29-09-2008

September 29, 2008 at 5:51 am 9 comments

      இன்றைய தினம் கீழ்க்கானும் Positive செய்திகள் இருப்பதால், சந்தை ஆரம்பத்திலேயே gap up ஆக ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் ஆசிய சந்தைகள் அனைத்தும் Positive ஆகவே தொடங்கியுள்ளன. நமது சந்தையிலும் ஒரு gap up +75 எதிர்பார்க்கலாம்.

1. “வரும், வராது” என இழுத்துக் கொண்டிருந்த இந்திய-அமெரிக்க நியூக்ளியர் ஒப்பந்தம் ஒரு வழியாக அமெரிக்க சபையில் நிறைவேறிவிட்டது.
2. அமெரிக்க நிதி நிறுவனங்களின் தள்ளாட்டத்தை போக்க $700 பில்லியன் மதிப்புள்ள Bail-out திட்டத்திற்கு அமெரிக்க சபை இன்று அனுமதி அளித்து விடும்.

3. நிப்டியில் உள்ள லார்சன் & டுப்ரோ (Larsen & Toubro)  நிறுவனம் போனஸ் பங்குகளை 1:1 என்ற விகிதத்தில் வழங்க ரெக்கார்ட் தேதியாக 01.10.2008 என்ற தேதியில் வைத்துள்ளதால், இன்றைய தினம் அப்பங்கானது கிட்டத்தட்ட ரு.300/- அளவில் மேலேறும் என எதிர்பார்க்கலாம்.

4. NTPC, TATA Power, Powergrid போன்ற பங்குகளும் மேலேறும். Reliance, Reliance Communications பங்கில் நிறைய short  போயிருப்பதால், இன்று அதில் short-covering நடக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

     மொத்தத்தில் இன்றைய தினம் Very Positive. வெள்ளியன்று நான் சொன்ன மாதிரியே அமெரிக்க அதிபரே முன்னின்று இந்த Bail-out Plan நிறைவேற்ற போகின்றார். அதற்குள் எத்தனை வதந்திகள் கிளம்பிவிட்டன.

Rise & Shine ! Have a Very Positive Day!

Post Market:

“பயம்”. தற்போது நம் முதலீட்டாளர்களின் மனதில் இருக்கின்ற ஒன்று. இருக்கக் கூடாததும் அதுவே. காலையில் எழுதிய அனைத்திற்கும் நேர்மாறாக இருந்தது சந்தை. இது போன்ற குட்டை குழம்பிய சமயங்களில் பெரிய மீன்கள், சிறிய மீன்களை முழுங்கும். பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. 


      இந்த ஜனவரியில் நிப்டி 6000 புள்ளிகளிலிருந்து, 4400 புள்ளிகள் வரை சரிந்தது. கிட்டத்தட்ட 1600 புள்ளிகள். ஒரே வாரத்தில். அப்போது இருந்த பயம் தான் இப்போதும் இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு தேவையிருக்காத பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள். விற்க வேண்டிய காலமல்ல இது.

      கிட்டத்தட்ட அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு, சரிந்தது இன்றைய சந்தை. 200 புள்ளிகளுக்கு மேலாக இழந்து, கடைசி ஒரு மணிநேரத்தில் 65 புள்ளிகளை மீட்டெடுத்து -135 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க சந்தை ஆரம்பித்தவுடன், இது பற்றி விரிவாக எழுதுகின்றேன்.

Entry filed under: Market Analysis.

சக்கரகட்டி – திரை விமர்சனம் சக்கரக்கட்டி – மீண்டும் விமர்சனம்

9 Comments Add your own

 • 1. V.SURESH, SALEM  |  September 29, 2008 at 7:11 am

  Thank you very much for your views sir. I predict that sensex will trade between 12500- 14000 level for next few days.

 • 2. Ganesh  |  September 29, 2008 at 7:38 am

  Dear Sharehunter,

  Good Morning, Thank you for for your daily market analysis, your last week expectation will come to true this week, Keep it up…

 • 3. batcha  |  September 29, 2008 at 7:49 am

  ya u r right ur forecast really good thank you very much for your market view

 • 4. karthikeyan G  |  September 29, 2008 at 3:18 pm

  Hi..
  Nse –> -135 TODAY.
  உங்களாலேயே கணிக்க முடியாத போது என் போன்றவர்கள் விலகி இருப்பதே நல்லது என்று படுகிறது.

  A old news for “இப்போ என்ன செய்ய?”..

  http://news.bbc.co.uk/2/hi/south_asia/7511104.stm

  “Angry investors have attacked the Karachi Stock Exchange (KSE) in protest at plunging Pakistani share prices. More than 200 people took part in the demonstration at the country’s main stock exchange in the southern city. A number of windows were broken and at least two people injured, Reuters news agency reports. The protesters demanded a temporary closure of the KSE to stop further slides. ”

  Hope this will never happen in india 😉

  *************

  I don’t think bailout will have great impact in the US market today and world market tommrow.

  As bail out is hapenning b4 elections 2rh houses of Congress, politicians will be highly intrested in satisfying the public (putting lot of conditions for the companies to have a bailout). And always the Financial decisions taken with the mind to satisfy the public willnot be good for the corporates as expected. Lets watch..

  Thanks,
  Karthi G

 • 5. sharehunter  |  September 29, 2008 at 3:37 pm

  Karthi,

  ஆசிய பங்கு சந்தைகளில் கராச்சி சந்தையை ஒரு பெரிய அளவில் எடுத்துக் கொள்வதில்லை. Volume மிகக் குறைவு. FIIs யாருமே அங்கு பெரிய அளவில் முதலீடு செய்ய மாட்டார்கள். முஷாரப் பதவி விலகிய பிறகு அங்கு என்ன நடந்தாலும் பெரிய ஆச்சரியமில்ல!
  நம்ப ஆட்கள் மும்பை பங்கு சந்தையில் காளை சிலையானது “பின்பக்கத்தை” சந்தைக்கு காட்டி நிற்பதால் இந்த சந்தை சரிவுகள் நடப்பதாக ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இன்றைய சரிவுக்கும் இதுவே காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

 • 6. Ganesh  |  September 29, 2008 at 4:45 pm

  மிகவும் சரியாக சொன்னீர்கள், இன்றைய தினம் சந்தை சரிவு எதிர்பார்க்காத ஒன்று, என்ன காரணத்தால் இன்று சரிந்தது என்று சொல்ல முடியுமா, அதே போல இன்னும் சந்தையில் சரிவு உள்ளது என்றும் NIFTY 3200 லெவல் போகும் என்று இப்பொழுதே ஆருடம் கூற ஆரம்பித்து விட்டார்கள், தங்களின் இது பற்றிய கருத்து என்ன என்பதையும் கூற முடியுமா, தங்களி மேலான கருத்தை எதிர் பார்க்கிறேன்.

  நன்றி….

 • 7. sharehunter  |  September 29, 2008 at 4:55 pm

  கணேஷ்,

  அமெரிக்கர்களை பொறுத்தவரையில் சரிவிலிருந்து மீண்டு எழுவதில் அவர்களுக்கு இருக்கும் மன உறுதி வேறு யாருக்கும் கிடையாது. அமெரிக்கர்களை பற்றி தனியாக ஒரு பதிவு போடுவதில் ஆர்வம் உள்ளது. பார்ப்போம்.

  நீங்கள் யாரிடமிருந்து கேள்விபட்டீர்கள் என தெரியவில்லை. எங்க ஏரியாவிலே நிப்டி 2500-னு டீக்கடை பாய் சொன்னார். நான் இன்னும் பேப்பர் போடுற பையனின் கருத்தை கேட்கவில்லை. இது பற்றி எல்லோரும் எல்லாவிதமாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

  இன்றைய வாரத்தில் இன்னும் இதுபோன்று நிறைய கேட்க போகின்றோம். என்னை பொறுத்த வரையில், சரிவு காலத்தில் நான் இதுவரை ஒரு பங்கைக் கூட விற்றதில்லை. இதுவரை. என்னைப் பற்றி நானே பெருமைப்பட்டுக் கொள்ளும் அம்சங்களில் இதுவும் ஒன்று. இன்னும் நிறைய இருக்கு. அதையெல்லாம் இன்றைக்கே சொல்லப் போவதில்லை. இன்றைய சந்தையே நம்மை ரொம்ப படுத்தி விட்டது. நான் வேறு படுத்த வேண்டுமா?

 • 8. karthikeyan G  |  September 29, 2008 at 5:54 pm

  //நம்ப ஆட்கள் மும்பை பங்கு சந்தையில் காளை சிலையானது “பின்பக்கத்தை” சந்தைக்கு காட்டி நிற்பதால் இந்த சந்தை சரிவுகள் நடப்பதாக ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. //

  இது உண்மைதான்!!!!

  US Financial crisis மற்றும் lehman brothers இன் திவாலுக்கும் நம் மும்பை பங்கு சந்தையின் காளை தன் பின்பக்கத்தை சந்தைக்கு காட்டி இருப்பதே காரணம் என CIA விசாரணையின் படி என்று தெரிய வந்துள்ளது. அதை மாற்ற சொல்லி US ‘pressure’ கொடுத்ததாகவும், மன்மோகன் சிங் அதை நிச்சயம் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார் என்றும் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே விரைவில் வாஸ்து படி காளையின் position மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் சந்தை ஏறும் என்று எதிர்பார்க்கலாம்.

 • 9. sharehunter  |  September 29, 2008 at 6:48 pm

  கடைசி நேர தகவலின் படி, காளையின் மாற்றியமைக்கப்பட்டதாகவும், தற்போது காளையின் “பின்பக்கம்” முதலீட்டாளர்களை பார்க்கும் படி வைக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
September 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: