ஒரு ருபாய், ஒரு கிலோ

August 31, 2008 at 10:59 am 7 comments

     செய்தி அலசல் என்ற புதிய பகுதியை இன்று முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன். முதலீட்டாளர்களாகிய நாம் செய்திதாட்களில் வெளிவரும் செய்திகளை படிப்பது மட்டுமல்லாமல், அது குறித்து அலசும் திறமையையும் வளர்த்துக் கொள்ள இப்பகுதி உதவும். உலகில் ஏதேனும் ஒரு நாட்டில் ஏற்படும் புரட்சி முதல் உள்ளுர் கோயில் திருவிழா செய்திகள் வரை அலசலாம். உலகம்,தேசிய, மாநில செய்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அது குறித்து அலசி காய போடலாம்.  இதை நான் மட்டும் செய்ய போவதில்லை, நீங்களும் உங்கள் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள்.

     கூடுமானவரையில், உங்கள் கருத்துகள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருத்தல் நலம்.

     இந்த வாரம் தமிழக முதல்வர் ஒரு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுதான் செய்தி.

     தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலமாக தேர்தலில் வெற்றிபெற அரிசி மற்றும் காய்கறிகளின் விலை ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக அரிசி. தமிழக மக்கள் அரிசி உணவை தங்கள் வாழ்வின் முக்கிய அம்சமாக நினைக்கின்றார்கள். இதற்கு மாற்றாக கோதுமை உணவை அரசு ஒருமுறை பரிந்துரைத்து நியாயவிலைக் கடைகளில் கோதுமை வழங்க முற்பட்டபோது, தமிழக மக்கள் அத்திட்டத்தினை முற்றிலும் நிராகரித்து படுதோல்வியடைய செய்தனர்.

       அரிசி உணவை பற்றி பல கதைகளும் நிலவுகின்றன. அரிசி உணவை சாப்பிடுவதால், முளை வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது என்றும், சர்தார்ஜீ மற்றும் தமிழன் இரயிலில் போகும்போது நடந்த சம்பவம் போன்று நிறைய கதைகள் இருக்கின்றன. அரிசி உணவு சாப்பிடுவதால் முளை வளர்ச்சி ஏற்படுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால், வணிக ரீதியில் பார்க்கும்போது அரிசி ஒரு முக்கிய வணிக பொருள். பங்குகளில் நிப்டி குறியீட்டில் உள்ள பங்குகள் அனைத்தும் எவ்வாறு Liquidity அதிகமாக உள்ளதோ, அரிசியும் Liquidityஅதிகமுள்ள வணிக பொருள். மற்ற விவசாய தானியங்களில் சில வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே தேவை அதிகமாக இருக்கும். ஆனால், அரிசி வருடத்தில் எல்லா காலங்களிலும் தேவை உள்ள விவசாய தானியம். எனவே, இதை வைத்து பணம் செய்யும் ஆபரேட்டர்கள் அதிகம் உண்டு. அதன் விலையை செயற்கையாக ஏற்ற பற்றாக்குறையை உண்டு பண்ணி விலையை ஏற்றி இலாபம் சம்பாதிப்போரும் அதிகம். இது ரொம்ப நாளாக நடந்து வரும் ஒன்றாகும். பழைய கருப்பு வெள்ளை படங்களில் பார்த்தோமென்றால் அப்பா வேடமிடத்திருக்கும் நடிகர்களை அவர்கள் மகன்கள் வீட்டில் அரிசி முட்டைகளை அடுக்கி வைத்திருக்கின்றதை வெளியே சொல்லி விடுவோம் என்று மிரட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
      இரண்டு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் அதை பல்வேறு இடருக்கிடையில் நிறைவேற்றவும் செய்தது. எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்பதைவிட அரிசி கடத்தல் அண்டை மாநிலங்களுக்கு பேஷாக நடந்து வந்தது. தற்போது விலைவாசி உயர்வு அதிகம் என்பதால், அரிசி விலையை செயற்கையாக ஏற்ற ஆபரேட்டர்கள் முயற்சி செய்வார்கள் என்பதாலும், அதன் விளைவை தமிழக அரசு மீது மக்கள் தேர்தலில் காட்டுவார்கள் என நினைத்து கூட, தமிழக அரசு  இந்த திட்டத்தை அறிவித்து இருப்பதாகவும் கருதலாம். ஆனால் தேர்தலுக்கு நிறைய நாட்கள் இருக்கும்நிலையில் இவ்வாறான திட்டத்தினை தீடீர் என அறிவித்திருப்பதால், தமிழக அரசில் சில மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கலாம் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு தமிழக மக்கள் Positive Reaction வேண்டுமென என்று கூட இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினை மின்வெட்டு என்றே நான் நினைக்கின்றேன். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அது குறித்து தமிழக நாளிதழ்களில் அரசு அறிக்கைகளை  தற்சமயம் வெளியிட்டு வந்தபோதிலும், அது குறித்து உடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக மக்களின் கஷ்டம் நீங்கும் என நம்பலாம்.

Entry filed under: செய்தி அலசல். Tags: .

Intraday Trading V 01-09-2008

7 Comments Add your own

 • 1. scssundar  |  August 31, 2008 at 12:40 pm

  //ஆனால் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினை மின்வெட்டு என்றே நான் நினைக்கின்றேன்.//

  இதை மறைக்கத்தேனே ஒரு ரூபாய் அரிசி…ஒரு ரூபாய் மட்டும் எதற்கு இலவசமாகவே கொடுத்துவிடலாமே?

  ஒரு ரூபாய்க்கு ஒரு பில் அதைபோட ஒரு ஆள் இதேல்லாம் தேவையா?

 • 2. EASWAR MOHAN  |  August 31, 2008 at 8:09 pm

  Do u feel this Tamilnadu govt really cares for the country or people??
  The backbone of our country is Agriculture only…!
  Any business can withstand atleast a day without electricity, as the production can be done on the next day. But Agriculture industry cannot withstand a single day as it will affect the production on the whole yield.

  Does they reavel any data about the situation of the electricity scare we face for such a long time? Neither they care about the economy nor the people of the country.

  From the day this govt sworn in, they never cared about the country or the people, instead they make a fake atmosphere in bringing to say the people that they have done everything they said during election time. Does this election stunts work well for the country in future????? a big question arises about the environment we leave for our child to live here.
  Here ae some sample good things done to the people below poverty 🙂
  Free TV ,
  Govt cable,
  Free gas stove,
  One rupee rice,
  Aid for unemployed graduates,
  A graduate can get an aid of 400 Rs of aid per month, buy rice at Rs 2/- Kg,cook the rice with free gas stove and take rest with free govt tv and cable.

  This will make our “Honourable President A.B.J.Abdul Kalam”s dream come true of becoming of Proud nation “INDIA ORU VALLARASU”.

 • 3. EASWAR MOHAN  |  August 31, 2008 at 8:17 pm

  Please share your thoughts about the comments by me sir.
  Thank you,
  Anbudan,
  Mohan

 • 4. sharehunter  |  August 31, 2008 at 8:27 pm

  நண்பரே,

  உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் நிலைமை மாறிக் கொண்டிருக்கின்றதை நீங்கள் அறிய வேண்டும். நமது நாட்டை விட இன்னும் மோசமான நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஒரு காலத்தில் இருந்தன. கண்டிப்பாக இந்த நிலை மாறும். மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது. நமது கடமை என்னவென்றால், இது பற்றி தெரியாதவர்களுக்கு தெரிய வைப்பதே. ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாதே!
  குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! இன்னும் பத்து வருடங்களில் நம் மாநிலம் மற்றும் நாட்டின் நிலைமை வளமானதாக மாறும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

 • 5. Ganesh  |  August 31, 2008 at 8:48 pm

  Dear Sharehunter,

  Very good article and timely published it, Now in tamilnadu we are facing very big problem of ELECTRICITY POWER CUT, I think they want to hide all the problems and they have some other future plans (may be political power change). Keep it up…..

  Thanks….

 • 6. கண்ணன்  |  September 1, 2008 at 12:10 am

  mikaum nanri thotarka sevai

 • 7. ramana  |  September 1, 2008 at 7:55 am

  கலைஞர் அவர்களுக்கு அடுத்த தேர்தல் பயம். வந்து விட்டது போல் தெரிகிறது.

  இலவசங்கள் காப்பற்றுமா?

  அரிசிக் கடவூள் கடைசி அயுதமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
August 2008
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: