Intraday Trading IV
July 7, 2008 at 9:06 pm 2 comments
சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லியதற்கு நன்றிகள். அதில் இன்னும் சில பகுதிகள் விட்டுப் போயிருக்கின்றன.
தின வணிகத்தை பொறுத்தவரை தரகு நிறுவனங்கள் கையிருப்பில் உள்ள தொகை மற்றும் பங்குகளின் மதிப்பினை பொறுத்து ஐந்து முதல் பத்து மடங்கு வரை Cash Exposure அதிகமாக கொடுக்கின்றன. இதனை மார்ஜீன் வணிகம் (Margin Trade) என்று சொல்வார்கள். தரகு கட்டணமும் Delivery based வணிகத்தை விட குறைவாகவே வசூலிக்கின்றன. காரணம் என்னவென்றால், வணிகம் செய்வதற்கு உங்களுக்கு மிக அதிகமான தொகை கிடைக்கின்றது. அதனை வைத்து நீங்கள் பங்குகளை வாங்கினாலும், அன்றைய தினக் கடைசிக்குள் கணக்கு முடித்துவிட வேண்டும். சில பங்கு தரகு நிறுவனங்கள் மதியம் 2.45-க்குள் கணக்கு நேராகவிட்டால் தாங்களே விற்று கணக்கினை நேராக்கிவிடுகின்றன. உங்கள் கணக்கில் ரு.100 இருந்தால், குறுகிய கால முதலீட்டாளரோ அல்லது நீண்ட கால முதலீட்டாளரோ அந்த தொகைக்கு மட்டுமே பங்குகளை வாங்குவார். இதையே தின வணிகத்தில் பார்க்கும்போது, அவருக்கு ரு.500 மற்றும் அவர் கையிருப்பிலுள்ள பங்குகள் மதிப்பினை பொறுத்து மேலும் தொகை அவருக்கு வணிகம் செய்யக் கிடைக்கும். பங்கு தரகு நிறுவனத்திற்கு அதிக தரகு கட்டணம் கிடைக்கும்.
இதில் பங்கு தரகு நிறுவனங்களை தவறு சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் உங்களுக்கு Cash Exposure மட்டுமே கொடுக்கின்றார்கள். வணிகம் செய்வது நாம்தானே. பங்கு முதலீட்டில் ஈடுபட்டு அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான வாரன் பப்பெட் (Warren Buffett) தின வணிகமே செய்ததில்லை என்பது தெரியுமா! அவர் ஒரே நாளில், ஒரே ஆண்டில் கோடீஸ்வரராகவும் இல்லை.
சூதாட்டத்திற்கு மனம் அடிமையாவது போல் தின வணிகத்தையும் சிலர் வெறி பிடித்தது போல் செய்கின்றார்கள். ஆயிரம் ருபாயை இழந்து எப்போதாவது கிடைக்கும் நுாறு ருபாய்க்காக எந்த ஒரு அடிப்படையும் தெரியாமல் பல்வேறு விதமான பங்குகளை, பல்வேறு இடங்களில் கிடைக்கும் பரிந்துரைகளின் பேரில் வாங்கி பணத்தை இழக்கின்றார்கள். இதில் நமக்கென்ன வந்தது, அவர்களாகவே தங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்வதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று நினைக்கவே கூடாது. இவ்வாறு நஷ்டமடைந்தவர்கள் தான் பங்கு சந்தை ஆபத்தானது என்ற ஒரு நிலையை மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பங்கு சந்தையில் இறங்குவதால் என்ன நன்மைகள் இருக்கின்றன என்று பார்க்கும்பொழுது பொருளாதார ரீதியாக மட்டும் பார்க்காமல், நாம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்னென்ன கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றது, தவறான கொள்கைகளை தேர்ந்தெடுக்கும்போது சந்தை பாதிக்கப் படுகின்றது, அதனால் நம்முடைய முதலீடும் பாதிக்கப் படுகின்றது. இவ்வாறு யோசிப்பதன் முலம் நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் அரசியல்வாதிகள் வெறும் இலவசங்களை காட்டி நம்மை ஏமாற்ற இயலாது. ஏனென்றால் அவர்களின் ஒவ்வொரு தவறான முடிவுகளிலும் பாதிக்கப் படுவது நம்முடைய முதலீடு. மேலும் நம்முடைய சொந்த பணத்தை முதலீடாக போட்டிருப்பதால் தேர்தலின்போது எந்த கட்சி சார்பான ஒரு ஆதரவையும் நாம் எடுக்காமல் ஒரு நடுநிலை தன்மையுடைய முடிவினை கட்சியின் கொள்கைகளுக்கேட்ப எடுக்க இயலும். இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது. வளர்ந்த நாடுகளில் (அமெரிக்கா உட்பட) உள்ள அரசியல்வாதிகள் அவர்கள் நாட்டு மக்களை மிகவும் எளிதாக ஏமாற்ற இயலாது. நிறைய கஷ்டப்பட்டுதான் ஏமாற்றுகின்றார்கள்.
தின வணிகம் குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கின்றது. தின வணிகம் செய்வதற்கு Technical Analysis, Average Volume Data, பற்றி தெரிய வேண்டும். பல்வேறு Charts அலசும் திறனும் வேண்டும்.நானும் தின வணிகம் செய்கின்றேன். ஆனால் தினமும் அல்ல. தற்போதைய சந்தை நிலவரம் தின வணிகம் செய்தவற்கு ஏற்றதாக இல்லை. நல்ல செய்திகள் மற்றும் கெட்ட செய்திகள் எந்த நேரத்திலும் வரலாம் என்ற சூழல் நிலவுகின்றது. நம் சந்தையை பொறுத்தவரையில் தற்போது இன்னும் இறங்கக் கூடிய சூழ்நிலையில்தான் உள்ளது. 3700 என்பது எட்டக் கூடிய துாரம் தான். மிக வேகமாக இறங்குவதற்கான சூழ்நிலையே தற்போது உள்ளது. தற்போதைய சந்தை முதலீட்டுக்கெற்ற சந்தை. உங்களில் பலர் வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு வணிகம் செய்பவர்களாக இருந்தால் தின வணிகத்தை சில நாள் ஒதுக்கி வைத்திருப்பது நல்லது. அதற்கு பதிலாக சில பங்குகளை தேர்ந்தெடுத்து அதன் movements கண்காணிக்கலாம். தினவணிகம் குறித்து ஆரம்பித்த இத்தொடரை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தற்போது ஆரம்பித்த Fundamental Analysis தொடரை மீண்டும் தொடரலாம் என்று இருக்கின்றேன். வழக்கம்போல் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.
Entry filed under: தின வணிகம்.
1.
Batcha | July 9, 2008 at 5:42 pm
தங்களுடைய கருத்துக்கள் மிகவும் தெளிவாகவும் புதியவர்கள் புரிந்துகொள்ளும்படி இருக்கிறது. Cash Exposure பணம் தரகு நிறுவனக்கள் கொடுத்தாலும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று தங்கள் கூறியது முற்றிலும் உண்மை பல புதிய முதலிட்டார்கள் என்ன செய்கின்றோம் என்று தெரியாமலே பணத்தை விட்டுவிடுகின்றனர். தங்களுடைய இந்த பதிப்பு நிச்சியமாக அவர்களுக்கு ஒரு விலுபுனர்வை ஏற்படுத்தும் என்பது ஐயம் இல்லை. தாங்கள் தினவணிகம் கட்டுரை தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
2.
naveen | August 30, 2008 at 10:42 am
தங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. பங்கு சந்தை பற்றி புரிந்து கொள்ளாமல், தங்கள் தவறுகளை உணராமல், சந்தையை சூதாட்டம் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை. நானும் பணம் சந்தையில் இழந்து இருக்கிறேன். அதற்கு பிறகு தவறுகளை உணர்ந்து, தங்களை போன்றவர்களின் (Mr. Saravanakumar, Mr. Sai, மற்றும் பலர்)வழிகாட்டுதல், என்னை செம்மைபடுதியுள்ளது. மனமார்ந்த நன்றி