இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் V

October 19, 2008 at 7:27 am 4 comments

    இந்த பகுதியில் விளையாட்டு மற்றும் விளையாட்டு ஆர்வத்தைப் பற்றி பார்க்கலாம்.

    அமெரிக்கர்களின் மனம் கவர்ந்த முக்கிய விளையாட்டுகள் என்று பார்த்தால் இரக்பி என்றழைக்கப்படும் அமெரிக்கன் புட்பால், கூடைப் பந்து, பேஸ்பால் மற்றும் கால் பந்து.   இதில் கால்பந்து அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே முக்கிய விளையாட்டாக இரசிக்கப்படுகிறது.  அமெரிக்கன் புட்பால் (இனி இதை புட்பால் என்றே அழைப்போம்) , பேஸ்பால் மற்றும் கூடைப் பந்து விளையாட்டை பொறுத்தவரை அமெரிக்கவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒவ்வொரு அணி இருக்கிறது.  அமெரிக்கர்கள் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு இந்த விளையாட்டுகளில் ஏதேனும் ஒரு அணியை பெரிதும் விரும்புவார்கள்.   பொதுவாக அந்த அணி அவர்களது சொந்த மாநில அணியாகதான் இருக்கும்.   ஆங்கிலேயரிடம் விடுதலை பெற்றாலும், அவர்களது விளையாட்டான கிரிக்கெட் அமெரிக்காவில் பிரபலமடையவில்லை.  ஓய்வு நேரங்களில் இந்த விளையாட்டுகள் மற்றும் அணி நட்சத்திர வீரர்களை பற்றி பேசுவதில் மிகுந்த உற்சாகம் அடைவார்கள்.

      நம்மை பொறுத்தவரையில் பெரும் அபிமானம் பெற்ற ஒரே விளையாட்டு கிரிக்கெட் தான்.  ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டு சென்ற ஒரு விளையாட்டு தற்சமயம் நம் தேச விளையாட்டான ஹாக்கியே துாக்கி சாப்பிடும் வண்ணம் வளர்ந்து விட்டது.  நானும் சிறிய வயதில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.  நமது கிரிக்கெட் வீரர்களை பார்த்து வியந்திருக்கிறேன்.  ஒவ்வொரு உலக கோப்பை போட்டிகளையும் நாளின் எந்த பகுதியில் ஒளிபரப்பினாலும், அதற்கேற்ப என்னுடைய நேர அட்டவணையை ஒழுங்குப்படுத்திக் கொண்டு பார்த்திருக்கிறேன்.

      ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.  கிரிக்கெட் விளையாடுவதில்லை.  நம் மனங்கவர்ந்த விளையாட்டு என்ற பார்வையில் பார்க்காமல் சற்று விலகி அடுத்த பத்திகளை படிக்க வேண்டுகிறேன்.

     கிரிக்கெட் ஒரு அசமந்தமான ஆட்டம் என்பது தற்போது என்னுடைய கருத்து.  அந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு ஆட்டத்தில் கடைசிக்கட்டத்தில் மட்டுமே இருக்கிறது.  சில நேரங்களில் வலுக்கட்டாயமாக அந்த விறுவிறுப்பை உண்டாக்குவது போல தோற்றமும் தருகிறது.  மேலும் கிரிக்கெட் வீரர்களில் பலரை Fit ஆக இருப்பதாக உதாரணம் சொல்ல முடியாது.  பொதுவாக நாம் யார் மேல் மிகுந்த அபிமானம் கொண்டிருக்கின்றோமோ அவரை போலவே சிலதை இமிடேட் செய்ய முயல்வோம்.  தோற்றம், நடை, உடை, பாவனை போன்றவற்றில் அவரை போலவே காட்சியளிக்க விரும்புவோம்.  நமது கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை நாம் விரும்புவதற்கு காரணம்.  அவர்களில் சிலர்  நம்மை போலவே தொப்பையுடன் தோற்றம் அளிக்கின்றார்கள்.  

      உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நம் நாட்டில் நாம் விரும்பும் விளையாட்டில் ஒரே ஒரு அணி மட்டுமே இருக்கிறது (இந்நிலை வெகு சமீபமாகதான் மாற்றப்பட்டது.  ஐபிஎல் போட்டிகள் மூலம்) நாம் ஓய்வு நேரத்தில் இதில் விளையாடும் பன்னிரெண்டு வீரர்களை பற்றி மட்டும்தான் பேசியாக வேண்டும்.  இரஞ்சி போட்டிகளில் விளையாடும் தமிழக வீர்கள் யாரையாவது பற்றி நாம் பேசியிருக்கிறோமோ?  அவர்கள் யாரேன்றே தெரியாது.  மொத்த இந்தியாவிற்கும் போர்ட் அணியில் இருக்கும் இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்ற தோற்றம்தான் இருக்கிறது.  நம்முடைய முந்தைய தலைமுறை ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது.  திரு சுனில் கவாஸ்கர் என்ற வீரரின் விறுவிறுப்பான ஆட்டம் அவர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது.  What a action lovers our guys! No wonder we didn’t get a single medal in Olympics.  இந்த நிலையில் இந்தியா ஒலிம்பிக்கில் எவ்வாறு பதக்கப் போட்டியில் ஈடுபடும்?  இத்தனைக்கும் நடுவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி வந்த மூவரையும் ஆசைதீர பாராட்டி விட்டு, அவர்களுக்கு ஒரு வீடும், சில இலட்சம் ரொக்கம் கொடுத்துவிட்டு, கங்குலி ஒய்வு முடிவினை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களின் பெயர்களை இன்னும் சில வாரங்கள் கழித்து யாரையேனும் கேளுங்கள். யாரோ ஒரு பஞ்சாப் காரனும், இரண்டு டெல்லிக் காரனும் என்று தான் பதில் கிடைக்கும். 

      ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்தபோது, ஒலிம்பிக் போர்ட் இந்த கோரிக்கையை வெகு கேலியாக பார்த்தது என்று தெரியுமா?  அமெரிக்காவிலும் விளையாட்டு வீரர்களை Super Star ரேஞ்சுக்கு தான் பார்ப்பார்கள்.  இங்கே அதனினும் மேலாக, இவர்களை கடவுள்கள் போல பார்க்கின்றோமே.  கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் ஏற்பட்டதால் தான் உங்களுக்கு கிரிக்கெட்டின் மீது வெறுப்பா என கேட்க வேண்டாம்.  எந்த ஒரு பிரபல விளையாட்டிலும் மேட்ச் பிக்ஸிங் உண்டு.  கிரிக்கெட் இங்கே கிட்டதட்ட தேவதுாதர்கள் விளையாடும் ஆட்டமாக கருதப்பட்டது.  கொழுக் மொழுக்கென்று இருப்பவர்கள் சிறுவர்களின் ஆதர்ச நாயகனாக கருதப்பட்டார்கள்.     இவர்கள் தவறு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தபோது முதலில் யாருமே நம்பவில்லை.   பிறகு அந்த குற்றச்சாட்டுகள் மீது நடந்த விசாரணையின் கதி பற்றி உங்களுக்கே தெரியும்.

      இதற்கு முந்தைய பகுதியில் இந்தியர்கள் ஏன் உடல்நலத்தில் அக்கறை காட்டுவதில்லை என பார்த்தோம்.  அதற்கு கிரிக்கெட்டும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.  ஒரு அசமந்தமான விளையாட்டினை இரசிக்கும் நாமும் அப்படிதான் இருப்போம்.   சாக்கர் என்றழைக்கப்படும் கால்பந்து விளையாட்டானது தற்போது பிரிட்டனின் முக்கிய விளையாட்டு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு கிரிக்கெட் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.  கிரிக்கெட் அதனுடைய முக்கியத்துவத்தை வெகுவேகமாக இழந்து வருகிறது.    கிரிக்கெட்டில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக 20/20 போட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.  இன்னும் சிறிது நாட்களில் அது 10-10 என்றானாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.  பார்வையாளர்கள் கவனத்தை கவரவேண்டுமென்பதற்காக இப்போது கன்னாபின்னாவென சவால்கள் விட ஆரம்பித்து விட்டார்கள்.  இன்னும் சிறிது நாட்களில் ஆஸ்திரேலியாவை பார்த்து வூட்டுல சொல்லிட்டு வந்துட்யா என்ற ரீதியில் சவால்கள் விட்டு ஆட்ட சுவாரஸ்யத்தை அதிகரிக்கப் போகின்றார்கள்.  பிறகு WWF மாதிரி தோற்ற கேப்டனை ஆட்டக் களத்திலேயே எல்லோரும் துாக்கி பந்தாடும் காட்சியெல்லாம் கூட வரலாம். 

      அமெரிக்க பாணியில் தான் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இந்தியா எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு உலக அணிகளின் வீரர்களுடன் கலந்து போட்டிகள் நடத்தி கணிசமான அளவிற்கு சம்பாதித்திருக்கின்றன.   வருங்காலத்தில் இதே மாதிரி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அணி வெகு சீக்கிரம் தயாராகி விடும்.  அவற்றில் அந்த மாநில ஆட்கள் ஆடுவார்களா என கேள்வி எழுப்பினால் உங்களை விட பெரிய அசடு யாரும் இருக்க முடியாது. 

      நாமும் எல்லா நேரங்களிலும் கிரிக்கெட் விளையாடுவதில்லை.  ஷட்டில்காக் என்றழைக்கப்படும் இறகு பந்தாட்டம் ஆடுகிறோம்.  ஆனால் அதனை தொலைக்காட்சியில் பார்க்க நமக்கு பிடிக்க வில்லை.  கால் பந்தினை வைத்துக் கொண்டு இங்கேயும், அங்கேயும் தட்டி விளையாடிக் கொண்டிருப்போம்.  நம் இந்திய கேப்டன் பாய்ச்ங்க் பூட்டியாவை தெரிந்து வைத்திருப்பதில்லை.  இந்திய விளையாட்டு வீரர்களில் என்னுடைய ஹீரோ அவர்தான்.  விளையாட்டில் மட்டுமல்ல, சீன ஒலிம்பிக் ஜோதியை திபெத் ஆக்கிரமிப்பிற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு எடுத்து செல்ல மாட்டேன் என்று கூறிய மனவுறுதிக்கும் தான்.

     மற்ற விளையாட்டுகளையும் விளையாட, இரசிக்க கற்றுக் கொள்வோம்.  கிரிக்கெட் என்பது மோசமான விளையாட்டு என்று சொல்ல வரவில்லை.  அது மட்டுமே விளையாட்டு என்ற மனப்பான்மையை விட்டு வெளியே வரலாமே.   கால்பந்து வீரர்களின் உடம்பினை பார்த்திருக்கின்றீர்களா?  அவர்கள் மாதிரி இருக்கலாம் என்று நினைக்கலாமே.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

இனி என்ன செய்யலாம் III 20-10-2008

4 Comments Add your own

 • 1. ANTONIO FERNANDO  |  October 19, 2008 at 3:26 pm

  you’re right brother . every one should think about that.

 • 2. Karthikeyan G  |  October 21, 2008 at 1:37 pm

  Hi..

  Cricket is the only game which has the more scope for the statistics. (artistry VVS Laxman is less celebrated than Dhoni).

  Cricket is the more convinient game for the rural areas(low cost and playing area can be adjusted). We palyed volleyball for few months and was well poular and gradually lossed its popularity to Cricket due to incovenience of ball puncture. (we were stitching the ball atleast twicw a week.)

 • 3. sharehunter  |  October 21, 2008 at 2:26 pm

  கார்த்தி,

  தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் வாதங்களை மறுக்க வேண்டியதிருக்கிறது. வாலி பாலில் பஞ்ச்சர் ஆகும் அளவுக்கு முள் உள்ள இடங்களில் கிரிக்கெட் ஆடவே முடியாது. மேலும், வாலிபால் ஆட மிக குறைவான இடமே தேவைப்படும். அதனையும் ஒழுங்காக பராமரித்தால் வாலிபால் பஞ்ச்சர் ஆக வாய்ப்பு மிக குறைவு.
  வாலிபால் ஒரு விறுவிறுப்பான விளையாட்டு. கை, கால்கள் பலம் பெற தக்க வகையான ஒரு ஆட்டம். பிரேசில் வீரர்களின் ஆட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? புயல் மாதிரி ஆடுவார்கள். மேலும் இந்த ஆட்டத்தில் அநாவசிய பேச்சே இருக்காது. ஒருவேளை நமக்கு பேச ஆசை அதிகமாக இருப்பதால்தான் கிரிக்கெட் ஆடுகின்றோமோ தெரிய வில்லை?

 • 4. Karthikeyan G  |  October 21, 2008 at 5:19 pm

  //வாலிபால் ஒரு விறுவிறுப்பான விளையாட்டு//

  TRUE.., But we can’t able to continue playing the game even tough evryone were highly intrested in the game.. 😦

  நானும் ஒரு நல்ல Volleyball பிளேயர். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், வேறு வழி இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: