இனி என்ன செய்யலாம் IV

October 25, 2008 at 1:57 pm 4 comments

     சந்தை 8000 என்ற நிலைக்கு சென்று விட்டது.  சிலருக்கு படபடவென்று இருக்கும்.  சிலர் எங்கேயாவது கடனை வாங்கி இப்போது முதலீடு செய்து வரும் வாரத்திலேயே கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம் என்ற எண்ணத்துடன் யாரிடம், எங்கே பணத்தை புரட்டலாம் என்ற சிந்தனையில் இருப்பார்கள்.   இன்னும் சிலர் முற்றிலும் எதிர்மறை எண்ணங்களுக்கு சென்று போட்ட பணம் கோவிந்தா என்ற மனரீதியில் உலக மாயம், வாழ்வே மாயம் என்ற ஆன்மீக வழியில் இருப்பார்கள்.

        அவசரப்படாதீர்கள்.  இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டி இருக்கிறது.  எல்லா பங்குகளும் மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன என்று உங்களின் அவசர தேவைக்கென உள்ள தொகையை எக்காரணம் கொண்டும் இதில் முதலீடு செய்யாதீர்கள்.  உங்களுக்கு இங்கே காணப்படுவது எல்லாம் தெரிந்தே இருக்கும்.  என்றாலும் நம் பணம் ஆபத்தில் இருக்கும்போது தெளிவாக சிந்திக்க இயலாது. 

        சந்தையின் பாதையை உங்கள் இலாப நக்ஷ்ட கணக்குடன் கணிக்க முயலாதீர்கள்.  Dow Jones வெறும் 300 புள்ளிகளை தான் இழந்திருக்கிறது, நான் ஒரு மூன்று இலட்சம் போட்ருக்கேன், திங்களன்று ஒரு 100 புள்ளிகள் ஏறினால் போதும் எனக்கு பத்தாயிரம் கிடைக்கும், திங்களன்று சந்தை மேலேறும் சார், கண்டிப்பா மேலேறும் சார்.  எனக்கு நம்பிக்கை இருக்கு என சந்தையின் பாதையை கணிக்க முயற்சிக்காமல், தீபாவளியை கொண்டாடுவதற்கு தயாரான மனநிலையில் இருங்கள். 

        சென்ற பகுதியில் எழுதியது போல் முதலில் முதல் வகை நண்பர்கள்.  அதாவது நிறைய கடன் வாங்கி முதலீடு செய்த நண்பர்கள் என்ன செய்யலாம் என நிதானமாக யோசிப்போம்.

        முதலில் எவ்வளவு கடன் தொகை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப என்னென்ன பங்குகளை வைத்திருக்கின்றோம் என்பதையும் பார்த்து குறைந்த நக்ஷ்டத்தில் வெளியேறி அந்த கடன் தொகையை முதலில் வெளியே எடுத்து விடுங்கள்.  இது போன்ற குழப்பமான சூழ்நிலையில் எது உண்மையான சந்தையின் Bottom என்பதை தெளிவாக கணிக்க முடியாது.  குறைந்த பட்சம் நம் மத்திய அரசு தேர்தலை சந்தித்து புதிய அரசு பதவியேற்கும் வரை சந்தை இந்த மாதிரி தான் இருக்கும் என நினைக்கிறேன்.   மற்றவர்களின் தொகையை வைத்து முதலீடு செய்து மன கசப்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.  அந்த தொகை தேவைப்படும் நேரத்தில் சந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத நிலை தற்போது இருப்பதால் நமக்கு சொந்தமில்லா தொகையை வெளியே எடுத்து விடுவது நல்லது.

       இந்த கடன் தொகையை எடுக்கும்போது ஒரே நாளில் ஒரே வணிகத்தில் நக்ஷ்டத்தோடு எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை.  எந்ததெந்த பங்குகளை விற்க போகின்றீர்கள் என்பதற்கு ஒரு தெளிவான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.  பிறகு எவ்வாறு அந்த பங்குகளை விற்பதன் மூலம் நக்ஷ்டத்தை குறைக்கலாம் என பிறகு யோசித்து, சிறிது சிறிதாக கூட தொகையை வெளியே எடுக்கலாம்.

      இதில் நம்முடைய மனம் பல்வேறு விதமாக நம்மை யோசிக்க வைக்கும்.  கிட்டதட்ட இவ்வளவு துாரம் விற்காமல் வந்து விட்டோம், இன்னும் கொஞ்ச நாளில் சந்தை 3200 போகும்போது விற்றுக் கொள்ளலாம்.  அது போன்ற எந்தவித மன சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல் மொத்த கடன் தொகை, அதன் மதிப்பில் உள்ள பங்குகள் என ஒரு தாளில் மிகத் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.  பின்னர் சந்தை ஏறினாலும், இறங்கினாலும் சரி. திட்டத்தை மிக உறுதியான மனத்துடன் செயல்படுத்துங்கள். 

           அவ்வாறு தொகையை வெளியே எடுத்தாயிற்று என்றால், நீங்கள் இரண்டாம் கட்டத்திற்கு போய்விடுவீர்கள்.  அதாவது,  பணம் முதலீடு செய்து முதலீட்டு தொகை பாதியாக ஆகிவிட்ட நிலையில் இருப்பவர்கள்.  அதற்கு என்ன செய்யலாம் என அடுத்த பகுதியில் சேர்ந்து யோசிப்போம். 

      நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.  எப்படியும் நிலைமையை பார்த்தால் எல்லோரும் தீபாவளியன்று சந்தையில் வணிகம் செய்து கொண்டிருப்பீர்கள் எனத்தான் தோன்றுகிறது. 🙂

Advertisements

Entry filed under: Hunter's Mind.

24-10-2008 My Neighbor Totoro – திரை விமர்சனம்

4 Comments Add your own

  • 1. simba  |  October 25, 2008 at 2:40 pm

    அங்க வந்து கமெண்டு… இங்க வந்து பதிவு.. ஓய்வு நாட்களையும் உழைக்கும் உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது.. 😉

    நீங்க சொன்ன அதே கம்மென்ட்ட நான் ரிபீடிடவா…

  • 2. naveen  |  October 25, 2008 at 5:03 pm

    dear sir,

    good eveing. how are you. congragelations for your writing skill. you are covered all subjects, its simply superb.

    please continue these type of articles. its is very informative and useful for who are all lost their money in share market.

    and also if you’ve time please write some technical analysis subjects.

    i herewith enclosed one link its very motivating me. i think it’ll motivate few people.

    http://mindpower1983.blogspot.com/

    thank your wonderful work
    naveen

  • 3. Basheer  |  October 25, 2008 at 8:20 pm

    தனது பட்ஜெட் போக தன்னிடம் இருக்கும் மீதி பனத்தை மட்டும் மார்கெட்டில் முதலீடு செய்வதே சரியான முதலீடாக இருக்கும்.

  • 4. V.SURESH, SALEM  |  October 26, 2008 at 12:22 pm

    HAPPY DIWALI TO EVERY BODY

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: