06-10-2008

October 6, 2008 at 5:57 am 5 comments

     இரணகளமான வாரத்திற்கு பிறகு மீண்டும் சந்தை எந்த பக்கம் பயணிக்கும் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.  தற்போது அனைவரும் பரிந்துரையும் சந்தை சிறிது ஏறினாலே விற்றுவிட்டு வெளியேறுங்கள் (Sell at Rise) என்ற ரீதியில் இருக்கிறது. சிறு முதலிட்டாளர்களும் அதற்கு தயாராகவே இருக்கின்றார்கள்.  சந்தை புதிய பள்ளத்திற்கு செல்ல சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.

    சந்தை தற்சமயம் ஒரளவு வலுவான சப்போர்ட் லெவலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ஆக இன்றைக்கு Flat Opening or Positive Opening எதிர்பார்க்கிறேன். Short Covering-க்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இன்றைய சந்தையில் பெரிய அளவில் மாற்றம் தரக்கூடிய அளவில் செய்திகள் எதுவும் தற்சமயம் இல்லை. ஐரோப்பிய சந்தைகளின் ஆரம்பம் மட்டுமே சந்தையின் ஏற்ற, இறக்கத்தை நிர்ணயிக்கும் என நினைக்கின்றேன்.

    சுவாரஸ்யம் இல்லாத சந்தையாக இருக்க வாய்ப்பு உண்டு. மாலை விரிவாக எழுதுகின்றேன்.

Post Market:

     ஐரோப்பிய சந்தைகள் சரிந்திருக்கின்றன. தற்போது ஆரம்பித்திருக்கும் அமெரிக்க சந்தை புதிய பள்ளத்தை தொட்டு மீள முயற்சி செய்துகொண்டிருக்கிறது. அமெரிக்க சந்தை -100 புள்ளிகளுக்குள் முடிந்தால் நாளை ஆரம்பிக்கும் நமது சந்தை ஒரளவு ஆகும். இல்லாவிடில் புதிய பள்ளங்களுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

      இந்த சமயங்களில் அப்பவே அவர் சொன்னார், இவர் சொன்னார், நான்தான் கேட்கவில்லை என்று சுவரில் முட்டிக் கொள்ளும் தன்மையை விட்டுவிடுங்கள். நிதானமாக அமர்ந்து இந்த கரடுமுரடான பயணத்தை இரசிக்க தயாராவோம்.

      கேஷ் ரிசர்வ் ரேஷீயோ குறைப்பு. இதன் முலம் 20,000 கோடி ருபாய் வங்கிகளை விட்டு வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகின்றது. நல்ல செய்திதான். இருந்தாலும் ……

Advertisements

Entry filed under: Market Analysis.

கல்வி வல்லுநரின் மேடைப்பேச்சு பரமபதம்

5 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  October 6, 2008 at 7:11 am

    Good Morning and thank you very much for your views sir.
    Markets will trade in the range of 12500-14000 level for next few days. Any fall below 12500 level will lead to free fall upto 11900. This is my prediction.

  • 2. Anonymous  |  October 6, 2008 at 7:41 am

    thank you very much for your info

  • 3. batcha  |  October 6, 2008 at 7:41 am

    Thank you very much for your info

  • 4. Karthikeyan G  |  October 6, 2008 at 9:25 pm

    கூடுதல் பொறுப்புகள்
    ===============

    பைக்கில் பாயும் இவ்விளைஞன்
    இருபத்துநான்கு கிலோமீட்டர் போய்
    விபத்துக்குள்ளாவான்
    அவனறியவில்லை
    எங்கு தக்க சமயத்தில் போய்சேர்வதற்காக
    தான் வேகமெடுக்கிறோம் என.
    அவனறியவில்லை
    தான் வகிக்கும் கூடுதல் பொறுப்பு என்ன என்று.

    வயல்வரப்பு வழியாக
    நடந்தும் ஓடியும் வந்துசேரும் பெண்
    நிமிடங்கள் கழித்து இடிந்துவிழப்போகும்
    பஸ்நிறுத்தக் கட்டிடத்தில் ஏறி நிற்கிறாள்
    நேரத்துக்கு வந்துவிட்டேனே
    என அவள் ஆசுவாசத்துடன் வியர்வை ஒற்றுகிறாள்

    இன்று மாலை
    தளர்ந்து விழுந்து இறக்கப்போகிறவளிடம் ஊடி
    சாப்பிடாமலிருக்கிறான் கணவன்.
    அவளால் முடிந்தவரை சமாதானம் செய்கிறாள்,
    இனி இப்படி நடக்க்காது
    ஒருபோதும் ஒருபோதும்…
    அவன் கவனிப்பதில்லை

    குளத்தில்
    மூழ்கிச்சாகப்போகும் சிறுவன்
    தலைமறந்து எண்ணை தேய்க்கிறான்
    ‘சீக்கிரம் வாடா!’
    தெருவில் நின்று தோழர்கள்
    அவசரப்படுத்துகிறார்கள்.
    இப்போது அவர்களின் பொறுமையின்மை
    யாருடைய பொறுமையின்மையும்கூட?

    உங்களை முட்டிக் கொல்லப்போகும் லாரி
    சின்னச் சின்ன உந்தல்களுக்குப் பின்
    புறப்பட்டாயிற்று.
    உங்கள் மரத்தின் வேர்
    உடையத்தொடங்கியாயிற்று.
    உங்களுடைய பாம்பு
    ஒற்றையடிபபதைக்கு ஊர்ந்திறங்கத் தொடங்கியாயிற்று.
    அதற்கு இன்னும் நேரமிருக்கிறது.
    நீங்கள் இப்போதுதானே சட்டையைப் போடுகிறீர்கள்?
    ‘அப்படியானால் நான் போகிறேன்’
    என்று வெளியே வரும்போது
    நீங்கள் அறிவதில்லை,
    சில நேரங்களில் சொற்களின் அகலம்.

    தனியாக
    பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் இந்தப்பெண்
    காத்து நிற்பதை மட்டுமா
    காத்து நிற்கிறாள்?
    என்னென்ன கூடுதல் பொறுப்புகள்
    இன்று அவள் வகித்தாகவேண்டுமோ!

    **********
    —–கல்பற்றா நாராயணன்

    thanx :: http://jeyamohan.in/?p=331

    என்னவோ தெரியவில்லை இன்று GOOGLE FINANCE பார்த்துகொண்டிருக்கும் போது இந்த கவிதை நினைவுக்கு வந்தது. 🙂

    // 20,000 கோடி ருபாய் வங்கிகளை விட்டு வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.//

    சோளப் பொரி AMOUNT-ஆக இருக்கிறதே சார்.

    THNX
    Karthi G

  • 5. Karthikeyan G  |  October 6, 2008 at 9:35 pm

    கூடுதல் பொறுப்புகள்
    ===============
    பைக்கில் பாயும் இவ்விளைஞன்
    இருபத்துநான்கு கிலோமீட்டர் போய்
    விபத்துக்குள்ளாவான்
    அவனறியவில்லை
    எங்கு தக்க சமயத்தில் போய்சேர்வதற்காக
    தான் வேகமெடுக்கிறோம் என.
    அவனறியவில்லை
    தான் வகிக்கும் கூடுதல் பொறுப்பு என்ன என்று.

    வயல்வரப்பு வழியாக
    நடந்தும் ஓடியும் வந்துசேரும் பெண்
    நிமிடங்கள் கழித்து இடிந்துவிழப்போகும்
    பஸ்நிறுத்தக் கட்டிடத்தில் ஏறி நிற்கிறாள்
    நேரத்துக்கு வந்துவிட்டேனே
    என அவள் ஆசுவாசத்துடன் வியர்வை ஒற்றுகிறாள்

    இன்று மாலை
    தளர்ந்து விழுந்து இறக்கப்போகிறவளிடம் ஊடி
    சாப்பிடாமலிருக்கிறான் கணவன்.
    அவளால் முடிந்தவரை சமாதானம் செய்கிறாள்,
    இனி இப்படி நடக்க்காது
    ஒருபோதும் ஒருபோதும்…
    அவன் கவனிப்பதில்லை

    குளத்தில்
    மூழ்கிச்சாகப்போகும் சிறுவன்
    தலைமறந்து எண்ணை தேய்க்கிறான்
    ‘சீக்கிரம் வாடா!’
    தெருவில் நின்று தோழர்கள்
    அவசரப்படுத்துகிறார்கள்.
    இப்போது அவர்களின் பொறுமையின்மை
    யாருடைய பொறுமையின்மையும்கூட?

    உங்களை முட்டிக் கொல்லப்போகும் லாரி
    சின்னச் சின்ன உந்தல்களுக்குப் பின்
    புறப்பட்டாயிற்று.
    உங்கள் மரத்தின் வேர்
    உடையத்தொடங்கியாயிற்று.
    உங்களுடைய பாம்பு
    ஒற்றையடிபபதைக்கு ஊர்ந்திறங்கத் தொடங்கியாயிற்று.
    அதற்கு இன்னும் நேரமிருக்கிறது.
    நீங்கள் இப்போதுதானே சட்டையைப் போடுகிறீர்கள்?
    ‘அப்படியானால் நான் போகிறேன்’
    என்று வெளியே வரும்போது
    நீங்கள் அறிவதில்லை,
    சில நேரங்களில் சொற்களின் அகலம்.

    தனியாக
    பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் இந்தப்பெண்
    காத்து நிற்பதை மட்டுமா
    காத்து நிற்கிறாள்?
    என்னென்ன கூடுதல் பொறுப்புகள்
    இன்று அவள் வகித்தாகவேண்டுமோ!
    —–கல்பற்றா நாராயணன்

    thanx :: http://jeyamohan.in/?p=331

    என்னவோ தெரியவில்லை இன்று GOOGLE FINANCE பார்த்துகொண்டிருக்கும் போது இந்த கவிதை நினைவுக்கு வந்தது. 🙂

    // 20,000 கோடி ருபாய் வங்கிகளை விட்டு வெளியே வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.//
    சோளப் பொரி AMOUNT-ஆக இருக்கிறதே சார்.

    Thnx, Karthi G

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: