Intraday Trading III

July 6, 2008 at 8:39 am 7 comments

இனி வரக் கூடிய பதிவுகளில் அனைத்திலும் உங்களுடைய கருத்துகள் அவசியம் எனக்கு தேவைப்படுவதால் தவறாமல் பின்னுாட்டம் இடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

      பங்கு சந்தைக்கு புதியதாக நுழையும் ஒருவர் தற்சமயத்தை பொறுத்த வரையில் குறைந்தது ஒரு மாதத்திற்குள் தின வணிகம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார். எனக்கும் நீங்கள் தின வணிகத்தை எதிர்த்தே பதிவுகளை போடுகின்றீர்கள் என நிறைய ஈ-மெயில்கள் வருகின்றன. பங்கு சந்தையில் நாம் நுழைவது எதற்காக? நம்முடைய பணத்தை முதலீடு செய்து, முதலீடு வளர்ந்த பிறகு பின்னர் லாபத்தை ஈட்டுவதற்காக தானே! வங்கியிலும், தபால் நிலைய திட்டங்களிலும் அப்படிதானே போடுகின்றோம்.

    எத்தகைய கல்வி தகுதி கொண்டவர்களும் ஒரு வீட்டினை வாங்குவதற்கு முன் எத்தனை விஷயங்களை பார்க்கின்றார்கள்! வில்லங்க பத்திரம், சர்வேயர் சான்று, அதற்கு பக்கத்தில் உள்ள மனைகளின் தன்மை, மெயின் ரோட்டிலிருந்து எவ்வளவு துாரம் இருக்கின்றது, குடிநீர் வசதி என்று எத்தனை கவனமாக பார்த்து வாங்குகிறோம். அதே அளவுக்கு அலசி தானே முதலீடு செய்யபோகும் பங்குகளை அலசி இப்பங்குகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் வளருமா, எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதையெல்லாம் அலச வேண்டும். எத்தனை பேர் அவ்வாறு செய்கின்றார்கள்? வேகமாக விலையேறும் பங்குகளை (Momentum Stocks) முதலீட்டுக்கெற்ற பங்குகள் என நினைத்து குழு மனப்பான்மையுடன் வாங்கி விடுகின்றோம்.
     ஒரு பங்கின் எதிர்கால (குறைந்தது ஒரு வருடம் கழித்து) விலை குறித்தே இவ்வளவு விஷயங்கள் சேகரித்து நாம் முதலீடு செய்ய வேண்டும் என்றபோது, தின வணிகம் என்பது ஒரு பங்கின் விலையை ஐந்து மணி நேரத்திற்குள் இந்த நிலைகளில் இருக்கும்  கணிப்பது என்பது எவ்வளவு கடினம். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளாமல், சூதாட்டத்தில் ஈடுபடுவது போல, குதிரை பந்தயத்தில் ஈடுபடுவதுபோல் இந்த குதிரை மேல் நுாறு, அந்த குதிரை மேல் ஐநுாறு என்று கட்டும் நிலை தான் இருக்கிறது.

     தின வணிகத்தை பொறுத்த மட்டில் Fudamental Analysis  மட்டுமில்லாது கடந்த ஏழு நாட்களில் Average volume, Market Movement போன்று பல விதமான புள்ளி விவரங்களை நன்கு ஆராய்ந்தே ஐந்து மணி நேரத்தில் அப்பங்கு எந்தெந்த நிலைகளில் இருக்கும் என சொல்ல முடியும். வேறு சில புற காரணிகளும் (External Factors) உள்ளன. அது மட்டுமின்றி, இது நுாறு சதவிதம் சரியாக கணிக்க இயலாத ஒன்றாகும்.

      அப்போது தின வணிகத்தில் ஈடுபடவே கூடாதா? நான் அப்படி சொல்ல வில்லை. ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நாம் முதல் நாள் நுழையும் போது ஒரு வாரத்திற்குள் நமக்கு அர்னால்ட் உடலமைப்பு வந்துவிடுமா? இது தொடர்பாக அயராது உழைக்க வேண்டும். புதிய விஷயங்களை சலிக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்களை பார்த்து அவர்கள் மட்டும் ஈடுபடும் போது நான் ஏன் இறங்கக் கூடாது என்ற மனநிலையே வேண்டாம். ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை பங்கு சந்தையிலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆரம்ப நிலைகளில் இலக்கு நிர்ணயிப்பது மிகவும் ஆபத்தானது.

இப்போது  ஒரு கேள்வி : தமிழ்நாட்டில் .. இந்தியாவில் உள்ள அனைத்து பங்கு தரகு நிறுவனங்களிலும் Delivery Based வணிகத்திற்கு தரகு கட்டணம் அதிகமாகவும், தின வணிகத்திற்கு குறைவாகவும் ஏன் உள்ளன?

Advertisements

Entry filed under: தின வணிகம்.

Intraday Trading II 07-07-2008

7 Comments Add your own

 • 1. panguvaniham  |  July 6, 2008 at 11:41 am

  அருமை…

  நேர்த்தியான, நேர்மையான வரிகள்…பலரும் இந்த உண்மைகளை ஜீரணிக்காமல் தினவர்த்தகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பணத்தினை இழந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.

  தொடர்ந்து எழுதிடுங்கள்…

  வாழ்த்துகள்.

 • 2. Batcha  |  July 6, 2008 at 11:51 am

  தமிழ்நாட்டில் .. இந்தியாவில் உள்ள அனைத்து பங்கு தரகு நிறுவனங்களிலும் Delivery Based வணிகத்திற்கு தரகு கட்டணம் அதிகமாகவும், தின வணிகத்திற்கு குறைவாகவும் ஏன் உள்ளன?

  பதில்……..

  இதை நான் ஒரு வியாபார யுக்தியாகவே கருதுகிறேன் தின வர்த்தகத்தில் தான் குறைந்த தொகை என்ற ஆசையால் நிறைய வணிகர்கள் அதிக அளவில் ஈடுபடுவார்கள் அதன் மூலம் அதிக தரகு தொகை பெற முடியும் Delivery விட இதில் தான் முகவர்கள் நிறைய வருமானம் பார்க்க முடியும் என்று நினைகிறேன்…..

 • 3. sharehunter  |  July 6, 2008 at 12:11 pm

  நன்றி, திரு சரவணன்.

  நன்றி. திரு.பாட்சா. சரியான பதில். ஆனால், ஒரு பாதி மட்டுமே.

 • 4. Batcha  |  July 6, 2008 at 1:24 pm

  புதிய விஷயங்களை சலிக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும்…….

  நன்றி… எப்படி எங்கே பெறுவது எந்த எந்த வலை தலங்களில் கிடைக்கும் என்று விளக்குங்கள்

  மீதி பாதி….
  Delivery இல் நீண்ட கால முதலிட்டார்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர் அதன் மூலம் முகவர்களுக்கு அதிக அளவு தரகு தொகை Day Trading போல் பெற முடியாது எனவே Delivery அதிக அளவு தரகு தொகை நிர்ணயம் செய்கின்றர்கள் என்று நினைகிறேன்.

 • 5. rmr  |  July 6, 2008 at 4:47 pm

  வணக்கம் நண்பரே ,என்ன வார்த்தைகள் ?பங்கு சந்தையில் இது வரை உடைக்கப்படாத உண்மைகள் !எழிய வார்த்தைகளில் மிகவும் புரியும் படியாக தெளிவாக கூறுகிரீர்.பங்கு சந்தை பற்றிய பயம் உள்ளவர்களும் கற்று தெளியும் படி உள்ளது.உங்கள் அடுத்தடுத்த பதிவுகளை வரவேற்று எதிர்நோக்கி இருக்கிறோம்.

 • 6. Dhiva  |  July 7, 2008 at 7:32 am

  Dear friend, Sorry i dont know how to write in tamil characters
  It is a beautiful enlighting thing. I have first hand exprience of loosing money as a day trader. For first two days i got real good returns.Then it became an addiction to earn profit. Within next three days i lost money three times than what i earned in the first two days.
  in my opinion the Reasons are
  1. We could not follow the tips timings.
  2. Cannot dedicate full time for this as we do this trading as a secondary job.
  3. dont understand market trend and to apply the stoploss.
  4. Insufficient backup to withstand the squareoff.

  As you said first one has to learn,then earn and then can invest money in intraday trading with better muscle power

  Good job
  Keep continuing.

 • 7. naveen  |  August 30, 2008 at 10:24 am

  அற்புதமாக எழுதுகிறிர்கள். இவை அனைத்தும் பங்கு வணிகத்தில் ஈடுபடும் அனைவரும் அவசியம் தவறாமல் படிக்க வேண்டிய பகுதி. நான் உங்களுடைய blog பற்றி மற்ற தளங்களில் பின்னூட்டமிடுகிறேன். மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 3 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: