23-09-2008

September 23, 2008 at 5:32 am 7 comments

      நேற்றைய தினம் அமெரிக்க சந்தை 370 புள்ளிகளை இழந்துள்ளது. துவங்கியுள்ள ஆசிய சந்தைகள் சுரத்தே இல்லாமல் தொடங்கியுள்ளது. நமக்கு இன்னும் Future & Options  முடிய இன்னும் முன்று நாட்களே உள்ளன.

     இன்றைய சந்தை gap down தொடங்க வாய்ப்பு உண்டு. ஆனால், நிப்டி பங்குகள் அனைத்தும் நல்ல விலையில் உள்ளன. வாங்குபவர்கள் அதிகரிக்கக் கூடும். மேலும் F  & O அருகில் இருப்பதனால், கடைசி நேர இலாபத்தை உறுதிசெய்ய எது வேண்டுமானாலும் செய்யக் கூடும்.

      இன்னும் முன்று நாட்களுக்கு நம் சந்தையின் பாதை தனி. உலக சந்தைகளை பொருட்படுத்தாமல் செல்லும் என நினைக்கிறேன்.

    தின வணிகம் செய்பவர்கள் F & O நிலையை பார்த்தே இன்று செய்யலாம். அதற்கேற்றது போல, சந்தையும் ஆட ஆரம்பிக்கும். ஐரோப்பிய சந்தைகள் இன்று gap up ஆக ஆரம்பிக்கக் கூடும் என நினைக்கிறேன். பார்ப்போம்.

For Information : L & T Bonus 1:1 ex-date 1.10.2008.

Post Market:

     ஒவ்வொரு நாளும் அமெரிக்கா அதனுடைய நிதி நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவப் போகின்றது என்ற speculations வைத்தே சந்தைகள் நகரப் போகின்றது. உலக சந்தைகளில் பெரும்பாலான சந்தைகள் short selling -க்கு தடை விதித்து உள்ளன. நம் சந்தை தடை விதிக்க வில்லை. சந்தையின் அடிப்படை மீது மிகுந்த நம்பிக்கை நிதி அமைச்சகம் வைத்துள்ளதாகவே கருதலாம். மேலும் சந்தை இச்சமயத்தில் பலவீனமடைந்தால், வரப்போகும் தேர்தலில் கணிசமான வாக்குகளை இழக்க நேரிடும் என்ற காரணத்தை முன்னிட்டு, மத்திய அரசு ஏதேனும் நம்பிக்கை தரும் செய்திகளை வைத்திருக்கும் என்றே நம்புவோம். இன்றைய சந்தை வழக்கம்போல் நேற்றைய அமெரிக்க சந்தையை பார்த்து, ஒரு வித பாதுகாப்பின்மையுடன் ஆரம்பித்தது. முதலீட்டாளர்கள் சிறிது மேலேறினாலும் Profit-booking செய்ய ஆரம்பித்து விடுகின்றார்கள். எல்லோரும் ஒரு வித பாதுகாப்பின்மையுடன் இருப்பதாகவே படுகின்றது.

      நாளை எவ்வாறு சந்தை இருக்கும் என தற்போது உங்களுக்கு ஏதேனும் ஊகங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம். 4275? possible?

Entry filed under: Market Analysis.

22-09-2008 24-09-2008

7 Comments Add your own

  • 1. V.SURESH, SALEM  |  September 23, 2008 at 6:59 am

    Thank you very much for your views sir.

  • 2. batcha  |  September 23, 2008 at 7:50 am

    Thx for your info

  • 3. Ganesh  |  September 23, 2008 at 7:56 am

    Dear Sharehunter,

    Good Morning, Thank you very much for your daily market analysis.

  • 4. Ganesh  |  September 23, 2008 at 5:56 pm

    கடந்த இரண்டு நாட்களாக சந்தை சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, நாளை SHORT COVERING நடந்தால் நீங்கள் சொன்ன 4250-4275 நிலையை எட்டலாம், இல்லாவிடில் 4250 நிலை என்பது நாளை எட்டாக்கனி ஆகிவிடும், பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

  • 5. sharehunter  |  September 23, 2008 at 6:03 pm

    Look at Dow! It’s jumping up now. நம்பாளுங்க எல்லாம் short-covering-ல்ல போக்கிரி விஜய் மாதிரி. ஆரம்பிச்சிட்டாங்கனா யாரு சொல்றதையும் கேட்கமாட்டாங்க. மறுநாள் காண்ட்ராக்ட் நோட் வந்தபிறகு தான் தெரியும்.

  • 6. Ganesh  |  September 23, 2008 at 6:25 pm

    சரியாக சொன்னீர்கள், short covering நம்மாளுங்க ரொம்ப கில்லாடிகள் ஒரேடியாக சந்தையை மேலே கொண்டு செல்வார்கள் அதேபோல் ஒரே நாளில் சந்தையை கீழே கொண்டும் செல்வார்கள், தங்களி வாக்கு பலிக்கட்டும் நாளைய சந்தை 4275 நிலையை எட்டினால் மகிழ்ச்சிதான்…..

  • 7. sharehunter  |  September 23, 2008 at 9:00 pm

    என்ன கொடுமை இது, கணேஷ். Dow Dives Again.

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
September 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930