#6 Fundamental Analysis-Capital II

September 21, 2008 at 10:25 am 1 comment

     குழுமம் ஒவ்வொரு நிதியாண்டு (Financial Year)  முடிவிலும் அதன் பங்குதாரர்களுக்கு ஆண்டு கணக்கறிக்கையை (Balance Sheet & Profit & Loss Account)  கொடுக்கவேண்டும். நிதியாண்டு முடிவில் பெற்ற இலாபத்தில் எவ்வளவு ஈவுத்தொகையைாக (Dividend) வழங்க போகிறது, மீதியுள்ள இலாபத்தை என்ன செய்ய போகின்றது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இலாபம் பெற்றவுடனேயே ஈவுத்தொகை வழங்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. பொதுவாக முதல் ஐந்தாண்டுகளில் பெறும் இலாபத்தை ( இலாபத்தில் மிகச் சிறிய சதவீதம் மட்டுமே ஈவுத் தொகையாக வழங்கப்படும்) மீதியை குழும ரிசர்வ் தொகையில் (Reserves & Surplus) சேர்த்துவிடுவார்கள்,  குழும விரிவாக்கத்திற்கு உதவும் என்பதால். இந்த நிலையும் தற்போது மாறி வருகிறது. முதல் ஆண்டிலேயே ஈவுத் தொகை வழங்க ஆரம்பித்த குழுமம் என்ற விளம்பரத்திற்காக சில குழுமங்கள் ஈவுத் தொகை முதல் இலாபத்திலேயே வழங்க ஆரம்பித்து விடுகின்றன.

       ஒரு குழுமம் குறிப்பிட்ட அளவு முலதனத்துடன் தொடங்கி, விற்பனையை பெருக்கி நன்றாக வளர்ந்து வருகின்றது என்னும்போது, அக்குழுமத்தின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? தங்களுடைய விற்பனையை விரிவுபடுத்த, புதிய எல்லைகளை தொட, புதிய விற்பனை மையங்களுக்கு செல்ல வேண்டுமென தோன்றுவது இயற்கைதானே! குழுமம் ஆரம்பித்த சில வருடங்களிலே விரிவாக்கம் என்னும்போது அக்குழுமத்திற்கு பெரிய அளவில் ரிசர்வ் தொகை ஏதும் இருக்காது. அச்சமயத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட முலதனம் பற்றாது என்பதால், தேவைப்படும் முலதனத்திற்கு கீழ்க்கானும் வழிகள் முலம் மீண்டும் முலதனம் திரட்ட வகை செய்யும். 

 1) முலதனம் விரிவாக்கம் (உரிமை பங்குகள் (Right Issue))

    10 கோடி ருபாய் முலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு குழுமம் புதிய தொழிற்சாலை ஆரம்பிக்க/புதிய துறையில் இறங்க/மற்றொரு குழுமத்தை கையகப்படுத்தும் பொருட்டு கூடுதல் முலதனம் தேவைப்படின், புதியதாக தேவைப்படும் முலதனத்தையும் பங்குகளாக பிரித்து அதனை அக்குழும பங்குதாரர்களுக்கு ஒரு குறிபிட்ட விகிதத்தில் வழங்கும் முயற்சியே Right Issue எனப்படும்.  இதற்கு அக்குழுமம் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செபி போன்ற அமைப்புகளிடம் அனுமதி பெற்றாக வேண்டும். மேலும் ஒரு குறிப்பிட்ட தேதியை தேர்ந்தெடுத்து அத்தேதியில் யாரிடம் அக்குழும பங்குகள் இருக்கின்றதோ, அவர்கள் இந்த உரிமை பங்குகளை வாங்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். உரிமை பங்குகள் வெளியீடும்போது சந்தை விலையை விட குறைவான விலை வைத்தே வெளியிடுவதால், உரிமை பங்குகளை வாங்குவதற்காக முதலீட்டாளர்கள் அக்குழும பங்குகளை விலையேற வைத்து விடுவார்கள். அக்குழுமமும் ஆரம்பத்தில் வெளியிட்ட பிரிமியம் விலையைவிட அதிகமாகவே வைத்து வெளியிடும். அந்த குறிப்பிட்ட தேதி முடிந்தவுடன் அக்குழும பங்குகளானது விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், அந்த காலாண்டு முடிவுகள் சரியாக அமையாவிட்டால் மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில், இலாபத்தை பங்கு போட நிறைய பங்காளிகள் வந்துவிட்டனர் அல்லவா! அந்த தேதியில் பங்குகள் வைத்திருப்பவர்கள் வீட்டு முகவரிக்கு ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்குள் உரிமை பங்குகள் கோரும் விண்ணப்பம் தபாலில் அனுப்பப்படும். வாங்க வேண்டுமென்ற கட்டாயமில்லாவிட்டாலும், சந்தை விலையை விட குறைவாக கிடைக்கும் பொழுது வாங்குவது கண்டிப்பாக இலாபம் தான் (நல்ல குழுமம் என்றால் மட்டுமே). 

      இங்கே இன்னொரு விஷயம் குறிப்பிட விரும்புகின்றேன். எனக்கு தெரிந்த நிறைய முதலீட்டாளர்கள் இம்மாதிரி உரிமை பங்குகள் வாங்க வாய்ப்பிருந்தும் வாங்காமல் விட்டுவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவென்றால், உரிமை பங்குகள் கோரும் விண்ணப்பமானது மிக சிக்கலான மொழியில் இருந்ததது என்றும், அதனை Fill up செய்ய தங்களுக்கு தெரியவில்லை என்றும், அதனால் போனால் போகின்றது என்று விட்டுவிட்டதாகவும் கூறியிருக்கின்றனர். இது பற்றி உங்கள் யாருக்காவது ஏதேனும் அனுபவங்கள் இருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

     உதாரணத்திற்கு, டாடா மோட்டார் (Tata Motors)  குழுமம் உரிமை பங்கு வெளியீடாக ஆறு பங்குக்கு ஒரு பங்கு (1:6) என்ற விகிதத்தில் ருபாய் 295/- வீதம் வெளியிட்டது. டாடா மோட்டார் குழும பங்குகளை 09.09.2008 அன்று வைத்திருப்பவர்கள் அனைவரும் இதில் பலன் பெறலாம்.

Advertisements

Entry filed under: Fundamental Analysis.

19-09-2008 22-09-2008

1 Comment Add your own

  • 1. Ganesh  |  September 21, 2008 at 7:32 pm

    நல்ல கட்டுரை, இதே போல் தாங்கள் INTRADAY TRADING TECHNIQUES முறை பற்றியும் விளக்கமளிக்க வேண்டும், தங்களின் இந்த பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    நன்றி..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: