Shall We Dance – திரை விமர்சனம்

October 7, 2008 at 7:53 pm 3 comments

     சமீபத்தில் பார்த்த ஒரு புதிய திரைப்படத்தினால்  தீவிர மன உளைச்சலுக்கு ஆளான பிறகு,  நல்ல விமர்சனம் வரும்வரை திரையரங்குகள் பக்கம் தலைவைத்து படுப்பதில்லை எனவும், அவ்வாறு சென்றாலும் தப்பிக்கும் வழிகள் உள்ளனவா என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகே செல்வது என நானும் என் நண்பர்களும் முடிவு எடுத்து, ஆங்கில படங்கள் டிவிடிகளை நிறைய வாங்கிக் கொண்டு இனிதே வீடு திரும்பினோம்.

       ரிச்சர் கெர் (Richard Gere)  நடித்த படம் என்பதால் முதலில் அதை பார்க்கலாம் என முடிவு செய்தேன்.  அமெரிக்க Hollywood பிரபலங்களில் இந்தியா குறித்து மிக நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பவர். அவற்றை வெளியிலும் சொல்பவர் என்பதால் அவர் மேல் எனக்கு ஒரு soft corner உண்டு.

     2004-ல் வெளிவந்த படம். இதே பெயரில் வெளிவந்த ஜப்பானிய மொழி திரைப்படத்தின் முலக்கதையை கொண்டது. இப்படத்தை பார்த்த பிறகு, அந்த ஜப்பானிய மொழி படத்தின் டிவிடியை தேடிக் கொண்டிருக்கிறேன்.

       ஒரு இயந்திரமயமான வாழ்க்கையை வாழும் ஒருவர் ஏதோ ஒரு உந்துதலில் செய்யும் ஒரு செயல் அவர் வாழ்க்கையை எவ்வாறு புரட்டி போடுகிறது என்பதே கதையாகும்.

     ஜான் கிளார்க் என்ற மத்திய வயது குடும்பஸ்தனின் கதை இது.  படத்தின் கதாநாயகன் ஒரு வக்கீல். தினமும் காலை இரயிலில் ஏறி, ஒரே மாதிரியான வேலையை பார்த்து மீண்டும் மாலை இரயிலில் திரும்பி வரும் ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். அன்பான மனைவி, குழந்தைகள் என இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

     ஒருநாள் அவர் இரயிலில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு கட்டிடத்தின் ஜன்னல் வழியே ஒரு அழகிய பெண்ணின் சோகமான முகத்தை காண நேரிடுகிறது. சிலமுறை அந்த முகத்தை கண்ட பிறகு, தீடிரென ஏற்பட்ட ஒரு உந்துதலால் அவர் அந்த ஸ்டேஷனில் இறங்கி, அந்த கட்டிடத்தை நோக்கி செல்கிறார்.

   
     அது ஒரு நடனம் சொல்லி தரும் பள்ளி. சூழ்நிலைகள் அவரை அந்த பள்ளியிலே சேர வைத்து, நடனம் கற்க வைக்கிறது. அது தொடர்பான ஒரு போட்டியிலும் பங்கு கொள்ள அவர் பெயர் கொடுக்க நேரிடுகிறது. வாழ்க்கையில் அவர் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெறுகிறார். அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட தீடீர் சந்தோஷத்தை பார்த்து அவர் மனைவி சந்தேக படுகிறார்.

     கதாநாயகன் போட்டியில் வெற்றி பெற்றாரா? படம் முடிவில் கதாநாயகன் மீண்டும் அந்த இயந்திர வாழ்க்கைக்கு திரும்புகிறார். ஆனால் அவரிடம் இப்போது சந்தோஷம் இருப்பதாக படம் முடிகின்றது.

     ஜான் கிளார்க் என்ற நடுத்தர வயது குடும்பஸ்தராக ரிச்சர்ட் கெர் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக சூஸன் சாரன்டன் (Susan Sarandon) . இவர் ஒரு ஆஸ்கார் விருது பெற்ற நடிகை என்பதால் நடிப்பைப் பற்றி தனியே சொல்ல தேவையில்லை.

    “ரம்பா (Rumba)  என்பது காதலனும், காதலியும் இணைந்து ஆடும் ஆட்டம். காதலி ஆட்டத்திலிருந்து ஒரு சில அடிகள் தள்ளி போகும்போது பிரிவு துயர் உன் உடம்பெல்லாம் பரவவேண்டும். அவள் மீண்டும் உன்னோடு சேரும்போது உன் வாழ்க்கையே உனக்கு திரும்ப கிடைத்துவிட்ட மகிழ்ச்சி உன் உடம்பில் தெரிய வேண்டும்” என உருகி, உருகி நடனம் சொல்லி தரும் மாஸ்டராக ஜெனிபர் லோபஸ்.

     அவருடைய அலுவலக தோழர், டான்ஸ் ஸ்கூல் உரிமையாளர், கதாநாயகனுடன் நடனம் கற்கும் தோழர்கள் என நல்ல சக பாத்திரங்களுடனும், அவர்களுக்குரிய உப கதைகளுடன் படம் நகர்கிறது.

       நடன பள்ளி வாசலில் கதாநாயகனின் குழப்பம், கதாநாயகன் தன் அலுவலக தோழருடன் அலுவலக கழிவறையில் ஆடும் நடனம், இரயில் நிலையத்தில் தனியாக ஆடும் நடனம், போட்டியில் ஆடும் நடனம் என அற்புதமான காட்சிகளுடன் படம் இருக்கிறது.

    இந்த படத்தை க்ளாஸீக் என சொல்ல முடியாது. இது ஒரு பொழுதுபோக்கு படமே! ஆனால் படம் முடிவில் நம்முள்ளே சந்தோஷமாக இருப்பதை உணர முடிகிறது. ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்திற்கு இதை விட வேறு தகுதி வேண்டுமா என்ன!

Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

07-10-2008 08-10-2008

3 Comments Add your own

 • 1. நரேஷ்  |  October 7, 2008 at 9:08 pm

  நானும் அந்த படத்தைப் பார்த்திருக்கிறேன் (ரொம்ப நாள் முன்னாடி). நீங்க சொன்ன மாதிரி முடியும் போது, கடைசி கட்ட காட்சிகளில் சற்றே சந்தோஷமாக இருக்கும்.

  நடனம் கற்க கற்க ரிச்சர்ட் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்புவது நன்றாக காட்டியிருப்பார்கள்

 • 2. siva  |  October 7, 2008 at 9:40 pm

  ungalin pathivu thamilbest.com ill inaika pattu ullathu vote seiunkal..

 • 3. நான் ஆதவன்  |  October 8, 2008 at 7:29 am

  இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்தேன் என்று நினைக்கிறேன். ஜெனிபர் லோபஸ் கதாபாத்திரம் அவருக்காகவே செய்யப்பட்டது போல இருக்கும். நல்ல படம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: