பண வீக்கம் V

August 9, 2008 at 9:10 pm 4 comments

     பணவீக்க கட்டுரையின் முதல் பகுதியில் பார்த்த பொருள் உற்பத்தி மற்றும் பணப் புழக்கம் ஆகியவற்றிக்கிடையேயுள்ள சமன்நிலையை பேண அரசு எப்பொழுதும் முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்று பார்த்தோம். பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பு என்பதால், அரசு பல்வேறு முறைகளில் இந்த சமன் நிலையை பேண முயற்சி செய்யும். அரசுக்காக இந்த வேலையை செய்வது ரிசர்வ் வங்கி. ஒவ்வொரு நாட்டிலும் அனைத்து வங்கிகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு இருக்கும். அவற்றை பெடரல் வங்கி என அழைப்பார்கள். நம்நாட்டில் உள்ள மற்ற வங்கிகளை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி.
     ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கமே அரசு மற்றும் தனியார் வங்கிகள் திவாலாகமல் பார்த்துக் கொள்ளுதல் தான். குறிப்பாக அரசு துறை வங்கிகள். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஒழுங்காக பணத்தை பட்டுவாடா செய்ய முடியவில்லை என்றால் மக்களுக்கு அரசின் மீதுள்ள நம்பிக்கையே போய்விடும். அவ்வாறு நிகழாமல் ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடுகளை வங்கிகளுக்கு விதித்திருக்கிறது. முதலில் அனைத்து வங்கிகளும் தாங்கள் திரட்டும் நிதியில் ஓரு குறிப்பிட்ட சதவிதம் ரிசர்வ் வங்கியிலோ அல்லது அவ்வங்கியிலோ தனியாக வைத்திருக்க வேண்டும். இதனை கேஷ் ரிசர்வ் ரேஷீயோ (Cash Reserve Ratio or C.R.R.) என்று கேள்விப்பட்டிருப்போம்.  இந்த நிதியை தனியாக எடுத்து வைத்த பிறகு இருக்கும் மற்ற நிதியைதான் வங்கிகள் கடன் மற்றும் இதர தேவைகளுக்கு எடுத்துக் கொள்ளும்.   இந்த கேஷ் ரிசர்வ் ரேஷீயோவை அதிகரிப்பது முலமாக வங்கிகள் கூடுதலாக பணத்தை உபரித் தொகையாக வைத்துக் கொள்ள நேரிடுவதால், வெளி நபர்களுக்கு கொடுக்கப்படும் கடன் தொகை கணிசமாக குறைய நேரிடும். வங்கி வைப்புநிதிக்கு (Cash Deposits or Term Deposits)  கொடுக்கப்படும் வட்டி சதவீதத்தை அதிகரித்து மக்களிடம் இருந்து பணத்தை வங்கியில் முதலீடு செய்ய விளம்பரங்கள் வெளியிடப்படும். மக்களிடம் அதிகப்படியான புழங்கும் பணத்தை முதலீடு செய்ய மறைமுகமாக அனைத்து வங்கிகளும் செயல்படும்.  ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு யுக்தியாக  இந்த ரேட்டை அதிகரிக்கும்.

      அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வங்கியும் ரிசர்வ் வங்கி குறிப்பிடும் சதவீதத்தை பணமாகவோ, அரசு கடன் பத்திரங்களாகவோ, தங்கமாகவோ கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இதற்கு Statutory Liquity Ratio  என்று பெயர். இதன் முலமாக ஒரு வங்கியின் வாடிக்கையாளர் தன்னுடைய முதலீட்டை எப்போதும் கேட்டாலும் தயங்காமல் கொடுக்கும்படி வங்கி செயல்படும். இதுபோன்ற கடுமையான சட்டங்களை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருவது காரணமாக, நம் நாட்டில் உள்ள மக்களுக்கு தாங்கள் வங்கிகளில் முதலீடு செய்த தொகையினை வங்கிகள் ஏமாற்றி ஒரே இரவில் திவாலாகி விடும் என்ற சந்தேகமே இதுவரை எழுந்தது இல்லை.
     அடுத்தது ரெபோ ரேட் (Repo Rate).  இதனை பார்ப்பதற்கு முன்னால், அரசு கடன் பத்திரங்கள்  (Government Bonds or Government Securities) என்றால் என்ன என்பதை பார்த்து விடலாம். பெயருக்கேற்றாற்போல், அரசால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொகை பட்டுவாடா என எழுதி கொடுக்கப்படும் பிராமிஸரி நோட்டுகள் எனலாம். ஒரு அரசின் முக்கிய கடமையே மக்களை பாதுகாப்பது, அவர்கள் நன்றாக வாழ வசதி செய்து கொடுப்பது. இதற்காக அரசாங்கம் சாலைகள், நீர்நிலை வசதிகள், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது. அரசுக்கு வருமான வரி, வணிக வரி மற்றும் இதர வரிகளால் வருமானம் வருகின்றன. இந்த வருமானத்தை வைத்துதான் அரசு மக்களுக்கு தேவையான நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அரசுக்கு வருகின்ற வருமானம் தினந்தோறும் வருவதில்லை. உதாரணத்திற்கு, வருமான வரி என்பது ஆண்டு முழுவதும் கட்டலாம் என்றாலும், முக்கிய காலம் என்றால் மார்ச்/ஏப்ரல் மாதங்கள்தான். அச்சமயத்தில்தான் மக்களுக்கு வருமான வரி கட்ட வேண்டுமென்று நினைவு வருவதால் வருமான வரி அதிகமாக வசூல் ஆகும். நலத்திட்டங்கள் ஆண்டு முழுவதும் செயல்படுத்தி வருவதால், இடையில் ஏற்படும் பணத் தேவைக்காக அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு அதனை பணச் சந்தையில் (Money Market) விற்பது முலம் தன்னுடைய பணத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. பணச் சந்தை பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பார்க்கலாம். இது மட்டுமல்லாது இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அரசின் கடன் பத்திரங்கள் குறுகிய காலம் (ஒரு வாரம், மாதம்) முதல் நீண்ட காலம் (ஒரு வருடம், ஐந்து வருடங்கள்) வரை இருக்கின்றன. நீண்ட கால கடன் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு அரசு சில சலுகைகளையும் வழங்குகின்றது. உதாரணத்திற்கு, குறுகிய கால முலதன வரியை குறைக்க, அரசு வெளியிடும் கேபிடல் பத்திரங்களை வாங்கினால் குறுகிய கால முலதன வரியை குறைக்கலாம். ஆனால் அதிகபட்ச தொகை ஐம்பது இலட்சம் மட்டுமே. இக்கடன் பத்திரங்களின்  முதிர்வு காலத்தில் முதிர்வு தொகை மற்றும் வட்டி ( மிக சிறிய அளவே வட்டி விதம் இருக்கும்) சேர்த்து அரசு யாரிடம் அந்த பத்திரங்கள் இருக்கின்றதோ அவர்களிடம் கொடுத்துவிடும். ஆம், இக்கடன் பத்திரங்கள் ருபாய் நோட்டுகள் மாதிரி. யார் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அரசால் வெளியிடப்படும் இக்கடன் பத்திரங்கள் மிகுந்த நம்பகதன்மை கொண்டவை. ஏனென்றால், கடன் தாரர் அரசாங்கம் என்பதால் ஏமாற்ற வாய்ப்பில்லை. ஆனால் வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது, சில அரசாங்கங்கள் திரும்ப கடனை செலுத்த தவறியிருக்கின்றன. 1998-ல் இரஷ்ய அரசாங்கத்திற்கே இந்த நிலைமை உண்டாயிற்று.

       ரெபோ ரேட் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம். வழக்கம்போல் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

Entry filed under: Fundamental Analysis.

08-08-2008 11-08-2008

4 Comments Add your own

  • 1. kamal  |  August 10, 2008 at 11:15 am

    Dear sir , the above artical very usefull , i want to know how to invest the goverment bonds, where i buy plese give me details ,i can buy shares from sharemarket but how can i buy the bonds , is it available in sharemarket or goverment banks please tell me the procedures and interest reate thank you very much.

  • 2. Ganesh  |  August 10, 2008 at 8:22 pm

    Dear Sharehunter,

    Very very clearly explain what is inflation and CRR, very good job u done. Keep it up, we expect more technical and market related articles from you.

    Thank You.

  • 3. sharehunter  |  August 12, 2008 at 5:44 am

    Hi, Kamal,

    I’ll explain in the next part. ok.

    j

  • 4. a reader  |  August 12, 2008 at 5:57 am

    Good article.

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
August 2008
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031