Archive for July 18, 2008

நீலக் கண்கள்

“மே ஐ கமின்ஸார்”
“வா,வா. என்னடா?”
“சார், முத்து கிளாஸ்க்கு வராம ஆத்துல போய் குளிச்சிட்டு வரான், சார்”
“சாரை கூப்டு இங்க. என்ன துரை, கிளாஸ்க்கு வராம ஆத்துல போய் குளியலா? டிசி கொடுத்துருல்லாமா, தெனம் ஆத்துலேயே குளிக்கலாம்.”
“சார், இரண்டு நாளா எப்பப்பாத்தாலும் ஆத்திலயே தான் கெடக்கான்.”
“வாயை தொறந்து பேசுடா, கேக்குரன்ல….சத்தமா பேசு, காலையிலே தின்னுட்டு தானே வந்தே?”
“சார்…………உடம்பெல்லாம் எரியுது.”
“ஓ, அப்டியா, நாளையில இருந்து ஸ்கூல்ல ஏசி போட்ருலாம். நீட்ரா, கைய”
“சார், அவன் சட்டய கழட்டி பாருங்களேன்.”
“சட்டய கழட்டுரா”
“என்னடா, முதுகெல்லாம் ஒரே செதில் செதில்ளா பெந்து இருக்கு. சொறியா? சட்டய போடு”
“சார், அவன் கண்ணை வெளிச்சத்துல பாருங்களேன். கோலி குண்டு மாரி நீலமா இருக்கு”.

“ஆமாடா, எனக்கு வேறு வேல இல்லை பாரு. போடா, போய் வெளியில முட்டி போடு. நாளக்கு உன் அப்பனை கூட்டிட்டு வரனும்”

…………………..

“யாரும்மா நீ?”
“அய்யா, முத்துவோட அம்மாங்க.”
“உம்புள்ள என்ன பன்றான் தெரியுமா? உடம்பெல்லாம் ஒரே சொறி அவனுக்கு.”
“நல்லாதாங்க இருந்தான். அவுங்க அப்பாவோட தேன் வாங்க மலைக்கு போனான். அவரு குடிச்சுட்டு அங்கயே வுழுந்துட்டார். இராத்திரி புள்ள மல காட்டு வழியா தனியா வந்துச்சு. அன்ன காலயிலிருந்து  மந்திரிச்சுவுட்ட மாதிரி இருக்கான். அவுங்க அப்பனும் சரியில்ல. நான் ஒன்டி ஆள், என்ன பண்னுவேன், வயகாட்டு வேலை பண்ணி தான் சோறு பொங்குறோம். அவன ஸ்கூலவுட்டு அனுப்பிறாதீ்ங்க. இனிமேல இப்படியல்லாம் செய்ய மாட்டான்.”
“சரி, காலங்காத்தல வந்து அழுவாதம்மா. அவன் உடம்ப பாத்தியா?”
“அதுவும் இரண்டு நாளாதாங்க இருக்கு. வயல் வேலை முடிச்சுட்டு வுட்டுக்கு வரதுக்கு இராத்திரி ஆயிதுடு. நாங்…”

“சரி,சரி, வீட்டுக்கு போறப்போ மாரியம்மன் கோவில்ல போய் துன்னுாறு வாங்கி மந்திரிச்சுட்டு போ. எல்லாம் சரியாயிடும்.”

July 18, 2008 at 9:03 pm 3 comments

18-07-2008

     அமெரிக்க சந்தை மிக உற்சாகமாக முடிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் ருபாய் 130 என்ற அளவில் வந்து விட்டது. தொடங்கியிருக்கும் ஆசிய சந்தைகள் அனைத்தும் ஏறுமுகமாகவே தொடங்கியுள்ளன. இன்றைக்கும் நம் சந்தை 100 புள்ளிகளுக்குமேலாக தொடங்கும் என எதிர்பார்க்கலாம். பணவீக்க விவரம் இன்றைக்கு நம் சந்தையை பாதிக்காது என்றே நினைக்கிறேன்.

    சந்தை 4200 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். மத்திய அரசு 22-ம் தேதி வெற்றிபெறும் பட்சத்தில் சந்தை மேலும் 200-300 புள்ளிகள் மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் தற்காலிகமானவையே என்பதை மறக்கக் கூடாது. சந்தை சென்ற வருடத்தை போல் அதிக Volume  நடக்க வில்லை. இன்னும் சிறு முதலீட்டாளர்கள் எது சந்தையின் உண்மையான சப்போர்ட், ரெசிஸ்டென்ஸ் என தெரியாமல் இருக்கிறார்கள். சென்ற வருடம் இதே நிலையில் எப்.ஐ.ஐ. உள்ளே வந்து சந்தையை 1500 புள்ளிகளுக்கு மேல் ஏற்றி சென்றனர். ஆனால், தற்போது சந்தை மீள பழைய நிலைக்கு வந்தும் கூட, எட்டியே பார்க்க வில்லை என்பது குறிப்பிடதக்கது.

     பொறுமையாக இருந்தால் தற்போதைய சந்தை ஏறுமுகத்தில் இலாபத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சந்தை இன்று +150 முதல் +45 புள்ளிகள் வரை ஆடலாம்.

 இன்றைய தினம் கீழ்க்கண்ட பங்குகள் மேலேற வாய்ப்புண்டு.

ICICI Bank, Idea Cellular, Reliance Communications

July 18, 2008 at 6:02 am 4 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
July 2008
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031