My Neighbor Totoro – திரை விமர்சனம்

October 25, 2008 at 6:15 pm 1 comment

      இந்த திரைப்படத்தினை பற்றி ஒரே வார்த்தையில் கூட விமர்சனம் எழுதலாம். இந்த திரைப்படம் Hayao Miyazaki-ஆல் இயக்கப்பட்டது. பிரபல இயக்குநர்கள் கூட தொடர்ந்து எடுக்கும் படங்களில் சில படங்களில் சறுக்கக் கூடும்.  இது ஏறக்குறைய எல்லோருக்கும் நிகழ்ந்திருக்கிறது. 

       ஆனால் இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மிக நேர்த்தியாக, மிகச் சிறந்த கற்பனை வளத்துடன் உள்ள திரைப்படங்கள்.   ஒருவகை Fantasy Genre வகையை சார்ந்தவை என்றாலும், கதை சொல்லப்படும் விதம் மிக மிக அருமையாக இருக்கும்.

       Spirited Away க்கு முன் வந்த படம் தான் என்றாலும், நான் பார்த்த இவரின் இரண்டாம் திரைப்படம் இது.  இரண்டையும் ஒப்பிடவே முடியாத அளவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள். சரி, கதையை பார்ப்போம்.

காட்டு தேவதை டோடொரோ

காட்டு தேவதை டோடொரோ

      ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் நோயடைந்திருக்கும் தன் மனைவியை மருத்துவமனையில் சேர்த்து அவளை பார்த்துக் கொள்தற்காக அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் புதிய வீட்டில் தன் இரு மகள்களுடன் தங்க வருகின்றார்.  ஒரு ஜப்பானிய கிராமத்தை இவ்வளவு அழகாக காட்ட முடியுமா!

        ஒவ்வொரு கிராமத்திலும் கிராம தேவதைகள் பற்றிய கதைகள் பலவுண்டு.  உதாரணத்திற்கு, நான் சிறிய வயதில் வசித்த கிராமத்தில் பைரவன் (பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படும்) என்றொரு தேவதை நள்ளிரவில் ஊரைச் சுற்றி வருவதாக ஒரு கதை உண்டு.  நாய் வடிவில் இருக்கும் இந்த கிராம தேவதை இரவில் தவறுசெய்யும் நோக்கத்துடன் இருப்பவர்களை தண்டிக்கக் கூடியவர் என கதைகள் சொல்லப்பட்டு இருந்தன. ஆனால், தற்போது அந்த கதைகளை இந்த கால சிறுவர்கள்கூட நம்ப மாட்டார்கள்! 

எனக்கு பிடித்த இரவு நேரத்தில் காட்டு தேவதை வரும் காட்சி

எனக்கு பிடித்த இரவு நேரத்தில் காட்டு தேவதை வரும் காட்சி

        அதேபோல் அவர்கள் வந்து குடியேறிய கிராமத்திலும் காட்டுக்கு தேவதையாக டோடோரோ என்ற தேவதை அருகிலுள்ள காட்டில் வசிப்பதாகவும், காடுகளை அழைக்கும் எண்ணம் கொண்டவர்களை தண்டிக்கக் கூடியது என்ற நம்பிக்கை இருக்கின்றது.  பேராசிரியரின் இளைய சிறுமி ஒருநாள் சிறிய காட்டு ஜந்துகளை (House Spirites) பின்தொடர்ந்து செல்கையில் இந்த காட்டு தேவதையை சந்திக்க நேரிடுகிறது.  திரும்பி வந்து அவள் நடந்ததை சொல்கையில் அவளின் மூத்த சகோதரியும், தந்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள்.

       ஒரு மழைக்கால இரவில் இரு சகோதரிகளும் தன் தந்தைக்காக காத்துக் கொண்டிருக்கையில் அந்த காட்டுத் தேவதை அவர்களுக்கு காட்சி கொடுக்கிறது.  ஒரு தவறான புரிதல்களால் இளைய சகோதரி தன் தாயாரை தேடி செல்லும் போது காணாமல் போய் மூத்த சகோதரி காட்டு தேவதை உதவியுடன் அவளை கண்டுபிடிக்கிறாள்.  இதுவே கதை.

       ஒரு அழகான கிராமத்தில் மழை மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் காட்சி,  விளக்கு கம்பங்களின் ஒளியில் இரவில் அவர்களின் தந்தைக்காக காத்துக் கொண்டிருக்கும் காட்சி, காட்டுப்பூனை பஸ் என அட்டகாசமான காட்சிகளை கொண்டது.  ஒரு ஜப்பானிய கிராமம், வீடு எவ்வாறு இருக்கும் என்பதை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.  மிரள வைக்கின்ற Computer Graphics  கிடையாது. மிக சாதாரண நிகழ்ச்சிகளை பிரமிக்கதக்க வகையில் படமாக்கி இருக்கின்றார்கள்.

       எல்லோரிடம் இப்போது DVD Player இருப்பதால் புத்தகங்கள் மாதிரி நல்ல திரைப்படங்களையும் சேர்க்கும் வழக்கம் தற்சமயம் உள்ளது.  உங்கள் வீட்டு கலெக்க்ஷ்னில் சேர்க்க எல்லா வித தகுதிகளையும் உடைய திரைப்படம் இது. 

      கடைசியாக, சொல்ல மறந்து விட்டேனே! இது ஒரு கார்ட்டூன் படம்.

Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

இனி என்ன செய்யலாம் IV திராட்சைகளின் இதயம் – புத்தக விமர்சனம்

1 Comment Add your own

  • 1. dg  |  October 25, 2008 at 6:33 pm

    sir good & i m first

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: