Archive for November 4, 2008
04-11-2008
உலக சந்தைகள் அனைத்துமே அமெரிக்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருப்பதால், இன்றைய தினம் நம் சந்தை நேற்றைய நிலையையே தக்க வைக்க பாடுபடும் என நினைக்கிறேன்.
அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்களால் நிமிடத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பக்கூடும் ஸ்நாப் போல் (Snap Polls) பொறுத்து சந்தைகள் ஆட வாய்ப்பு உண்டு.
மெக்கெயின் வெற்றி பெற்றால் தற்சமயம் இந்தியாவிற்கு நல்லது என்ற கருத்தே பெரும்பாலும் காணப்படுகின்றது. ஆனால் யார் வெற்றி பெற்றாலும் இரு நிகழ்வுகள் நிச்சயம். அயல்நாட்டு முதலீட்டு முதல் பெருமளவில் வெளியேறுவது, அதை தடுக்க ரிசர்வ் வங்கியின் முயற்சியால் ரூபாயின் மதிப்பு பெருமளவில் குறைவது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நல்ல செய்திதான் என்றாலும், இன்னும் சில காலத்திற்கு அவர்களிடம் யாரும் எந்த பொருளையும் ஏற்றுமதி செய்ய சொல்லமாட்டார்கள்.
பார்ப்போம். செவ்வாய்கிழமை போய் தேர்தலை வைத்திருக்கிறார்கள். புதன் கிழமை வைத்திருக்கலாம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது அல்லவா?
Recent Comments