சக்கரக்கட்டி – மீண்டும் விமர்சனம்

September 29, 2008 at 7:18 pm 12 comments

      சக்கரக்கட்டி திரைப்படத்திற்கு மிகவும் சிறியதாக விமர்சனம் எழுதியதாக நிறைய பேர் வருத்தப்பட்டுள்ளனர். விரிவான விமர்சனம் இப்போது வழங்குகின்றேன் :

      உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சக்கரக்கட்டி உலகமெங்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளிவந்தது அனைவருக்கும் தெரிந்ததே. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் திரையிடப்பட்டு திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம் கொண்டிருக்கிருப்பதாக சி என் என் நிருபர் தெரிவிக்கின்றார். திரையிடப்பட்ட முதல்நாள் அமெரிக்க பங்கு சந்தையே ஸ்தம்பித்ததாக வால் ஸ்ட்ரீட் நிருபர் ஒருவர் வாயை பிளக்கிறார்.

      அப்படி என்னதான் இருக்கின்றது இத்திரைப்படத்தில் என்று நடுநிலையோடு ஆராய்வோம். படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பயங்கரம் … இல்லை.. இல்லை பயங்கர அற்புதம்.

     படத்தின் முதல் ஐந்து நிமிடங்களுக்கே கொடுத்த காசு சரியாக போய்விட்டது. நீங்கள் மனச்சாட்சி உள்ளவர்கள் என்றால் அப்போதே எழுந்து வெளியே வந்து விடுங்கள். மீண்டும் அடுத்தக் காட்சி சென்று பாருங்கள்.
     ஒரு சராசரி கல்லுாரி மாணவன் தன் கல்லுாரி வாழ்வில் சந்திக்கும் சவால்கள், அதை எப்படி வெற்றி கொள்கின்றான் என்பதுதான் கதை. இதை படமாக்கியிருக்கும் விதத்தை பற்றி சொல்ல வேண்டுமா? வேண்டாம், படத்தின் சுவாரஸ்யம் போய்விடும்.

      படத்தின் கதாநாயகனுக்கு இது முதல் படம் என்றே நம்ப முடியவில்லை. கல்லுாரி மாணவனின் வேடத்தில் வாழ்ந்திருக்கின்றார். இதை பார்க்கும் கல்லுாரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கதறி அழுவதை திரையரங்கில் பார்க்க முடிந்தது. உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரின் நடிப்பு National Highway-ல்  இருக்கும் ஒரு மைல்கல். கதாநாயகன் தமிழ் பேசி நடிக்கும்போது அவரின் முகபாவத்தில் தோன்றும் நவரசத்தையும் வர்ணிக்க முடியுமா? ஐயோயோ, முடியாது. பார்த்தால் தான் தெரியும்.
    கதாநாயகிகள் இரண்டு பேர். தமிழ் திரையுலகில் நடிக்க தெரிந்த கதாநாயகிகள் அபூர்வம். அந்த குறை இப்படத்தில் நீங்கியது. போட்டி போட்டுக் கொண்டு நடித்தித்திருக்கின்றார்கள். தன் காதலை கதாநாயகனித்திடத்தில் வெளிபடுத்தும் முறை யாருக்கும் தெரியாமல் (தியேட்டர் ஆபரேட்டருக்கு கூட)  கதாநாயகனுக்கு மட்டும் தெரியும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது.

     இயக்குநருக்கு இது முதல் படமாம். நம்ப முடியவில்லை. நம்பவே முடியவில்லை. படம் முடிந்த பிறகு அனைவரும் ஒருவித பிரமையில் இருக்கின்றார்கள். இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது என்பதற்காக கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தையும் அவரே கையில் எடுத்திருக்கின்றார். படத்தின் உரையாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. தமிழருக்கு ஆங்கிலம் பேச தெரியாது என்று நினைக்கும் வீண் பதர்கள் இத்திரைப்படத்தை பார்த்தால் வெட்கி தலைகுனிவர்.

    இசை ஏ ஆர் ரகுமான். சுமாராகவே இசை அமைத்திருக்கின்றார். பேசாமல் இயக்குநரே இசையும் தன் பொறுப்பில் வைத்திருக்கலாம். படத்தின் சுமாரான பாடல்களுக்கு இயக்குநர் படம் பிடித்திருக்கும் விதம் உலகதரம்.
  Hollywood    வெட்கி தலைகுனியும் வண்ணம் கிராபிக்ஸ் அமைந்திருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.

    இந்த திரைப்படம் அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய ஒரு கருத்துப் பெட்டகம். காவியம். காப்பியம். ( இரண்டும் ஒன்றா?)  தமிழக அரசு முழு வரிவிலக்கு கொடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களை பார்க்க செய்ய வேண்டும்.
மொத்தத்தில் சக்கரக்கட்டி – டயபடீஸ்காரர்களும் பார்க்கலாம்.

Entry filed under: திரை விமர்சனம்.

29-09-2008 30-09-2008

12 Comments Add your own

 • 1. latestwalkin  |  September 29, 2008 at 8:24 pm

  ன்னா .. நீங்க காமெடிக்கு சொல்றீங்களா இல்ல நெஜமாவே சொல்றீங்களா ??

  பாத்தா ரொம்ப பாதிக்கப்பட்டவர் மாதிரி தெரியுதேங்க ..

 • 2. பரிசல்காரன்  |  September 29, 2008 at 8:42 pm

  இந்த விமர்சனத்தை பிரதியெடுத்து சக்கரக்கட்டி ஓடும் தியேட்டர்களிலெல்லாம் விநியோகிக்க பாக்யராஜ் ஒரு தனி டீமை ஏவியிருக்கிறாராம் .தெரியுமா சேதி?

 • 3. பரிசல்காரன்  |  September 29, 2008 at 8:44 pm

  ங்கொய்யாஆஆஆஆஆஅல… படத்துக்குப் போனவன் எல்லாம் சீக்குல கெடக்குற கோழியாட்டம் கெடக்குறான். தான் பட்டது பத்தாதுன்னு ஊர்ல இருக்கறவனையெல்லாம் மாட்டி விடறாரு பாரு இந்த மனுஷன்.

  விமர்சனத்துல பல இடங்கள்ல வி.வி.சிரிச்சேன்!

 • 4. sharehunter  |  September 29, 2008 at 8:44 pm

  நீங்க ரொம்ப லேட், பரிசல். அதை விநியோகிக்கப் போவது கதாநாயகனின் உயிர் நண்பர்கள். அது உங்களுக்கு தெரியுமா?

 • 5. பரிசல்காரன்  |  September 29, 2008 at 8:46 pm

  //தமிழக அரசு முழு வரிவிலக்கு கொடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களை பார்க்க செய்ய வேண்டும்.//

  மாணவிகள் பார்க்கக் கூடாதா?

 • 6. பரிசல்காரன்  |  September 29, 2008 at 8:48 pm

  //டயாபடிஸ்கார்களும் //

  இந்தக் கார் எந்த ஊர் Make?

 • 7. sharehunter  |  September 29, 2008 at 8:49 pm

  உங்களுக்கு பெண்கள் மேல் ஏன் தீரா வெறுப்பு?

 • 8. sharehunter  |  September 29, 2008 at 8:50 pm

  கவிதைபோல் உள்ள இந்த விமர்சனத்தில் குறையா? உடனே களைந்து விடுகிறேன்.

 • 9. King Viswa  |  September 29, 2008 at 9:41 pm

  Dear Share Hunter,

  Wonderful Comment on this absurd of a movie. Read this review at least 7-8 times & couldn’t stop laughing.

  Amazing review. Along with lucky’s, yours was one of the best review i read about this movie.

  Keep on going.

  Thanks & Regards,

  King Viswa.
  http://www.tamilcomicsulagam.blogspot.com

 • 10. சுபாஷ்  |  September 30, 2008 at 7:27 am

  4 5 முறை நய்றாக சிரிப்பு வந்தது.
  ங்கள் ஒரு பத்தி விமர்சனமும் சூப்பரு

 • 11. Anonymous  |  September 30, 2008 at 3:15 pm

  //படத்தின் சுமாரான பாடல்களுக்கு இயக்குநர் படம் பிடித்திருக்கும் விதம் உலகதரம்.//

  ஆகவே இந்த படத்தை மேலும் எத்தனை முறை பார்ப்பதாக இருக்கிறீர்கள்??

  Few Qs::

  இயக்குனருக்கு இந்த படத்திலேயே “உலக இயக்குனர்” பட்டம் கிடைக்குமா? அல்லது “உலக இயக்குனர்” பட்டம் கிடைக்க மேலும் சில உலகத் தரமான படங்கள் எடுக்க வேண்டுமா??

  இது பாக்கியரஜுக்காக உருவாக்கப்பட்ட கதையாமே. உண்மையா?

  படத்தை தினமும் நான்கு முறை பார்க்கும் Operator-in தற்ப்போதய கதி என்ன?

  இந்த படத்துக்கு தங்களை அழைத்து நண்பரிடம் இன்னும் உறவு உள்ளதா?

 • 12. karthikeyan G  |  September 30, 2008 at 3:16 pm

  //படத்தின் சுமாரான பாடல்களுக்கு இயக்குநர் படம் பிடித்திருக்கும் விதம் உலகதரம்.//

  ஆகவே இந்த படத்தை மேலும் எத்தனை முறை பார்ப்பதாக இருக்கிறீர்கள்??

  Few Qs::

  இயக்குனருக்கு இந்த படத்திலேயே “உலக இயக்குனர்” பட்டம் கிடைக்குமா? அல்லது “உலக இயக்குனர்” பட்டம் கிடைக்க மேலும் சில உலகத் தரமான படங்கள் எடுக்க வேண்டுமா??

  இது பாக்கியரஜுக்காக உருவாக்கப்பட்ட கதையாமே. உண்மையா?

  படத்தை தினமும் நான்கு முறை பார்க்கும் Operator-in தற்ப்போதய கதி என்ன?

  இந்த படத்துக்கு தங்களை அழைத்து நண்பரிடம் இன்னும் உறவு உள்ளதா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
September 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: