இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் I

October 1, 2008 at 5:15 pm 14 comments

     இந்த பதிவின் முலம் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் பொதுவான குணநலன்களை பற்றி மட்டுமே பார்க்கப் போகின்றோம். இவற்றில் நிறைய விதிவிலக்குகள் இருக்கக் கூடும். இந்தியர்கள் அல்லது அமெரிக்கர்களிடம் உள்ள நிறை, குறைகளை சொல்லி யார் மனதையும் புண்படுத்துவது இப்பதிவின் நோக்கம் அல்ல. ஒரு அடிப்படையான ஒப்பீடு மட்டுமே. இந்த பதிவு பங்கு சந்தை, நிதி நிர்வாகம் போன்ற அம்சங்களில் இவ்விருவரும் எவ்வாறு இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே எழுதப்பட்டது. அமெரிக்கர்கள் நம்மிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நாமும் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

        அப்பப்பா….. இதற்கு இவ்வளவு பெரிய முன்னுரையா. சரி, விஷயத்திற்கு வருவோம்.

 

        அமெரிக்கர்கள் தங்கள் நலனை (Self-Centred)  பெரிதாக கருதுவார்கள். இதிலென்ன, எல்லோரும் அப்படிதானே என்று நீங்கள் நினைக்கலாம். இந்தியர்களை யாராவது ஒருவர் “சுயநலவாதி”  (Selfish) என்று கூறினால் (கூறினால் என்ன, பொதுவாக இங்கே ஒருவரின் குணநலன்களை பற்றி சொல்லும்போது இது ஒரு கெட்டவார்த்தையாக கருதப்படுகிறது) சம்பந்தப்பட்டவருக்கு மிகுந்த கோபம் அல்லது சுய பச்சதாபம் வர வாய்ப்பு உள்ளது. நான் எல்லோருக்கும் நல்லது செய்து கொண்டிருக்கும்போது, என்னைப் பற்றி இப்படியா கூறுவது? என்று.  ஆனால், அமெரிக்கர்கள் இதனை பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். மேலும், சுயநலம் என்ற வார்த்தை அங்கே கெட்ட வார்த்தையே இல்லை. மேலும், அவர்கள் மற்றவர்களை திட்ட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏராளம். அந்த பட்டியலில்  “சுயநலவாதி” என்பது கிடையாது.  எல்லோருமே சுயநலவாதிகள் தான். அதனை அமெரிக்கர்கள் முடி மறைப்பதில்லை.

 
         ஆரம்பத்தில் கூறியவாறு அமெரிக்கர்கள் தங்கள் நலனையே  பெரிதாக எண்னுவதால், எல்லோரும் சுயதன்மையோடு (Independent or Independent Thinking Mindset)  இருப்பார்கள். எந்த முடிவிலும், மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டாலும், கடைசி முடிவு அவர்களே எடுப்பார்கள். தங்களுக்காக அடுத்தவர்கள் முடிவு எடுப்பதை விரும்ப மாட்டார்கள். அது அவர்களுடைய நலனை கருதி எடுக்கும் முடிவாக இருந்தாலும் கூட. உதாரணத்திற்கு, இங்கே ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன் அவனை அல்லது அவளை டாக்டர் அல்லது Engineer  என கூறி அவனுடைய அல்லது அவளுடைய எதிர்காலத்தை பெற்றோர்களே தீர்மானிப்பது போன்ற செயல்களெல்லாம் அமெரிக்காவில் கிடையாது. இதனால் வாழ்க்கையில் அவன் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கெல்லாம் அவனே காரணம் என்ற மனநிலையை பெறுகின்றான். “நான் உருப்படமால் போனதுக்கு காரணம் அந்த ….” என்றெல்லாம் அவர்கள் யாரையும் குறைசொல்ல மாட்டார்கள். சிறிய வயதிலேயே தான் வாழ்க்கையில் இவ்வாறு ஆக வேண்டுமென்று அழிக்க முடியாத தீர்மானங்களுடன் எல்லாம் இருக்க மாட்டார்கள். பெற்றோர்களும் அந்த குழந்தைக்கு எதில் ஆர்வம் அதிகம் என்பதை கண்டறிய விருப்பம் காட்டுவார்கள். “ஏலே, படித்து பெரிய ஆளாகி கலெக்டர் வேலைக்கு போகனும், மனசிலே வைச்சிக்கோ” என்ற வாழ்த்துகளெல்லாம் அங்குள்ள பெரியவர்கள் சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரும் தன் நலன் பற்றியே கவலைப்படுவதால், தன்னுடைய குழந்தைகள் எதிர்காலத்தை பற்றி முடிவெடுப்பதில் ஒரு வெறித்தனமான கவனிப்பு எல்லாம் அங்கே இருக்காது. பரீட்சை சமயத்தில் “அத படிச்சியா, இத படிச்சியா” போன்ற “அக்கறைகள்” எல்லாம் குழந்தைகளிடம் காண்பிக்க படாது.

       இந்த விஷயத்தை பொறுத்த வரை, சரி, தவறு என நிறைய பேசலாம். என்னுடைய குழந்தையிடம் அதிகப்படியான அக்கறை காண்பிப்பது தவறா? என்ற கேள்விகள் எழலாம். ஆனால், நிலைமை மாறிக் கொண்டு வருகிறது. பழைய தமிழ் திரைப் படங்களில் கதாநாயகனின் தந்தை கதாநாயகனின் மேல் காட்டும் அக்கறை படத்தில் ஒரு பகுதி மட்டுமே. அந்த  “அக்கறையே” படத்தின் மைய கதையாக வந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றி பெற்றிருக்கிறது “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படம். தந்தை-மகன் இடையே உள்ள உரையாடல் எவ்வாறு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை பழைய, புதிய திரைப்படங்களை பார்த்தாலே தெரிந்துக் கொள்ளலாம்.

      இன்னும் இந்த வரிசையில் படிப்பு, விளையாட்டு, அரசியல், நிதி நிர்வாகம், பங்கு சந்தையை பற்றிய அறிவு என்ற தலைப்புகளில் எழுதலாம் என்று இருக்கிறேன். இது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகின்றேன்.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

01-10-2008 முதலீட்டாளர்களின் அவசியமான தேவைகள் II

14 Comments Add your own

 • 1. sriram  |  October 1, 2008 at 5:44 pm

  ya its good articile
  contenue .

 • 2. செல்வ கருப்பையா  |  October 1, 2008 at 6:36 pm

  நல்லா இருக்கு – தொடர்ந்து எழுதுங்கள்!

 • 3. சூர்யா  |  October 1, 2008 at 6:52 pm

  நல்ல முயற்சி.. நல்ல தொடக்கம். தொடர்ந்து எழுதுங்கள்..

 • 4. Chandran  |  October 1, 2008 at 6:53 pm

  அருமையாக உள்ளது. தாங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

 • 5. msathia  |  October 1, 2008 at 7:32 pm

  //உதாரணத்திற்கு, இங்கே ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன் அவனை அல்லது அவளை டாக்டர் அல்லது Engineer என கூறி அவனுடைய அல்லது அவளுடைய எதிர்காலத்தை பெற்றோர்களே தீர்மானிப்பது போன்ற செயல்களெல்லாம் அமெரிக்காவில் கிடையாது.//

  அப்படியா?

 • 6. தெகா  |  October 1, 2008 at 8:02 pm

  அந்த மாதிரி “”நீ இந்த ஆளாகணும், அந்த ஆளாகணும்” னு அழுத்தம் கொடுத்து பிஞ்சிலயே அவளது சுமையை ஏத்தினா, அங்கே எப்படிங்க படைப்பாற்றல் வளரும் குழந்தைகளிடத்தே.

  இந்தக் கட்டுரை நன்றாக இருக்கு ஆனா பாதியில குழப்புது… பெத்தவங்களுக்கு அக்கறை இல்லாம போயிடாது அது எந்த ஊர்ல இருந்தாலும்… சரி, அப்படி அக்கறையோட வளர்த்த நம்மூரு பிள்ளைங்க எத்தனை பெரிய பெரிய விசயங்களை கண்டுபிடிக்கிற மாதிரி வளர்ந்திருங்காங்க. அல்லது, பெற்ற தாயி, தகப்பனையே வைச்சி பண்போட நடத்தணுமின்னு நினைக்கிறாங்க.

  நம்மூர்ல மாதிரி கல்யாணம் கட்டிக்கிறதில இருந்து, என்ன ஸ்கூல் படிக்கிறோங்கிற வரைக்கும் அவங்களுக்கு பதில் யாரோ முடிவு எடுக்கிறதுனாலே உண்மையா, ஆர்வமா வாழ முடியுதா… அதுனாலேதான் அடுத்தவங்களை கையை காமிச்சு, காமிச்சே பாதி அடல்ட் வாழ்க்கையை கழிச்சிடுறோம், இல்லையா?

  இந்த சுட்டியையும் பாருங்க அப்படியே… குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்…

 • 7. தெகா  |  October 1, 2008 at 8:09 pm

  Sorry the link has been broken for reason, here is the working one… குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்…

 • 8. sharehunter  |  October 1, 2008 at 8:10 pm

  வருகைக்கு நன்றி, நண்பர்களே!

  சத்யா, விதி விலக்குகள் உண்டு என ஆரம்பத்தில் சொல்லியிருக்கின்றேன்.

  பூந்தளிர் பிடிக்குமா உங்களுக்கு? அதில் வந்த “புலி வளர்ந்த பிள்ளை”, “கண்ணாடி மனிதன்”, “குள்ளன் ஜக்கு” போன்ற தொடர்களை படித்திருக்கிறீர்களா?

 • 9. sharehunter  |  October 1, 2008 at 8:51 pm

  தெகா,

  உங்கள் கட்டுரையை படித்தேன். நல்ல கட்டுரை. செறிவான மொழியில் எழுதியிருக்கிறீர்கள். மொழி நடையை எளிமையாக்கினால், கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் இன்னும் நிறைய பேருக்கு சென்றடையும்.

  உங்கள் வலைப்பூவிற்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என சொல்ல முடியுமா?
  பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது அக்கறையே இருக்கக் கூடாதென்றோ, அமெரிக்காவை விட இந்தியாவில் அதிகம் என்றோ சொல்ல வில்லை. ஒருவர் மீது நாம் காட்டும் அக்கறை அவருக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்றே சொல்ல வந்தேன்.

 • 10. தெகா  |  October 1, 2008 at 9:04 pm

  கட்டுரையை வாசித்தமைக்கு நன்றி, ஷேர்ஹண்டர்! அந்தப் பதிவிலேயே இன்னும் நிறைய சுட்டிகள் ஹைலைட் பண்ணப் பட்டிருக்கும் பாருங்க… நேரம் கிடைகும் பொழுது அவைகளையும் வாசிங்க.

  //மொழி நடையை எளிமையாக்கினால், கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் இன்னும் நிறைய பேருக்கு சென்றடையும்.//

  பெரும்பாலான நேரங்களில் சொந்த அனுபவம் எழுதும் பொழுது பேச்சு நடையிலதான் எழுதுறது வழக்கம். நீங்க படிச்ச கட்டுரை கொஞ்சம் காட்டமா எழுதுனது, அதுனாலே வீர தீர வசனத்தில் வந்து விழுந்துருச்சு… 🙂 அதான் அப்படியே அதன் இயல்பில விட்டுட்டேன்…

  //உங்கள் வலைப்பூவிற்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என சொல்ல முடியுமா?//

  இது எனக்குப் பிடிச்ச கேள்வி, இதுக்கு ஒரு லிங்க் இருக்கு கொடுத்தா உதைக்க வருவீங்க;), அதுனாலே நான் கொடுக்கலை நீங்களே தேடிப் பிடிச்சுக்கங்க(டிப்ஸ்… “எனது ஆறு’ தலைப்புன்னு நினைக்கிறேன்).

  ஏன் இந்தப் பேரா…. அட பெயரில் என்ன இருக்கிறது, எல்லாமே “”கேள்வி கேட்கப் படுகிற நிலையிலதானே இருக்குதுன்னு, ஏன் இப்படி” ஓரளவிற்கு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிற வரைக்கும் “தெக்கிக்காட்டான்”… தெக்கே இருந்து வந்த காட்டான்… போதுமா … :))).

 • 11. sharehunter  |  October 1, 2008 at 9:09 pm

  தெகா,

  இப்படி ஒரு கட்டுரையை (காப்பியம் என்றே சொல்ல வேண்டும்) எழுதிட்டு உங்களை காட்டான்-னு சொன்னா எப்படி? 🙂 🙂

 • 12. akshay  |  October 2, 2008 at 10:22 am

  Share hunter why can’t u direct a film and show sakkarakatti
  director how to direct a film?

 • 13. akshay  |  October 2, 2008 at 10:24 am

  I’m ready to act in your film if you direct.

 • 14. sharehunter  |  October 2, 2008 at 10:40 am

  akshay,

  sure. title “Vellakatti”. let’s terrorise TN together. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: