காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் – இரும்புகை மாயாவி I

October 17, 2008 at 3:41 pm 11 comments

      அன்று என்னுடைய பிறந்த நாள்.  நானும் என் அப்பாவும் கும்பகோணம் போய் எனக்கு துணி எடுத்துக் கொண்டு வரும்போது, ஒரு புத்தக கடையில் நின்றோம்.  கும்பகோணம் காசி தியேட்டர் அருகில் இருந்தது அந்த கடை.  அந்த கடையில் இராணி காமிக்ஸ் பழைய இதழ்கள் ஏதாவது இருக்கின்றதா என்று பார்த்த என்னிடம், புதுசா வந்துருக்கு பாருங்க என பெரிய காமிக்ஸ் புத்தகம் காட்டப்பட்டது.  அவ்வளவு பெரிய காமிக்ஸ் புத்தகத்தை நான் அன்று வரையில் பார்த்ததேயில்லை.  கிட்டதட்ட இருநுாறு பக்கங்களுக்கு மேல் இருந்தது.  விலை பத்து ரூபாய் என கடைக்காரர் சொன்னார்.  என் அப்பாவும் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, உடன் வாங்கிக் கொடுத்தார்.  அப்போது காமிக்ஸ்க்கு பத்து ரூபாய் என்பது பெரிய தொகைதான்.  நான் வாங்கிய அந்த புத்தகம் இலயன் காமிக்ஸின் லயன் சூப்பர் ஸ்பெக்ஷல். 

     தமிழில் வெளிவரும் காமிக்ஸ் புத்தகங்களில் அந்த புத்தகம் ஒரு Legend எனலாம்.  ஆறு கதைகள் என நினைக்கிறேன்.   அந்த சமயத்தில் அத்தனை கதைகளும் எனக்கு பிடிக்கவில்லை.  ஸ்பைடர் மற்றும் ஆர்ச்சி மற்றும் லக்கி லுக் கதைகள் மிகவும் பிடித்தன.   காமிக்ஸ் வேட்டையர்கள் மத்தியில் அந்த பத்து ரூபாய் புத்தகத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் ஆயிரம் ரூபாய் இருக்கும்.  அப்பொழுது அதன் அருமை தெரியாமல் தவற விட்டுவிட்டேன்.  பிறகு காமிக்ஸ் புத்தகங்களை தேடி அலையும் காலக்கட்டத்தில் என்னுடைய Wild Fantasy  என்னவென்றால்,  ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் நான் சென்று பார்க்கும்பொழுது இந்த இலயன் சூப்பர் ஸ்பெக்ஷல் முன் அட்டை முதல் பின் அட்டை வரை பிசிறியில்லாமல் எனக்கு கிடைப்பதாக கனவு காண்பதேயாகும்.

     அன்றைக்கு இலயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ்கள் எல்லா ஊர்களிலும் கிடைக்காது.  ஏதாவது ஊருக்கு செல்லும்போது கடைகளில் காணப்படும் புத்தகங்களை பார்த்து வாங்கி படித்ததுதான்.  பிறகு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்தபிறகு, நானே பழைய புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன்.

 முத்து காமிக்ஸ்

     முதலில் முல்லை தங்கராசன் என்ற ஆசிரியர் பெயரில் சிறிய  Digest  போல வந்து கொண்டிருந்தது.  பிறகு திரு. சௌந்திரபாண்டியன் என்பாரை ஆசிரியராக கொண்டு முத்து காமிக்ஸ் என்ற பெயரில் ரூ.1 என்ற விலையில் பட்டாசு நகரமான சிவகாசியிலிருந்து வெளிவர ஆரம்பித்தது.  தமிழில் தனியான சித்திரகதை புத்தகங்களின் முன்னோடி என்று அவரை சொல்லலாம்.  எத்தனை பேருக்கு அவரின் பெயர் தெரியும்?  தமிழில் புதுக்கவிதை, நாவல், சிறுகதைகள், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம், முன்பின் நவீனத்துவம், பின்முன் நவீனத்துவம்  போன்றவற்றில் யார் முன்னோடிகள் என்பதை அறிந்து வைத்திருக்கின்றோம்.  அவற்றிற்கு முன்னோடிகள் இன்னார் என பெருமையாக கூறிக்கொள்ளவும் சொல்கிறோம்.  சித்திரக்கதை என்ற இலக்கியத்தை மட்டும் வளர்க்கவே இல்லை.

        திரு சௌந்திரபாண்டியன் வெளியிட்ட கதைகள் அனைத்துமே வெளிநாட்டு சித்திரகதையின் தமிழாக்கம் தான் என்றபோதிலும், அவற்றில் வெளிநாட்டு சாயல் எதுவுமே இல்லாமல் மொழிபெயர்வு நம் மண்ணின் மணத்துடன் செய்திருப்பார்.   இன்றைக்கு வரை (17.10.2008) தமிழில் சொந்தமான சித்திரக்கதை இலக்கியம் என்று எதுவுமே இல்லை.  கையில் வரைந்த கோட்டோவியங்களுடன் சில சித்திரகதைகள் புத்தகங்கள் வந்தன.  பொன்னி காமிக்ஸ் போன்ற புத்தகங்களை முழுமையான காமிக்ஸ் என்ற வரிசையில் சேர்க்க முடியாது.  வாண்டுமாமா அவர்கள் படைப்புகளில் நிறைய வெகு ஜன பத்திரிக்கையில் தொடர்களாக வெளிவந்தவை.  பின்னர் பார்வதி காமிக்ஸ் என ஆரம்பித்து, சில படைப்புகளை வெளியிட்டார்.  சில புதிய படைப்புகளையும் வெளியிட்டார்.  பொதுமான விற்பனை இல்லாமல் விரைவிலேயே மூட நேர்ந்தது.  இந்தியாவில் தற்போது Virgin Comics என ஆங்கிலத்தில் வெளிவருகிறது.  இந்தியாவிற்கென சொந்தமாக வெளிவரும் தற்போதைய சித்திரக்கதை புத்தகம் என்று இதை சொல்லாம்.   இதனை பற்றி பின்னர் பேசலாம்.

      தமிழில் சொந்தமான சித்திரக்கதை இன்னமும் இல்லாதது ஒரு குறையே.  சித்திரகதையும் ஒரு இலக்கியமே.  காமிக்ஸ் புத்தகங்களை படித்திருப்பார்கள்.  அந்த புத்தகங்களை படித்தோம் என சொல்லிக் கொள்ள இன்னும் நிறைய பேர் வெட்கபடுவதை பார்த்திருக்கிறேன்.    இன்னும் சில பேர் பொம்மை படப்புத்தகங்கள் என இதனை அழைக்கின்றார்கள்.  இது எப்படி இருக்கிறதென்றால், தமிழ் பொதுமறையான திருக்குறளை “ரெண்டு ரெண்டு வரியிலே இருக்குமே” என்று சொல்வது போல. 

      ஆரம்பகால புத்தகங்களில் கதாநாயகன் யாரென்ன எனக்கு சரியாக நினைவில்லை.  மந்திரவாதி மாண்ட்ரெக் கதைகளைதான் முதலில் படித்திருக்கின்றேன்.  நடுவில் சில இதழ்கள் இரு வண்ணங்களில் வெளியாகின. பிறகு ரிப் கெர்பி, காரிகன், மூகமுடி வேதாளர் என வந்துக் கொண்டிருந்தன. ரிப் கெர்பி கதைகள் துப்பறியும் கதைகள்.  மனுஷன் ரொம்ப யோசித்து தான் மர்மங்களை துப்பு துலக்குவார்.  அதற்கும் இரசிகர்கள் இருந்தார்கள்.  காரிகன் கொஞ்சம் ஆக்க்ஷன் டைப்.   பிறகு இலண்டனில் வெளியாகிய “Fleetway Publications” லிருந்து அதிரடியான கதாநாயகனை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்தார்கள்.

      அந்த கதாநாயகனின் பெயர்  லுாயிஸ் கிராண்டேல்.  அந்த பெயரை சொன்னால் நிறைய பேருக்கு தெரியாது.  இரும்புகை மாயாவி என்ற இன்னொரு பெயரை சொன்னால் தான் தெரியும்.  முதல் கதையிலிருந்து எல்லோர் மனதிலும் அதிரடியாக இடம் பிடித்தார்.

                                                     

                                                                   ( ……….இன்னும் பேசலாம்………….)

Advertisements

Entry filed under: Hunter's Mind.

17-10-2008 Spirited Away – திரை விமர்சனம்

11 Comments Add your own

 • 1. kailash  |  October 18, 2008 at 9:05 pm

  nalla katturai.
  nanbarey.tamil palaya comics pdf site ethuvum irunyhal sollunga.
  kailash,hyderabad

 • 2. kumar  |  October 18, 2008 at 9:31 pm

  லாரன்ஸ் & டேவிட் டை விட்டு விட்டிர்களே

 • 3. King Viswa  |  October 18, 2008 at 10:04 pm

  Share Hunter,

  //இன்னும் சில பேர் பொம்மை படப்புத்தகங்கள் என இதனை அழைக்கின்றார்கள். இது எப்படி இருக்கிறதென்றால், தமிழ் பொதுமறையான திருக்குறளை ”ரெண்டு ரெண்டு வரியிலே இருக்குமே” என்று சொல்வது போல. //

  மிக நன்று.

 • 4. King Viswa  |  October 18, 2008 at 10:10 pm

  Share Hunter,

  //ஆரம்பகால புத்தகங்களில் கதாநாயகன் யாரென்ன எனக்கு சரியாக நினைவில்லை.//

  அந்த இரும்புக் கை மாயாவி தான் முத்து காமிக்ஸ்’இன் முதல் கதா நாயகன்.

  King Viswa.

  http://www.tamilcomicsulagam.blogspot.com

 • 5. Rafiq  |  October 20, 2008 at 12:55 pm

  அருமையான் முன்னோட்டம், எப்போது இரும்பு கை மாயாவி பற்றி இன்னும் சொல்ல்வீர்கள் என்று என்ன வைத்து விட்டீர்கள். நன்றி.

  ஒரு ஆலோசனை, தங்கள் தமிழ் காமிக்ஸ் பதிவுகளை எங்கள் http://tamilcomic.blogspot.com என்ற கூட்டு பதிவகத்தில் பதிந்தால் எனயுரும் படித்து பார்க்க உதவியாக இருக்கும்… கூடவே அங்கு ஒரு பதிவு போட புண்ணியம் சேரும் :).

  By the way, உங்கள் வலைபக்கத்தை பற்றி பரிந்துரைததற்கு விஸ்வா வுக்கு ஒரு நன்றி.

  ரபிக் ராஜா
  http://comicology.blogspot.com

 • 6. sharehunter  |  October 20, 2008 at 2:49 pm

  Rafiq,

  திரு ரவி ஏற்கனவே பதிவுகளை தமிழ் காமிக்ஸ் தளத்தில் போடலாமா என்று அனுமதி கேட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் சம்மதித்திருக்கிறேன்.

  நம்ம பசங்களுக்கு எதை இழந்திருக்கிறோம் என்றே தெரியவில்லை. நம்மை விட்டு போன சித்திர கதைகளை மீண்டும் கொண்டு வந்து விடலாம். எவ்வளவோ செய்றோம் இதை செய்ய மாட்டோமா?

  .

 • 7. Robin  |  October 20, 2008 at 3:47 pm

  இனிமையான சிறுவயது நினைவுகளை அசைபோட்டு பார்க்க வைத்துவிட்டீர்கள். நன்றி.

 • 8. magesh  |  October 20, 2008 at 4:26 pm

  இரும்புக்கை மாயாவியின் ஒரிஜினல் english version பத்தி எதாவது தகவல் தந்தால் புண்ணியமா போகும். நான் அவரது நெடுநாள் ரசிகன்.
  – மகேஷ்

 • 9. sharehunter  |  October 20, 2008 at 4:57 pm

  மகேக்ஷ்,

  Please check the following Tamil Comics Sites

  1. http://tamilcomic.blogspot.com

  2. http://tamilcomicsulagam.blogspot.com

  3. http://comicology.blogspot.com

  you’ll know more than u want.

 • 10. sathish  |  October 22, 2008 at 8:49 am

  magesh,

  visit

  http://muthufanblog.blogspot.com/

  for details about all muthu heroes.

 • 11. M.Haja Ismail.  |  June 23, 2013 at 10:52 pm

  இராணி காமிக்ஸ் பழைய இதழ்கள் ஏதாவது இருக்கின்றதா என்று பார்த்த என்னிடம், புதுசா வந்துருக்கு பாருங்க என பெரிய காமிக்ஸ் புத்தகம் காட்டப்பட்டது. அவ்வளவு பெரிய காமிக்ஸ் புத்தகத்தை நான் அன்று வரையில் பார்த்ததேயில்லை. கிட்டதட்ட இருநுாறு பக்கங்களுக்கு மேல் இருந்தது. விலை பத்து ரூபாய் என கடைக்காரர் சொன்னார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: