பணவீக்கம் I

July 9, 2008 at 10:31 pm 9 comments

    ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் பணவீக்கம் பற்றி எம்மாதிரியான புள்ளி விவரம் வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றோம். பண வீக்கம் பற்றி பல புள்ளி விவரங்கள் வாரா வாரம் சந்தையை அலைகழித்துக் கொண்டிருக்கின்றது. உண்மையில் பண வீக்கம் என்றால் என்ன அது எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்று பார்த்தால் வெள்ளிக் கிழமைதோறும் நண்பகல் 12.00 மணிக்கு வரும் ஒரு வித பயம் தெளியும் என்று நினைக்கின்றேன். சில அடிப்படையான விஷயங்களை இத்தொடர் கட்டுரையில் விளக்க முயல்வதால், இக்கட்டுரையை Fundamental Analysis  பகுதியில் சேர்க்கலாம் என்று இருக்கின்றேன்.

     பல வயதான மனிதர்கள் இவ்வாறு பேசுவதை நீங்கள் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள் “அந்த நாளையிலே இரண்டு ருபாய்க்கு டவுனுக்கு போய் ஒரு சினிமா பார்த்துவிட்டு, பீம விலாஸ்ல நல்லா சாப்பிட்டுவிட்டு, மஸ்தான் கடையிலெ ஒரு மசாலா பால் சாப்டுட்டு கடலையை கொறிச்சுகிட்டே ஊர் வரைக்கும் வந்துற முடியும்”.

     தற்போதைய சூழலில், இன்னும் கூட இரண்டு ருபாய் இருந்தால்தான் கடலையையாவது வாங்கமுடியும். எவ்வளவு வித்தியாசம்? இப்போதும் டவுன்,சினிமா தியேட்டர், உணவகங்கள், மசாலா பால் எல்லாம் இருக்கின்றது. விலை மட்டும் பல மடங்காகியிருக்கிறது. கேட்டால் தெரிந்தவர்கள் கூறும் காரணம், பணவீக்கம். தெரியாதவர்கள் கூறும் காரணம், அப்போ நாங்க கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம், அரசியல்வாதிகள் வந்து கெடுத்து விட்டார்கள். கருப்புப் பண முதலைகள் நிறைய இருக்கின்றன. எங்கும் ஊழல். யாருக்கும் பொறுப்பு இல்லை. நாற்பது ருபாய் சம்பளத்தில் ரொம்ப சுபிட்சமாக இருந்தேன். In Nineteen Fifty Five …. என்று பயங்கரமாக ஆரம்பித்து விடுவார்கள்.

    உண்மையில் பணவீக்கம் ஆதிகாலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. ஒரு அடிப்படையான விளக்கத்தினை முதலில் பார்க்கலாம். பணவீக்கம் என்றால் பணம் வீங்கி (அது என்ன கட்டியா?) போகுதல். அதாவது பெரியதாக ஆகுதல் அப்படியென்று மிகவும் அடிப்படையான பொருள் கூட கொள்ளலாம். சாதாரணமாக இருக்கிற ஒரு பகுதி தீடிரென பெரியதாக ஆகுதல். இதைப் பற்றி நாம் ரொம்ப பின்னாடி போய் பார்ப்போம்.
     மன்னர் காலங்களில் பணப்புழக்கம் என்றே கிடையாது. மிகவும் அடிப்படையான பண்டமாற்ற முறையில்  தான் வியாபாரம் நடக்கும். இரண்டு கோழிகளுக்கு அரை முட்டை நெல்/கால் முட்டை காய்கறிகள்/ஒரு தங்க நாணய வில்லை என்ற ரீதியில் வியாபாரம் நடக்கும். மக்கள் தங்களிடம் உள்ள உபரியாக உள்ள ஒன்றை கொண்டு அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாக தான் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு ஏரியா ராஜாக்களும் ரொம்பவும் மானமிகு, வீரமிகு சிங்கங்களாக இருந்ததுதான். என் மீசையைப் பற்றி தவறாக பேசிய அண்டை நாட்டு மன்னனின் நாக்கை வெட்டி ஊறுகாய் போட்டுவிட்டுதான் மறுவேலை என்று வெட்டிபந்தா பேசி முனுக்கென்றால் போருக்கு தயாராக இருந்தார்கள். இந்த மாதிரி வெட்டிப்போர்களால் நாட்டின் பண்டமாற்று முறை மிகவும் பாதிக்கப்பட்டது. கத்தி கபடாவுக்கெல்லாம் மவுசு ஏறிபோய்விட்டது. இதை சமநிலைப்படுத்த அப்போது ரொம்ப கிராக்கியாக இருந்த தங்கம் ( இப்போதுகூட தான்), வெள்ளி போன்ற உலோகங்களைக் கொண்டு வில்லை தயார் செய்து பண்டமாற்று முறையை மேம்படுத்திக் கொண்டார்கள். ஒரு ஏரியா ராஜா அடுத்த பேட்டையில் காலை ஊன்றியவுடன் அந்த ஏரியா காசெல்லாம் செல்லாக் காசாகிவிடும். இந்த மாதிரி தான் ஏரியா பொருளாதாரம் இருந்தது.

      இப்ப அப்படியே தசாவதாரம் ஸ்டையில்ல 21-ம் நுாற்றாண்டிற்கு வருவோம். நிலைமை சிறிது கூட மாறவில்லை. ஏரியாவெல்லாம் பெரிசா ஆயிருக்கு. அவ்வளவுதான். அதே வெட்டி பந்தா. வெட்டிப் போர்கள். பண்டமாற்று முறை தான். சிறிய வித்தியாசம் : பண்டமாற்று முறை பணத்தை (Currency) அடிப்படையாக வைத்து நடக்க ஆரம்பித்தது.  அதனை மேம்படுத்தி, வழிநடத்த வங்கி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

      இப்போது ஒரு சின்ன கற்பனை : நம்நாட்டில் பதினைந்து கோடி ருபாய் பணம் இருந்து, இருபது கோடி ருபாய்க்கு நாடு பொருட்களை உற்பத்தி செய்கின்றது  (விவசாயம், தொழிற்சாலை என்று எல்லா துறைகளையும் சேர்த்து) என்று வைத்துக் கொண்டால் எது குறைவாக கிடைக்கின்றதோ அதற்கு தான் கிராக்கி இல்லையா? பணத்தின் மதிப்பு அதிகரித்துவிடும் அல்லவா. இவ்விரண்டையும் ஒரு தராசில் வைத்தால் எது குறைவோ அது மேலேறிவிடும். மேலேறிவிடுவதற்கு தான் மவுசு அதிகம்.  இந்த சமநிலையை புரிந்துகொண்டால் பணவீக்கத்தின் அடிப்படையை வெகு எளிதாக புரிந்துக் கொள்ளலாம்.

     இந்த சமநிலையை எவ்வாறு அரசாங்கம் பேணி வருகின்றது?  அரசாங்கம் எந்த முறைகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருகின்றது? என்று வரும் வாரங்களில் பார்க்கலாம். பொருளாதார பாடங்களில் பண வீக்கத்தைப் பற்றி படிப்பது மிகவும் மந்தமான காரியம். (பொருளாதாரம் முழுவதுமே இப்படிதான் என்று கூறும் ஒரு சாராரும் இருக்கின்றார்கள்) . இந்த வகுப்புகள் எல்லாம் ஒரு தவ சாலை மாதிரி ஆகிவிடும். ஆசிரியர் மந்திர உச்சாடனம் சொல்வது போல் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்.  மாணவர்கள் எப்போதும் ஒருவித யோக நிலையில் இருப்பார்கள். இதனாலேயே யாராவது ஒருவர் பி.ஏ (பொருளாதாரம்) படிக்க போகின்றேன் என்று சொன்னால் இச்சமுகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.  ஆனால் இது பற்றிய அறிவு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருப்பதனால் கூடிய வரையில் எளிய வகையில் எழுத முயற்சி செய்கின்றேன்.

Advertisements

Entry filed under: Fundamental Analysis.

09-07-2008 10-07-2008

9 Comments Add your own

  • 1. balakeethai  |  July 12, 2008 at 7:44 am

    வணக்கம் அலெக்ஸ்,
    பணவீக்கம் பற்றி எளிய நடையில் கூறியுள்ளீர்கள் சூப்பர்,
    மேலும் எனக்கும் பி.ஏ (பொருளாதாரம்)படிக்கும் எண்ணம்
    உள்ளது.என் வயது வரை படித்துள்ளேன்.
    இந்த படிப்பு பற்றி தெரிந்து கொள்ள எங்க தொடர்பு கொள்வது
    உங்களுக்கு தெரிந்தால் எனக்கு உதவுங்கள்.இந்த படிப்புக்கு
    வரும் காலங்களில் எந்த அளவு கிராக்கி இருக்கும் என
    உங்கள் பார்வையையும் சொல்லுங்கள்….குறிப்பு{ இந்த பாடம்
    தமிழ்லில் உள்ளதா}உங்கள் பதிலுக்காக எதிர்பர்த்துஇருக்கும்
    பாலகீதை……..

  • 2. balakeethai  |  July 12, 2008 at 7:46 am

    மன்னிக்கவும்……..
    என் வயது 31 நான் 10thவரை படித்துள்ளேன்.

  • 3. sharehunter  |  July 12, 2008 at 7:54 am

    நண்பர் பாலகீதை அவர்களுக்கு,

    நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. சென்னை பல்கலைக் கழகம் மற்றும் காமராஜ் பல்கலைக் கழகத்தில் திறந்த வெளி திட்டத்தில் சேர்ந்து படிக்கலாம். உங்கள் ஊரின் அருகே உள்ள தகவல் மையத்தை தொடர்பு கொள்ளவும்.

    நடைமுறையில் தபால்முறையில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பதனால் ஒரு டிகிரி வாங்கியவர் என்ற பெயரை தவிர வேறு எந்த பயனும் இல்லை. நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேலும் பொருளாதாரம் பற்றி உயர் படிப்பு படித்தால் மட்டுமே நல்ல வேலை கிட்டும் என்ற நிலை தற்போது இருக்கிறது.

    பி.காம் படிப்பது பற்றி நீங்கள் யோசிக்கலாமே!

    படிக்க வேண்டும் என்ற முடிவெடுத்தமைக்கு வாழ்த்துகள்.

    Josh

  • 4. balakeethai  |  July 12, 2008 at 8:09 am

    மன்னிக்கவும் அலெக்ஸ்,
    நான் கோவையை சேர்ந்தவன். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி….
    தற்பொழுது சொந்த தொழில் செய்து வருகிறேன்.கண்டீப்பாக
    நீங்கள் கூறியுள்ள ஆலோசானைகளை பின்பற்றுவேன்.

  • 5. batcha  |  July 12, 2008 at 8:10 am

    தங்களுடைய பணவீக்கம் பற்றிய பாதிப்பு மிகவும் எளிமையாக இருக்கிறது தாங்கள் கூறிய விளக்கங்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது. மேலும் பல தொடர்கள் இது பற்றி வர வேண்டும் என்று விரும்புகிறேன்

  • 6. senthil kumar.r  |  July 12, 2008 at 2:50 pm

    மிகவும் எளிய நடையில் அமைந்துள்ளது ..
    நன்றி !

  • 7. தமிழ் அமுதன்  |  July 12, 2008 at 6:26 pm

    நல்ல விளக்கங்கள் திரு அலெக்ஸ் ,பணவீக்கம் பற்றி புரிகிறது போல் உள்ளது .நாட்டில் உற்பத்தி குறைந்தால் பணவீக்கம் அதிகரிக்குமோ ? மேலும் தங்கத்தின் இருப்பை வைத்துதான் பணம் அச்சடிப்பதாக சொல்லுகிறார்கள்? உண்மையா? அப்படியானால் இன்று பயன்படுத்தப்படும் தங்கத்தில் 20 % கூட அரசுக்கு வரி செலுத்தப்படுவது இல்லயே ? தங்க இருப்புக்கும் பணம் அச்சடிப்பதற்கும் தொடர்பு இருந்தால் ,ஆன்லைன் வர்த்தகத்தால் தங்கம் மீதான செயற்கை தனமான விலை மாறுபாட்டால் அரசின் பொருளாதாரம் எப்படி நிலை கொள்ளும் ?

  • 8. sharehunter  |  July 12, 2008 at 6:31 pm

    தமிழ் அமுதனுக்கு,

    இப்ப தாண்ணா ஆரம்பிச்சுருக்கேன். இன்னும் எதை எழுதுவது எதை விடுவது என எனக்கும் சற்று குழப்பமாகதான் இருக்கிறது. போக போக சரியாகிவிடும் என நினைக்கிறேன்.

    கன்னித்தீவு மாதிரி நீண்டுக்கொண்டு போகாமல் பார்த்துக் கொள்கிறேன்.

    josh

  • 9. தமிழ் அமுதன்  |  July 12, 2008 at 6:37 pm

    உங்களுடைய முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது !!பதிலுக்கு நன்றி !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: