Intraday Trading V

August 30, 2008 at 7:53 am 7 comments

     பங்கு சந்தையில் நுழைந்த ஒவ்வொருவரும் முதலில் ஈர்க்கப்படுவது தின வணிகத்தில்தான். குறிப்பாக எந்த அனுபவமும் இல்லாமல், குழுமங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட, இதில் மிகுந்த உற்சாகமாக ஈடுபடுவார்கள். சிலருக்கு முதல் சில தின வணிகங்களில் இலாபம் கூட கிடைக்கலாம்.இவர்கள் இதனை பங்கு சந்தை என்று பார்த்தால் கூட, என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டக் கூடம் என்று தான் சொல்வேன். சிலர் முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.

      குறிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய  ஒரு விஷயம். வாரன் பப்பெட் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பங்கு சந்தை முதலீட்டை மட்டுமே மேற்கொண்டு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரானவர். 1960-களில் தொடக்கத்தில் முதலீடு செய்ய அவரிடம் தொகை இருந்தபோதிலும், சரியான விலையில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டுமென்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருந்தார். அதற்கு பிறகு வந்த ஒரு பெரும் அமெரிக்க பங்கு சந்தை சரிவில் அனைவரும் விற்றுவிட்டு ஒடும்போது, இவர் பெரும் தொகையுடன் நுழைந்தார். பத்து வருடங்கள் காத்திருக்கும் அளவிற்கு பொறுமை. நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று.

     தின வணிகத்தில் நாம் எவ்வாறு ஈடுபடபோகிறோம் என்பதை விட எங்கிருந்து ஈடுபட போகிறோம் என்பதை முதலில் பார்ப்போம். நாம் பொதுவாக கீழ்க்கண்ட வகையில் தின வணிகம் செய்து கொண்டிருக்கிறோம்.

1) பங்கு தரகு நிறுவனத்திலிருந்து

2) வீட்டிலிருந்து ( இணையம் முலமாக)

3) அலுவலகத்திலிருந்து (On the Road)
     பங்கு தரகு நிறுவனத்திலிருந்து என்றால் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை அங்கிருப்போம். சந்தையின் தீடீர் சரிவு, ஏற்றம் போன்றவை நமக்கு உடனே தெரியும். அதற்கேற்ப நாமும் தயார்நிலையில் இருப்போம். அங்கு தவிர்க்க வேண்டியது என்னவெனில் . உங்களை போலவே நிறைய பேர் பல்வேறு வணிக குறிப்புகளுடன் வந்திருப்பார்கள். சிலர் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்வார்கள். அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் காலையில் என்ன திட்டத்தில் வந்திருக்கின்றீர்களோ அதை மட்டும் பார்த்தால் நல்லது. முதலில் காலையில் உள்ளே வரும்போது நீங்கள் தின வணிகம் செய்யபோகும் பங்குகளுக்கான வணிக குறிப்புகளுடன் நுழைவது அவசியம். அங்கே போய் எது ஏறுதோ அதை பிடிப்போம் என “குதிரைப் பந்தய” நிலையில் நுழையவே கூடாது. அனுபவம் இல்லாதவர்கள் ஒரு பங்கிற்கு மேல் கவனம் செலுத்தமால் இருத்தல் நலம்.

    சந்தை துவங்கிய பிறகு, நீங்கள் தின வணிகம் செய்யும் பங்குகளின் நிலையை மட்டும் கவனமாக பார்த்தால் போதும். அப்போதுதான் உங்கள் அருகிலுள்ளவர் ” Positive News வந்துடுச்சி. இவன் பாய போறான் பாரு. பார்த்துக்கிட்ட இரு” என்று சொல்லி distract செய்தாலும் நீங்கள் கவனத்தை விலக்காமல் இருக்க ஒரு அசாத்தியமான self-discipline தேவை. நீங்கள் அந்த “பாயும் புலியை” பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் Counters Close பண்ணி விடுவார்கள்.
     வீட்டிலிருந்து செய்பவர்கள் என்றால் அங்கும் distractions இருக்க வாய்ப்புண்டு. முக்கியமாக இணைய தொடர்பு மற்றும் மின்சாரம். இணைய தொடர்பு துண்டிக்கப்படுதல் மற்றும் மின் தடை இவற்றை எதிர்பார்த்து அதற்கேற்ப கண்டிப்பாக Contingency Plans செய்து கொள்ள வேண்டும். இவை மட்டுமில்லாமல் Domestic distractions கூட இருக்க வாய்ப்புண்டு. “ஏங்க, சோப்பு தீர்ந்து போயிடுச்சி. வாங்கிட்டு வாங்களேன்!”. நீங்கள் கடைக்கு போய் சோப்பு வாங்கி வருவதற்குள், சந்தை உங்களை குளிப்பாட்டி விட்டிருக்கும்.
      அலுவலகத்திலிருந்து, பயணத்தின்போது சிலர் தின வணிகம் செய்யலாம். அலுவலகத்திலிருந்து என்றால் ஒவ்வொரு தடவையும் சூப்பர்மேன் தன் உடையை மாற்ற மறைவிடத்திற்கு செல்வது போல செல்போனை துாக்கிக் கொண்டு, மறைவிடத்திற்கு சென்று உங்கள் பங்குகளின் நிலவரங்களை கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அலுவலகப் பணியும் பாதிக்கப்படும். பயணத்தின்போது Distractions மிகவும் அதிகம். செல்போனில் ஆர்டர்கள் சொல்லும்போது பிற இரைச்சல்கள் உங்களை பாதிக்கும். உங்கள் ஆர்டரை செல்போனில் நீங்கள் சொல்லும்போது “நேற்று இராத்திரி யம்மா” பாட்டு உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்கும். உங்கள் பங்கு தரகரும் சரியாக புரிந்துக் கொள்ளாமல் வேறு எதையாவது செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
     முதலில் தின வணிகத்திற்கு தேவை என்று பார்த்தோமென்றால் மிகத் தெளிவான திட்டம். தின வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நிறைய பேர் ஸ்டாப் லாஸ் பற்றியே யோசித்திருக்க மாட்டார்கள். வாங்கும் விலை, இலக்கு விலை இவையிரண்டும் மட்டுமே தெரியும். ஸ்டாப் லாஸ் என்று கொடுத்திருந்தால் கூட அதை பொருட்படுத்துவதில்லை. இவ்வளவு இலாபம் என்று கணக்கிடும்பொழுதே இவ்வளவு நஷ்டம் மட்டுமே வரும் என்ற கணக்கீடும் முக்கியம்.

     இரண்டாவது அம்சம் பொறுமை. ஆம். தின வணிகத்திலும் பொறுமை மிக முக்கியம். காலை 10.00 மணிக்கு வாங்கிய பங்கு அதன் இலக்கு விலையை மாலை 3.25 அளவில் கூட எட்டலாம்.  அடுத்த ஒரு மணிநேரத்திலேயே இலக்கு விலையை எட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவ்வாறு எட்டாவிடில் அதை விட்டுவிட்டு நமது திட்டத்தில்லாத வேறு ஒரு பங்கிற்கு தாவுவது தவிர்க்கப்பட வேண்டும்.

     முன்றாவது சுய கட்டுப்பாடு. உங்கள் பங்குகள் அதன் இலக்கினை ஒரு மணி நேரத்திலேயோ அதற்குள்ளேயே எட்டி விட்டால் சந்தையை விட்டு ஒதுங்கியிருப்பது உத்தமம். சந்தையை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வாறு செய்வதும் தவறில்லை. சந்தையில் வேறு எந்த வித தின வணிகமும் அன்றைய தினம் செய்யாமல் இருப்பது உத்தமம்.

     தின வணிகத்தில் மிகவும் அடிப்படையான யுக்திகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Advertisements

Entry filed under: தின வணிகம்.

29-08-2008 ஒரு ருபாய், ஒரு கிலோ

7 Comments Add your own

 • 1. sharehunter  |  August 30, 2008 at 11:51 am

  என்ன கோளாறு என்று தெரியவில்லை. கமெண்ட் பாக்ஸ் ஒபன் ஆகவில்லை. சரிசெய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

 • 2. Ganesh  |  August 30, 2008 at 6:33 pm

  Dear Sharehunter,

  Very good and awaited intraday trading analysis, Good information and everyone keep in mind things, Keep it up…
  Thanks…

 • 3. Viaml  |  August 31, 2008 at 8:28 am

  your details are very nice.

  If possible, please write about intra-day tips given by various websites & tv channels.

  Thanks.

 • 4. V.SURESH, SALEM  |  August 31, 2008 at 9:20 am

  Very good sir.

  Every intraday trader should have these things in their my mind before trading.

  Keep it up.

  Expecting the next part very soon.

 • 5. hari  |  September 7, 2008 at 10:37 am

  sir ,
  better would be to update every 2 hours

 • 6. atozforexdetails  |  October 1, 2015 at 8:08 pm

  பங்குச் சந்தை பற்றிய மாறவே மாறாத உண்மைகள்:

  1. பங்குச் சந்தை என்பது நூறு சதவிகிதம் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.

  2. எங்க டிப்ஸ், இண்டிகேட்டர், ரோபோட், சாப்ட்வேர் யூஸ் பண்ணுங்கள் ரிஸ்க் இல்லாமல் பணம் பண்ணலாம் என்பவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள். ரிஸ்க் கட்டாயம் இருக்கிறது. எவ்வளவு ரிஸ்க் எடுகிறோமோ அவ்வளவு பணம் பண்ணலாம் என்பதே உண்மை. ரிஸ்க் என்பதைக் கட்டாயம் தவிர்க்க முடியாது, ஆனால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை வேண்டுமானால் முன்கூட்டியே முடிவு செய்ய இயலும்.

  3. எங்க இண்டிகேட்டர் நூறு சதவீதம் லாபம் தரும் என்பதும் ஆயிரம் சதவீதம் பொய். மார்கெட் பேஸ்டு ஆன் வால்யுமே ஒலிய இண்டிகேட்டர் அல்ல. அதாவது ஒரு இண்டிகேட்டர் பை காட்டினாள் பை பக்கமோ,அல்லது ஒரு இண்டிகேட்டர் செல் காட்டுவதால் மார்கெட் செல் பக்கமோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி ஒரு விஷயம் துல்லியமாக இருந்தால் அந்த விசயத்திற்கு அந்த நபர் அல்லது அந்த நிறுவனம் காபிரைட் வாங்கி இருக்கும். நூறு ரூபாய் போட்டால் தினம் நூறு ரூபாய் கிடைக்கும் என்றால், எல்லா நிறுவனங்களும் முதலீட்டு நிர்வாகிகளை (fund managers ) வீட்டுக்கு அனுப்பி இருக்கும். அந்த இண்டிகேட்டர் அல்லது சாப்ட்வேர் மட்டும் போதுமே. தயவு செய்து யாரும் கண்டுபிடிசுடாதீங்காப்பா, எங்களுக்கு வேலை போய்டும். ஹா,ஹா,ஹா…. ஒரு இண்டிகேட்டர் அல்லது எதுவும் லாபமும் தரும் நஷ்டமும் தரும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

  4. தினமும் கட்டாயம் இவ்வளவு லாபம் பார்க்கலாம் என்பதெல்லாம் காதுல பூ, சுனாமில கூட அவங்கல்லாம் சும்மிங் போவாங்க போல. ஓவர் ஆல் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் ,மறுபடியும் சொல்கிறேன் ரிஸ்க்கின் அளவினைப் பொருத்து லாபம் பெறலாம் என்பதே உண்மை. கட்டாயம் லாபம் பார்க்க இயலும் ஆனால் எல்லா நாளும் எல்லா டிறேடிலும் இல்லை .

  5. 90 % மேல் டிரேடர்கள் நஷ்டம் மட்டுமே பெறுகிறார்கள். காரணம் அவர்கள் பங்குச் சந்தையினை தொழிலாகப் பார்ப்பது இல்லை.

  6. பணத்தை அதிகம் இழப்பவர்கள் தினசரி வர்த்தகம் மற்றும் ஸ்டாப் லாஸ் வைத்து டிரேடு செய்பவர்கள். கண்மூடித் தனமாக ஒரு பங்கில் அல்லது துறையில் முதலீடு செய்பவர்கள்.

  7. நான் இதுவரை சொன்ன உண்மை புரியவே பலருக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

 • 7. atozforexdetails  |  October 1, 2015 at 8:09 pm

  8. வெற்றியாளர்கள் நாளுக்கு ஒரு இண்டிகேட்டர், நாளுக்கு ஒரு டிரேடிங் சிஸ்டம் பாலோ செய்வது இல்லை.

  9. ப்ரோக்கர் தரும் அதிகமான மார்ஸின் ஆபத்தானது. வெற்றியாளர்கள் அவர்களின் முதல் தொகையினை வைத்து மட்டுமே வர்த்தகம் செய்வார்கள், பெரும் பாலும் அவர்கள் ப்ரோக்கர் தரும் மார்ஸின் பயன் படுத்துவது இல்லை. ஏன் எனில் உங்களுக்கு லாபம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும் ப்ரோகருக்கு கட்டாயம் கமிசன் வந்து விடும்.

  10. நூறு ரூபாயில் லாபம் பார்க்க இயலாதவர்கள் நூறு கோடி கொடுத்தாலும் லாபம் பார்க்க இயலாது.

  11. சரியான டிரேடிங் மனநிலை ( trading psychology) இல்லாதவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை.

  12. பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரம் அல்ல. ஒரு நியாமான தொழிலில் என்ன வருமானம் கிடைக்குமோ அதை விட அதிகம் எதிர்பார்த்து பங்கில் வர்த்தகம் செய்வது ஆபத்தானது.

  13. நீங்கள் கற்றுக் கொள்வதை எல்லாம் கொட்ட பங்குச் சந்தை குப்பைத் தொட்டு அல்ல. தினமும் தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் தினமும் புதிது புதிதாக வணிக முறைகளைக் கையாள வேண்டாம்.
  A GOOD ANALYST CAN NOT BE A GOOD TRADER –
  A GOOD TRADER CAN NOT BE A GOOD ANALYST.

  14. இண்டிகேட்டர், முதலீடு நிர்வாகம், டெக்னிகல், வர்த்தக மனநிலை , மாறாத வர்த்தகத் திட்டம் எல்லாம் கலந்த கலவைதான் வெற்றி என்பது. ஒன்றை மட்டும் வைத்து வெற்றி என்பது இயலாது. அளவுகளில் மாற்றம் உண்டு, ஆனால் அவசியம். சாம்பருக்கு காய், காரம், உப்பு ,தண்ணீர் எனபதைப் போல.

  15. நேற்று லாபம் வந்தது போல் இன்றும் ,அவருக்கு லாபம் வந்து விட்டதால் உங்களுக்கும் லாபம் வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ப்ரோக்கர் அல்ல.

  16. மார்க்கெட் சரிகின்ற பொழுது நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தால் , நீங்கள் தான் சரியான முதலீட்டாளர். நேற்று நூறு ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருள் அதே தரத்துடன் இன்று 50 ரூபாய்க்கு கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சி தான் அடைய வேண்டும். ஆனால் நீங்கள் எப்படி, எந்த வகையில் உங்கள் பணத்தினை நிர்வாகம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து.

  17. உங்களுக்கு நஷ்டமாகின்ற ஒரு தொகை யாரோ ஒருவருக்கு அல்லது சிலரருக்கு லாபமாக போகிறது என்பதே உண்மை. லாபம் அடைகிறவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நீங்களும் செய்யாமல், லாபம் மட்டும் வர வேண்டும் என்றால் எப்படி வரும்?

  18. கடவுளிடம் வேண்டாதீர்கள். நீங்கள் மேலே செல்ல வேண்டும் என்று வேண்டுகிற அதே நேரம் யாரோ ஒருவர் அதே கடவுளிடம் கீழே செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருப்பார். பாவம் கடவுள் என்ன செய்வார்? அவர் கன்பீஸ் ஆக மாட்டாரு? சின்னப் புள்ளத் தனமால இருக்கு. இங்கு செய்யும் தொழில் தான் தெய்வம்.

  19. மாடு பத்து ரூபாய்க்கு வாங்கி, சாட்டை நூறு ரூபாய்க்கு வாங்குவதை போல, சிலர் ப்ரோக்கரேஜ் ஆயிரக் கணக்கில் இருக்கம், ஆனால் லாபம் நூற்றுக் கணக்கில் கூட இருக்காது.
  தேவை இல்லாமல் இண்டிகேட்டர், வகுப்பு என விரயம் செய்ய வேண்டாம். குளத்தை விட, ஒரு புத்தகம் அதிகம் நீச்சல் கற்றுத் தர முடியாது. உங்களால் முடிந்த தொகையினைக் கொண்டு ஒரு பத்து சதவீதம் மட்டும் ரிஸ்க் எடுத்து அல்லது டெமோ அக்கௌன்ட் , பேப்பர் டிரேடிங்கில் வர்த்தகம் செய்தாலே போதுமானது.

  20. குறுகிய காலம், குறிகிய நீண்ட காலம், நீண்ட காலம் வர்த்தகம் அவசியம். இதில் ஒன்றினை மட்டும் செய்தவர்கள் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லவே இல்லை.

  http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
August 2008
M T W T F S S
« Jul   Sep »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: