முதலீட்டாளர்களின் அடிப்படைத் தேவைகள் I

September 24, 2008 at 5:48 pm 7 comments

      பங்கு சந்தையில் நுழைந்து முதலீட்டாளர் என பெயரும் எடுத்தாயிற்று. அவருக்கு என்னென்ன அடிப்படை தேவைகள் இருக்க வேண்டும் என பார்ப்போம்.

 இணையத் தொடர்பு

     முதலில் அடிப்படை தேவை என்று பார்த்தால், இணையத் தொடர்பு அவசியம். இணையத்தில் உலவ, ஒரளவு கணினி அறிவு இருந்தாலே போதும். இணையத் தொடர்பிலே பிராட்பேண்ட் (Broadband) தொடர்பாக பெற்றுக் கொள்வது நல்லது. செலவை பார்க்காமல் அன்லிமிட்டேட் பிராட்பேண்ட் தொடர்பாக இருத்தல் நலம். ஏனெனில் சில முக்கியமான நிகழ்வுகளை பார்க்கின்றபோது, இத்துடன் பத்து மணி நேரம் முடிவடைகிறது, அடுத்த ஒரு மணிநேரத்திற்கும் வேறுமாதிரி கட்டணம் போன்ற எண்ணங்கள் இல்லாமல் இருக்க மேற்சொன்ன Unlimited Broadband பொருத்திக் கொள்வதே நல்லது. ஒவ்வொரு ஊரிலும் இணையத்தை பரப்ப சில சிறப்பு கட்டணங்கள் கொடுப்பதாகவும் கேள்விபடுகின்றேன். உங்கள் ஊரில் உள்ள கட்டண விவரம் என்பதை நீங்கள் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

      இணையத்திற்காக மாதந்தோறும் செலவிடப்படும் தொகையும் ஒரு முதலீடே என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இன்னும் சில வருடங்களில் ஏறக்குறைய 70% சதவீதம் இணையம் இல்லாத வீடே இருக்க முடியாது. அவ்வாறு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாக தற்போது செல்போன் ஆகியிருப்பதுபோல, இணையமும் ஆகிவிடும். தற்சமயம் IP TV சில நகரங்களில் பரிச்சார்ந்த முறையில் அறிமுகப்படுத்தி நல்ல ஆதரவும் கிடைத்திருக்கிறது. அது பற்றி தனியாக பேசலாம்.

செய்தித் தாட்கள்

      செய்தித் தாட்கள் என்று எடுத்துக் கொண்டேமென்றால் வணிக செய்திதாள் ஒன்றையாவது படிப்பது நலம். ஆனால், வணிக செய்திதாள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வருகின்றன. ஆங்கிலத்தில்  Business Line, The Economic Times, The Financial Chronicle, The Financial Express, The Business Standard என்ற செய்திதாட்கள் வெளிவருகின்றன. அவற்றில் The Financial Chronicle நன்றாக இருக்கின்றபோதிலும் தற்சமயம் சென்னையில் மட்டுமே வெளிவருகின்றது. The Times of India புதிய பதிப்பு ஒன்றை சென்னையில் திறந்திருக்கின்றார்கள் (அட்டகாசமான விளம்பரத்துடன் “சென்னையில் ஒரு நாள் : நாக்க முக்க பாடலுடன்” விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள்). விரைவில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் The Economic Times கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள முதலீட்டாளர்களுக்கு Business Line ஒன்றுதான் வழி.

    ஆங்கில அறிவு அவசியத்தை பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கின்ற படியால், பொதுத் செய்தித்தாள் ஒன்றையும் படித்துவிடுவது நல்லது. தினந்தந்தியில் ஒரு பக்கத்திற்கு வணிக செய்திகள் என்று எக்கானமிக் டைம்ஸ்-ன் செய்திகள் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளிவருகின்றன. தினமலரும் வணிக செய்திகளை வெளியிடுகின்றது.

வார இதழ்கள்

      வார இதழ்கள்களை பொறுத்த வரையில் நுாலங்களிலும் படிக்கலாம். கீழ்க்கண்ட வார இதழ்களை படிப்பது அவசியமானது என கருதுகின்றேன்.

துக்ளக் :      நல்ல பொருளாதார கட்டுரைகளுடன், அரசியல் நிகழ்வுகளை பற்றிய அலசலுடன் வெளிவருகின்றது. அதன் ஆசிரியர் திரு.சோ அரசியல் பற்றி எழுதும் தலையகங்கள் அனைத்தும் படிக்க சுவாரஸ்யமானவையாக இருக்கும். துக்ளக் ஆசிரியர் பற்றி பலவிதமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், துக்ளக் வாசிப்பது நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.

நாணயம் விகடன் :     தற்சமயம் பங்கு சந்தை பற்றி தமிழில் வரும் முதலீட்டாளர்களின் அதிக ஆதரவு பெற்ற மாதமிரு இதழ் இதுவாகவே உள்ளது. பங்கு வர்த்தக நிலவரங்கள் வெகு வேகமான மாறிக் கொண்டிருக்கையில் மாதமிரு இதழாகவே உள்ளது குறையாக உள்ளது. the Business Today இதழும் மாதமிரு இதழாக இருந்தபோதிலும், பக்கங்கள் அதிகம், செய்தி சுருக்கங்கள் அதிகமாக இருக்கும். தமிழில் அம்மாதிரி முயற்சிகள் முதலீட்டாளர்களை அயற்சிக்குள்ளதாக ஆக்கும் என விகடன் நிர்வாகத்தினர் நினைப்பதும் சரியே. ஆனால், ஒரு முறை முயன்று பார்த்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
ஆங்கில இதழ்களில் பங்கு சந்தை பற்றி கீழ்க்கண்ட இதழ்கள் இருக்கின்றன.

The Business Today, Businessworld, Outlook Profit, Outlook Money, Dalal Street, Capital India, Business & Economy.

கீழ்க்கண்ட ஆங்கில  இதழ்களை நான் பரிந்துரை செய்கின்றேன்.
The Business Today:      செய்தி சுருக்கங்கள் நன்றாக இருக்கும். கடைசி பதினைந்து நாட்களில் வந்த முக்கிய வணிகச் செய்திகளின் சுருக்கங்கள் மிக தெளிவான முறையில் வெளியிடப்பட்டிருக்கும். வணிக பரிந்துரைகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் மாதமிருமுறை இதழ். விலையும் குறைவு.

Businessworld:      வார இதழ். வார முக்கிய வணிக செய்தி சுருக்கங்களை கொண்டிருக்கும். கவர் ஸ்டோரிகள் நன்றாக இருக்கும். விலை குறைவு.
Business & Economy:     கல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிளான்மேன் மீடியா பிரசுரத்தினரால் மிகக்குறைந்த விலையில் வெளிவரும் வணிக இதழ். மிகக் குறைவான விலை என்பது ப்ளஸ். தலையகங்கள் ஒரு மாதிரியாக இருக்கும். இதே பிரசுரகத்திலிருந்து வெளிவரும் தி சன்டே இந்தியன் என்ற இதழையும் பரிந்துரை செய்கின்றேன். (தமிழிலும் வெளிவருகின்றது.)

India Today  : இந்தியா டுடே தலையகங்கள் நன்றாக இருக்கும். இந்தியா தொடர்பான சில முக்கிய செய்திகளை தெரிந்துக் கொள்ளலாம். வாசிப்புப் பட்டியலில் அவசியம் இருக்க வேண்டிய தேசிய இதழ்.

பங்கு சந்தை தொடர்பான வணிகப்பூக்கள்
திரு. சரவணக் குமாரால் நடத்தப்படும் “பங்கு வணிகம்” : ஒவ்வொரு நாளும் பற்றி அவர் கொடுக்கும் விவரங்கள் கட்டாயம் தவறவிடக் கூடாதவை. குறை என்று பார்த்தால் வாரக்கடைசியில் சந்தையை பற்றி அவர் எழுதும் கட்டுரைகள் எல்லாம் நன்றாக இருக்கும். தற்சமயம் அவர் அக்கட்டுரைகளை எழுதுவதில்லை. அவை தொடரப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

திரு.சாய் கணேஷ் என்பவரால் நடத்தப்படும் “top10shares” என்ற தளமும் நன்றாக இருக்கும். சந்தையை பற்றி டெக்னிகல் விவரங்களை மிக அருமையாக தமிழில் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

   இவை தவிர வேறு வணிக தளங்கள் கூட இருக்கலாம். தெரியப்படுத்தி, பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

 கடைசிப் பகுதியினை நாளை நிறைவு செய்கின்றேன்.

Entry filed under: Hunter's Mind.

24-09-2008 25-09-2008

7 Comments Add your own

 • 1. batcha  |  September 25, 2008 at 7:44 am

  its really good

 • 2. karthikeyan G  |  September 25, 2008 at 9:13 am

  http://www.finance.google.com is too useful for me at works as the data changes automatically in the portfolio without any refresh. (P.s :: Only BSE added in finance.google.com as of now )

  Also can add FRONTLINE.. it too useful manytimes by its unbiased international news & politics b/w the countries and their policies.

  //துக்ளக் : நல்ல பொருளாதார கட்டுரைகளுடன், அரசியல் நிகழ்வுகளை பற்றிய அலசலுடன் வெளிவருகின்றது. அதன் ஆசிரியர் திரு.சோ அரசியல் பற்றி எழுதும் தலையகங்கள் அனைத்தும் படிக்க சுவாரஸ்யமானவையாக இருக்கும். //
  Mr Gurumoorthy’s writings are too good in it. But its too biased.. especially abt Modi. (Cho is a BJP M.P)

  //துக்ளக் ஆசிரியர் பற்றி பலவிதமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், துக்ளக் வாசிப்பது நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.// Me TOO 🙂
  thnx,
  Karthi G

 • 3. sharehunter  |  September 25, 2008 at 2:54 pm

  Frontline, Aside எல்லாம் நின்று போய்விட்டது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன், கார்த்தி. இரண்டுமே நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் இருந்தபோதிலும், மொழி நடை Conservative ஆக இருக்கும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்காது என்று நினைக்கின்றேன். ஆபிசுலயும் Google Finance தானா?

  நரேந்திர மோடியை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்தபோதிலும், ஒரு நல்ல ஆட்சியாளர். தன்னுடைய மாநிலத்தை மிகச் சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். தடைபடாத மின்சாரத்தை கொண்ட மாநிலமாம். கவிதைகள் எல்லாம் எழுத தெரியாதாம்.

  ஜெயமோகனின் தளத்திற்கு (www.jeyamohan.com) சென்று அவரின் இந்திய பயணக்கட்டுரைகளை படியுங்கள், கார்த்தி. நம் அயல் மாநிலங்கள் பற்றிய விவரங்கள் தெரியும்.

 • 4. karthikeyan G  |  September 25, 2008 at 5:13 pm

  வரலாறு மோடியை மதக் கலவரங்களை அடக்க தெரியாத (அ) தெரியாதது போல் நடித்த அவரது நிர்வாக திறமையின்மையையே நினைவில் வைத்திருக்கும். அவர் இல்லாவிட்டலும் குஜராத் வளர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

  //கவிதைகள் எல்லாம் எழுத தெரியாதாம். //

  உங்களிடம் நக்கல் அதிகமாக உள்ளது. மோடியை புகழ்ந்து சொன்னால் நீங்களும் அவரோடு சேர்ந்து மத கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.. ஜாக்கிரதை !!! 🙂

 • 5. sharehunter  |  September 25, 2008 at 6:07 pm

  கார்த்தி, கலவரங்கள் என்பது மிகவும் குழப்பமானது. ஒருசமயம், நான் கூட ஒரு கலவர சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். யார் நல்லவன், கெட்டவன் என்றே தெரியாது, மேலும் எதற்காக அந்த கலவரம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த காரணங்கள் எல்லாம் மறந்து போய் ஒருவித பதட்ட சூழ்நிலையில் அனைவருமே இருப்பார்கள்.

  பங்கு சந்தையில் முதலீட்டாளராக இருக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. அதனை இரும்பு கரம் கொண்டெல்லாம் உடன் அடக்க முடியாது. உங்களுக்கு நன்கு தெரிந்தவர் கூட அந்த சூழ்நிலையில் மாறி விடுவார். கத்ரினா புயல் அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரத்தை தாக்கியபோது, ஏற்பட்ட கலவரங்களின் கதைகளை நீங்கள் படித்திருக்கின்றீர்களா? அங்கேயும் அப்படிதான் நடந்தது.

  ஆனால், இது பற்றி சரி, தவறு என்று பேச நிறைய உள்ளது. நான் சொல்ல வருவது தற்போதைய முதலமைச்சருக்கு முன் நிறைய முதலமைச்சர்கள் ஆட்சி புரிந்த போதிலும், இவரின் சில அறிக்கைகள் மிகவும் தைரியமாக உள்ளன. விவசாயிகளுக்கு மின்சாரம், வரி வசூலிப்பு, ரெளடிகளை அடக்குதல் போன்ற விஷயத்தில் இவர் காட்டும் முனைப்பு நன்றாக இருக்கிறது என்பதே என் கருத்து. இதனை துக்ளக் இதழில் வெளியிடுவதை படித்து விட்டு மட்டும் சொல்லவில்லை. என் நண்பர்கள் கருத்துகளும் அதே போல இருக்கின்றது.

 • 6. selvakumar r  |  September 25, 2008 at 7:27 pm

  i read your tamil article about the trades’ fundamental things. really it is fanastic. i wish to know the blogs address of share trade and top 10 shares by MR.sai ganesh. If you do not mind please give me websites addresses of techanical

  thank you

 • 7. sharehunter  |  September 25, 2008 at 8:55 pm

  hi selvakumar,

  I already gave the website addresses. please click on the link.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
September 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: