Archive for July 17, 2008

பண வீக்கம் III

     நம் உபகண்டத்தின் முன்னோர் (ஏனெனில் இந்தியா என்ற பெயர் அப்போது இல்லை, நடுவில் உருவானது) உலகத்திற்கு தங்களுடைய பங்களிப்பாக நிறைய கண்டுபிடிப்புகளை அளித்துள்ளனர். உதாரணத்திற்கு, எண்கள் (Numbers) , ஏவுககணை தொழிற்நுட்பம் (Missile Technology) ( இது குறித்து இருவேறு கருத்துகள் நிலவினாலும், உந்துதலை (Inspiration)  கொடுத்தது நாம்தான்), வானவியல் (Astromy), மருத்துவம் (Medicine) , நாணய பரிமாற்ற முறை (Currency) . இதுபோன்ற பலதுறைகளில் முன்னோடி முயற்சிகளை வழங்கியுள்ளோம். ஆனால், இன்றைய உலகில் மேலே சொன்ன அனைத்து துறைகளிலுமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே கொடி கட்டி பறக்கின்றன. காரணம், மிக எளிதானது. உலகின் மிக தொன்மையான கலாச்சார பெருமையை கொண்டிருந்தபோதும், அவர்களின் பார்வையில் நம்நாட்டின் வயதென்னவோ அறுபத்தி ஒன்று தான். அறுபத்தி ஒரு ஆண்டுகள் என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமாக இருக்கலாம். ஒரு நாட்டின் பொறுத்தமட்டில் மிக குறுகிய காலமே.

     டில்லியை ஆண்ட ஷெர்-ஷா சூரி என்ற மன்னனால் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்திற்கு ருபயா (Rupaya) என்று பெயர். அதற்கு வெள்ளி என்று அர்த்தம். ஆங்கிலேயர் நம் உப கண்டத்தை ஆட்சி செய்ய தொடங்கிய காலகட்டம் அது. அந்த நேரத்திலும் அடிப்படையில் மிக வலுவான பணமாக ருபாய் இருந்தது. ருபாய் வெள்ளியை இருப்பில் வைத்து வெளியிடப்பட்டது. இரண்டாவது பகுதியில் குறிப்பிட்டது போல் Silver Standard முறையில். நாணயம், பொருள் உற்பத்தி, வெளியிடப்பட்ட பணத்திற்கான இருப்பு (Reserve)  (வெள்ளியில்) என மிகச் சீரான விகிதத்தில் பராமரிக்கப்பட்டு வந்ததால் பண வீக்கத்திற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை. “நேத்து ஒன்னருவா இருந்த ஒரு பவுன் தங்கம் இன்னிக்கு நாலு ருபாய் ஆயிருடுத்தே” என்ற புலம்பல்கள் அந்த காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. எல்லாம் ஒழுங்காகதான் போய் கொண்டிருந்தது முன்று நுாற்றாண்டுகள் வரை. அதன்பின் அமெரிக்கா மற்றும் உலகத்தின் பிற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளி சுரங்கங்களிலிருந்து ஏராளமாக வெள்ளி உற்பத்தி செய்யப்பட்டது. உலக நாடுகளில் காலனியாதிக்கம் மேற்கொண்டிருந்த நாடுகள் அனைத்தும் தங்கத்தை முக்கிய இருப்பாக வைக்கத் தொடங்கி விட்டதால், வெள்ளியும் தன் கிடைப்பதற்கரிய தன்மையை இழந்து விட்டதால்  வெள்ளியை அடிப்படையாக கொண்டிருந்த நம் நாணயம் மதிப்பிழக்க தொடங்கிவிட்டது. அது முதல் அடி எனலாம். விழுந்த காலம் பத்தொன்பதாம் நுாற்றாண்டு.

     ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்திற்கு கீழிருந்து விடுலை பெற்ற பின் நம் இந்தியா ருபாயை தன் நாணயமாக கொண்டது. 16 அணாக்கள் கொண்டது ஒரு ருபாய். காலனியாதிக்கத்திற்கு கீழே இருந்து விடுதலை பெற்ற பின் பொருளாதார வளர்ச்சி என்பது உடனே வந்து விடாது. மிக மோசமான பண வீக்கத்தை பெற வேண்டிய நம் நாடு அதனை சந்திக்கவே இல்லை. ஏனென்றால், அப்போது உலகத்தில் மிக பலமான நாணயம் ( இரஷ்யாவின் சிதறலுக்கு பிறகு இருந்த அமெரிக்க டாலர்களின் வலிமை) போன்று எதுவுமே இல்லை. காரணம், இரண்டாம் உலகப் போர். மிக அதிகம் மனித உயிர்களை பறித்த இந்த போரால் நமக்கு இரண்டு வித நன்மைகளே வாய்த்தன. இன்னும் சொல்லப்போனால், இரண்டாம் உலகப்போரால் மிகவும் பயனடைந்த நாடு என்று இந்தியாவை தற்போது சொல்லலாம். ஒன்று, ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுதலை. மற்றொன்று, மோசமான பணவீக்கத்திலிருந்து காப்பாற்றப்படுதல். 1960-க்கு பிறகு  மற்ற காலனியாட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற நாடுகள் அனைத்துமே மிக மோசமான பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு, ஜீம்பாப்வே (உலகத்தின் மோசமான பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடு),சோமாலியா, தற்சமயம் இராக் (பணவீக்க சதவீதம் 41). இன்று வரை அந்நாடுகளின் பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. சில நாடுகள் தாக்குபிடித்து முன்னேறின என்றாலும், இந்தியா அளவிற்கு எந்த நாடும் வல்லரசுகளுக்கு சவால் விடும் அளவில் தங்களுடைய பொருளாதார, இரானுவ பலத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில் எல்லோரும் நம் காலரை துாக்கி விட்டுக் கொள்ளலாம்.

      1950-களில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே இரண்டாம் உலகப் போரினால் மி்க மோசமான பொருளாதார நிலையை அடைந்திருந்தன. பிரிட்டனின் மோசமான பொருளாதார சூழ்நிலையே இந்திய விடுதலைக்கு ஒரு முக்கிய காரணி என்று கூட சொல்லலாம். உலகின் பார்வைக்கு ஒரு மோசமானவராக இருந்தாலும், நம்நாட்டை பொறுத்தவரை Adolf Hitler நம் விடுதலைக்கு மறைமுகமாக பாடுபட்ட ஒரு ஆசாமி. அவரின் ஸ்வதிகா சின்னம் நம் நாட்டின் மிக பழமையான சின்னம் ஆகும். இது குறித்து இன்னொரு ஆய்வுக் கட்டுரையே எழுதலாம் என்றாலும் அதற்கும் பணவீக்கத்திற்கு சம்பந்தம் இருக்காது என்பதாலும் நீங்கள் அடிக்க ஓடி வந்து விடுவீர்கள் என்பதாலும் தற்சமயம் இத்துடன் நிறுத்திவிடுகின்றேன்.

     சுதந்தி்ரம் அடைந்த பிறகு முதல் பத்து வருடங்கள் வரை குறிப்பிடும் படியாக ஒன்றும் நடக்கவில்லை. 1957-ல் ஒரு ருபாய்க்கு 100 பைசாக்கள் என ஆக்கப்பட்டது. மக்கள் பைசாவிலேயே கணக்கை நடத்தியதால் மனக் கணக்கு போடுவதில் சிக்கல் இருந்ததால் அவ்வாறு ஆக்கப்பட்டது என்று திண்ணை பள்ளியில் கணக்கு வாத்தியார் நாற்காலியில் முள்வைத்த சில பொருளாதார மேதைகள் எண்ணினர்.  நம்நாடு இயற்கை வளம் மிக்க நாடு என்பதாலும், விவசாயம் நாட்டின் மிக முக்கிய தொழிலாக இருந்தபடியாலும், பருவ மழை தவறாமல் பொழிந்ததாலும் பணவீக்கம் என்ற சொல்லை நம் மக்கள் கேள்விபடவே இல்லை.
விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டிருந்து நாடு செழிப்பாக இருந்ததால், நம் நாடு தொழிற் துறை உற்பத்தி சம்பந்தமாக பெரிதும் அக்கறை காட்டவில்லை. வளரும் உலக நாடுகளுக்கு நிகராக நாமும் வளர தொழிற் உற்பத்தி முக்கியம் என இயற்கை நமக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. பஞ்சம். நாட்டில் ஏற்பட்ட உணவு பஞ்சம். நமது ஆட்சியாளர்களுக்கு தொழிற்துறை சம்பந்தமாக பல புதிய முடிவுகளை எடுக்க வைத்தது. உணவு பொருட்கள் உற்பத்திக்கு பணப்புழக்கம் இவற்றிக்கிடையில் ஒரு சீரற்ற நிலை ஏற்பட்டது. உணவு பொருட்கள் விலையை ஏற்ற உணவுப்பொருட்கள் பதுக்கப்படலாயின. உணவு பொருட்களின் விலை மிக வேகமாக மேலேற ஆரம்பித்தன. நாட்டில் பணவீக்கம் என்ற சொல்லை மக்கள் கேள்விபட ஆரம்பித்தார்கள்.
      இந்தியா 1960-களில் பஞ்சத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தபோது, உலக நாடுகள் என்ன செய்துகொண்டிருந்தன? என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

July 17, 2008 at 10:09 pm 3 comments

17-07-2008

     அமெரிக்க சந்தை உற்சாகமாக 275 புள்ளிகள் மேலாக பெற்று முடிந்திருக்கிறது. இதே உற்சாகம் ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கிறது. நமது சந்தையும் ஆரம்பத்தில் 100 புள்ளிகளுக்குமேல் gap up ஆக ஆரம்பிக்கக் கூடும். கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட அதிகவிலையிலிருந்து ரு.10 குறைந்திருக்கிறது.  மத்திய அரசு ஸ்திரதின்மை நாளுக்கு நாள் வலுவடைந்துக் கொண்டே செல்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விடையும் பட்சத்தில், அனுசக்தி ஒப்பந்தத்தில் இந்தயா கையெழுத்திடக் கூடும். அது நம் சந்தைக்கு மிக நல்ல செய்தியாகும். சந்தை 4300 வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.

 பெரிய முதலீட்டாளர்கள் short-covering இல் ஈடுபட்டால் சந்தை இழந்த புள்ளிகளை பெற்று 4015 வரை போக வாய்ப்பிருக்கிறது என கருதுகிறேன்.

இன்றைய தினம் கீழ்க்கானும் பங்குகள் ஐந்து சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும் என நினைக்கின்றேன். மாலையில் எப்படி முடிந்தது என பார்க்கலாம்.

ICICI Bank, Idea Cellular, DLF, Reliance Petroluem.

July 17, 2008 at 6:23 am 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
July 2008
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031