இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் IV

October 15, 2008 at 9:42 pm 9 comments

      அமெரிக்கர்கள் அவர்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.  இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் தரப்பிலும் இதில் விதிவிலக்குகள் உண்டு என்றாலும், நம் தரப்பில் எண்ணிக்கை மிக மிக அதிகம்.  அவர்களின் ஆர்வத்திற்கேற்ப அவர்கள் வசிக்கும் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில்  கூட உடற்பயிற்சி கூடங்கள், பூங்காவில் ஒடுபவர்களுக்கு என பிரேத்யேக பாதைகள், நீச்சல் குளங்கள் என வடிவமைக்க பட்டிருக்கும்.  உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும்போதே மாணவர்களுக்கு உடல் நலம் பேனுதல் பற்றி ஆர்வத்தை வளர்க்கும் வண்ணம் பயிற்சிகள் கொடுக்கப்படும்.  உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லுதல் என்பது நடைமுறை வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே அவர்களுக்கு இருக்கின்றது.  உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாத பட்சத்தில் வாரக் கடைசியில் ஏதேனும் உடற்பயிற்சிகள் செய்ய நேரம் ஒதுக்கிக் கொள்வார்கள்.  கிராமங்களில் கூட கிராம நிர்வாகத்தால் ஒரு உடற்பயிற்சி கூடம் கட்டிக் கொடுத்திருப்பார்கள்.

     கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன் இங்கே உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்களை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள்.  அங்கே செல்பவர்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்காது.   அங்கு செல்பவர்களும் இந்த அபிப்பிராயத்தை மாற்றாமல் வைப்பதற்கு படாதபாடு பட்டிருக்கிறார்கள்.  மேலும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் எல்லோரும் பாடி பில்டிங் செய்வதற்காக செல்கின்றார்கள் என்ற கருத்தும் இருந்தது.  இன்றும் இருப்பதாகவே நினைக்கிறேன்.  ஜீம் உள்ளே போனோ வெளியே வரும்போது அர்னால்ட் மாதிரி இருக்கனும் என்ற நினைப்பு நிறைய பேருக்கு இருக்கும். பாடி பில்டிங் என்பது ஒரு தனி கலை.  அதற்கு தகுந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதல்படி தீவிர பயிற்சிகள் தேவை.  அது தெரியாமல் அங்கே ஒட்டப்பட்டிருக்கும் வெளிநாட்டு பாடி பில்டர்களின் புகைப்படங்களை பார்த்ததும், தானும் கட்டழகு சிங்கமாக மாற வேண்டுமென்ற எண்ணத்துடன் உடற்பயிற்சிகளை ஒரு தீவிர மனப்பான்மையுடன் செய்ய ஆரம்பிப்பார்கள்.  அதன் முடிவு?  ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்கு மேல் பயிற்சிகள் தொடராது. 

    
     நம் உடலை கட்டுக்கோப்பாக ( Fitness என்ற பொருள்பட சொல்கிறேன்.  தமிழில் இது தான் சரியான வார்த்தையா என்பதில் சந்தேகம் இருப்பதால்) வைத்துக் கொள்ள சில எளிய பயிற்சிகளே போதும்.  சிக்ஸ் பேக் போன்ற அயிட்டங்கள் வேண்டுமானால்தான் கடின பயிற்சிகளுக்கு போக வேண்டும்.  அவ்வாறு செல்வதும் தவறில்லை.  சிக்ஸ் பேக் உங்களுக்கு இருப்பதால் வரும் தன்னம்பிக்கைக்கு நாம் கொடுக்கும் விலை என்றே வைத்துக் கொள்ளலாம். 

     உடற்பயிற்சி செய்யாமல் இருக்க நம்மாள்கள் சொல்லும் நியாயமான காரணங்கள் :

“கல்யாணத்துக்கு முன்னே சும்மா இரண்டு பக்கமும் ஏகப்பட்டது வெயிட் வைச்சு துாக்குவேன்.  அப்புறம் அப்டியே விட்டு போச்சு. சார்.”

“எங்க ஆபிசுலேயே வேலை அதிகமா இருக்கு.  வீட்டுக்கு வந்தா அப்டி, இப்டின்னு காலம் ஒடிடுது. எங்க நேரம் இருக்கு, சார்”

“சார்,  நீங்க சொல்றது நுாத்துக்கு நுாறு சரி.  நாளையிலிருந்து நாம ஆரம்பிச்சுடலாம்.  என்ன சொல்றீங்க, சார்”

“எனக்கு ஆக்ஸீடென்ட் நடந்ததிலேயிருந்து நான் அந்த பக்கம் போறதில்லை.  எப்பன்ன கேக்குறீங்க. அது நடந்து ஒரு பத்து வருசம் இருக்கும், சார்”

“ஜீம்லேயே இருப்போம். ஆறு மணி நேரம் ஒரு நாளைக்கு. சார். அது ஒரு காலம்.”

“குழந்தை, குட்டின்னு இருக்கு. எப்டி சார்”
      இது போன்ற நிலைகள் மாற வேண்டுமென்றால், பள்ளிகளிலேயே இது பற்றிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.  சென்னை, மதுரை, கோயம்புத்துார் போன்ற முக்கிய பெரிய நகரங்களில் இருக்கும் பெரிய தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் கூட உடற்பயிற்சி கூடங்கள் இருக்கும் பள்ளிகள் விரல் விட்டு எண்ணக் கூடியவையே.  விளையாட்டு மைதானங்கள் இருக்கும். ஆனால் உடற்பயிற்சி கூடங்கள் இருக்காது.  இது தொடர்பாக ஒரு தனியார் பள்ளி முதல்வரை கேட்டபோது, “ஆரம்பிக்கலாம்.  பையன் வெயிட்ட கால்ல போட்டுகிட்டான்னா யார் பதில் சொல்றது” என கேள்வி கேட்டார்.   பெற்றோர்களின் கேள்விக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது என்றும் வருத்தப்பட்டார்.

       இரு வருடங்களில் படிப்பை முடித்து விட்டு கல்லுாரி என்னும் பெரிய வாழ்க்கைக்கு வருகின்றவனுக்கு அந்தளவுக்கு கூட பொறுப்பில்லையென்றால் அவனை நம்பி வேறு எந்த பொறுப்பினைதான் நாம் ஒப்படைக்க முடியும்?  ஆனால், ஒரு தகுந்த பயிற்சியாளரை நியமித்து இதில் ஈடுபாடு காட்ட செய்தால் நமக்கு கிடைக்கும் அடுத்த தலைமுறை மிக ஆரோக்கியமான தலைமுறையாக கிடைக்கும் அல்லவா? வீட்டுக்கு ஒரு கலர் டி.வி கொடுக்கும்போது, ஊருக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் கட்டிக் கொடுக்கலாமே!

Advertisements

Entry filed under: Hunter's Mind.

14-10-2008 & 15.10.2008 Post Market 16-10-2008

9 Comments Add your own

 • 1. அட, பேரா முக்கியம்?  |  October 15, 2008 at 11:07 pm

  நீங்க கோவிச்சுக்கலைனா ஒன்னு சொல்லவா?

  உங்கள் ‘பங்கு வர்த்தகம் தவிர்த்த’ பதிவுகள் ஏதோ ‘டென்டுல்கர் டென்னிஸ் விளையாடின’ மாதிரி இருக்கு. 🙂

 • 2. sharehunter  |  October 16, 2008 at 6:23 am

  ஏகப்பட்ட பேர் படிக்கிறது அதை தாங்க, டெண்டுல்கர் இப்ப கிரிக்கெட்டே ஒழுங்கா விளையாடுறது இல்லை, டென்னிஸ் நல்ல விளையாடுறாரான்னு நீங்க தான் சொல்லனும்,

 • 3. Jayalakshmi  |  October 16, 2008 at 9:12 am

  ஆண்களுக்கே இந்த நிலமை என்றால் பெண்கள் இன்னும் பல காலம் பொறுக்க ! (வழக்கம் போல).

  நல்ல பதிவு.

 • 4. Karthikeyan G  |  October 16, 2008 at 12:55 pm

  //வீட்டுக்கு ஒரு கலர் டி.வி கொடுக்கும்போது, ஊருக்கு ஒரு உடற்பயிற்சி கூடம் கட்டிக் கொடுக்கலாமே!//

  டெண்டுல்கர் டென்னிசில் சிக்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறாரே
  😦

 • 5. Chandran  |  October 16, 2008 at 3:26 pm

  நல்ல பதிவு.

 • 6. mappla  |  October 16, 2008 at 4:09 pm

  Yep. Good one. I have a walking habbit every morning. One hour.
  When I was abroad no problem at all. But here it very diffucult to walk on the roads ( Because there is no seperate platform for pede.) Many cars,buses motorcycles. Dangerous.
  I found only 2 to 3 guys ( that to old mans; may be due to doctors advise ) are walking on the road…. No body else.

  Its really poor habbit we have.

 • 7. தஞ்சாவூரான்  |  October 16, 2008 at 9:13 pm

  இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டக் காரணம் என நான் நினைப்பவை:

  1. அமெரிக்கர்களின் உணவுப் பழக்கம். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு மரபணு மாற்றப்பட்ட கொழுப்பு மற்றும் சக்தி அதிகமுள்ள உணவு. அமெரிக்கர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒபீஸ் எனப்படும் குண்டானவர்கள். இந்தியர்கள் அந்த மாதிரி இல்லை(அதை முறியடிக்கும் வன்ணம் குப்பை உணவுகள் இந்தியாவிலும் பெருகி வருகின்றன).

  2. ஒரு சராசரி அமெரிக்கனுக்கு, தன் குடும்பத்தை விட தன் சொந்த உடல் ஆரோக்கியம் முக்கியம். வீட்டில் என்ன நடந்தாலும், ஃபிட்னெஸ் சென்டெர் செல்ல தினமும் நேரம் ஒதுக்கும் ஜீவன்கள். நமது இந்தியர்கள் அது மாதிரி அல்லர். குடும்பம்தான் அவர்களுக்கு முக்கியம்.

  3. அமெரிக்கர்கள் எப்போது வேண்டுமானாலும், உறவை முறித்துக் கொண்டு சாதாரணமாக அடுத்த துணையைத் தேடி செல்வார்கள். இதற்கு, உடம்பை நன்றாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். இந்தியர்கள் அது மாதிரி இல்லை. ஒரே திருமணம், ஒரே துணை என்ற கொள்கை உடையவர்கள் (இதை உடைக்கவும் கடுமையான முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது, பெரும்பான்மையான நகரங்களில்)

  4. பொதுவாக அமெரிக்கர்கள் உடம்பை நன்றாக வைத்துக் கொள்ள, பள்ளிகளிலிருந்தே வசதிகள் உள்ளன. நம்மூரில் அவ்வாறு இல்லை. எல்லாம், அரசாங்கமும், மக்கள் தொகையும்தான் காரணம்.

 • 8. sharehunter  |  October 16, 2008 at 9:29 pm

  அரிசி சோறு மற்றும் வத்தக் குழம்பு மட்டும் என்னவாம்? அதை சாப்பிடுபவர்கள் ஒரளவுக்காவது எளிய பயிற்சிகள் செய்ய வேண்டும் அல்லவா?

  அலுவலகம் விட்டால் வீடு என்ற மனப்பான்மை ஒரு கட்டத்தில் வெறுத்துவிடும் அல்லவா?

  உறவை முறிப்பதற்காகவா உடம்பை வளர்க்க வேண்டும்?

  Fourth Point, I agree with you. But we have to try, eh

 • 9. தெகா  |  October 18, 2008 at 6:01 pm

  ஒரே வார்த்தையில சொல்லணும்னா… நம்மோட “சோம்பேறித்தனம்.”

  மற்றபடி எல்லா உடல் உறுப்பு சீரான இயக்கத்திற்கும், மிதமான உடற் பயிற்சி ரொம்ப முக்கியம், அது வயக்காட்டு வேலையா இருந்தாலும் சரி, தினசரி வீட்டு வேலையா இருந்தாலும் சரி… ஏதோ ஒன்றை எல்லா உடல் பகுதிகளும் பெறுவது மாதிரி செய்வது லாங் ரன்னில் ரொம்ப நலம் பயக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 5 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 6 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 6 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 6 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: