நிப்டி ஹைக்கூகள்

October 28, 2008 at 1:49 pm 22 comments

     புதிய தமிழ் எழுத்து கையில் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் கவிதைகள் கூட எழுதுவேன் என முன்பே எச்சரித்திருந்தேன்.  இதய பலகீனம் உடையவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 

      நான் அடிப்படையில் ஒரு சோம்பேறி என்பதால் அறுசீர் விருத்தம் போன்ற பெரிய கவிதைகள் எழுதபோவதில்லை.  அப்போது தான் ஹைக்கூ பற்றி கேள்விபட்டேன்.  இது நடந்தது நீண்ட காலத்திற்கு முன் (நேற்று).  ஹைக்கூவில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் மொத்தமே நான்கு வரிகள்.  அதனை ஹைக்கூ என்று எழுதியவரும், படித்தவரும் (யாராவது ஒருவராவது) சொன்னால் போதும்.  (கார்த்தி,  நீங்களாவது இதனை ஹைக்கூ என சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்).

      பிரபல வார இதழ்களுக்கு என்னுடைய ஹைக்கூகளை அனுப்பலாம் என்றால் என் பெயர் ஹைக்கூவை விட பெரிதாக இருக்கிறது.  பாஸிட்டிவாக யோசித்தால் வார இதழ்களுக்கு என் பெயர், ஹைக்கூ இதில் எது கவிதை என தெரியாமல் போய்விடும் அபாயம் இருப்பதையும் மறுக்க இயலாது. 

      சரி, ஹைக்கூ பற்றி உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் (என் அதிர்ஷ்டம்!).  அது பற்றியும் சிறிய அறிமுகம் கொடுத்து என்னுடைய ஆரம்ப ஹைக்கூகளுக்கு விளக்கமும் கொடுப்பதாக உள்ளேன்.  ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கு வரிகளுக்குள் (ஹை ஜாலி!) இருக்கும்.  இதை எழுதும் போது எக்காரணம் கொண்டும் பேப்பரின் ஓரத்தில் எழுதக் கூடாது.  நட்ட நடுவில் மட்டுமே எழுத வேண்டும்.  இதன் மூலம் ஜப்பானிலிருந்து வந்தது என்பதால், பேப்பரின் தலைப்பில் பிள்ளையார் சூழி இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு ஒன்று எழுதி, விளக்கமும் கொடுக்க முயல்கிறேன்.

                                                                   ஹைக்கூ

                                                                 பௌர்ணமி

                                                                 மலையுச்சி

                                                                 முதலீட்டாளன்!

 

         முதலில் மேலே கண்ட மூன்று வரிகளை ஹைக்கூ கவிதை என நம்ப வேண்டும். (அட நம்புங்க சார், நம்பிக்கைதானே வாழ்க்கை!) கவிதை என்று நம்பினால் மேற்கொண்டு படியுங்கள். விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்.

      பௌர்ணமி –  தமிழ் கவிதை என்பதால் அயல்மொழி சொல் ஒன்றாவது கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.  முழுவதும் தமிழிலேயே எழுதினால் அது தமிழ் கவிதை என சில துக்கிரிகள் சொல்லுவதை செவி கொடுத்து கேட்க வேண்டாம். பௌர்ணமி என்பது ம் ……வந்து………. ஒரு பிற மொழி சொல். அதற்கு அர்த்தம் பௌர்ணமி என்பதேயாகும்.  இந்த பெயரில் பிரபுதேவா இயக்கிய ஒரு தெலுங்கு படம் மிகப் பெரிய ஹிட் ஆனது.  இக்கவிதையாசிரியருக்கு உலக விஷயங்களில் அறிவு உண்டு என்பதற்காக சொல்லப்பட்டதே கடந்த வரி.

      மலையுச்சி – மலையுச்சி இது எல்லோருக்கும் தெரியும். அதனாலே மேற்கொண்டு விளக்கங்கள் அவசியமில்லை.

     முதலீட்டாளன் –  முதலீட்டாளர் என்பது முதலீட்டாளன் என ஆகியிருக்கிறது (முதலீட்டாளர்களுக்கு தற்போது மரியாதை இல்லையென்பதால் ‘ன்’ விகுதி).  உழைத்து சம்பாதித்து கையிலுள்ள தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்பவரையே முதலீட்டாளர் என அழைக்கப்படுகின்றார்.  தற்போதைக்கு  ஏமாந்த சோணகிரி என்ற பொருளில்  கூட எடுத்துக் கொள்ளலாம். குதிரை பந்தயத்தில் பணம் கட்டியவரும், பங்கு சந்தையில் முதலீடு செய்வரும் ஒன்றா? இல்லை. ஒரு சின்ன வித்தியாசம் இருக்கிறது,   என்ன வித்தியாசம்?  குதிரை பந்தயத்தில் குதிரை மேல் பணம் கட்டினால் குதிரை ஜெயிக்கவில்லையென்றாலும், முன்னாடி ஓடும், இரண்டாவதிலே பணம் கட்டினா பின்னாடி போகும்.

      உஸ். அப்பா..  ஒரு வழியா விளக்கம் சொல்லி முடிச்சுட்டேன்.  இன்னும் பல கவிதைகள் எழுதலாம் என்று இருக்கிறேன். மறக்காமல் பின்னுாட்டம் இடுங்கள்.  இல்லையெனில் மௌனம் சம்மதம் என கருதி மேற்கொண்டு பல கவிதைகள் எழுதுவேன் என எச்சரிக்கப்படுகின்றீர்கள்.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

27-10-2008 29-10-2008

22 Comments Add your own

 • 1. simba  |  October 28, 2008 at 2:05 pm

  என்ன ஒரு ஒற்றுமை… நேத்து மலை ஏறும் போது எனக்கு இதே யோசனை தான் வந்தது. சரி ஆனது ஆகட்டும், அஞ்சா நெஞ்சங்கள் அதிகம் இங்க இருக்காங்கனு நான் கவிதைனு நெனச்சு எழுதின ஒன்னை வலையேத்திட்டு வந்தேன்..

  இங்க வந்து பார்த்தா… நீங்களுமா..

  ஒரு கவிதை
  இன்னொரு கவிதையை
  வாசிக்கிறது..

  ஐஐஐஐஐ ,,,, எப்படி நம்ம கூகூகூ ….

  ச்சே என்னென்னமோ சொல்ல வந்தேன்,,, நம்ம நிலைமை இப்படி ஆய்ருசே…

 • 2. sharehunter  |  October 28, 2008 at 2:12 pm

  சிம்பா,

  உங்கள் கவிதை என்னடையதை விட வரிகள் அதிகமாக இருப்பதால் தற்சமயம் நீங்கள் பெரிய கவிஞரே. நான் இதை விட போறதில்லை. பார்த்திடலாம், யார் பெரிய கவிஞர்ன்னு.

 • 3. நாமக்கல் சிபி  |  October 28, 2008 at 3:14 pm

  ஆஹா!
  அருமை!

 • 4. dg  |  October 28, 2008 at 3:48 pm

  sir pattaya kilapparika

 • 5. ரோஜா காதலன்  |  October 28, 2008 at 4:13 pm

  //
  மறக்காமல் பின்னுாட்டம் இடுங்கள். இல்லையெனில் மௌனம் சம்மதம் என கருதி மேற்கொண்டு பல கவிதைகள் எழுதுவேன் என எச்சரிக்கப்படுகின்றீர்கள்.
  //

  நீங்கள் நிறைய கவிதைகள் எழுதவே இந்த பின்னூட்டம் !

  ”நகைச்சுவை, கவிச்சுவை” கலக்கறிங்க தலைவா…

  உங்க பதிவை சமீபகாலமாய் தொடர்ந்து படித்து வந்தாலும், இப்போதான் பின்னூட்டமிட தைரியம் வந்தது.. இனி தவறாமல் பின்னூட்டமிடுவேன்…

 • 6. K.Ravishankar  |  October 28, 2008 at 5:50 pm

  உங்களிடம் நல்ல humour இருக்கிறது. ஹைக்கூ இல்லை. ஹைக்கூ க்கு வருவோம் . ஷேர் மார்க்கெட் மாதிரித்தான் . ஒரு ஸ்கில் வேண்டும் .stop loss pottu
  ezhuthunka.

  சுஜாதா ஹைக்கூ பற்றி சொன்னது :- லாங் சாட், மிட் சாட், க்ளோஸ் அப் அல்லது ஸூம்மில் ஒரு காட்சி உறைதல்/திகில்/ ஆச்சிரியப்படுத்தல் வேண்டும் .”

  நான் எழுதியது அல்ல:
  எங்கோ படித்தது

  விழுந்த மலர்
  திரும்ப கிளைக்கு செல்கிறது
  வண்ணத்து பூச்சி!

  மாதத்தில் ஒருநாள்
  சலூன்காரன் எனக்கும்
  பொன்னாடை
  போர்த்துகிறான் .

  நான் எழுதியது

  கவ்விய இரையை உண்ண
  மின்சாரம் கசியும் கம்பியில்
  காக்கை உட்கார
  அபாயம் 2000 வோல்ட்ஸ்

  ரொம்ப சிம்பிள் .( ithu ஹைக்கூ alla )

  தலைவா! நான் இன்று ”ஷேர் மார்க்கெட் ரவுடிகள்” என்று ஒரு கவிதை எழுதியுள்ளேன் .ஹைகூ அல்ல .பார்த்து கருத்து சொல்லுங்கள்.கருத்து சொல்லுங்கள்.கருத்து சொல்லுங்கள். raviaditya.blogspot.com

 • 7. Karthikeyan G  |  October 28, 2008 at 5:57 pm

  அற்புதம்!!!!!!!!

  “முதலீட்டாளன்!

  பௌர்ணமி!!

  ஹோ – மலையுச்சி!!! ”

  இப்படி படிக்கும் போது கொஞ்சம் ‘ஜென்’ தன்மை வருகிறது.

  ஒரு அன்பான வேண்டுகோள் :::

  நீங்கள் விரைவில் ‘ஜென்’ , ‘astro physics’, ‘share market’ ஆகிய மூன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய ஒருமைப்பாடு குறித்து ஒரு தீவிரமான கட்டுரை எழுத வேண்டும்.

 • 8. maharaja  |  October 28, 2008 at 6:09 pm

  மலையுச்சில்
  பௌர்ணமி
  முதலீட்டாளன்!

 • 9. maharaja  |  October 28, 2008 at 6:14 pm

  பௌர்ணமி அழகு தான் பள்ளங்களையும் மறந்து விடக்கூடாது
  நிற்பது மலை உச்சி

 • 10. sharehunter  |  October 28, 2008 at 6:41 pm

  கார்த்தி,

  இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

 • 11. Karthikeyan G  |  October 28, 2008 at 7:18 pm

  Josh,
  உங்கள் கவிதையில் சொல்லில் பிழை இல்லை. அனால் பொருளில் (விளக்கத்தில்) பிழை உள்ளது.

  //பௌர்ணமி என்பது ம் ……வந்து………. ஒரு பிற மொழி சொல். அதற்கு அர்த்தம் பௌர்ணமி என்பதேயாகும். இந்த பெயரில் பிரபுதேவா இயக்கிய ஒரு தெலுங்கு படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. //
  இந்தப்படம் ஹிட் ஆகவில்லை. ஒரு நல்ல FLOP ஆனது. கற்றறிந்த ஞானியான நீங்கள் இவ்வாறு நல்ல கவிதையில் வரலாற்றை திரித்து இருப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்,

  உங்கள் கவிதையை மூன்றாம் முறை மீள் வாசிப்பு செய்யும் போது இதை நான் அறிய முடிந்தது. நீங்கள் வாசகர்கள் உடனான INTERACTION-க்கு ஆகவே இவ்வாறு வேண்டுமென்றே பிழை செய்துள்ளீர்கள் என்பது என் கருத்து.

  thanks, Karthi G

 • 12. simba  |  October 28, 2008 at 7:21 pm

  Karthikeyan G

  நீங்கள் விரைவில் ‘ஜென்’ , ‘astro physics’, ’share market’ ஆகிய மூன்றுக்கும் இடையே உள்ள நுண்ணிய ஒருமைப்பாடு குறித்து ஒரு தீவிரமான கட்டுரை எழுத வேண்டும்.

  வெட்டி வேலை செய்வோர் சங்கத்துல இருந்து இந்த தீர்மானம் ஒரு மனதா நிறைவேற்றப்படுகிறது… 😉

 • 13. sharehunter  |  October 28, 2008 at 7:27 pm

  கார்த்தி,

  அந்த தெலுங்கு படம், மோசமான கதை மற்றும் த்ரிஷா இருந்தும் எவ்வாறு தோல்வியடைந்தது?

  நீங்கள் சொன்னது சரிதான். இப்போதுதான் சரிபார்த்தேன். ஆனால் பதிவில் திருத்த போவதில்லை. என் இதயத்தில் திருத்தி கொண்டேன். இதுதான் ஜென் பாடம் ஒன்று.

 • 14. Karthikeyan G  |  October 28, 2008 at 7:34 pm

  Josh,
  //அந்த தெலுங்கு படம், மோசமான கதை மற்றும் த்ரிஷா இருந்தும் எவ்வாறு தோல்வியடைந்தது?//

  அந்த படத்தின் ஹீரோ பிரபாஸ் படம் முழுவதும் ஒரு இடத்தில் கூட மஞ்சள் மற்றும் பச்சை வண்ண மேலாடை உடுத்தவில்லை. இதுவே படத்தின் தோல்விக்கு ஒரே காரணமாக அமைந்தது.

 • 15. Karthikeyan G  |  October 28, 2008 at 7:37 pm

  Josh,
  A zen story link,
  http://www-usr.rider.edu/~suler/zenstory/zenstory.html

  People’s reactions for these stories are better than the stories. 🙂

  thanks, Karthi G

 • 16. sharehunter  |  October 28, 2008 at 8:03 pm

  Thanks, Karthi. Very Interesting Link. Added to my favorities. I too got many books about Zen, Lao Tzu. What I read regularly is Sun Tzu’s The Art of War. Everyday, i learn a little from that book.

 • 17. King Viswa  |  October 28, 2008 at 9:26 pm

  //அந்த தெலுங்கு படம், மோசமான கதை மற்றும் த்ரிஷா இருந்தும் எவ்வாறு தோல்வியடைந்தது?//

  அந்த படத்தின் ஹீரோ பிரபாஸ் படம் முழுவதும் ஒரு இடத்தில் கூட மஞ்சள் மற்றும் பச்சை வண்ண மேலாடை உடுத்தவில்லை. இதுவே படத்தின் தோல்விக்கு ஒரே காரணமாக அமைந்தது.//

  அகில உலக மொக்கை படம் பார்போர் சங்கத் தலைவனான நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  படத்தின் மூன்றாவது பாடலில் அவர் பச்சை வண்ண உடை உடுத்தி இருந்தார். எனவே, படத்தின் தோல்விக்கு இதை காரணமாக கூறுவதை ஏற்க இயலாது.

  இந்த படத்தில் கதை என்ற ஏதோ ஒன்று உள்ளதாக யாரோ சில விஷமிகள் வதந்தி பரப்பியதால் பொது மக்கள் ஆதரவு தர வில்லை. ஆனால் ஒலக சினிமா முதல் மொக்க சினிமா வரை அனைத்தையும் பார்க்கும் நான் இந்த உண்மையை கூறியும் அது காலம் கடந்த ஒன்றாகிவிட்டது.

  By the way, த்ரிஷா திறமை காட்டியதை கூறும் நீங்கள், சார்மீ தன் பங்கிற்கு உணர்ச்சிகளை வெளிபபடிதியதை என் கூற வில்லை?

  //ஹைக்கூ என்பது மூன்று அல்லது நான்கு வரிகளுக்குள் (ஹை ஜாலி!) இருக்கும்//

  As for As i Know,

  ஹைக்கூ என்பது மூன்று வரிகளை கொண்டது.

  உவமை, உருவகம் கூடாது.

  மூன்றாம் வரியில் ஒரு திருப்பம் வேண்டும்.

  King Viswa
  http://www.tamilcomicsulagam.blogspot.com

 • 18. sharehunter  |  October 28, 2008 at 9:33 pm

  //அகில உலக மொக்கை படம் பார்போர் சங்கத் தலைவனான நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.//

  நீங்கதானா அவர்? இதை முன்னாடியே சொல்லக்கூடாதா? அபிஷேக் பச்சன் நடிச்சு இருக்கறது தெரிஞ்சும், உங்களை நம்பி தானே துரோணா பார்த்தேன்.

 • 19. King Viswa  |  October 28, 2008 at 9:52 pm

  தல,

  என்ன கொடுமை இது? உங்கள யார் துரோணா பாக்க சொன்னது?

  அதுக்கு நீங்க பேசாம ஷாம் நடிச்ச வெற்றி படமான ABCDய பாத்து இருக்கலாம்.

  ஹ்ம்ம் விதி யார விட்டது?

  நான் துரோணா காமிக்ஸ் நல்லா இருக்கும்னு சொன்னேன். துரோணா படம் நல்லா இருக்கும்னு நம்பி போனது யார் தப்பு?

  தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செயவது. நீங்கள் செய்தது தப்பு.

  இதுக்கு தண்டனைய உங்கள துரோணா படத்த ரெண்டாவது தடவ பார்க்க ஆணை இடுகிறேன்.

  யார் அங்கே? இவரை தியேட்டருக்கு இழுத்து செல்லுங்கள்.

 • 20. sharehunter  |  October 28, 2008 at 10:01 pm

  என் மேல ஏங்க இந்த கொலவெறி?

 • 21. maharaja  |  October 29, 2008 at 7:19 am

  ஹைக்கூ என்பது மூன்று வரிகளை கொண்டது.

  உவமை, உருவகம் கூடாது.

  மூன்றாம் வரியில் ஒரு திருப்பம் வேண்டும்.

  king viswa is correct

 • 22. Rafiq Raja  |  October 30, 2008 at 8:55 am

  ஹைக்கூ, கைகூ, என்று எதோ புரியாத மொழியில் பேசி கொண்டு இருகிறீர்கள், எனக்கு தெரிந்தது எல்லாம் வைகோ வும், psycho வும் தான்.

  துரோணா படம் பார்ப்பது இல்லை என்ற என் முடிவுக்கு வலு சேர்க்கும் விவாதம். மிகவும் சுமாரான நடிகரான அபிஷேக்கை கொண்டாடும் கோஷ்டிக்கு ஒரு பலத்த அடி. பேஷ் பேஷ், நடக்கட்டும் உங்கள் எழுத்துலக பனி.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  – “ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: