இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் III

October 12, 2008 at 8:55 am 11 comments

      இந்த தொடர் சார்ந்து ஒரு ஈமெயில் ஒரு நண்பரிடமிருந்து கிடைக்கப் பெற்றேன்.  தான் பின்னுாட்டத்தில் அதை தெரிவித்தால் நாகரிகமாக இருக்காது என உங்களுக்கு ஈமெயிலில் அனுப்புகின்றேன் என சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.  மேலும் தனிப்பட்டது என சொல்லி விட்டதால், அதனை வெளியிடவில்லை.  மென்மையாக அவரின் கருத்துகளை தெரிவித்தமைக்காக அவருக்கு தற்சமயம் நன்றியை தெரிவித்துக் கொண்டு, அவர் தெரிவித்த கருத்துகளின் சாராம்சத்தை கீழே கொடுக்கிறேன்.

     1. உங்கள் கட்டுரை அமெரிக்கர்களை வெகுவாக உயர்த்தி பேசுகின்றது

     2. ஆசிய நாடுகளில் ஜப்பான், சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் தங்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தையும் கொண்டு, முன்னேறி இருக்கின்றன.  அவைகளுடன் ஒப்பிடலாமே! எதற்காக அமெரிக்கா?
       இத்தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியது போல, இக்கட்டுரை அமெரிக்கர்களின் புகழை பாடுவது அல்ல.  அவர்களிடமிருந்து நாமும், நம்மிடமிருந்து அவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய சில பண்புகளை பற்றி பேசுவதேயாகும்.

       ஒரு தொலை துார இந்திய கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி பொங்கல் கொண்டாடும் போது அவர் வீட்டில் நவீன விவசாய எந்திரங்கள் இருத்தல் வேண்டும்.  அவருடைய பிள்ளைகள் ஐ-பாட், மடிக் கணினிகளுடன் கலந்துக் கொள்ள வேண்டும்.  தடையில்லா மின்சாரம், அதி வேக இணையம், அனைத்து அடிப்படை மின்னனு உபகரணங்கள் போன்றவைகளுடன் அவர் வேட்டிக் கட்டிக் கொண்டு பொங்கல் கொண்டாட வேண்டும்.    இவ்வாறே இந்தியா அமெரிக்காவுடன் போட்டிப் போட்டு ஆக வேண்டும் என விரும்புகிறேன்.

      ஆசிய நாடுகளுடன் ஒப்பிடாமல் ஏன் அமெரிக்காவுடன் ஒப்பிட்டேன் என்றால் உலக அளவில் சக்தி வாய்ந்த நாடு என்று சொன்னால் அமெரிக்கா தான் நினைவுக்கு வருகிறது.  உலகின் மிக பெரிய சந்தை பொருளாதாரத்தை கொண்ட நாடு. அது மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கும், நம் இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. 
       இரண்டு நாடுகளும் பிரிட்டனோடு போராடி சுதந்திரம் பெற்றவை.   சுதந்திரம் பெற போராடிய வழிமுறைகள் வேறாக இருந்தாலும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றவை.  ஆங்கிலேயரை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றது அமெரிக்கா. நம் நாடு அகிம்சை வழியை பின்பற்றி சுதந்திரம் பெற்றது.  இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றதற்கு அந்நாடுகளின் எதிர்ப்பு மட்டுமல்லாமல் வேறு பல வெளி காரணங்களும் இருந்தன.   நமது நாட்டிலும் சில அறிவாளிகள் நாமும் அமெரிக்கர்களை போல போரிட்டு சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்  போன்ற கருத்தினை சொல்லுவார்கள்.  அவ்வாறு சண்டையிட்டு சுதந்திரம் பெற்ற அமெரிக்காவில் வடக்குக்கும், தெற்குக்கும் நடந்த சிவில் போரால் (சிவில் போர் வந்ததற்கு காரணங்கள் வேறு என்றாலும்)  ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.  நமது நாட்டிலோ வடக்கும், தெற்கும் முறைத்துக் கொண்டதே தவிர இதுவரை வேறு எந்த வித உரசலும் இல்லாமல் இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.
        பலவிதமான கலாச்சாரங்கள், மொழிகளை கூடிய மக்களை உள்ளடக்கியது இவ்விரு தேசங்களும்.  நம் நாட்டில் மொழி சார்ந்தே அதிக பிரிவினைகள் இருக்கின்றன.  ஆங்கிலமே ஏறக்குறைய பொது மொழியாக இவ்விரு நாடுகளிலும் உள்ளது.  இந்தியை எங்கே வளரவிட்டோம் நாம்?  ஆங்கிலம் விதவிதமான உச்சரிப்புகளில் இவ்விரு நாடுகளிலும் பேசப்படுகின்றது. 

     இரண்டுமே உலகின் மிகப் பெரிய மக்களாட்சி முறையை கொண்டுள்ள நாடுகள்.  மக்கள் தொகையிலும் ஏறக்குறைய பரப்பளவிற்கேற்ற மக்கள் தொகையை கொண்ட நாடுகள்.

      அமெரிக்காவை பற்றி இன்னும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சென்னை பல்கலைக் கழகம் வரலாறு முதுநிலையியல் படிப்பிற்காக “அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாறு” என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.  தயவு செய்து அதை படிக்காமல் திரு பா. இராகவன் எழுதிய “டாலர் தேசம்” என்ற புத்தகத்தை படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  அமெரிக்காவை பற்றி அடிப்படையாக தெரிந்து கொள்வதற்கு அந்த புத்தகம் மிகச் சிறப்பான ஒன்று.

    விளக்கமே பெரிய அளவில் அமைந்து விட்டதால், அடுத்த பகுதியில் வாழ்க்கை முறைகளை பற்றி பார்க்கலாம்.

    அப்புறம், சொல்ல மறந்து விட்டேனே!  மற்றொரு முக்கிய ஒற்றுமை : அங்கே திரு ஜார்ஜ் புஷ், இங்கே டாக்டர் மன்மோகன் சிங்.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

இனி என்ன செய்யலாம் II 13-10-2008

11 Comments Add your own

 • 1. Jayalakshmi  |  October 12, 2008 at 12:21 pm

  அருமை! ஒரு நல்ல பதிவைப் படித்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நன்றி.

 • 2. வாசகன்  |  October 12, 2008 at 8:10 pm

  //திரு பா. இராகவன் எழுதிய “டாலர் தேசம்” என்ற புத்தகத்தை படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்காவை பற்றி அடிப்படையாக தெரிந்து கொள்வதற்கு அந்த புத்தகம் மிகச் சிறப்பான ஒன்று.

  நிஜமாவா?!
  என்னைப் பொருத்தவரை அது அவ்வளவு நல்ல நூலல்ல.
  எடுத்துக்காட்டாக, உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய ‘Great Depression’ பற்றிய பகுதியைப் படித்துப் பாருங்கள். மிக மேலோட்டமாக எழுதியிருப்பார்.

  என் தனிப்பட்ட கருத்து: I am not impressed with that Rs.300+ book.

 • 3. pedharayudu  |  October 12, 2008 at 8:32 pm

  To know more interesting connection between India and US, one need to know the history of East India Company. The “company” is a publicly listed company in London which brought Tea in India and exported to its colonies in America. The US freedom movement culminated in destroying the ships (owned by East India Company) with loads of tea anchored in Boston harbour, which is known as the Boston Tea Party.

 • 4. sharehunter  |  October 12, 2008 at 8:48 pm

  நன்றி, நண்பர்களே,

  ஒரு நுாலை படித்து மட்டுமே ஒரு நாட்டை முழுவதும் தெரிந்து கொள்ள முடியாது. அடிப்படையாக தெரிந்து கொள்ள அவரின் புத்தகம் உதவும் என பொருள்பட எழுதினேன். Great Depression பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளன. Jumped out of the Window போன்ற புதிய சொற்றொடர்கள் வந்த காலகட்டம். உங்களுக்கு அவர் புத்தகம் பிடிக்காதது உங்களின் விருப்பம், நண்பரே! அமெரிக்காவை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை அப்புத்தகம் கொடுக்கும் என்றே நான் நம்புகிறேன்.

  வெள்ளையர்-சிவப்பிந்தியர் மோதல்கள், பாஸ்டன் டீ பார்ட்டி, அடிமை சங்கிலி போன்று நிறைய சுவாரஸ்யமான பகுதிகள் அமெரிக்க வரலாற்றில் இருக்கின்றன. அனைத்தையும் ஒரே புத்தகத்தில் எழுத முடியுமா, நண்பரே! நீங்கள் அந்த புத்தகம் பிடிக்கவில்லையென்றால், அதற்கு முன் அமெரிக்காவை பற்றி நிறைய படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

  நிறைய ஒற்றுமைகள் உள்ளன, நண்பரே! மாபியா பிடியில் காவல் துறை என்பது போன்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட மக்களை கொண்ட இரு நாடுகள். ஒரு நாடு மட்டும்எவ்வாறு பொருளாதார ரீதியில் முன்னேறியிருக்கிறது என்பதை கண்டறியும் முயற்சியே இக்கட்டுரை தொடர்.

 • 5. Robin  |  October 13, 2008 at 8:32 am

  //இந்தியை எங்கே வளரவிட்டோம் நாம்? // இந்தியை வளரவிடாமல் இருந்ததால்தான் ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் வளர்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம் ஆகிவிட்டதோ என்னவோ?

 • 6. karthikeyan g  |  October 13, 2008 at 3:59 pm

  Hello Sir..

  There is a an unique factor for India, which is caste system. The Education, wealth distribution and the business oppurtunity are based on the caste in our country which is UNCOMPARABLE with any other countries.
  the effect of caste on our economy must be huge.. please also xplain how this affected/ affecting / will affect our economy?

  Thanx, Karthi G

 • 7. sharehunter  |  October 13, 2008 at 8:55 pm

  கார்த்தி

  பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது போன்று மக்களிடயே வித்தியாச்ம் பார்ப்பது உண்டு, ஜாதி என்று அங்கே இந்த வித்தியாசங்கள் அழைக்கப்படுவது இல்லை, அவ்வளவுதான், ஆனால் நாட்டு முன்னேற்றம் என்று வரும்போது இந்த வித்தியாசங்களை யாரும் பெரிது படுத்துவதில்லை, ஒபாமா மற்றும் மெக்கெயின் தேர்தலிலேயே நீங்கள் இதனை பார்க்கலாம்,

 • 8. அமர பாரதி  |  October 13, 2008 at 10:45 pm

  அமெரிக்காவை பற்றி இன்னும் நிறைய விரிவாக எழுதுங்கள். சரியான புரிதல்களுடன் நன்கு அனலைச் செய்து எழுதுகிறீர்கள். என்னவென்றே புரியாமல் அமெரிக்காவை வெறுப்பவர்கள் இங்கே அதிகம். அவர்களிடம் உள்ள நல்லதை பின்பற்ற நம்மை எதுவும் தடுக்கக்கூடாது. ஏன் அமெரிக்காவை காப்பி அடிக்க வேண்டும் என்று கேட்பவர்களிடம் முதலில் அமெரிக்கா அளவுக்கு உயரும் வரை அவர்களை காப்பி அடிப்போம். பிறகு சொந்த அறிவை உபயோகப்படுத்துவோம் என்று சொல்லுவேன்.

  இ-மெயில் காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். நீங்கள் ஜப்பானை பற்று எழுதியிருந்தால் அவர்கள் ஏன் ஸ்விட்சர்லான்டைப் பற்றி எழுதவில்லை என்று கேட்பார்கள்.

  //ஒரு தொலை துார இந்திய கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி பொங்கல் கொண்டாடும் போது அவர் வீட்டில் நவீன விவசாய எந்திரங்கள் இருத்தல் வேண்டும். அவருடைய பிள்ளைகள் ஐ-பாட், மடிக் கணினிகளுடன் கலந்துக் கொள்ள வேண்டும். தடையில்லா மின்சாரம், அதி வேக இணையம், அனைத்து அடிப்படை மின்னனு உபகரணங்கள் போன்றவைகளுடன் அவர் வேட்டிக் கட்டிக் கொண்டு பொங்கல் கொண்டாட வேண்டும். இவ்வாறே இந்தியா அமெரிக்காவுடன் போட்டிப் போட்டு ஆக வேண்டும் என விரும்புகிறேன்.
  // அருமை

 • 9. Chandran  |  October 16, 2008 at 2:50 pm

  அமர பாரதியின் கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்.

 • 10. தஞ்சாவூரான்  |  October 16, 2008 at 9:21 pm

  இந்தியாவுக்கென்று உள்ள தனித்தன்மையை வைத்து முன்னேறாமல், அமெரிக்கா மாதிரி குமிழி தேசத்தை எடுத்துக்காட்டாக கொண்டு இந்தியா முன்னேறுவது நீண்டகால வளர்ச்சிக்கு நல்லதல்ல. இப்போதே, அமெரிக்காவின் தவறுகள் இந்தியாவில் எதிரொலிக்கின்றன. கண்டிப்பாக, அமெரிக்காவிடமும், அமெரிக்கர்களிடமும், நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை சில இருக்கின்றன. எனக்குத் தெரிந்து, இரு நாடுகளும் இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்தன என்பதைத் தவிர்த்து, வேறு ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. புஷ், சிங் போன்ற இரு கையாலாகாத தலைவர்கள் இருப்பது, இன்னொரு ஒற்றுமை!

  டாலர் தேசம், அமெரிக்காவைப் பற்றி ரொம்ப ஆழமாக தெரிவிக்கும் புத்தகமல்ல. ஆனால், அமெரிக்கா ஃபார் டம்மீஸ் என்பது வரை நல்ல புத்தகமே!

 • 11. sharehunter  |  October 16, 2008 at 9:43 pm

  //கண்டிப்பாக, அமெரிக்காவிடமும், அமெரிக்கர்களிடமும், நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை சில இருக்கின்றன. //

  அதைத்தானே அண்ணே நான் எழுதிகிட்டு இருக்கேன்

  //டாலர் தேசம், அமெரிக்காவைப் பற்றி ரொம்ப ஆழமாக தெரிவிக்கும் புத்தகமல்ல.//

  ஒரு புத்தகத்தை படித்துவிட்டு ஒரு நாட்டையே புரிஞ்சுக்க முடியுமாண்ணா அறிமுகத்திற்கு தமிழில் உள்ள நல்ல புத்தகம் என்றுதானே சொன்னேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: