. முருகன்  |  November 5, 2008 at 3:34 pm

    மிக அருமையான தகவல் சார்
    நன்றி

    இரவு எதிர்பார்கிறோம் உங்கள் பதிவை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
November 2008
M T W T F S S
« Oct   Dec »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: