Spirited Away – திரை விமர்சனம்

October 18, 2008 at 8:32 am 5 comments

     அன்று ஒரு மந்தமான மழைநாள்.  இரவில் பார்க்க ஏதேனும் நல்ல ஆங்கில படங்கள் கிடைக்குமா என தேடிக் கொண்டிருந்தேன்.  கடை முதலாளி இரண்டு புதிய படங்கள் அவரிடம் கிடைத்திருக்கின்றன  காண்பித்தார்.  ஒன்று உறாலிவுட் காமெடி, மற்றொன்று Spirited Away என்கிற ஜப்பானிய மங்கா லேபிளுடன் உள்ள கார்ட்டூன்.  ஜப்பானிய மங்கா கார்ட்டூன்கள் என்னுடைய கஸினுக்கு (வயது எட்டு) பிடிக்கும் என்பதால்,  எனக்கு காமெடியும், அவனுக்கு கார்ட்டூனையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

    ஜப்பானிய மங்கா படங்களை எவ்வாறு தான் பார்க்கின்றார்களோ என்பதில் மிகுந்த ஆச்சரியம்.  எனக்கு சுத்தமாக பிடிக்காது.  சரி, ஒவ்வொருவருக்கும் வேறுவிதமான டேஸ்ட் என மனதில் நினைத்துக் கொள்வேன்.  வீட்டிற்கு வந்து போட்டுபார்த்தால், உறாலிவுட் படம் ஆரம்பத்திலேயே சரியாக தெரியவில்லை.  மணியோ இரவு பத்து.  விளங்கினா மாதிரிதான் என நினைத்துக் கொண்டு, சரி, மாங்கா கார்ட்டூனாவது ஒழுங்காக தெரிகின்றதா என போட்டு பார்த்தேன்.  நன்றாகவே தெரிந்தது.  போரடிகிறதே ஒரு சில நிமிடங்கள் பார்க்கலாம் என உட்கார்ந்தேன்.

       வெகு சில திரைப்படங்கள் மட்டுமே என்னை படம் முடிந்த பிறகு ஒருவித திகைப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.  தமிழில் என்று சொன்னால், அன்பே சிவம்.  படத்தை என்னுடன் திரையரங்கில் பார்த்த அனைவரும் matured audience.  படம் முடிய ஆரம்பிக்கும்போதே சைக்கிள் டோக்கன்களை எடுத்துக் கொண்டு மீதி திரைப்படத்தை மறைத்துக் கொண்டு, எழுந்து செல்லாமல் கடைசி வரை உட்கார்ந்து பார்த்தார்கள்.  கமல் மழையில் நடந்து செல்லும் வரை ஒரு வித பிரமையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன்.  அதற்கப்புறம் இந்த படம் தான்.  ஜப்பானிய மங்கா கார்ட்டூன் என நினைத்தது எவ்வளவு தவறு என தோன்றியது.  என் மனதில் எழுப்பி வைத்திருந்த சில பிம்பங்கள் இடிந்து விழுந்தன.  உறாலிவுட் கார்ட்டூன் படங்களே நன்றாக இருக்கும், அவர்களை தவிர வேறு யாரும் இவ்வளவு இரசனையாக எடுக்க முடியாது.  ஜப்பானிய கார்ட்டூன்கள் என்றாலே மங்கா டைப் கார்ட்டூன்கள் தான்.

   

Spirited Away - மங்கா டைப்பில் இருக்கும் போஸ்டர்

Spirited Away - மங்கா டைப்பில் இருக்கும் போஸ்டர்

    ஆனால் அதன் போஸ்டரை பார்த்தால் மங்கா டைப் கார்ட்டூன் போலதானே இருக்கிறது.  கதையை சொல்வதற்கு முன் முதலில் சில வார்த்தைகள் சொல்லி விடுகிறேன்.  டிஸ்னி கார்ட்டூன்கள் மட்டுமே சிறந்தது என மனதில் நினைத்துக் கொண்டிருபவர்கள் எண்ணத்தை உடன் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது இந்த திரைப்படம்.   ஒவ்வொரு கார்ட்டூன் பிரியர்கள் வீட்டிலும் இருக்க வேண்டிய கலெக்ட்ர்ஸ் வரிசையில் கண்டிப்பாக இப்படத்திற்கு இடம் கொடுங்கள்.

      கதைக்கு வருவோம்.  சிசிரோ என்றழைக்கப்படும் சிறிய பெண்ணே கதை நாயகி.  அவளின் பெற்றோர் வேலை மாற்றலின் காரணமாக வேறு ஒரு ஊருக்கு குடி பெயர்கின்றார்கள்.  புதிய பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு அவளுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கிறது.  போகும்வழியில் வழி தவறி, ஒரு பழைய இடிந்த கட்டிடங்கள் இருக்கும் ஒரு பகுதிக்கு சென்று விடுகின்றார்கள்.  பகல் பொழுது முடிந்து இரவு மெல்ல ஆரம்பிக்கும் நேரம். அங்குள்ள உணவு விடுதியில் யாரும் இல்லாத நிலையில், பசிக்கிறது என சில உணவு பண்டங்களை சாப்பிடுகின்றார்கள்.  சிசிரோவுக்கு பசியில்லை. 

    தீடிரென்று அவர்கள் பன்றிகளாக ஆகிவிடுகிறார்கள்.  இரவு கவிழும்போது, ஒரு மர்மமான சிறுவன் அவளிடம் சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போய்விடு என எச்சரிக்கிறான்.  அவள் தப்பி ஒடும்போது, அவர்கள் கடந்து வந்த வற்றிய ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு அவளால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.  இரவில் அந்த பகுதி ஆவிகளுக்கு ஒரு கிளப் மாதிரி (படத்தை பொறுத்தவரை பாத் உறவுஸ் என்ற சொல் வருகிறது.  பாத் உறவுஸ் என்பது  நம்மில் பலருக்கு பழக்கமில்லா சொல்லாக இருப்பதால் கிளப் என்ற அர்த்ததில் எழுதுகிறேன்). அங்கியிருந்து அவள் அந்த மர்ம சிறுவனின் உதவியுடன் எவ்வாறு தன் பெற்றோருடன் தப்பிக்கின்றாள் என்பது படத்தின் மீதிக் கதை.

     பொதுவாக கார்ட்டூன் படங்களில் சில இடங்களில் பிரமிக்க வைக்கும் காட்சிகள் (உதாரணத்திற்கு ஒரு landscape காட்டும்போது பிரமிக்க தக்க கோணத்தில் காட்டுவது) சில இடங்களில் வரும்.  இந்த படத்திலோ     பிரமிக்க வைக்கும் காட்சிகள் படம் முழுவதுமே வருகின்றன.  உதாரணத்திற்கு, ஆவிகளை ஏற்றுக் கொண்டு வரும் படகு, பாத் உறவுஸ், முகமற்ற ஆவி, டிராகன் பறப்பது.  எனக்கு பிடித்தமான காட்சி என்றால் கடலின் நடுவே உள்ள தண்டவாளத்தில் இரயில் செல்வதும், சிசிரோ அந்த இரயிலில் ஏறி இன்னொரு சூனியக்காரியின் வீட்டிற்கு செல்வது வரையிலான காட்சி.  கார்ட்டூன் படங்களில் இக்காட்சியை நான் ஒரு Masterpiece என்றே சொல்வேன்.

      பிறகுதான் தெரிந்தது படத்தின் இயக்குநர் Hayao Miyazaki ஆஸ்கார் விருது வாங்கியவர் என்றும், இவரின் மற்ற படங்களும் ஜப்பானில் சூப்பர் உறிட் ஆனவை என்றும்.  இவரின் எல்லா படங்களுமே நன்றாக இருக்கும்.  இவரின் மற்ற கார்ட்டூன் கிளாஸிக் படங்களையும் பார்த்திருக்கிறேன்.  அதை பற்றிய விமர்சனத்தை பிறகு எழுதுகிறேன்.

      படத்தின் ஆரம்பத்தில் சிசிரோ புதிய பள்ளிக்கூடத்தில் நான் எவ்வாறு படிக்க போகிறேன் என  புலம்பிக் கொண்டே வருவாள்.  படம் முடிகையில் எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா என்ற ரீதியில் பேசுவாள்.  அட்டகாசமான படம். படத்தின் போஸ்டரை பார்த்து ஏமாந்து விடாமல், படத்தை பாருங்கள்.  ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் பார்க்கலாம்.  ஆனால் இப்போதைய குழந்தைகள் நான்கு வயதிலேயே குசேலன், சக்கரக்கட்டி என பார்த்து  மிக வலுவான மனத்திடம் பெற்றுவிடுவிதால், அவர்களும் பார்க்கலாம்.

Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் – இரும்புகை மாயாவி I இனி என்ன செய்யலாம் III

5 Comments Add your own

 • 1. rajeepan  |  October 18, 2008 at 8:58 am

  அப்படியா?.. எனக்கும் இப்பவே படத்தை பார்க்கனும் போல இருக்கு..அருமையான தகவலுக்கு நன்றி…

 • 2. King Viswa  |  October 18, 2008 at 10:01 pm

  Share Hunter,

  மிகவும் சிறப்பான படம் அது.

  ஆனால் அவர் பெயர் Hayo Miyazaki அல்ல. Hayao Miyazaki என்பதே சரி ஆகும்.

  உலகின் மிக சிறந்த இந்த படைப்பாளி’ படைத்த காவியங்களில் 8’ஐ நான் பார்த்து உள்ளேன். என் வாழ்வில் நான் கழித்த மிக சிறந்த நேரங்களில் அதுவும் ஒன்று.

  ஆவருடைய படங்கள் சென்னை’இல் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.

  நீங்கள் சொல்வது போல Rent’க்கு கிடைக்கும். ஆனால் சொநதமாக வாங்க நினைத்தால்?

  ஆனால் பின்னர், என்னுடைய நண்பர் ஒருவர் பர்மா பஜார்;இல் இருந்து அவருடைய 8-in-1 DVD’i பரிசளித்தார்.

  எனக்கு வந்த நல்ல பரிசில்களில் அது உயர் இடத்தை பிடிக்கின்றது.

  அவருடைய நிஜ வாழ்கை கொள்கைகள் எனக்கு வியப்பளிக்கும்.

  நோ கட்ஸ் என்று Walt Disney’க்கு சொன்னவர் அவர்.

  அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்: http://en.wikipedia.org/wiki/Hayao_Miyazaki

 • 3. sharehunter  |  October 18, 2008 at 11:09 pm

  நன்றி, விஸ்வா,

  தமிழிலும் நன்றாக எழுதுகின்றீர்கள். அதற்கும், இயக்குநரின் பெயர் தவறாக வெளியானதை சுட்டிக் காட்டியதற்கும் மிக்க நன்றி.

  அவரின் Howl’s Moving Castle, Castle in the Sky, Nausea and the Valley of the Wind, My Neighbour Totoro பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றிருக்கும் தனியாக விமர்சனம் எழுதலாம் என்றிருக்கிறேன்.

  Princess Monokoke மட்டும் கிடைக்க வில்லை. தேடுதலை நானும் நிறுத்துவதாக இல்லை. ஒவ்வொரு படங்களும் தீவிர தேடுதலுக்கு பிறகே கிடைத்தவை. தேடுதலுக்கு செலவிட்ட நேரம் வீண் என்று ஒரு படம் கூட நினைக்க வைக்கவில்லை.

  உங்கள் பின்னுட்டங்கள் ஏன் மாடரேட் ஆகின்றன என தெரியவில்லை. மாடரேட் ஆப்ஷனை நான் எப்போதோ எடுத்துவிட்டேன்.

  இந்த இயக்குநரின் வெற்றி என நான் சொல்ல நினைப்பது அவரின் படங்களில் ஒரு படத்தை மட்டும் குறிப்பிட்டு இது என்னுடைய பேவரைட் என்று சொல்லமுடியவில்லை.

 • 4. Mani  |  April 11, 2009 at 3:33 am

  Hi,

  My 3-year-old daughter is great fan of this directer. We have seen all his movies, Spirited Away, My Neighbour Totoro , Howl’s Moving Castle – these three are best and fast-moving and will make you think that you are watching a normal movie.

  My daughter has been watching My Neighbour Totoro n-number of times…. we even ordered a cake modeling Totoro for her third birthday!

  I think My Neighbour Totoro is for every kids, and kids will grow stronger and bolder by watching these type of movies.

  Thanks for your review!

 • 5. Subash  |  April 18, 2009 at 8:34 am

  nice review.
  எனக்கும் இந்தப்படம் பார்கணும்ட போலிருக்கு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: