இனி என்ன செய்யலாம் III

October 18, 2008 at 2:28 pm 3 comments

       இந்த சந்தை கரடிகளின் பிடிகளில் மாட்டிக் கொண்டிருக்கிற போது மற்றவர்கள் என்ன செய்வார்கள்? 

       குழும   பிரமோட்டார்கள் வெளியீட்டு விலைக்கு கீழே குழும பங்குகள் விற்பனையாவதால், தங்களுடைய முதலீட்டு சதவீதத்தினை அதிகரித்துக் கொள்வார்கள்.

      சிறிய குழுமங்களை பெரிய குழுமங்கள் கபளீகரம் செய்ய ஆரம்பிக்கும்.  தங்களுடைய வணிக எல்லையை ஒவ்வொரு பெரிய குழுமமும் விஸ்தரிக்க முயலும்.

      வங்கிகள் மக்களிடையே உள்ள அதிகப்படி பணத்தை எவ்வாறு வைப்பு நிதிகளாக மாற்றலாம் என திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும்.

      ரியல் எஸ்டேட் வணிகம் சுணக்கமுறும் என்பதால், பெரிய ரியல் எஸ்டேட் குழுமங்கள் சிறிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அலேக்காக முழுங்க திட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும்.

      திரையுலகம் மக்களின் சோக நிலையையுணர்ந்து மகிழ்ச்சியாக முடியும் (Happy Ending) திரைப்படங்களை தயாரிக்க தொடங்கும்.

     வணிக செய்தித்தாட்கள் முதலீட்டாளர்களை நடுங்க வைக்கும் செய்திகளை தயாரித்து அவர்களை எவ்வாறு பீதிக்குள்ளாக்கலாம் என திட்டமிடும் அதே சமயத்தில், வணிக பரிந்துரைகள் என்ற நகைச்சுவைப் பகுதியையும் தொடர்ந்து வெளியிடுவார்கள்.

     வங்கி மேலாளர்கள்  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்றும், அதே சமயத்தில் அவர்களின் பங்குகளை வைத்துக் கொண்டு அவர்களுக்கு கடன் ஏன் தர இயலாது என்பதற்கான காரணங்களை யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

      உங்கள் மனைவி இனி உங்களை புதிய வாக்ஷிங் மெக்ஷினாக பயன்படுத்தலாமா என யோசித்துக் கொண்டிருப்பார்.

     உங்கள் குழந்தைகள் புதிய நோட்டு புத்தகங்களுக்கு உங்களை அட்டை போட சொல்லலாமா என உங்களை எப்போது கேட்கலாம் என பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    உங்கள் வீட்டிற்கு செய்தித்தாள் போடுகிற பையன் இவ்வளவு சீக்கிரம் பேப்பர் படிச்சு என்ன கிழிக்கப் போறே என உங்களிடம் எப்போது கேட்கலாம் என ஆசைப்பட்டு கொண்டிருப்பார்.

    இனி என்ன செய்யலாம் பகுதியை இத்தோடு முடித்து விடலாம் என போன பதிவில் எழுதிய பிறகும், இது பற்றி நிறைய யோசனைகள் வருவதால், இதனை தொடரலாம் என முடிவு செய்து, ஒரு மொக்கை பதிவினை போட்டு, நாளைக்கு வாய்தா வாங்கிக்கலாமா என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிற நான்.

     ஸ்வாமி நிப்டியானந்தா …..ச்சீச்சி வேண்டாம்.

      ஆக உங்களை தவிர மற்றவர்களெல்லாம் தீவிரமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் மட்டும் ஏன் பங்கு சந்தை சரிவுகளை பற்றி வீணாக கவலைப் பட்டு கொண்டிருக்க வேண்டும்?  நம்முடைய கவலையால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினையா அது?  வாங்க, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றி யோசிக்கலாம்.

       இப்போது முதலீட்டாளர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.  அந்த மூவருமே வரும் சந்தையில் என்ன செய்யலாம் என்பதற்கும் சில அடிப்படை திட்டங்களை பற்றி அடுத்தடுத்த பதிவில் பேசலாம்.  (அப்ப, இதயும் தொடர்ந்து நாங்க படிச்சு தான் ஆகணுமா என்று நீங்கள் கதறுவதால் எவ்வித பிரயோசனமில்லை, மனச தேத்திக்கிட்டு தொடர்ந்து படிங்க)

1.  தன் சேமிப்பு மற்றும் கடன் அனைத்தையும் பங்கு சந்தையில் முதலீடு செய்து கையில் கடனுடன் இருக்கும் முதலீட்டாளர்.

2.  நண்பர் கூறினாரே என்பதற்காக பங்கு சந்தையில் சமீபத்தில் காலடி எடுத்து வைத்து சிறிய இலாபங்கள் பெற்று, தற்போது சந்தையின் போக்கை பார்த்து திகிலடைந்து போயிருக்கும் முதலீட்டாளர்.  இன்னும் கொஞ்சம் பணம் கையில் வைத்திருப்பார்.

3.  நல்லவேளை, நாம் இறங்கவேயில்லை தப்பிச்சுட்டோம்டா சாமி என முழு பணத்தையும் கையில் வைத்துக் கொண்டு நிப்டி 500 வந்தால் கொஞ்சம் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்.

      இவ்வளவுதானா, இன்னும் வேறு வகை இருக்கிறார்களா?  இவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி வரும் பதிவுகளில் பேசலாம்.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

Spirited Away – திரை விமர்சனம் இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் V

3 Comments Add your own

  • 1. மஞ்சூர் ராசா  |  October 18, 2008 at 4:54 pm

    விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்.

  • 2. Basheer  |  October 18, 2008 at 7:14 pm

    இதனை தொடரலாம் என முடிவு செய்ததக்கு நன்றி

  • 3. V.SURESH, SALEM  |  October 19, 2008 at 2:14 pm

    Continue sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: