பூந்தளிரும், இரத்னபாலாவும்

October 8, 2008 at 5:00 pm 28 comments

     பூந்தளிர், பாலமித்ரா, இரத்னபாலா,அம்புலிமாமா, கோகுலம் இவையெல்லாம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

     மேற்சொன்ன அனைத்தும்    1980-களில் வெளிவந்த சிறுவர் பத்திரிகைகள்.  அந்த காலக்கட்டத்தினை   சிறுவர் பத்திரிகைகளின் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். அதற்கு முன்போ அல்லது தற்பொழுதோ இந்த மாதிரி பத்திரிகைகள் வெளிவரவில்லை என்பது வருத்தற்குரியது. இவைகளில் அம்புலிமாமா மட்டுமே தற்சமயம் வந்து கொண்டிருக்கிறது. கோகுலம் வருகின்றதா என தெரியவில்லை.   இந்த பத்திரிகைகளை நீங்கள் யாரேனும் சிறுவயதில் படித்திருக்கின்றீர்கள் என்றால், கண்டிப்பாக மறந்திருக்க மாட்டீர்கள். நம்முடைய சிறுவயதில் நம் மனதை ஆழமாக பாதித்த பத்திரிகைகள் அவை. அவற்றில் வரும் தொடர்கதைகளின் தலைப்புகள் கூட இன்னும் நினைவில் இருக்கின்றன. 

       வாண்டுமாமா என்ற பெயரும் இத்தகைய வட்டத்தில் மிகவும் பிரபலமான பெயர். இவர் நடத்திய பத்திரிக்கைதான் பூந்தளிர்.     அதில் அவர் எழுதிய தொடர்கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும். குள்ளன் ஜக்கு, கண்ணாடி மனிதன், புலி வளர்த்த பிள்ளை ( இந்த தொடர்கதை மட்டும் முன்று பாகங்களாக வந்தது, கடைசி பாகம் மட்டும் சித்திர கதையாக வந்தது. ஒரு பதிப்பகம் முலம் புத்தகமாக வெளிவந்து வாங்கி மீண்டும் படித்ததாக நினைவு. என்னுடைய பேவரைட்டும் இதுவே. ஆனால் அந்த புத்தகத்தை தொலைத்து விட்டேன். எந்த பதிப்பகம் என நினைவில்லை. இந்த தொடர் வெளிவரும் போதெல்லாம் பூந்தளிர் மிகவும் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு கொண்டிருந்தது என நினைக்கிறேன். சரியான நேரத்தில் வெளிவராமல், தடுமாறி, கடைசியில் நின்றே விட்டது.)  இவற்றில் ஏதாவது தொடர்கதைகள் விடுபட்டிருந்தால் நினைவுபடுத்துங்கள். இது மட்டுமல்லாமல் அவர் பெரிய பத்திரிகைகளான குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்றவற்றில் எழுதிய முன்று மந்திரவாதிகள், ஓநாய் கோட்டை, சிறுத்தை சிறுவன், வீர விஜயன் பலே பாலு (என்னுடைய பேவரைட்) போன்ற சித்திர கதைகள் மிகவும் பிரபலமானவை. இச்சித்திர தொடர்கள் மீளவும் பார்வதி காமிக்ஸீல் தனித் தனி புத்தகங்களாக வெளிவந்தன.  

     வட இந்தியாவில் உள்ள பைகோ பப்ளிகேஷன் முலம் வெளிவந்த டிங்கிள் பத்திரிகையிலிருந்து காக்கை காளி, கபீஷ், சுப்பாண்டி போன்ற சித்திரத் தொடர்களை தமிழ்படுத்தியும் பூந்தளிர் வெளியிட்டு வந்தது. இது தவிர உங்களுக்கு தெரியுமா என்ற பகுதியில் ஒரு விலங்கினம் அல்லது பறவையினம் பற்றி மிக சுவையான தகவல்களை வெளியிட்டு வந்தது. இரண்டாம் பக்கத்தில் ஒரு ஆத்திசூடி வரியை சொல்லி, அதற்கு விரிவாக, சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் எழுதுவார்கள். நான் பூந்தளிரில் கடைசியாக படிப்பது அதுவே.  அது தவிர பல சித்திர கதைகளையும் வெளியிடுவார்கள். நான் விரும்பிய முதல் Super Hero தன் வாலை எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் ஆக்கும் கபிஷ் தான்.

    மற்றொரு பிரபலம் டாக்டர் பூவண்ணன். இவர் இரத்னபாலா மற்றும் கோகுலத்தில் தொடர்கதைகள் எழுதியவர். இவர் எழுதியவற்றில் குமரனும், குட்டியானையும், புதையல் வீடு போன்ற தொடர்கள் நினைவில் இருக்கின்றன. குமரனும், குட்டியானையும் என்ற தொடரில் குமரன் என்னும் மாணவனின் வகுப்பில் படிக்கும் அனைவரும் வளர்ப்பு பிராணிகள் வைத்திருப்பார்கள். இவனும் வளர்ப்பு பிராணி வளர்க்க ஏங்குவான். சூழ்நிலை காரணமாக அவனுக்கு ஒரு குட்டி யானையே வளர்ப்பு பிராணியாக அமையும். அதை வைத்து அவன் அடிக்கும் லுாட்டிகள் தான் கதை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புதையல் வீடு தொடர் கோகுலத்தில் வெளிவந்தது. மிகவும் விறுவிறுப்பான நடையுடன் இருக்கும். இது தவிர இன்னும் சில தொடர்கள் எழுதியதாக நினைவு. பெயர்கள் நினைவில்லை.  இரத்னபாலா பத்திரிகை பூந்தளிருக்கு முன்னதாகவே நின்று விட்டது. அனைத்து பக்கங்களும் வண்ணமயமாக இருக்கும் பத்திரிக்கை.

 
      கோகுலமானது கறுப்பு வெள்ளையில் வெளிவரும் என்றாலும், அதன் நடுவில் இரு வண்ணத்தில் 16-பக்கத்தில் சித்திர தொடர் வெளிவிடுவார்கள். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு புராண கதாபாத்திரங்கள் இடம் பெறும். இந்து புராண கதாநாயகர்களில் பெரும்பாலோரை இதிலிருந்து தான் நான் தெரிந்து கொண்டேன். தற்போது நினைவில் இருப்பது உதயணன்-வாசவதத்தை, கருடன் போன்ற சித்திர கதைகள் தான். மாணவ பருவத்தில் இவர்கள் என்ற தலைப்பில் பிரபலமானவர்களின் இளம் பிராய நினைவுகளை வெளிவிடுவார்கள்.

    அம்புலிமாமாவை பொறுத்த வரையில் சித்திர தொடர்கள் என ஏதும் வந்ததாக நினைவில்லை. விக்கிரமாதித்தன் தொடர், ஒரு சுற்றுலா ஸ்தலம் என தொடர்கள் வந்ததாக நினைவு.  அதில் வரும் மாயாஜால தொடர்கள் என் மனதை அவ்வளவாக மனதை கவரவில்லை. லேசில் முடியாது.  நிறைய கதாபாத்திரங்களுடன் பிங்கலன், ஜங்கமன் என வித்தியாச பெயர்களுடன் இருக்கும். சிறு வயதில் என்னுடைய எதிரிகளை பிங்கலன் என பெயரிட்டு அழைத்திருக்கிறேன். காரணம் இன்னும் தெரியவில்லை.  அதனை அவர்கள் கெட்ட வார்த்தை என கருதி என்னை உதைக்க வந்திருக்கின்றார்கள்.

     Kung Fu Panda என்ற திரைப்படத்தினை நேற்று பார்த்தேன். அது குறித்து விமர்சனம் எழுதலாம் என்று உட்கார்ந்து எழுதிய பிறகு பார்த்தால், படத்தின் கதைக்கே வராமல் என்னுடைய சிறு வயது நினைவுகளுக்கு சென்று விட்டது தெரிந்தது. அதன் விமர்சனத்தை தனி பதிவாக போடலாம் என்றிருக்கிறேன்.

     நான் படிக்கும்பொழுது தமிழில் சொந்த கட்டுரைகள் எழுதுவது முதல் தற்போது வலைப்பூ எழுதுவது வரை  இந்த பத்திரிகைகள் எனக்கு உதவியிருக்கின்றன.  இதை படிக்கும் உங்களில் யாரேனும் இந்த பத்திரிக்கைகளை படித்திருக்கின்றீர்களா?  ஒருவேளை படித்து மறந்து போயிருந்தாலும் உங்களின் எழுத்து நடைக்கு இந்த பத்திரிக்கைகளும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

      குழந்தைகள் பத்திரிகையிலிருந்து அடுத்தக்கட்டம் என்றால் அது காமிக்ஸ்கள் தான். தமிழில் வெளிவந்த காமிக்ஸ்கள் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்ளலாமா?

     கிட்டதட்ட 13 பின்னுாட்டங்களுக்கு பிறகு தீடீரென்று இன்னொரு சிறுவர் பத்திரிகையாசிரியர் நினைவிற்கு வருகிறார். அணில் அண்ணா. அணில் என்ற பத்திரிகையை நடத்தியவர். வீரப்பிரதாபன் என்ற கதாபாத்திரத்தை வைத்து மாயாஜால கதைகளெல்லாம் எழுதியவர். ஆனால் அவரின் பத்திரிகை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் சென்றதா என்று நினைவில்லை. உங்களில் யாரேனும் அவரை நினைவு வைத்திருக்கின்றீர்களா?

Advertisement

Entry filed under: Hunter's Mind.

08-10-2008 இனி என்ன செய்யலாம்?

28 Comments Add your own

 • 1. Sen  |  October 8, 2008 at 5:19 pm

  I agree with you…
  All the below are my favoutites in my school days:
  பூந்தளிர், பாலமித்ரா, இரத்னபாலா,அம்புலிமாமா, கோகுலம்.
  I still remember பூந்தளிர் & கோகுலம் 16-பக்கம் சித்திர தொடர் … It’s really great memory… Thanks for remembering it … Sen

 • 2. புருனோ  |  October 8, 2008 at 5:28 pm

  மலரும் நினைவுகளுக்கு நன்றி

  எனக்கு தெரிந்து அந்த காலத்தில் நீங்கள் சொன்ன பத்திரிகைகளுடன் போட்டி போட்ட மற்றொரு சிறுவர் இதழ் – வெள்ளி வரும் சிறுவர் மலர்

  அதிலும் பல முக மன்னன் ஜோ என்ற கதாபாத்திரம் அந்த காலம் மிகவும் பிரபலம்

  அதில் ஒரு தொடர் படக்கதை – உயிரைத்தேடி – ஞாபகம் இருக்கிறது

  அவர்களும் சளைக்காமல் அமர்சித்திர கதைகளில் இருந்து சுட்டார்கள். லால் பகதூர் சாஸ்திரி, அம்பேத்கார் பற்றி நான் தெரிந்து கொண்டது சிறுவர் மலரில் இருந்து தான்

  பூந்தளிர் நின்றது நமக்கு அடுத்த தலை முறைக்கு மிகப்பெரிய நஷ்டமே

  அதில் வந்த இதழுக்கு ஒரு உலோகம் பற்றிய கதை, இதழுக்கு ஒரு நகரம் பற்றிய கதை போன்றவை மிகுந்த பலன் உடையவை

  அதே போல் ஒவ்வொரு இதழிலும் ஒரு கண்டுபிடிப்பின் சரித்திரம் தரப்படும்

  ஹூம் .. இப்பொழுது பெருமூச்சு விடத்தான் முடிகிறது

 • 3. புருனோ  |  October 8, 2008 at 5:31 pm

  இரத்தினபாலா வில் வெளிவந்த ராக்கெட் ராஜகுமாரி தொடரும். வேற்று கிரக வாசிகளைப்பற்றிய ஒரு தொடர்படக்கதையும் ந்ன்றாக இருக்கும்

 • 4. Karthikeyan G  |  October 8, 2008 at 5:42 pm

  தற்போது அம்புலிமாமா, சிறுவர்மலர் போன்ற பத்திரிக்கையின் வேலையை POGO, jetix சேனல்கள் நன்றாக செய்கின்றன.
  நம்மிடம்தான் அவற்றை பார்த்து ரசிக்க/கற்றுக்கொள்ள/குதுகலிக்க ‘அறியாமை’ இல்லை.

 • 5. Yoganath  |  October 8, 2008 at 6:15 pm

  என்னுடைய சிறுவயதில் ராணி காமிக்ஸ், பாலமித்திர, அம்புலிமாமா சிறுவர் மலர் படிப்பேன்.
  ராணி காமிக்ஸில் வரும் மாயாவி, இரும்புகை மாயாவி பலமித்திரவில் வரும் விக்கிரமாதித்தன் வேதாளம்,கடைசி பக்கங்களில் வரும் பெரிய கதைகள், சிறுவர் மலரின் சித்திர கதைகள், மாயாஜல கதைகள் என் மனத்தை விட்டு என்றும் நீங்கதவை. இப்போது இது போன்ற கதைகள் சிறுவர் மலரில் வருவதில்லை ( அல்லது படிப்பதில்லை…)
  எனக்கு வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியது என் தந்தை கோகுலத்தின் மூலமாக…. (நன்றி)
  அவர்கள் கோடை சிறப்பு இதழில் புத்தகத்திர்க்கு ஒட்டும் labels கொடுப்பார்கள்.

  என் சிறு வயதை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..

  குறிப்பு: இது என் முதல் பின்னுட்டாம் (தவரிருந்தல் மன்னிக்கவும்)

 • 6. sharehunter  |  October 8, 2008 at 6:35 pm

  கார்த்தி,

  என்ன இது? இதில் வெளியிட்ட பின்னுாட்டம் சரியாக வந்து விட்டது. அடுத்த பின்னுாட்டம் மாடரேட் ஆகிவிட்டது? சத்தியமா சொல்றேன், எனக்கு எதுவுமே தெரியலைய்யா (சிவக்குமார் பாணியில் படிக்கவும்)

  புருனோ,

  ஆம், அந்த வேற்று கிரக சித்திர தொடரை மறந்து விட்டேன். புத்தகத்தை திருப்பி Vertical படிக்க வேண்டிய கதை அது.

  யோகானந்த்:

  பாலமித்ராவை மறந்துதான் விட்டேன். அம்புலிமாமாவுக்கு ஒரு படி குறைவுதான் அது. என்னுடைய விருப்பம் : பூந்தளிர், இரத்னபாலா, கோகுலம் மற்றும் சில.

  சிறுவர் மலரை பொறுத்த வரையில் முதல் இரு வருடங்கள் மட்டுமே நன்றாக இருந்தது. பலமுக மன்னன் ஜோ, ராம்போ, எக்ஸ்ரே கண் எடிசன் (சரியான நினைவு இல்லை) போன்ற ஒரு பக்க படத் தொடர்கள் அருமையாக இருக்கும்.

  பின்னுாட்டமிட்டதற்கு நன்றி, நண்பர்களே! இந்த சிறுவர் பத்திரிகைகள் 1980-க்கு முன்னரும் வெளிவரவில்லை. 1990-பிறகும் வெளிவரவில்லை. ஏனென்ற காரணங்கள் தெரியுமா?

 • 7. sharehunter  |  October 8, 2008 at 6:44 pm

  கார்த்தி,

  Jetix வரும் கார்ட்டுன் தொடர்களில் Gargoyles, Mr. Bean போன்றவை எனக்கு இன்னமும் பிடிக்கும்.

 • 8. புருனோ  |  October 8, 2008 at 6:46 pm

  //பின்னுாட்டமிட்டதற்கு நன்றி, நண்பர்களே! இந்த சிறுவர் பத்திரிகைகள் 1980-க்கு முன்னரும் வெளிவரவில்லை. 1990-பிறகும் வெளிவரவில்லை. ஏனென்ற காரணங்கள் தெரியுமா?//

  1980களிலும் 1990கலின் ஆரம்பத்திலும் அதை படிக்க ஆள் இருந்தனர்

  1980களில் தான் நடுத்தர வர்க்கம் என்பது அனைத்து ஊர்களிலும் வர ஆரம்பித்தது
  1990களில் சமூகத்தின் போக்கு மாறி விட்டது

 • 9. sharehunter  |  October 8, 2008 at 6:57 pm

  டாக்டர் புருனோ,

  தற்போதைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு என்கர்ட்டா வாங்கிக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இது போன்ற சிறுவர் பத்திரிக்கைகளை ஊக்குவிப்பதில்லை. தங்களுடைய பிள்ளைகள் தங்களை விட பெரிய படிப்பு படிக்க வைக்கவே ஆசைப்படுகின்றார்கள். அவர்களும் புரிந்து கொள்ளக் கூடிய பத்திரிக்கைகளை தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை.

  என் அப்பா மேற்கண்ட சிறுவர் பத்திரிகைகளை வாங்கிக் கொடுப்பததோடு நின்றுவிடாமல், அவரும் என்னோடு சேர்ந்து படிப்பார். தற்சமயம் சுட்டி விகடன் மட்டுமே வெளிவருகிறது. ஆனால் அதனை பூந்தளிரோடு ஒப்பிட மனம் இயலவில்லை.

  எனக்கும் டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. வணிகவியல் படித்தவர்களை மருத்துவ கல்லுாரியில் சேர்ப்பதில்லை என்ற “கொடுங்கோல்” விதியால் என்னால் டாக்டராக முடியவில்லை. 😦

 • 10. mappla  |  October 8, 2008 at 7:14 pm

  I was a big fan all the said books. Infact I had all the collections almost a Almerah full. ( Now its gone… My family members who don’t know the value of the books, sold it to old paper mart and it had gone to grocerry shop ).

  The Cartoon Network and other Cartoon channels took that job now. When I was 12,13 years old around 1985, I saw a Tom and Jerry Cartoon in one of the Richest People’s House TV ( about 30 minutes). It attracted me like anything. I didn’t have any chance to see it again. When I got job and settled my family ( I am able to buy own TV and VCD player – I bought all the 15 VCDs of Tom and Jerry and watch always. I satisfied in thirst.

  Now, when I am searching books for my daughter, I am not able to find much in Tamil. ( Can get in english though ).

 • 11. Yaathirigan  |  October 8, 2008 at 7:39 pm

  பூந்தளிர், பாலமித்ரா, இரத்னபாலா,அம்புலிமாமா,ராணி காமிக்ஸ் were my damn favourite books. every time the next edition comes, i’l be trying to be the first one to get that book and finish it at a single stretch itself.. and வாண்டுமாமா was my most favourite writer those days and even now i should say he’s one of the best writers for fantasy stories for kids..

  chumma 7 kadal 7 malai-nu easy-ya solitu pogaama.. avar kondu varum kadhapaathirangal , viduvikum pudhirgal, saabangal.. wow.. it was an amazing fantasy world.. its a great loss that his works aren’t available to this generation..

  any idea where’s he now and what’s he doing now ?

 • 12. Anonymous  |  October 8, 2008 at 7:57 pm

  வணக்கம் எனது 20 வயதுக்கு முன் உள்ளவற்றை நினைக்க வைத்ததற்கு மிகுந்த நன்றிகள் .
  எனக்கு படிக்கும் பழ்க்கம் உண்டானதற்கு
  காரணம் கோகுலம் பூந்தளிர்
  போன்றவைகள்தான்
  ஆனால் இன்று என் குழந்தை படிக்க அதை போல புத்தகங்கள் இல்லை
  அன்று வந்த சிறுவர் மலரில் இருந்து தான் நான் பல புராண கதைகள் தெரிந்து கொண்டேன்
  ஆனால் இபோது அதை போல எந்த பத்திரிக்கைகளும் நல்லவற்றை சொல்லி குடுக்க இல்லை
  அது ஒரு கனா காலம்
  நன்றி
  உங்களுக்கு

 • 13. sriram  |  October 8, 2008 at 7:58 pm

  முன்னால் உள்ள கமொன்ட் எனது தான்

 • 14. புருனோ  |  October 8, 2008 at 8:51 pm

  //any idea where’s he now and what’s he doing now ?//

  உடல் நலமில்லாமல் (பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக) கேள்விப்பட்டேன்

 • 15. sharehunter  |  October 8, 2008 at 9:52 pm

  திரு முர்த்தி அல்லது வாண்டுமாமா சில நாவல்களையும் எழுதியிருக்கிறார். அவரின் சுயசரிதையையும் படித்திருக்கின்றேன். கடைசி காலத்தில் நண்பர்களின் துரோககங்கள் என எழுதியிருந்தார்.

  நீங்கள் சொல்லிதான் அவர் இந்நிலையில் இருக்கிறார் என தெரிந்தது. அவர் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.

 • 16. vijay  |  October 9, 2008 at 10:19 am

  hi hunter..
  u left amar chitra kadai.. which was a bi-monthly issue which came along poondalir… mahabharatam was published in amar chitra kadai in such a enthustiatic manner..& also many famous stories too came in that..

 • 17. sharehunter  |  October 9, 2008 at 11:36 am

  vijay,

  amar chitra kadai’s are in comics category. I’ll write another one about tamil comics.

 • 18. இராசகோபாலன்  |  October 9, 2008 at 2:16 pm

  கன்னித்தீவில் தொடங்கி(தம்புமாமா பெட்டிக்கடையில்
  பள்ளிவிட்டு வந்து பெரியவர்கள் தந்தி படிக்கும்போது
  புத்தகமூட்டை முதுகில் அழுத்த அண்ணாந்து குனிந்து
  சிந்துபாத் கண்ட இனிய நினைவலை)குமுத முகமூடியின்
  சாகசத்தில் மதிமயங்கி ஆங்கிலம் அறிந்தபின் டிண்டினுடன் கைகோர்த்து பூந்தளிர் மற்றும் லையன் என் மகனுடனும் சேர்ந்து படித்து மகிழ்ந்த காலத்தைக்
  கிளறி காணாயின்பம் கண்டேன் நன்றி பல.

 • 19. King Viswa  |  October 18, 2008 at 10:45 pm

  //any idea where’s he now and what’s he doing now ?//

  உடல் நலமில்லாமல் (பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக) கேள்விப்பட்டேன்//

  பல வருடங்களுக்கு முன்பே அவர் இறைவனடி சேர்ந்தார்.

  //அதில் ஒரு தொடர் படக்கதை – உயிரைத்தேடி – ஞாபகம் இருக்கிறது//

  மிக விரைவில் (தீபாவளி’இல்) இருந்து இந்த கதை என்னுடைய http://www.tamilcomicsulagam.blogspot.com‘இல் தொடராக வர இருக்கிறது.

  //ஒரு ஆத்திசூடி வரியை சொல்லி, அதற்கு விரிவாக, சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் எழுதுவார்கள். நான் பூந்தளிரில் கடைசியாக படிப்பது அதுவே.//

  Me too.

  //கிட்டதட்ட 13 பின்னுாட்டங்களுக்கு பிறகு தீடீரென்று இன்னொரு சிறுவர் பத்திரிகையாசிரியர் நினைவிற்கு வருகிறார். அணில் அண்ணா. அணில் என்ற பத்திரிகையை நடத்தியவர். வீரப்பிரதாபன் என்ற கதாபாத்திரத்தை வைத்து மாயாஜால கதைகளெல்லாம் எழுதியவர். ஆனால் அவரின் பத்திரிகை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் சென்றதா என்று நினைவில்லை. உங்களில் யாரேனும் அவரை நினைவு வைத்திருக்கின்றீர்களா?//

  எனக்கு நினைவு உள்ளது ஐயா.

  என்னுடைய லேட்டஸ்ட் போஸ்ட்’இல் கூட அவரை பற்றி கூறி இருந்தேன்.

  அவருடைய அனில் அண்ணா’வில் காமிக்ஸ்’உம் வரும்.

  விக்ரம் தன் அதில் எல்லாம் ஹீரோ.

  மந்திர கதையில், ஒரு குள்ளன் சுரைக்காய் குடுவில்’இல் இருப்பன். நினைவு உள்ளதா?

  //இந்த சிறுவர் பத்திரிகைகள் 1980-க்கு முன்னரும் வெளிவரவில்லை. 1990-பிறகும் வெளிவரவில்லை. ஏனென்ற காரணங்கள் தெரியுமா?//

  1980களிலும் 1990கலின் ஆரம்பத்திலும் அதை படிக்க ஆள் இருந்தனர்

  1980களில் தான் நடுத்தர வர்க்கம் என்பது அனைத்து ஊர்களிலும் வர ஆரம்பித்தது//

  1980’க்கு முன்பே முத்து காமிக்ஸ் வார மலர் வந்ததே.

  அது தான் பூந்தளிர், அணில் அண்ணா போன்ற கதைகளுக்கு முன்னோடி.

  1990’க்கு பிறகு பூந்தளிஎர் மீண்டும் வந்தது.

  1990’க்கு பிறகு வாசகர்களின் ஆதரவு இல்லாதது தான் காரணம்.

  மாறிய சமுகத்தின் Taste’க்கு இந்த பதிபகர்களால் மாற முடியவில்லை.

  King Viswa.
  http://www.tamilcomicsulagam.blogspot.com

 • 20. Kiri Kamal  |  December 8, 2009 at 10:46 pm

  Sorry to type in English.

  I’m very big fan of Rani Comics and other comics.

  Anybody knows Where Can I get “ஓநாய் கோட்டை” சித்திர கதை??

 • 21. sharehunter  |  December 8, 2009 at 10:51 pm

  கிரி கமல்,

  ஓநாய்கோட்டை பார்வதி சித்திரக் கதை புத்தகத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது. பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதற்கு சாத்தியக்கூறு அதிகமாகவே இருக்கிறது.

  முயன்று பாருங்கள். Wish you luck!

 • 22. ani  |  October 12, 2010 at 11:15 am

  any body have poondalir book collaction

 • 23. ani  |  October 12, 2010 at 11:18 am

  if any body have poondhalir books collection. i need it .

 • 24. umesh  |  March 16, 2011 at 1:22 pm

  Champak vittu vitteergale

 • 25. பரத்  |  November 28, 2011 at 11:44 am

  1940 களிருந்து சிறுவர் பத்திரிக்கைகள் உண்டு. ஜிங்லி, டமாரம், மிட்டாய், அல்வா, பாபுஜி, பாலர் மலர்,சந்திரஒளி,
  கண்ணன்,சாக்லெட், கரும்பு, கோமாளி, தம்பி போன்றவை

 • 26. Sethu Raman  |  November 23, 2013 at 5:47 pm

  உயிரை தேடி மறக்க முடியாத சிறுவர் மலர் தொடர். ஜானி மற்றும் பிங்கி அதன் ஹிரோக்கள்

 • 27. Kevin  |  January 6, 2015 at 6:22 am

  Hello, you post interesting content on your site,
  you deserve much more visits, just type in google for – augo’s tube
  traffic

 • 28. Viveka  |  March 24, 2023 at 7:41 pm

  Wow, I too remember Poonthalir Vandu mama stories like Kannadi Manithan. My age 43.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: